அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா?


படம்
 
 
உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாளமாய் மாற்றிக்கொள்ள பலர் தொடர் முயற்சியர்சிகளை மேற்கொண்டாலும் அவர்களது மேதமை அதையும் தாண்டி சமூகம் முழுமைக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது.
 
அத்தகைய ஆளுமைகளில் அம்பேத்கர் ஒரு மகத்தான இடத்தை பிடித்தவராவார். அவர் சமூகத்தில் பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் 18 மணி நேரம் பயின்று 1916ல் எம்.ஏ பட்டம் பெற்றவர். நியூயார்க் நகரில் 2000 புத்த்கங்களை வாங்கியவர். லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவலர் வந்து கூறுகிறவரை படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இப்படியாக அவரது பரிமாணங்களை சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் அவர் இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக தள்ளிவைக்கப்பட்ட பெருந்திரள் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த மாமேதையாவார்.
 
அந்த மக்கத்தான மனிதனின் கல்விச் சிந்தனைகள் கல்வியை நேசிக்கும் அனைவரும் உள்வாங்க வேண்டிய கருத்து பெட்டகங்களாகும். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மறைந்த அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தை கண்டுணர்ந்தார். ஆரம்ப கல்வியில் அவர் வயதையத்த குழந்தைகள் கையில் புத்த்கங்களையும், உணவு பைகளையும் சுமந்து வந்த போது அவர் கூடுதலக சாக்கு பையையும் சுமந்து வந்தார். இன்னும் பிற அவலங்கள் அவர் வாழ்க்கையில் கடுமையான உறுதியை கொண்டு வந்தது. விடாப்பிடியுடன் கற்றலின் உச்சிக்கு சென்றார்.
 
தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அது கிடைத்திட தனது சொந்த முயற்சியால் அவர்களுக்கான கல்வி நிலையங்களை துவக்கினார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மும்பை தாமோதர் ஹாலில் நடந்த கூட்டத்தில் “பஹிஷ்க்ரித் ஹித்காரினி சபா” என்ற அமைப்பை உருவாகினார். விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஆகியவைகளை தனது நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் ஷோலாப்பூருக்கு அருகில் இலவச விடுதி ஒன்று கட்டப்பட்டது. பைகுல்லா என்ற இடத்தில் நூலகம் ஒன்றையும், மாணவர்களுக்காக “வித்யா விலாஸ்” என்ற மாதப்பத்திரிக்கையும் உருவாக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அம்பேத்கர் “ஒடுக்கப்பட்டோர் கல்வி கழகம்” என்ற அமைப்பை துவங்கினார். இதன் சார்பில் ஐந்து விடுதிகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 1945 ஆம் ஆண்டு “பீப்பிள்ஸ் எஜுகேஷ்ன் சொஸைட்டி” என்ற அமைப்பை உருவாக்கினார். தானே முன் நின்று பதினைந்து லட்சம் செலவில் (அரசின் உதவி 6 லட்சம்) ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த அமைப்பு இப்போது ஆல்போல் தழைத்துள்ளது. இப்போது ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளும், பொறியியல் கல்லூரி. சட்டக் கல்லூரி உட்பட பதினான்கு கல்லூரிகளையும், மூன்று விடுதிகளும் ஒரு தொழிற்பயிற்ச்சிக் கல்லூரியும் நடத்தப்படுகிறது. 
 
சைமன் கமிஷன் இந்தியா வந்த போது, 1813 முதல் பிரிடிஷ் அரசாங்கம் இந்தியாவில் கடைபிடித்த கல்வி கொள்கையை அவர் ஆராய்ந்து கொடுத்த மனு மிகவும் புகழ்பெற்ற மனுவாகும். இந்திய கல்வியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் புள்ளி விபரங்களை அவர் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி அந்த அறிக்கையை தயாரித்து இருந்தார். அதே போல அவர் 1920 களில் பம்பாய் மாகாண் சட்ட மேலவை விவாதங்களில் கலந்துக்கொண்டு பேசிய பேச்சுக்கள் அவரது கல்வி மீதான அக்கறையை காட்டும்.
 
வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் அளிக்காது. அது சாதி இந்துக்களுக்கே பயன்படவில்லை. ஆக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கற்றபதுதான் பயன்தரும். ஆனால் இதை கற்பதற்கான கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என அவர் வாதாடினார்.  
 
கல்வி அரசின் கையில் இருக்கவேண்டும் என அவர் விடாபிடியாக இருந்த காரணம் அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமேனும் கல்வி கிடைக்கும் என உறுதியா நம்பினார். அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆனால் இந்திய சாதி அமைப்பை கலைக்க அல்லது சீர்குலைக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.   
 
இதற்கு சிறந்த உதாரணத்தை அவர் சைமன் கமிஷனுக்கு கொடுத்த் அறிக்கையிலிருந்து பார்க்கலாம்..
 
“இப்போது நாம் நமது கவனத்தை ஓர் உண்மையின்பால் செலுத்த வேண்டும்; இதுவரை நாம் பெரிதும் அலட்சியப்படுத்தி வந்த உண்மை அது; இதனை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்; அந்த அசைக்க, மறுக்க முடியாத உண்மை இதுதான்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிது உகந்ததான, பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற கல்வி அறிவை மிகப்பெரும் திரளான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது மிக மிக அவசியம்; எத்தகைய கல்வியையும் தங்களது முயற்சியினால் கிடைக்கப் பெற இயலாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் இருந்து வருகிறார்கள்” என 1854 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி இந்திய மக்களுக்கு கல்வியை கொடுக்க பிரிடிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது உண்மையா என அவர் கேட்டார். அப்படி இந்த கவலை உண்மையெனில் இது யாருகான கவலை? சாதி இந்துக்களுக்கும் பிறருக்குமா? அப்படியெனில் தலித்துக்கள் உங்களுக்கு சுமையா? என மறைமுகமாக கேட்டார்.
 
இவைகளை ஆதாரங்களுடன் அடுக்கினார்…
 
1881- 82 கல்வியாண்டை அய்வு செய்து அவர் கணக்கிட்டார். அப்போது தொடக்க கல்வி பயின்றவரகள் மொத்தம் 3,15,635 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.87 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 2,862 பேர் மட்டுமே. (பிராமணர்கள் 20.17 சதம்.)
 
அப்போது நடுநிலைப் பளிகளில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 11,254 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.14 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 17 பேர் மட்டுமே. (பிரமணர்கள் 30.70 சதம்.)
 
அப்போது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 4959 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் ஒருவர்கூட இல்லை. (பிரமணர்கள் 40.79 சதம்.)
 
அப்போது கல்லூரியில் பயின்றவரக்ள் மொத்தம் 480 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள், 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எவரும் இல்லை. (பிரமணர்கள் 50.05 சதம்.)
 
ஆக பிரிடிஷ்காரர்கள் இவைகளை கவனிக்க வேண்டுமென கூறினார். அவரது கொள்கை ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவதும் என இருந்த காரணத்தினால் தனது வாழ்வியல் அனுபவ அடிப்படையில் சாதி இந்துக்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்போதும் அடக்கியே வைத்திருப்பார்கள் என்ற உண்மையை கண்டுணர்ந்தார். 
 
இன்றும் அதுதான் நடக்கிறது. அறிவு ஜீவிகளாக தங்களை புறிந்துக் கொள்கிற ஐ.ஐ.டி “டுபாக்கூர்கள்” முதல் மதிப்பெண் பெறும் தலித் மாணவனை கோட்டா அடிப்படையில் தள்ளிவைத்து, அவர்கள் இடத்தை பரித்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
இப்போது சொல்லுங்கள் அன்றைய கல்வியை, சமூக நிலைகளை ஆய்வு செய்த அம்பேத்கர் போல இன்றைய கல்வியையும், சமூகத்தையும் நாம் ஆய்வு செய்யவேண்டுமா இல்லையா?  அவரது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை ஏன் ஒரு துவக்கமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?! 
 
ஆகவே கனவான்களே! இனி அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

வன்னிய குல ஷத்திரியர்கள்


ன்னியர்களை மணமுடிக்கும் தலித்துக்களின் காதலை நாடகக்காதல் என்று வெறி கொண்டு எதிர்க்கும் பாமக, இதற்காக தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை அணிதிரட்டி வருவது நமக்கு தெரியும். இதற்காகவே தருமபுரி தலித் இளைஞரான இளவரசனிடம் இருந்து வன்னியப் பெண்ணான திவ்யாவை மிரட்டி பிரித்து வைத்து அழகு பார்த்தவர்கள் இந்த வன்னிய குல ஷத்திரியர்கள் ! நிர்ப்பந்தத்தில் பேசும் திவ்யாவின் அவலத்தை வைத்தே வன்னிய மானம் மீட்கப்பட்டதாக துள்ளிக் குதிப்பவர்கள் இந்த சாதி வெறியர்கள்.

ஆனாலும் வரலாறு அவர்களின் துள்ளலை எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கும்? சொந்த சாதியில் பெற்றோர், உற்றோர் உறவினர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நாடகக் காதலை எதிர்க்கும் பாமகவினர் தமது சொந்த வாழ்க்கையில் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்? இதோ கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் கதையை படியுங்கள்!

அரசியல் ரவுடி

திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பாட்டாளி மக்கள் கட்சி.

ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான ஆறுமுகம். அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய இவர் பா.ம.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதானவர்.

மே மாதம் காதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு வெயிலுக்கு அஞ்சி திருச்சி சிறையில் இருந்த போது மேற்படி ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். மே 22-ம் தேதி நடந்த அவரது மகள் திருமணத்துக்குக் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் அவர் இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறது. பின்னர் மே 27-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்திருக்கிறார். இப்படி பாமக கொள்கையிலும், போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட மாபெரும் வன்னிய குல ஷத்திரிய வீரர்தான் இந்த ஆறுமுகம்.

கள்ளக் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் எதிரான பா.ம.க.வின் உண்மையான களப் போராளியான ஆறுமுகம் மே மாதம் 30-ம் தேதி கொத்தாம்பாடி வழியாகச் செல்லும் வசிஷ்ட நதிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்ததால் ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள் மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு பாமக பிரமுகரும் களப் போராளியுமான ஆறுமுகம் உடைந்த வளையல்கள் சூழ ஏன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? கொள்கைக்காக கொல்லப்பட்டிருந்தால் வெளிப்படையாக இன்னார்தான் எதிரிகள் என்று தெரிந்திருக்கும். கொள்கை இடத்தில் மர்மமும் வளையலும் இருந்தால் என்ன பொருள்?

பா.ம.க.வின் சமூக நீதி கோட்பாட்டின்படி முறையாக திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு 25, 21 வயதான இரண்டு மகன்களும் 22 வயதான மகளும் உள்ளனர். அதாவது பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் அய்யா ஆறுமுகம் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது. வன்னிய மக்களின் மானத்திற்கும், பொறுப்பிற்கும் சொந்தக்காரர்களான பாமக கட்சியின் பிரமுகரே அதுவும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதால் ‘அம்மாவின்’ ஆத்தூர் போலீசு கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். தமிழகத்திலேயே புகழ் பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பாமகவின் மானத்தையும், மர்மத்தையும் கண்டு பிடிக்க வேண்டிய கடமையை நாய் அர்ஜூன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

விசாரணையின் போது கல்பகனூரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. உடனே ஒரு பாமக பிரமுகர் கள்ள உறவு வைத்திருப்பதா என்று பாமக சொந்தங்கள் பொங்கி எழுமென்று யாரும் எதிர்பார்க்கவேண்டாம். கள்ள உறவு இல்லையென்றால் ஷத்திரிய குலத்தின் ஆண்மைக்கு பெருமையில்லை.

எனினும் போலீசார் மனதை இரும்பாக்கிக் கொண்டு அந்த செல்வியிடம் விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் செல்வியும் அழுது அரற்றியவாறு கூறியது என்னவென்றால் வசிஷ்ட நதிக்கரையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், “மாஜி’ கள்ளக் காதலன் வனராஜா எட்டி உதைத்தபோது, ஆறுமுகத்தின் ஆண் குறியில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

இப்படி புராணச் சிறப்புள்ள இந்த மர்மக் கொலையின் மூலத்தை ஆத்தூர் போலீசு தொடர்ந்து தேடியபோது முதலில் வனராஜாவை குறிவைத்தார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே வனராஜா காஷ்மீர் போகும் லாரியில் ஓட்டுனராக சென்று விட்டதும், அவர் இப்போது குஜராத்தில் இருப்பதும் தெரிய வந்தது. வனராஜா, வசிஷ்ட நதி, காஷ்மீர், குஜராத் எல்லாம் சேர்ந்து பார்த்தால் இதில் மகாபாரதமே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

வனராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்பதை போலீசார் பல சுற்று விசாரணையில் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னரே போலீசிடம் கதை சொன்ன செல்வி பின்னர் தலைமறைவாக இருந்து விட்டு வேறு வழியின்றி ஜூன் 6-ம் தேதி கல்பகனூர் வி.ஏ.ஓ. அத்தியப்பன் முன்பு ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

பிறகு போலீசில் செல்வி அம்மையார் கொடுத்த வாக்குமூலத்தை படியுங்கள்:

“என் சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அனுப்பூர். தாய்மாமன் ரத்தினவேலை நான் திருமணம் செய்தேன். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தினவேலின் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், நான் கல்பகனூரில் உள்ள எனது தாய் பழனியம்மாளுடன் வந்து வசித்து வந்தேன்.

அப்போது, பா.ம.க., கட்சியில் உள்ள பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆறுமுகம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29-ம் தேதி, கொடுத்த பணத்தை அவர் கேட்டதால், பணத்தை திருப்பி கொடுக்ககூடாது என்று முடிவு செய்த நான் இரவு 9.30 மணியளவில் அவரை “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று வசிஷ்ட நதிக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை நசுக்கிப் பிடித்து கசக்கி கொலை செய்தேன், பின்னர் நான் வீட்டுக்கு போய்விட்டேன்.”

இதுதான் செல்வி அளித்திருக்கும் வாக்குமூலம்! செல்வி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலே எழுதிய அனைத்தும் எமது சொந்தச் சரக்கு அல்ல. அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகளைத்தான் தொகுத்து எழுதியிருக்கிறோம். பொதுவில் கள்ளக்காதல் கொலை என்றால் ஊடகங்கள் அதை மலிவான ரசனையை தூண்டும் விதத்தில் எழுதும். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இங்கே ஒரு முக்கியமான பாமக பிரமுகர் கள்ளக் காதலியால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காதல், நாடகக் காதல், வன்னிய குல ஷத்திரிய வீரம், அக்னிக்கு பிறந்தவர்கள், ஒழுக்கம், என்று ஏகப்பட்ட விசயங்களைப் பேசும் அய்யாவின் பாமக நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இந்த ஆறுமுகம் ஒரு சான்று இல்லையா? பெண்டாளுவதையே ஆண்மையின் வீரம் என்று கொண்டாடுவது எல்லா ஆதிக்க சாதியிடத்திலும் உண்டு. அதிலும் இந்த ‘ஷத்திரிய’ வகை சாதிகளில் இது இன்னும் அதிகம். இந்த ஆணாதிக்க திமிர்தான் சாதிப் பெருமை என்று தலித்துக்களின் காதலை வெறுப்புணர்வுடன் ஒழிக்க நினைக்கிறது.

ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.

எனினும் அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது.

தினமலர்

ஜூன் 04,2013

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வசிஷ்ட நதிக் கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பா.ம.க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 45. அவர், கடந்த, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.இதில், கல்பகனூர் புதூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதையடுத்து, செல்வியை, போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில், செல்வி, ஆறுமுகம் ஆகிய இருவரும், வசிஷ்ட நதிக்கரையில், உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, செல்வியின், “மாஜி’கள்ளக் காதலன் வனராஜா, இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரமடைந்த வனராஜா, ஆறுமுகத்தை கடுமையாக தாக்கி கொலை செய்தார். வனராஜாவை, ஆத்தூர் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஜூன் 07,2013

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலி, பா.ம.க., பிரமுகரின் ஆண் உறுப்பை கசக்கி, “கொடூரமாக’ கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 47. அவர், மே, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
இதில், கல்பகனூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், அவரை தேடி வந்தனர். நேற்று, கணேசன் மனைவி செல்வி, 34, என்பவர், கல்பகனூர் வி.ஏ.ஓ., அத்தியப்பன் முன்னிலையில், ஆஜராகி ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, செல்வி அளித்த வாக்குமூல விபரம்:
சேலம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூரை சேர்ந்த தாய்மாமன் ரத்தினவேலை, திருமணம் செய்தேன். அதன்பின், ரத்தினவேல் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன் அதில், பிரபு, விஜய் என, இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், கல்பகனூரில் உள்ள தனது தாய் பழனியம்மாளுடன், வசித்து வந்தேன். அப்போது, பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன், ஆறுமுகம், எனக்கு, 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார்.
கடந்த, 29ம் தேதி, இரவு, 9.30 மணியளவில், கொடுத்த பணத்தை கேட்டதால், உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை கசக்கி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத், செல்வியை கைது செய்து, சேலம் மகளிர் சிறையில் அடைத்தார்.