அம்பேத்கரின் அரசியலும் விடுதலைச்சிறுத்தைகளின் வீழ்ச்சியும் …


தமிழகத்தில் தலித் அரசியலுக்கென்று ஒரு நீண்ட நெடும்பாரம்பரியமுண்டு. 1800களிலேயே சந்திரோதயம் என்னும் இதழ் தலித்துகளால் நடத்தப்பட்டது. மேலும் அரசியல் களத்தில் ‘திராவிட’ என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி அரசியலைக் கட்டமைக்க முயன்றவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.

அயோத்திதாசர், எம்.சி.ராஜா, சிவராஜ், இரட்டைமலைசீனிவாசன் போன்ற தலித் ஆளுமைகள் தமிழக அரசியல் களங்களில் செயற்பட்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் மற்ற இயக்கங்களைப் போல ஒரு தனித்துவமான இயக்காமாக தலித் இயகக்ம் வளரவில்லை என்பதே உண்மை. இதற்குப் பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம் என்று தற்போதைய தலித் எழுத்தளர்கள் மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றம் சாட்டிவருவதும் நாமறிந்த செய்திதான்.

ஆனால் 80களில் தலித்துகள் மீண்டும் அரசியல் அமைப்புகளாகத் திரளத்தொடங்கினர் என்று சொல்லலாம். குறிப்பாக ஒடுக்கப்படட் மகக்ளின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாய் வளர்ந்துவந்தவர் திருமாவளவன். அதுகாறும் சிற்சில இடங்கள் தவிர பலவிடங்களில் தலித்மகக்ள் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டு வந்த நிலை மாறி தாங்களும் திருப்பித்தாக்கத் தொடங்கினர்.

‘திட்டமிடு, திமிறியெழு, திருப்பியடி’ என்னும் முழக்கம் தலித் இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியது. கருஞ்சிறுத்தைகள் இயக்கததை முன்மாதிரியாகக் கொண்டு மகாராட்டிராவில் ஆரம்பிக்கப்பட்டது இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கம். ஆனால் தமிழ்ச்சூழலில் டி.பி.அய் என்றே அழைக்கப்பட்டாலும் அதன் அடையாளம் விடுதலைச்சிறுத்தைகளாய் மாறியது.

மலைச்சாமிக்குப் பிறகு தலைமைக்குவந்த திருமாவளவன் தடயவியல்துறையில் பணியாற்றிவந்த ஒரு அரசு ஊழியராக இருந்தபோதும் பல தலித் இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கினார் என்பது மறுக்கமுடியாது. சிறுத்தைகள் தேர்தல் அரசியலைப் புறக்கணித்ததோடு மட்டுமல்லாது தேர்தலின்போது பலவிடங்களில் தேர்தல் மறுப்புவாசகங்களை எழுதி வாக்குப்பெட்டிக்குள் போடவும் செய்தனர்.

ஆனால் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் சிறுத்தைகள் இயகக்ம் தேர்தல் மறுப்பு என்னும் நிலைப்பாட்டைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. அரசியலதிகாரமற்ற தலித்துகள் தொடர்ந்து அரசினால் குண்டர்சட்டம் போன்ற கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களால் துன்புறுத்தப்படும்போது தனக்கான அதிகாரத்தைக் கைப்பற்றவே இந்த நிலைப்பாடு என்று விளக்கமளித்தது சிறுத்தைகளின் தலைமை. தனது அரசுபபணியைத் துறந்து தேர்தல் அரசியல் களத்தில் குதித்தார் திருமா.

பல்வேறுபட்ட கூட்டணிகளில் இடம்பெற்று இன்று மய்யநீரோட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத அமைப்பாய் விளங்குகிறது டி.பி.அய். இதே சமகாலத்தில் திருமாவோடு போட்டியிட்ட பறையர் தலைவர்களாகிய சாத்தை பாக்கியராஜ், அரங்க.குணசேகரன், ஏர்போர்ட் மூர்த்தி, வை.பாலசுந்தரம், ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களால் திருமா அளவிற்கான கவனத்தையோ அமைப்புத் திரட்சியையோ பெறமுடியவில்லை.

தென்மாவட்டங்களில் தேவர்சாதியினருக்கு எதிராக திருப்பித் தாக்கும் அரசியலை முன்வைத்து இயக்கங்களாய் வளர்ந்த பள்ளர்சமூகத்தலைவர்களாக ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன், டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளைப் பெற்றவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. ஆனாலும் அவரின் அரசியல் வாழ்வும் கடந்த பத்தாண்டுகளில் அஸ்தமித்து வெறுமனே அறிக்கைத்தலைவராக மாறிப்போனார். இறுதியாக காவிரிப்பிரச்சினையில் நடிகர்.ரஜினிகாந்தின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுத் தனது அரசியலைத் தானே மலினப்படுத்திக்கொண்டார்.

இன்று மய்யநீரோட்ட அரசியல்கட்சிகளுடன் அரசியல் பேரம் பேசும் அளவிற்குத் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கும் விடுதலைச்சிறுத்தைகள் கருத்தியல் ரீதியாக இழந்தவை என்ன? 1992 பபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டித் தமிழ்ச்சூழலில் பரவலாக விவாதிக்கப்பட்ட தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் அரங்கியல் ஆகிய கருத்தாக்கங்களே சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு மாபெரும் உற்சாகத்தை அளித்தன என்று சொல்வது தவறாகாது.

ஆனால் இன்று தனது தனித்துவமிக்க அடையாளத்தை இழந்திருக்கின்றனர் சிறுத்தைகள். ஜெயலலிதா அரசால், ஜெயேந்திரனின் ஆசியோடு கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலிதடைச்சட்டம் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் வழிப்பாட்டுமுறைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒடுக்கும் பார்ப்பனீய அரசியல்தந்திரத்தோடேயே கொண்டுவரப்பட்டது.

ஆனால் இதை எவ்வாறு எதிர்கொண்டனர் சிறுத்தைகள்? பலித் தடைச்சட்டத்திற்கு எதிரான அமைப்புரீதியான பெரிய போராட்டங்கள் எதையும் நிகழ்த்திவிடவில்லை. மதமாற்றத்தடைச் சட்டம் என்பது உண்மையில் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதை வலுவாக முன்வைப்பதற்கும் அந்தக் கருத்தியலைத் தலித்மக்களிடம் வீச்சாகக் கொண்டுசெல்வதற்கும் இந்துமதம் என்னும் மாயக்குகையிலிருந்து வெளியேறுவதற்கும் தலித்மக்களைப் பார்ப்பனீயத்திலிருந்து துண்டிப்பதற்குமான அரியவாய்ப்பு.

ஆனால் நடந்தது என்ன? இந்தச் சட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்காகக் கூடிய சிறுத்தைகளின் மய்யக்குழு மதமாற்றத்திற்குப் பதிலாக பெயர்மாற்றத்தை முன்வைத்தது. உண்மையில் இந்துமதத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ள சிறுத்தைகள் தயாராக இல்லை என்பது அவர்கள் கருத்தியல் ரீதியாக தயார்ச்செய்யப்படவில்லை என்பதையும் அம்பேத்கர் பிம்பமாகவன்றி தத்துவமாக உள்வாங்கப்படவில்லை என்பதையுமே காட்டியது.

திருமா ஆரம்பித்துவைத்த பெயர்மாற்ற அரசியல் என்பதும்கூட திமுகவிடம்,இருந்து கடன்வாங்கியதுதான். நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் ராமைய்யா அன்பழகனாகவும் மாறியது திமுகவின் கடந்தகாலக் கதை. அதே அரசியலைப் பின் தொடர்ந்த திருமா, இதுவே சாதியடையாளத்திற்கும் இந்து அடையாளத்திற்கும் எதிரான மாற்று என்றார். அப்படியானால் திமுக ஏன் சாதியெதிர்ப்பு இயககமாக மாறவில்லை என்னும் கேள்வியை அவர் எதிர்கொள்ளத் தயங்கினார்.

மேலும் தமிழ் மரபு, தமிழ்ப்பண்பாடு என்று ஆதிக்கமரபுகளையே அவரும் கட்டமைத்தார். ‘உங்களது பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை?’ என்னும் கேள்விக்கு ‘கரிகால்சோழனின் இன்னொரு பெயர்தான் திருமாவளவன். அதை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை’ என்று அவர் பதிலிறுத்ததன்மூலம் பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கமதிப்பீடுகளையும் கட்டிக்காத்த சோழர் காலத்தைப் பொற்காலமாய்க் கதையாடிய திமுகவின் மரபில் இயல்பாகப் பொருந்திப்போனார். மட்டுமல்லாது அருணாச்சலம் போன்ற ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கும் கூட செம்மலை என்று பெயர்சூட்டி ‘ஞானஸ்ன்நானம்’ செய்தார்.

கற்பு – குஷ்பு விவகாரத்தில் சிறுத்தைகள் வெளிப்படையாகவே தங்களை ஆணாதிக்கப்பாசிஸ்ட்களாக வெளிப்படுத்திக்கொண்டனர். எண்ணற்ற தலித் இளைஞர்களின் ரத்தத்தின் மீதும் சுயமரியாதை உணர்வின்மீதும் கட்டப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் பறையர்களுக்கெதிராக கலவரங்களைத் தொடுத்த வன்னிரகளின் தலைவர் ராமதாசோடு ‘தமிழைப் பாதுக்காக’ கைகோர்த்தார்.

‘இனி சாதிக்காக ரத்தம் சிந்தப்போவதில்லை’ என்று புன்னகையோடு பொன்மொழி உதிர்த்தனர். ஒடுக்கப்பட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அணிதிரள வேன்டிய அமைப்பு சினிமாக்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தது. விடுதலைககாய்ச் செலவழிக்கப்படவேண்டிய தலித் மகக்ளின் உழைப்பு விளம்பரங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும் விரயமாக்கப்படட்து.

சிறுத்தைகள் முன்வைத்த தமிழ்த்தேசிய அரசியலும்கூட ‘தமிழ்பேசும் சாதி’களுக்கானது. இதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிறுத்தைகள் பல்வேறு காலகட்டங்களில் நடத்திவந்த ஏடுகளான கலகக்குரல், தாய்மண், இப்போது தமிழ்மண், உலகத்தமிழர்சக்தி ஆகிய ஏடுகள் வெளிப்படுத்தின. இத்தகைய வரையறுப்புகளின் மூலம் அருந்ததியர்கள், நரிக்குறவர்கள், பழங்குடிகள் ஆகிய விளிம்புநிலைச்சாதியினர் தேசியக்கட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர்.

பெரியாரே தலித் அரசியலின் மாபெரும் எதிரியாய் முன்னிறுத்தப்பட்டார். பார்ப்பனர்களோடு எவ்வித தயக்கங்களுமின்றி உறவுகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை அண்ணாபேருந்து நிலையத்திற்கருகே சிறுத்தைகளால் தமிழ்த்தாய்க் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் திருமாவிற்கு பரிவட்டம் கட்டப்படும் படங்கள் தாய்மண்ணில் பகட்டாக வெளியிடப்பட்டது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் திருமாவிற்குப் பூரணகும்ப மரியாதை செய்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்பனீய மதிப்பீடுகள் எவ்விதக் கூச்சமுமின்றி அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக நடத்திவந்த கவர்ச்சி அரசியல், தனிநபர் வழிபாடு, தலைமைதுதி, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்’ என ஏட்டளவிலும் ‘மய்யப்படுத்தப்பட்ட தலைமை’ என்பதுமாக நடைமுறையிலுமாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் ‘போலச்செய்தனர்’ சிறுத்தைகள்.

இதன் உச்சகட்டமாக தோழர் திருமா ‘அண்ணன் திருமாவாக’ மாறினார். ஈழப்பிரச்சினை குறித்து எவ்வித விமர்சனங்களுமற்று தலித்துகள் விடுதலைப்புலிகளின் ரசிகர்களாக்கப்பட்டனர். ‘தென்னகத்துப் பிரபாகரன் திருமாவளவன் வாழ்க’ என்னும் கோஷங்கள் விண்ணதிரத்தொடங்கின. கடைசியாக அதனுச்சம் திருமா அரசியல் களத்தில் மட்டுமில்லாது திரையுலகிலும் ‘கதாநாயகன்’ ஆனார்.

சிலகாலம் முன்புவரை கட்டவுட்டுகளில் மழைக்கோட்டும், துப்பாக்கியும், கூலிங்கிளாசுமெனத் தோற்றமளித்த விஜயகாந்தின் தோற்றம் கதர்ச்சட்டை, கதர்வேட்டி என மாறிப்போனதெனில் திருமாவளவனோ விஜயகாந்தின் கெட்டப்புகளை மாட்டிக்கொண்டு ரெயின்கோட், கூலிங்கிளாஸ், துப்பாக்கி சகிதம் தலித மக்களுக்குக் காட்சியளிக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் மற்றெந்த தலித் அமைப்புகளையும் விட கூடுதலான கவனத்தையும், கணிசமான பலத்தையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தத் தலித் மக்களை இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்களவில் பறையர்சமூகத்தை வாக்குவங்கியாகத் திரட்டியிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறத்திலோ அது மோசமான கருத்தியல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைச் சொல்லலாம்.

பெரியாரை ஒருபுறம் தலித்விரோதியாகச் சித்தரித்துக்கொண்டு (இப்போது திமுக கூட்டணிக்குப்பிறகு இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மறுபுறம் தலித்துகளின் மீது கடும் வன்முறையையை ஏவிவிட்டவரும் இந்துத்துவக் கருத்தியலில் ஊறிப்போனவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென சிறுத்தைகள் அமைப்பு சமீபத்தில் நெல்லையில் நடத்திய ‘மண்ணுரிமை மாநாட்டில்’ முதல்வர் கருணாநிதியிடம் தீர்மானம் நிறைவேற்றிக் கோரிக்கை வைத்துள்ளது.

இரண்டாவது கொடூரசம்பவம் அருந்ததியர்கள் மீதான சிறுத்தைகள் அமைப்பினர் நேரடியாகப் பங்குபற்றிய தாக்குதல். அயோத்திதாசரைத் த்லித் திரு உருவாகக் கட்டமைக்கும்போது பறையர் சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் அவரின் அருந்ததியர் விரோதக் கருத்தியல் குறித்து எவ்வித விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை. மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தலித் தோழமை இயக்கம் நடத்திய ‘தந்தை பெரியார் தலித்துகளுக்கு எதிரியா? என்னும் கருத்தரங்கில் அருந்ததியர் இயக்கமாகிய ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான், சிறுத்தைகள் அமைப்பை விமர்சித்தார் என்பதற்காக அவரைச் சாதிப்பெயர் சொல்லித் தாக்கமுனைந்தனர்.

இப்போது அதேபோல விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகளே அருந்ததியர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு…

http://www.keetru.com/dalithmurasu/aug07/ponnusamy.php

தீ…தீ… பாப்பாத்தீ.


இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள ‘ராமனுக்கான போர்’ என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.

வாசந்தி கட்டுரையின் சாராம்சம்.

1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.

2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை ‘ராமன் இருக்கிறாரா இல்லையா’ என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.

3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.

4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து ‘சொதப்பிவிட்டது’.

5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்திகர்களும் கூட முகம் சுளித்தனர்.

6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.

வாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ‘ சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே’

அதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா? அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை?

தொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க? ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா?

எந்த நாத்திகர்கள் ‘முகம் சுளித்தனராம்? வாசந்தி மாதிரியான ‘முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா?’

அவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.

கடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.

வாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்தோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.

வெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.

அக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட ‘உளவுத்துறை அறிக்கை’யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் ‘கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது’ என்றும் ‘ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்’ என்கிற ரீதியிலும் ‘கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்’ என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் ‘தினவு’ என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்வேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.

இத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே ‘முற்போக்காளர்களாக’ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ…தீ… பாப்பாத்தீ… தீ…

நெருப்புக்குஞ்சு

1. ‘வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்’ – இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். ‘ராமனுக்கான போர்’ என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்… இந்த ச்ச்சும்மா..

2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?

“தேவர் காலடி மண்ணைச்’ சரணடையுமா பெரியார்பூமி?


முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.

ஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். ‘புரட்சிப்புயல்’ வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.

தலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.

இந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் ‘சமூகப் பங்களிப்புதான் என்ன?

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.

ஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.

தலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது ‘பங்களிப்பு’ என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.

அவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.

மேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. ‘தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்’ என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

பார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய ‘பெருமை’ முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ ‘பார்வர்ட் பிளாக்கின்’ பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.

மேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)

சாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூகநீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.

ஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.

முக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.

தங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.

இந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா – சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.

தமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவர் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.

முக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘பாரதீய பார்வர்ட் பிளாக்’. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் ‘ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்’ என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.

இவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் ‘லட்சிய நடிகர்’ எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் ‘லட்சியநடிகர்’.

தமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. ‘தமிழால் ஒன்றுபடுவோம்’ என முழங்கி ‘தமிழ்ச்சான்றோர் பேரவையை’யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.

இன்றைய ‘நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்’ ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.

காலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன்? உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் ‘புதியபார்வை’ இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.

வீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.

இதுதாண்டா சீமான்! – பல்லிளிக்கும் தமிழ்த்தேசியம்


பகுத்தறிவு, இனவுரிமை, ஈழ ஆதரவு என்று கலந்துகட்டி மேடைகளில் பட்டையைக் கிளப்புபவர் இயக்குனர் சீமான். தமிழ்நாட்டில் சேகுவாரா டி ஷர்ட் விற்பனை அதிகரிப்பதற்கான காரணகர்த்தா. பெரியாரும் பிரபாகரனும்தான் சீமானின் இரு கண்கள். பிரபாகரன் எப்படியோ போகட்டும், ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் முகமூடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருகிறது. தம்பி படத்தில் கதாநாயகனின் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் சாதிவெறியனின் புகைப்படத்தை பெரியாரோடு மாட்டி பெரியாரை அசிங்கப்படுத்தியது, காங்கிரசை ஆதரித்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பரப்புரை செய்தபோது, ‘‘ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு’’ என்று பரப்புரை செய்து தனது ஆதிக்கச்சாதித் திமிரை நிரூபித்தவர்தான் இயக்குனர் சீமான். சமீபத்தில் ‘புதியதலைமுறை’ இதழில் கல்லூரி மாணவிகள் சீமானுடன் கலந்துரையாடும் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த உரையாடலில் ‘‘தமிழியம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை?’’ என்று ஒரு கேள்வி. ‘‘எங்களை ஏன் மீண்டும் சேரிக்குள் தள்ளுகிறீர்கள்?’’ என்று போலி ஆவேசம் காட்டியிருந்தார் சீமான். நேற்று (30.10.09) பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மய்யநீரோட்ட இடதுசாரிகள் உள்பட ஓட்டுக்கட்சிகள் அவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்து தங்கள் ஆதிக்கசாதி விசுவாசத்தை வெளிப்படுத்தின. அதில் இந்த வருடம் மரியாதையின் புதுவரவு ‘தமிழ்த்தேசியத் தம்பி’, ‘பெரியாரின் பேரன்’ சீமான். நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பலரும் முத்துராமலிங்க சிலைக்கு மரியாதை செய்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க சிலையில் மேலிருந்து மாலை போட்டபடி சிரிக்கிறார் பெரியாரின் பேரன். அவருக்குப் பின்னால் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு நின்றிருக்க, கறுப்புச்சட்டையும் நெற்றியில் திருநீறுக்கீற்றுமாக அட்டகாசமாக சிரிக்கிறார் ‘பகுத்தறிவு இயக்குனர்’.

தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்கசாதிகளின் தேசியமே என்று மீண்டும் நிரூபித்த இயக்குனர் சீமானுக்கு நன்றிகள். இப்படித்தான் சிவாஜிலிங்கம் எம்.பி கோவையில் முஸ்லீம்களின் மீது வன்முறை புரிந்த இந்துமக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, தமிழீழம் கிடைக்க வேண்டி பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டார். சீமான் முதல் சிவாஜிலிங்கம் வரை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக அடிப்படைவாதச் சக்திகளோடு கைகோர்த்துக்கொள்ளத் தயங்காதவர்கள். சீமானையும் சிவாஜிலிங்கத்தையும் நெடுமாறனையும் தங்கள் ஆதர்சமாக முன்னிறுத்தும் தமிழ்த்தேசியவாதிகள், ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவதாய்’ப் பாவனை செய்யும் கண்ணீர்த்துளிக் கவிஞர்கள் பதில் சொல்வார்களா?

சுஜாதா கற்றதும் விற்றதும்..


தோழர். அசுரன் உள்பட பலர் அயோத்தியாமண்டபம் சம்பவம் தொடர்பாக சுஜாதா குமுதத்தில் எழுதிய கதை தொடர்பாக விமர்சித்திருந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் மூன்றுமாதமாக குமுதத்தைப் படிக்கவில்லை. ஆனால் சுஜாதா என்றவுடனே எனக்கு நினைவுக்கு வரும் சம்பவம்.

‘நக்கீரன்’ கோபால் பொடா என்னும் ஆள்தூக்கி கருப்புச்சட்டத்தால் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்து சுஜாதாவை பேச அழைத்திருந்தார்கள். ஆனால் அவர்களிடம் சுஜாதா சொன்னது, “பொடாவா? நேக்கு அதைப்பற்றி ஒண்ணும் தெரியாதே” என்று பேச மறுத்துவிட்டார்.

ஆனால் அதே சுஜாதாதான் ‘பாய்ஸ்’ படத்தில் பொடா பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கீசியிருப்பார்.

அந்தப் படத்தில் அய்யப்பன் கேசட் போட்டு விற்கும் இளைஞர்களிடம் பாடல் இசையமைத்துத் தரும்படி நக்சல்பாரிகள் கேட்பதாக ஒரு காட்சியை எழுதியிருப்பார் சுஜாதா.

அய்யப்பன் பஜனைக் கோஷ்டியிடம் பாடல் எழுதிக்கேட்க அவர்கள் மார்கழி மாதப் பார்ப்பனப் பருப்புக் கோஷ்டியா என்ன? “இதி கொங்கணி ரஜம்…” (இது திருடர்களின் தேசம்) என்று தன் உரத்த குரலால் காற்றையும் மலைகளையும் கானகங்களையும் தன் வயப்படுத்திய கத்தார் என்னும் மண்ணின் கலைஞனைத் தந்தது நக்சல்பாரிப் பாரம்பரியம்.

தமிழகத்திலும் “ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனுன்னு பேரு வைக்க யாரடா நாயே?” என்று சட்டையைப் பிடித்துக் கேட்டு இசையில் நெருப்பைக் கொட்டியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ‘அசுரகானம்’.

இதெல்லாம் தெரியாத, தேங்காய்முடிக் கச்சேரிகளை மட்டுமே கேட்டுப் பழகிய சுஜாதாவிற்கு நக்சல்பாரிகளைப் பற்றி எழுத என்ன யோக்கியதை இருக்கிறது?

‘பாய்ஸ்’ படத்தில் பொடாக் கொடுமையின் உச்சமாக சுஜாதாவிற்குத் தெரிவதெல்லாம், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொதுக் கழிப்பறையில் கக்கூஸ் போக முடியாமல் அவதிப்படுவது மட்டுமே. கக்கூஸ் கழுவுவதெல்லாம் சிரமமில்லை இந்த ‘அய்யங்கார் வீட்டு அசிங்கத்திற்கு”, கக்கூஸ் போவதுதான் சிரமம். இருக்கட்டும்.

‘அந்நியன்’ படத்தில் கருடபுராணம் என்றபெயரில் புருடாபுராணம் எழுதிப் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விதவிதமாய்த் தண்டனைகள் வழங்கித் தன் வக்கிரத்தைத் தீர்த்திருப்பார் சுஜாதா.

நாளை புதிய ஜனநாயகப் புரட்சி நடந்தால் சுஜாதா (எ) ரெங்கராஜன் அய்யங்காருக்குத் தண்டனையாகவும் அவர் கக்கூஸ் போகமுடியாமல் அவதிப்படும் பிரசினைக்குப் பரிகாரமாகவும் ஆசனவாயில் டைனமெட் வைத்து வெடிக்கலாம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பரி!
மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி!

தேவர் ஜெயந்தி – வரலாற்றின் அவமானம்


‘பெரியார் பிறந்த பூமி’ என்று நாம் அவ்வப்போது பெருமையடித்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது, ‘அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா தொடங்கி வடமாநிலங்கள் வரை பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். மய்யநீரோட்ட இடதுசாரி அமைப்புகள் தொடங்கி புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூட சாதி ஒற்றைப் போட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் தமிழகத்தின் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது கூச்சகரமான செயலாக மாற்றப்பட்டிருக்கிறது’ என்பது. ஆனால் தமிழகத் தலைநகர் சென்னையின் மய்யப்பகுதியன்றில் ஒரு சிலை சாதிப்பெயரோடு நிற்கிறது. அந்த சிலை அமைந்த சாலையும் சாதி ஒற்றைத் தாங்கியிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக தமிழகச் சாதிகளுள் ஒன்றில் பிறக்காத எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தெருக்கள் மற்றும் பூங்காக்கள், நினைவிடங்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்காலத்தில் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் காயிதேமில்லத் பெயரால் மாவட்டம் அமைக்கப்பட்டதையட்டி எழுந்த மதக்கலவரம், வீரன் சுந்தரலிங்கம் பெயர் அரசுப்போக்குவரத்துக் கழகமொன்றிற்கு வைக்கப்பட்டதன் விளைவாய் எழுந்த சாதிய வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக தலைவர்களின் பெயர்கள் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக்கழகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இத்தனைக்கும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களின் ஒன்றில் கூட தலித் தலைவர்கள் இல்லை. ஆனால் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சிலையும் பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சாலையும்.

முக்குலத்துச் சாதி அதிகாரத்தையும் அரசியலையும் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ்ச்சமூகத்தின் பல தீர்மானகரமான மய்யங்கள் ஏற்றுக்கொண்டது என்பதே இதன் அர்த்தம். இன்று வரை வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஒரு சின்ன அசைவும் கூட இந்த முக்குலத்தோர் அதிகாரத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக அதற்கேற்றவாறு சமூகம் ஒத்திசைந்து தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. அதன் உச்சம் ‘தேவர் ஜெயந்தி’ என்னும் கலாச்சார அநாகரீகம், ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால் ‘ஜனநாயகரீதியிலான மக்கள் கூடுகை’. சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் எவ்வாறு தமிழ்ச்சமூகம் பெருவாரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று விதமான தளங்களினின்றும் அணுகலாம்.

அரசியல்:

திமுகவும் கருணாநிதியும் ஒருகாலத்தில் முக்குலத்தோரால் விலக்கப்பட்ட சக்திகளாகவே இருந்தனர். காரணம், திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி போன்ற ‘எளியசாதி’ மனிதர்களை அவர்களின் சாதிய உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேவர் சாதிக் கருத்தியல் பிதாமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் திமுக முன்வைத்த தமிழின -பார்ப்பன எதிர்ப்பு & இந்துமத எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் இயங்கி வந்தவர். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர் அதிமுகவிலும் அரசு அதிகாரங்களிலும் போதுமான செல்வாக்கைச் செலுத்தினர். காளிமுத்து, திருநாவுக்கரசர் போன்றவர்கள் கட்சியில் அதிகார மய்யங்கள் என்றால், பொன்.பரமகுரு போன்ற முக்குலத்துப் போலீஸ் அதிகாரிகள் அரசு எந்திரங்களின் தீர்மானகரமான சக்திகளாக இருந்தனர். முக்குலத்தோர் & அதிமுகவினர் உறவு என்பது ஜெயலலிதா தலைமைக்காலத்தில் உச்சத்தை எட்டியது என்பதும் அதற்குக் காரணம் சசிகலாவின் செல்வாக்கு என்பதும் சாதாரண தமிழ்ஜனங்களும் அறிந்ததுதான்.

ஆனால் இப்போது இழந்துபோன முக்குலத்தோர் ஆதரவைப் பெறுவதற்காக கருணாநிதியும் பல உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக மாற்றுவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டுவதான அறிவிப்பு என்பதாகத் தொடர்கிறது. மேலும் இப்போது தென்மாவட்ட திமுகவில் அதிகார மய்யங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்குலத்தோர்தான். ஆனால், என்ன ஒரு மனத்தடையாலோ இதுவரை கருணாநிதி நேரடியாக முத்துராமலிங்கத்தின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்தது இல்லை. இந்த ஆண்டு சென்னையில் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, ஆற்காடு வீராசாமி. இதில் ஒருவர் கூட முக்குலத்தோர் அல்ல. பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது அழகிரி. ஆனால் அவருடன் சென்றது ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்ற முக்குலத்து அமைச்சர்கள். தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக சாதி ஓட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராகத்தானிருக்கும்.

ஜெயலலிதா பொதுவாக எந்த அரசியல் முன்னோடிகளையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல. அண்ணா, பெரியார், காமராசர், காயிதேமில்லத் போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா போவது அரிதினும் அரிது. ஜெயலலிதாவின் கைத்தடிகளை அந்த வேலையைச் செய்ய பணித்து விடுவார். அதுவும் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு சிலைக்குக் கூட மாலை அணிவிக்கச் செல்லவில்லை. தான் இருந்த கொடநாடு எஸ்டேட்டிற்குப் பெரியாரின் புகைப்படத்தை வரவழைத்து ‘மரியாதை’ செய்தார். அண்ணாவுக்கும் அஃதே. கொடுமை என்னவென்றால் இத்தனைக்கும் இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழாவும்கூட. ஆனால் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளைக்கு நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க ஜெயலலிதா தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் நிலவிய கச்சாடாவான ஜனரஞ்சகக் கலாச்சாரத்தை அழித்து இந்துத்துவ பார்ப்பனியச் சார்பு நிலை எடுத்து வலதுசாரி அமைப்பாக மாறிப்போன ஜெ&அதிமுகவிற்கு மிகவும் இசைவானதுதான் இந்த முக்குலத்தோர் அதிகார அரசியல்.

திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளைத் தாண்டிப்போனால் தென்படுபவர்கள் ‘இடதுசாரிகள்’. சென்ற ஆண்டு முத்துராமலிங்க ஜெயந்திக்கு மரியாதை செலுத்த அதே சாதியைச் சேர்ந்த நல்லகண்ணுவை அனுப்பி தன் ‘புரட்சிகரத் தன்மையை’ நிறுவிக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் சி.பி.எம் கட்சியின் என்.வரதராஜன். ஆனால் இந்த ஆண்டு அறுவைச்சிகிச்சை முடிந்து கறுப்புக்கண்ணாடியோடு முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டு அட்டகாசமாய்ச் சிரிக்கிறார் காம்ரேட் என்.வி.

இத்தகைய சீரழிவின் கடைசிக்கொழுந்து, புளுத்துப்போன சந்தர்ப்பவாத சவடால் அரசியலுக்குப் புதுவரவு பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, பகுத்தறிவு இயக்குனர், செந்தமிழ் நாட்டு சேகுவாரா சீமான். நல்லவேளையாக நாத்திகம் பேசுவதைத் தவிர பெரியாருக்கும் சீமானுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. குஷ்பு விவகாரத்தில் ஆணாதிக்கவாதியாக அம்பலப்பட்டுப் போன சீமான், பெரியார் மற்றும் பிரபாகரனின் பெயரை உச்சரித்தே தனக்கான இளைஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ‘தம்பி’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத்தின் புகைப்படத்தைக் காட்டி மாற்று அரசியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின் கீற்று இணையத்தள நேர்காணலில் ‘தான் செய்தது தவறு’ என்று ஒத்துக்கொண்டார். இருந்தபோதும் சீமானின் சாதிய உளவியல் ஒழிந்தபாடில்லை. ஈழ ஆதரவு என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் “ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு” என்று விஷத்தைக் கக்கினார். இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முத்துராமலிஙக்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து வந்திருக்கிறார்.

“இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டோமே” என்பது சீமான் தரப்பு வாதம். சுயமரியாதைக்காகப் போராடிய போராளிக்கும் மாலை, ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் மரியாதை. இதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய தகிடுதத்தம்’. முத்துராமலிங்கம் மீது பேரன்பும் ராஜபக்ஷே மீது பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்து தமிழர்களை உருவாக்குவதுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். இது சீமானோடு மட்டும் நிற்பதில்லை. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இங்கு முன்வைக்கப்பட்டவை அனைத்தும் ஆதிக்க சக்தி நலன் பேணும் கருத்தியல்களே.

ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு பல தமிழின அமைப்புகள் இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் கைகோர்க்கவில்லையே. தமிழினவாதம் என்பது ஆதிக்கசாதிகளின் அயோக்கியத்தனமே என்பதற்கு ஆதாரம் தேட எங்கும் போகத் தேவையில்லை. இதே கீற்று இதழில் வெளியான முனைவர் வே.பாண்டியனின் ‘மார்க்சிஸ்ட்களின் புதிய அக்கறை & ஆலய நுழைவுப் போராட்டம்’ என்னும் கட்டுரையே போதுமானது. மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பனத் தலைமை, மலையாளிகள் தலைமை என்று காரணங்காட்டி சாதியாதிக்கத்தைக் காப்பாற்றுகிற அயோக்கியத்தனம்தான் பாண்டியனின் ‘தமிழின ஒற்றுமை’ கட்டுரை.

சினிமா:

அவ்வப்போது சீர்திருத்தப் பூச்சாண்டி காட்டும் விவேக், எவ்வளவு மோசமான தேவர் சாதி வெறியர் என்பதை விளக்குவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இப்போது அதன் புதிய வரவு கருணாஸ். ‘முக்குலத்து முகவரி’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் கருணாஸ் ‘இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்பதுதான் முக்குலத்தோர்’ என்று ‘அறிவியல்’ விளக்கம் அளித்திருக்கிறார். இந்துமகாசபைத் தலைவனாக இருந்த முத்துராமலிங்கம் எப்படி முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முகவரியாக இருப்பார் என்று நமக்கு விளங்கவில்லை. கஞ்சா கருப்பு, ஆச்சி என்று அழைக்கப்படுகிற மனோரமா என சினிமாவில் பலரும் முக்குலத்தோரே. இயக்குனர்கள், நடிகர்கள் என பலமட்டங்களிலும் சினிமாவில் முக்குலத்தோர் ஆதிக்கம் உண்டு.

உதட்டுக்கு மேலே முளைக்கிற மயிரையும் முக்குலத்தோரையும் வீரத்தின் குறியீடாக மாற்றியதில் தமிழ்ச்சினிமாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. இதை முக்குலத்தோர் மட்டும்தான் செய்தார்கள் என்றில்லை; கமல்ஹாசன் மாதிரியான பார்ப்பனர்கள் தொடங்கி பல முக்குலத்தோர் அல்லாதோரும்கூட இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சினிமாக்களில் தேவராதிக்கம் கட்டமைக்கப்பட்டது குறித்து தனிக்கட்டுரையே எழுத வேண்டும். தேவர்சாதிப் பெண்ணைக் காதலித்ததால் சாதிய வன்முறை ஏவப்பட்டு மனநோயாளியாகும் தலித் இளைஞனைச் சித்தரிக்கும் ‘காதல்’, குறவர்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே விலக்கி வைக்கும் முக்குலத்துச் சாதிவெறியை அம்பலப்படுத்திய ‘பருத்திவீரன்’, தலித் & பள்ளர் முரண்பாட்டைச் சொன்ன ‘பாரதிகண்ணம்மா’ போன்ற சில படங்களைத் தவிர (இதனால் இந்த படங்கள் முற்றுமுழுதான & பிரச்சினைகள் எதுவுமற்ற அரசியல் சினிமாக்கள் என்று பொருளில்லை) பெரும்பாலும் தமிழ்ச்சினிமா என்பது முக்குலத்தோர் அதிகாரத்திற்கு ஒத்திசைந்தே உருவானது.

இலக்கியம்:

90களுக்குப் பிறகு உருவான கோட்பாட்டு வெளிச்சங்களில் சாதிய இழிவுகளுக்கு எதிராய்ப் பேசிய மனநிலை இன்றைய பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் இல்லை. தன்மய்யநோக்கு கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடத் துணிகிற கோணங்கி மாதிரியான படைப்பாளிகள் எப்போதும் சுயசாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியதில்லை. தங்கள் படைப்புகளில் கூட பதிவு செய்ததில்லை.

சமீபத்தில் உயிரெழுத்து இதழில் இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியனின் எதிர்வினை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கவிஞர் கரிகாலன் காலச்சுவடு இதழ் குறித்து எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை. “சுந்தரராமசாமி பாவம், கண்ணன் பாவம், நோ நோ டாடி பாவம், மம்மி பாவம், ஆல் பேமிலி டேமேஜ்” என்று புலம்பும் முருகேசபாண்டியன் “பார்ப்பனர்களையே ஏன் திட்டுகிறீர்கள். இட ஒதுக்கீட்டினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அரற்றுகிறார். அரட்டை அரங்கத்தில் பேசிக் கைதட்டல் வாங்க வேண்டிய முருகேசபாண்டியன்தான் நம் காலத்து ‘இலக்கிய விமர்சகர்’.

இப்படியாகத்தான் சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் உருவாகியுள்ள மொன்னைத்தனம் நிரம்பிய இலக்கியவாதிகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவார்களா என்ன? இதனால்தான் “தேவர் ஜெயந்தி என்பது ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை” என்று ஜெயமோகன் ‘கருத்துமுத்து’ உதிர்க்கிறார். (ஆனால் இதே ஜெமோதான் ‘புரட்சி என்பதே மாஸ் ஹிஸ்டீரியா’ என்று ஏழாம் உலகத்தில் அருள்வாக்கு சொன்னவர்.) “நீதிக்கட்சி முக்குலத்தோருக்கு எதிரான குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது” என்று கூசாமல் பொய் சொல்கிறார். அதுசரி கமலாதாஸையே கறுப்பு என்றவருக்கு இது எம்மாத்திரம்?

ஜெயமோகனின் மொழி ஆளுமையில் பலர் சொக்கிப் போவது உண்டாம். ஆனால் ஒரு சட்டத்தை எப்படி ‘பரப்ப’ முடியும் என்று அந்த சொக்கநாதர்களிடம் தான் கேட்க வேண்டும். (ஜெயமோகனுக்கு வந்த வாசகர் கடிதமொன்றில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து வாசகரொருவர் சுட்டிக்காட்டுகிறார். “முதுகுளத்தூர் பிரச்சினை குறித்து தனியாக எழுத வேண்டும்” என்கிறார் ஜெமோ. “அய்யய்யோ, அது வேற‌யா?” என்று அலறத் தோன்றியது.) காலச்சுவடுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக எழுதுகிற முருகேசபாண்டியன்கள் ஜெயமோகனின் இந்த முக்குலத்துச்சார்பு கட்டுரை குறித்து எழுதுவார்களா என்ன?

இப்படியாக அரசியல், கலை, இலக்கியம் என எல்லாமும் சாதியக்கறை படிந்து இறுக்கம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த அழகிய கற்பனையை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். சென்னை நந்தனத்தில் உள்ள ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை’யிலும் முத்துராமலிங்கத்தின் சிலையில் உள்ள பீடத்திலும் உள்ள ‘தேவர்’ சாதிப்பெயரைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை ஒரு இயக்கம் நடத்துகிறது என்று கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக அது இந்தியத் தேசியக்கொடியை எரிப்பதை விடவும் கடுமையான போராட்டமாகத் தானிருக்கும். அரசு ஒடுக்குமுறையையும் சாதிய வன்முறையையும் ஒருசேர சந்திக்கும் போராட்டமாகத் தானிருக்கும். ஆனால் சாதியெதிர்ப்புக் கருத்தியலின் சுயமரியாதையைக் காப்பாற்றும் போராட்டமாக நிச்சயம் அது இருக்கும். ஆனால் அதை யார் செய்வது? பெரியார் தி.க? ம.க.இ.க? ஆதித்தமிழர்பேரவை? காலம் நம் முன்வைக்கும் வரலாற்றுச் சவால் இது.