மும்பை யாருக்கு சொந்தம்?


மும்பை யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பெரும் பரபரப்பான விவாதமாக
உள்ளது. மராத்தியர்களுக்கா அல்லது இந்தியர்கள் அனைவருக்குமா எனபது தான்
தற்போதைய விவாதம்.

மும்பை சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க அபுஆஸ்மி
மறுத்தார். இதனால் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியினரால் கடுமையாக
தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தேசிய மொழியான இந்தியை அவமானப்படுத்தி விட்டதாக அனைவரும் குற்றம்
சாட்டினர்.

ஏன்? நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கூட கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இந்தி படிக்ககூடாது. ஆனால் அடுத்த மாநிலத்தில்
மட்டும் இந்திக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

ஒரு மாநிலத்திற்கு பிழைப்பு தேடிச்செல்பவர்கள் அந்த மாநில மொழியை
படிப்பது தான் மரபு. மாறாக அந்த மாநில மொழியை அவமதிக்கும் விதமாக
மராத்தியில் பதவிப்பிரமாணம் எடுக்க மறுத்துள்ளார் ஆஸ்மி.

இவர் பல வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் மராத்தியை
மட்டும் படிக்கவில்லை. பேச்சு வழக்கில் கூட மராத்தியை உச்சரிக்க
மறுத்துள்ளார். இவருக்கு அவர் தாய்மொழி மீது உள்ள அதே பற்றும், பாசமும்
மராத்தியர்களுக்கு இருக்கத் தானே செய்யும். குறிப்பாக, மொழியை வைத்து
ஆட்சி செய்யும் சேனாவினருக்கு அதிகமான பற்று இருப்பதில் என்ன தவறு
இருக்கிறது.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நன்றாக மராத்தி பேசுகிறான். அவன் ஒரு
வருடத்திலேயே மராத்தியை நன்றாக படித்து விட்டான்.
ஒரு வெளிநாட்டு தீவிரவாதிக்கு உள்ள அக்கறை, பல வருடங்களாக அந்த
மாநிலத்தில் தொழில் நடத்தி வரும் அபு ஆஸ்மிக்கு இல்லாமல் போய் விட்டது.

தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ராகுல்
ராஜீவும் மும்பைக்கு சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

அவர் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதல் நடைபெற்ற போது, தீவிரவாதிகளை
எதிர்த்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்ற கமாண்டோ படையிளனர் பீகார்
மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே, மும்பை
தாக்குதலில் ஈடுபட்ட மராட்டிய போலீஸ் அதிகாரிகளான கர்காரே, காம்தே,
சலாஸ்கர், ஓம்ப்ளே ஆகியோரை ராகுல் எப்படி மறந்தார் என்று கேட்டுள்ளார்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மராட்டிய எதிர்ப்பு போக்கையே
கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் மராத்திய மக்களின் நலனுக்காக
ஒருபோதும், பாடுபடமாட்டார்கள்.

மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தமானதாக இருக்கலாம். ஆனால் அவரது
இத்தாலி அன்னைக்கும் இது எப்படி சொந்தமாகும்?
இந்த நாடு ஒரே நாடு. அது தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று
ராகுல் எங்களுக்கு சொல்ல தேவையில்லை.

இந்தியாவை பிரித்தது காங்கிரசார் நாட்டுக்கு செய்த மிகப்பெரிய பாவம்.
அதன் விளைவுகளை தேசம் இதுநாள்வரை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய காங்கிரசார் தேசிய ஒருமைப்பாடு
பற்றி பாடிக்கொண்டிருப்பது என்பதை விட வேடிக்கையானது எதுவும் இருக்க
முடியாது என்றும் பால்தாக்கரே கூறி உள்ளார்.

மேலும் ராகுல் கருத்து குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், மும்பை
கலவரம் நடந்த போது, சிவசேனா கட்சியினர்தான் மும்பை மக்கள் அனைவரையும்
காப்பாற்றினர். அப்போது வட இந்தியர்கள் என்று எவரையும் பார்க்கவில்லை.
ஒட்டுமொத்த இந்துக்கள் அனைவரையும் தான் காப்பாற்றினர்.

மாநிலங்கள் மொழிகள் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா
மொழிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் மராட்டிய மொழிக்கு
உரிய மரியாதை கிடைக்கவில்லை. நாங்கள் அதைக் தான் எதிர்க்கிறோம்.

ராகுல் ராஜிவ் மும்பையை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கூறுகிறார். இதை
யாரும் மறுக்கவில்லை. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசுத் தினத்தன்று
கொடி ஏற்ற முடியவில்லை. அப்படியானால், காஷ்மீர் மாநிலம் இந்தியாவில்
இல்லையா? இது பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை.

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பண்டிட் ஜாதியினர் அகதிகளாக
விரட்டப்படுகின்றனர். இது குறித்து யாரும் எதுவும் சொல்வது இல்லை என்று
கேட்டுள்ளார்.

மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது என்று காங்கிரஸ் அரசு
சொல்கிறது.

அப்படியானால், காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுத்து
வைத்திருப்பது ஏன்? காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் தானே இருக்கிறது. அங்கு
அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்று ராகுல் ராஜிவ் ஏன்
சொல்லவில்லை.

காஷ்மீர் மாநிலத்திற்கு புனிதப்பயணம் செல்லும் இந்துக்கள் ஓய்வெடுத்துக்
கொள்ள அந்த மாநில அரசு நிலம் ஒதுக்கியது. இதையடுத்து, நடந்த போராட்டத்தை
தொடர்ந்து அந்த நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால்
அப்படிப்பட்டவர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு மானியம்
வழங்குகின்றது. மும்பைக்கு சொந்தம் கொண்டாடும் காங்கிரசார் இதற்கு என்ன
செய்தார்கள்.

இந்து கோவில்கள் அனைத்திலும் வரும் உண்டியல் பணம் அனைத்தையும் அரசுதான்
நிர்வகிக்கிறது. அப்படிப்பட்ட சாமானிய இந்து பக்தர்கள் தங்குவதற்கு இடம்
ஒதுக்கி கொடுக்க முடியவில்லை.

இந்தியாவில் பட்ஜெட் தயாரிக்கும் போது, பாதுகாப்பிற்கு தான் அதிக அளவில்
நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அனைத்தும் எங்கு
செயல்படுத்தப்படுகிறது. அதிகமாக காஷ்மீரில் தான் பாதுகாப்பு படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்படி இருந்தும் அந்த மாநிலத்தில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை
அரசால் ஏற்ற முடியவில்லை. அந்த மாநில மக்கள் தேசிய கொடி ஏற்றுவதை
அவமானமாக கருதுகின்றனர். இதற்கு ராகுல் என்ன சொல்கிறார்.

வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக உலமாக்கள் மாநாட்டில் பத்வா
பிறப்பிக்கப்பட்டது. அப்போது, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அங்கு தானே
இருந்தார். அவரால் ஏதாவது பேச முடிந்ததா?

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, நான் அங்கு இருந்த போது அவர்கள் எந்த
தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்று தானே சொன்னார். அவர்கள் நிறைவேற்றிய
தீர்மானத்திற்கு எதிராக எந்த கருத்தும் சொல்ல முன்வரவில்லை.

மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தமானது என்ற கருத்தை சொல்லும்
காங்கிரசார், இந்தியா முழுவதற்கும் ஒரே நிலைப்பாட்டில் தானே இருக்க
வேண்டும்.

மும்பை மட்டும் அனைவருக்கும் சொந்தமாகும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து
நதிகளும், இந்தியர்கள் அனைவருக்கும் என்றுதானே இருக்க முடியும்.

அப்படியானால், தமிழகத்திற்கு எதிராக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில
அரசுகள் தண்ணீர் தர மறுக்கிறார்களே, அதற்கு காங்கிரசாரின் நிலைப்பாடு
என்ன? இதற்கு ராகுல் என்ன சொல்கிறார்.

மொழி அடிப்படையில் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே மொழிகளுக்கு
உள்ள மரியாதை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். மராத்தி
மொழியை அடிப்படையாக வைத்து தான் மராட்டிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
எனவே, மராட்டிய மாநிலம் மாத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம்.

தமிழ் நாடு கூட தற்போது சேட்டுகளாலும், மலையாளிகளாலும் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டு வருகிறது.
வரும் காலங்களில், பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்று போராட்டம்
நடத்தினால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். உண்மையான ஒரு
மொழிப்பற்றோடு போராடும் மராத்தியனைக் பார்த்து நாம் நிறைய கற்க வேண்டும்.

ஆனால் அது தெரியாத தமிழக அறிவு ஜீவிகள் பலர் பால் தாக்கரேவுக்கு எதிராக
போராட்டம் நடத்த புறப்பட்டு விட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கையில்
லட்சம், லட்சமாக தமிழர்கள் கொல்லப்பட்ட பொது என்ன செய்து கொண்டு
இருந்தனர். சோனியா ராஜீவின் புடவையை துவைக்கவா
சென்றிருந்தனர்.

ஆகவே, மும்பை மராத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற சேனா கட்சிகளின்
நிலைப்பாடு மட்டுமே சரியானது. இதில் இந்தியாவைப் பிரித்து தேசிய
ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவித்த காங்கிரசாருக்கு கருத்து சொல்ல எந்த
வித தகுதியும் கிடையாது.

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு…


இந்தியாவைக் கிராம ராஜ்ஜியமாகவும், இராம ராஜ்ஜியமாகவும் மாற்றுவது தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்தது! இப்போது இந்த நாட்டை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்கள் ஆளுகிறார்கள். இவர்களும் முழுமையான இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார்கள். இராம இராஜ்ஜியத்தைப் படைப்பதற்கான சோதனைக் களமாக காந்தி பிறந்த குஜராத்தை இந்த இராம பக்தர்கள் மாற்றியிருக்கிறார்கள்.
காந்தி ஒரு தீவிர வைணவன்.
இந்து மதத்தின் ஒரு பிரிவெனக் கூறப்படும் வைணவத்தின் மூ லமாகவே உலகைக் கண்டவர். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்களோ, எல்லா இந்துமதப் பிரிவுகளையும் ஏற்பவர்கள். காந்தி காங்கிரசு கும்பலுக்கும், ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலுக்கும் இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதில், அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு உள்ளது. சாரம் ஒன்றுதான்.
குஜராத்தில் இருந்து இசுலாமியர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலைவெறியாட்டம் நடத்தியபோது “காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு கொடூரமா!” என்று பத்தாம் பசலிகள் பலர் அதிர்ச்சி காட்டினர். “காங்கிரசு இரவிலே செய்ததை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் பகலிலேயே செய்கிறார்கள்” என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். ஆம். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலின் அணுகுமுறை பகிரங்கமான பாசிச கொலைவெறி. காந்திய காங்கிரசின் அணுகுமுறையோ நயவஞ்சகம் துரோகம்.
“காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துமதவெறியன்; ஆகவே, காந்தி ஒரு மதச்சார்பற்றவராக இந்துமதவெறி எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும்” என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பும் கருத்தும் உண்மையல்ல. பாகிஸ்தான் உருவானதே மத அடிப்படையில் நாடு பிளவுண்டதற்கே காரணம் காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தி அடிப்படையில் பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்பதை அம்பேத்கர், பெரியார் போன்ற ச மூக சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினர். இந்துமதவாதி காந்தியின் நயவஞ்சக துரோகமயமான அணுகுமுறை, இராம இராஜ்ஜியத்தை தாமதமாகக் கொண்டு வரும் எனப் பொறுமையை இழந்ததாலேதான் கோட்சேக்கள் ஆத்திரமுற்றனர்.
காந்திய காங்கிரசும் சரி, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலும் சரி நாட்டுப்பற்று தேசபக்தியில் வெவ்வேறு அளவுகளில் இந்துமதவாத நஞ்சு கலந்தார்கள். அவர்கள் அன்றும் இன்றும் பேசியதெல்லாம் சுதேசி; செய்ததெல்லாம் விதேசி ஊழியம் அல்லது ஏகாதிபத்தியத் தொண்டு. ஒருபுறம் சுதேசி இயக்கம் என்கிற பெயரில் நாடகமாடிக் கொண்டே, மறுபுறம் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூ லம் நாடு மறுகாலனியாக்கப்படுகிறது. காந்திய காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மறுகாலனியாக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலால் தீவிரமாக அமலாக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு ஊழியம் செய்யும் இவர்களது கொள்கையில் நாடே பஞ்சபூமியாகி கஞ்சித் தொட்டிகளும் பட்டினிச் சாவுகளும் நடப்பாகிவிட்டன.
நாட்டின் இன்றைய அவலநிலைக்கு, புதிய ஆட்சியாளர்களான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எந்த அளவுக்கு பங்காற்றுகிறது என்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் நமது மக்களை ஏமாற்றி, துரோகப் பாதையில் இட்டுச் சென்று, அவர்கள் வாழ்வை காந்திய காங்கிரசு நாசமாக்கியது ஒரு நூறாண்டுக்கும் மேலான வரலாறு. இன்றைய இளைய தலைமுறையினர் பலரது கவனத்துக்கு வராமலிருக்கும் இந்த உண்மையை இங்கே தொகுத்துத் தருகிறோம்!
“கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி கைராட்டை சுற்றிச் சுற்றி, உண்ணாவிரதப் போர் முறையின் மூலமே வெள்ளையனிடமிருந்து “விடுதலை’ பெற்று விட்டோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பி காங்கிரசின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவுடன் காங்கிரசின் தன்மையும் பார்வையும் மாறியது.” நமது பாடசாலைப் புத்தகங்கள் போதிக்கின்ற இந்த விவரங்கள் சாரமற்று நீர்த்துப் போன பழங்கஞ்சிக்கு ஒப்பானது. எள்ளின் முனையளவும் உண்மையற்றவை. காங்கிரசின் பிறப்பே வேசித்தனமானது; மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை
“உலகில் நாகரிகமடைந்த நாடுகள் அளவுக்குப் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நாம் அடைவதற்கு பிரிட்டிஷாருடைய தொடர்பு நமக்கு நீண்ட காலத்துக்குத் தேவையாகும்.” (1893ல் தாதாபாய் நவ்ரோஜி)
“இங்கிலாந்து நாட்டுக்குப் படித்த வகுப்பினர் எதிரிகளல்ல; நண்பர்களாவர்.” (1898ல் காங்கிரசுத் தலைவர் ஆனந்த மோகன் போஸ்)ஆ “பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்து ஊசலாட்டமின்றிச் சேவை செய்வதே யல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதல்ல! மாறாக, அதன் அடிப்படையைப் பரவலாக்குவதாகும்.” (சுரேந்திரநாத் பானர்ஜி)
“இந்திய மக்கள் உடனடியாக மாற்றத்தையோ புரட்சியையோ விரும்பவில்லை… நிலவுகின்ற அரசைப் பலப்படுத்தவும், அதை மக்களோடு நெருக்கமாகக் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர். இந்திய விவசாயம் மற்றும் தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அரசுச் செயலகத்திலும், வைசிராயினுடைய நிர்வாகக் ழுவிலும் சில இந்திய உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.” (1901ல் காங்கிரசு தீர்மானம்)
— வேறொன்றுமில்லை. இவையாவும் மூத்த காங்கிரசுத் தலைவர்களின் பொன்மொழிகள். வெள்ளையனின் பாதாரவிந்தங்களை நக்கி ருசிகண்ட நாக்குகளிலிருந்து வெளிப்பட்ட இந்த வாக்கு லங்களும், தீர்மானங்களும் எதை நிரூபிக்கின்றன? மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு என்ற வெள்ளையர்களின் அறிக்கை இதற்கான பதிலைக் கூறுகிறது:
“இந்திய மக்களில் அரசியல் மனப்பான்மை கொண்ட பகுதியினர்… அறிவுபூர்வமாக நம் குழந்தைகள். நாம் முன் வைத்த கருத்துக்களை அவர்கள் மனதில் வாங்கிக் கொண்டார்கள்.” (மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு அறிக்கை 1918 பக்: 115)
இதை உறுதிப்படுத்தி காந்தி கூறுகிறார்:
“இந்த ஸ்தாபனம் (காங்கிரசு) முதன் முதலாக ஒரு ஆங்கிலேயரால்தான் ஏற்படுத்தப்பட்டதென உங்களிடம் கூறுகையில் நான் அளவிலா ஆனந்தமடைகிறேன். காங்கிரசு மகாசபைக்கு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர் தகப்பனாக விளங்கினார். (இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காந்தியின் உரை)
உண்மைதான். இவர்களே பெருமைப்பட்டுக் கொள்வதைப் போல் காங்கிரசு வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அறிவுப்பூர்வமான குழந்தைதான்! மறுப்பதற்கில்லை. இந்த அறிவுப்பூர்வமான கள்ளக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய அவசியம் பற்றி சர். வில்லியம் வெட்டர்பர்ன் என்ற வரலாற்று ஆசிரியன் கீழ்க்கண்டவாறு கூறுகிறான். 1878ஆம் ஆண்டு, ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம், தாய்மொழிச் செய்தியேடுகள் தடைச் சட்டம் ஆகிய சட்டங்கள் கொண்டு வந்ததையொட்டி அவன் கூறுகிறான்.
“ரசியபாணி போலீசு அடக்குமுறையுடன் அதிர்ஷ்டம் கெட்ட இந்தப் பிற்போக்குச் சட்டங்களும் சேர்ந்து, லிட்டன் பிரபுவின் கீழ் இருந்த இந்தியாவைப் புரட்சிகரமான எழுச்சிக்கு வெகு அருகாமையில் இழுத்துச் சென்று விட்டன. தக்க தருணத்தில் திரு. ஆலன் ஆக்டேவியன் ஹியூமும், அவருடைய இந்திய ஆலோசகர்களும் தலையிட ஊக்கம் கொண்டனர்.” (சர். வில்லியம் வெட்டர்பர்ன்: ஆலன் ஆக்டேவியன் ஹியூம், இந்திய தேசிய காங்கிரசின் தந்தை 1931; பக்:101)
1857இல் வீறுகொண்டு எழுந்த சுதந்திரப் போரினைத் தொடர்ந்து காலனியாட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத்தான் வெட்டர்பர்ன் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறான். ஹியூமும் அவனுடைய ஆலோசகர்களும் இவ்விசயத்தில் ஊக்கத்தோடு தலையிட்ட காரணத்தைச் சொல்லும் முன்பாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.
கருவாகி உருவான கதை
மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை பிராந்திய, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய இராணுவ பலம் ஒன்றை மட்டுமே கொண்டு நசுக்குவது இயலாத ஒன்றாக மாறி வந்தது. வீழ்ந்து வரும் மக்களின் வாழ்நிலை, எதிர்ப்புணர்வின் பேரலைகளாய்ச் சீற்றம் கொண்டன. சீர்திருத்தங்களை வழங்கி எதிர்ப்புணர்வினை மழுங்கடிக்கும் உபாயம் கூட அதிக நாள் அரசுக்குக் கை கொடுக்கவில்லை.
எண்ணற்ற சமூ க சீர்திருத்த மற்றும் மத ரீதியான அமைப்புகள் ஏகாதிபத்தியத்தால் ஊக்கம் கொடுக்கப்பட்டன. நில உடமை மற்றும் தரகு முதலாளிய வர்க்கத்திலிருந்து உதித்து வந்த ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சையத் அகமது அலி, அமீர் அலி போன்றோரின் தலைமையிலான சீர்திருத்த அமைப்புகள் இவர்களுக்குப் போதுமானதாக இல்லை. “அரசியல் நிறுவனம்’ என்ற வெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.
1838இல் வங்கத்தில் தோன்றிய வங்க நில உடைமையாளர் சங்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டிஷ் இந்தியச் சங்கமும், “அரசியல் நிறுவனம்’ என்ற வரையறுப்புக்கு உட்பட்டவை எனலாம். வெள்ளையனின் முதல் விசுவாச அமைப்புக்களாகத் தோன்றிய இவ்வமைப்புக்கள் 1851இல் ஒன்றாக இணைந்தன. இதே போன்ற சங்கங்கள் சென்னை, பம்பாய் போன்ற பல்வேறு நகரங்களில் நிறுவப்பட்டன. ஆட்சியாளர்கள் மீது நல்லெண்ணம், நீதியுணர்வு, விசுவாசம் ஆகியவற்றை மக்கள் கொள்வது, “மாட்சிமை பொருந்திய’ வைசிராய், கவர்னர்கள் போன்றோரிடம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது இச்சங்கங்களின் நோக்கம். அப்போது கலெக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரசுத் தலைவருமான தாதாபாய் நவ்ரோஜி பம்பாய்ச் சங்கத்தில் உறுப்பினர்.
அரசியல் தேவையை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் வெள்ளையர்கள் எதிர்பார்த்தவாறு செயலாற்ற முடியவில்லை. அதேசமயம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள மக்களும் தயாராக இல்லை. இதே கால கட்டத்தில் பயங்கரப் பஞ்சமாக உருவெடுத்த பொருளாதாரத் துயரங்கள் மக்கள் கலகங்களாய் வடிöவடுத்தன. இந்த மக்கள் கலகங்கள் எப்படியிருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அப்போது நாடு முழுவதும் இருந்து வந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்களின் தகவல்களை குறிப்புக்களை வெட்டர்பர்ன் ஆதாரமாகக் கூறுகிறான்:
“இப்போது உள்ள நிலைமையில் நிராசையுற்ற இந்த ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதாகும் என்று திகில் கொண்டு “ஏதாவது’ செய்ய வேண்டும் என விழைவதையே அக்குறிப்புகள் எல்லாம் காட்டின… அந்த “ஏதாவது’ என்பது “வன்முறையே’! பழைய வாள்களையும், ஈட்டிகளையும், தீக்குச்சி, வெடித் துப்பாக்கிகளும் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், தேவைப்படும்போது தயாராக இருக்கும் என்பதையும் எண்ணற்ற குறிப்புக்கள் காட்டின.”(மேற்படி புத்தகம், பக்: 80)
நெருக்கடியான இந்நேரத்தில்தான் ஹியூமும், அவனுடைய இந்திய ஆலோசகர்களும் ஊக்கமாக இவ்விசயங்களில் தலையிட்டனர். எதிர்வரும் ஆபத்தின் தன்மையைத் துல்லியமாக ஹியூம் உணர்ந்திருந்தான். “மிகப் பயங்கரமானதொரு புரட்சியின் பெருத்த அபாயத்தில் நாம் உண்மையாகவே இருக்கிறோம் என்பதைப் பற்றி அப்போதோ அல்லது இப்போதோ எனக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட்டதில்லை” என ஆட்சியாளர்களை எச்சரித்த ஹியூம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கூறினான்.
“இந்திய மக்களிடையே அதிருப்தியுற்றவர்கள் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போரினைக் காட்டிலும் தீவிரமான ஒரு எழுச்சியில் பிரிட்டனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என, எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நீடிப்பதற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை இல்லாதொழிக்க வேண்டுமானால் பிரிட்டனுக்குப் பாதுகாப்பு வால்வைப் (குச்ஞூஞுtதூ ஙச்டூதிஞு) போல செயல்படக்கூடிய இந்திய மேல் தட்டு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது மிகமிக அவசியம்.”
தன் திட்டத்தைச் செயல்படுத்த ஹியூம், தேர்ந்த அரசியல்வாதியான வைசிராய் டப்பரின் பிரபுவைச் சந்தித்தான். இவர்கள் சந்திப்பின் எதிரொலியாய்ப் பிறப்பெடுத்த காங்கிரசின் கதையை அதன் முதல் தலைவன் டபிள்யூ.சி. பானர்ஜி தன்னுடைய “இந்திய அரசியலின் அறிமுகம்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“டப்பரின் பிரபு இவ்விசயத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். சிறிது காலம் சிந்தித்த பிறகு அவர் ஹியூமை அழைத்தார். ஹியூமின் திட்டத்தால் பயனேதும் இராது என்பதே தம் கருத்து என்று கூறினார். இங்கிலாந்தில் அரசியின் எதிர்க்கட்சி ஆற்றும் பணியை இந்நாட்டில் ஆற்றக் கூடிய குழுக்கள் ஏதுமில்லை… இந்திய அரசியல்வாதிகள் வருடத்துக்கொரு முறை கூடி, “நிர்வாகத்தில் எவ்விதக் குறைகள் உள்ளன; அவற்றைத் திருத்த வழி என்ன’ என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற அவர், தம் கருத்துப்படி கூடுகிற கூட்டத்திற்கு அங்குள்ள கவர்னர்கள் தலைமை வகிக்கக் கூடாது என்றும், ஏனெனில் கவர்னருக்கு முன்னிலையில் மக்கள் மனம்விட்டுப் பேசமாட்டார்கள் என்றும் உரைத்தார். டப்பரின் பிரபுவின் யோசனை
திரு. ஹியூமுக்கும் திருப்தி தந்தது….”
ஏகாதிபத்திய எஜமானர்களிடம் சோரம் போய்ப் பெற்றெடுக்கப்பட்ட காங்கிரசு இவ்வாறுதான் இந்திய அரசியல் மேடையில் அரங்கேறியது. தாராள குணம் படைத்த ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியக் கொள்கை இங்கே தெளிவாகிறதல்லவா? “வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர நிலைமைக்கு’ எதிரான ஒரு கருவியாக “தேசிய’ காங்கிரசு செயல்பட வேண்டும். அதிகார வட்டத்தின் இந்நோக்கம் ஏதோ பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று அல்ல; ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலத்திலேயே ஏற்பட்ட ஒன்று. கீழ்கண்ட மேற்கோள் இதை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது:
“1857க்குப் பின், அதாவது காங்கிரசுத் தோற்றத்துக்கு முந்தைய சில ஆண்டுகள் மிக மிக அபாயகரமானவை. வரவிருந்த அபாயத்தை உணர்ந்து அதை தடுக்க முயன்றவர் ஆங்கில அதிகாரிகளில் ஒருவரான ஹியூம்… ஒரு அகில இந்திய அமைப்புக்கான காலம் முற்றிலும் கனிந்திருந்தது. ஒரு விவசாய எழுச்சி படித்த வகுப்பாரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கலாம். அதனிடத்தில் புதிய பாரதத்தைப் படைப்பதற்குப் புதிதாய்த் தோன்றிய வகுப்பினருக்கு அது ஒரு தேசிய மேடையை அளித்தது. வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்படுவதைக் காலப் போக்கில் தடுத்தது என்பதால் எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளவேண்டும்.”(ஆண்ட்ரூஸ், முகர்ஜி; “இந்தியாவில் காங்கிரசுத் தோற்றமும், வளர்ச்சியும்’ பக். 1289)
1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவக்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் கட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை. தாதாபாய் நவ்ரோஜி, திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது. மக்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அடிவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901இல் முசுலீம் லீக்கும் 1918ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.
விசுவாச நாய்கள்
1917இல் உலகையே குலுக்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியின் வீச்சு கீழ்த்திசை நாடுகளை வந்தடையும் வரை, காங்கிரசு முழுக்க முழுக்க ஏகாதிபத்தியங்களின் விசுவாச ஊழியனாகவே செயல்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது தான் ஒரு அடிமைச் சேவகன் என்பதைப் பிறந்த மேனியாக வெளிக்காட்டியது. காங்கிரசார் பிரிட்டிஷாரின் யுத்தக் கொள்கையை வெளிப்படையாகவே ஆதரித்தனர். “பேரரசின் விரைவான வெற்றிக்காக எல்லா வகையிலும் இந்திய மன்னர்களும் மக்களும் ஒத்துழைப்பார்கள்” என ஜின்னா, லஜபதிராய் உட்பட அப்போது லண்டனிலிருந்த காங்கிரசுப் பிரதிநிதிக்குழு இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அரசுச் செயலருக்குக் கடிதம் எழுதியது.
இதேநேரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிதாக லண்டனுக்கு வந்த காந்தி ஹோட்டல் செசியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்குக்கான பதிலில் தனது அடிவருடித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். லண்டனிலிருந்த இளம் இந்திய நண்பர்களை “அரசாங்க ரீதியாக’ச் சிந்தித்து “தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இது மட்டுமா? தன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுச் செயலருக்கு வலிந்து கடிதம் எழுதிய காந்தி, லண்டனில் இந்தியத் தொண்டர்கள் கொண்ட துயர் துடைப்பு (ஆம்புலன்ஸ்)ப் படை நிறுவி பிரிட்டிஷாருக்குச் சேவை செய்தார். இதற்காக கைசர்இஹிந்த் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னரே கூட தென்னாப்பிரிக்காவில் இருந்த போது “போயர் யுத்தத்தில்’ பிரிட்டிஷாருக்குச் செய்த சேவைக்கு “போயர் யுத்தப் பதக்கத்தை’ ஏகாதிபத்தியங்களிடம் பெற்றுக் கொண்டவர்தான் அவர்!
சுயராச்சியத்தை வென்றெடுக்க “காந்தி மகான்’ கூறிய யோசனை “காலனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுங்கள்” என்பதே. முதல் உலக யுத்தம் முடியும் வரை பிரிட்டிஷாரின் கௌரவ இராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரியாகச் செயல்பட்ட காந்தி “ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் ஆயுதமேந்திய போதெல்லாம் ஆயுதங்களைக் கீழே போடச் செய்வதற்குத் தன் உயிரையே பணயம் வைத்த இந்த “உத்தமனின்’ ஏகாதிபத்தியச் சேவையைக் குறைத்து மதிப்பிட முடியுமா என்ன?
இது மட்டுமின்றி 1914, 1915, 1916ஆம் ஆண்டுகளில் முறையே சென்னை, பம்பாய், உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் பிரிட்டிஷ் ஆளுநர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டு நேரடியாகப் பங்கு கொண்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
ஏகாதிபத்தியத்துக்கு நேரடிச் சேவை; அதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு இந்த வழியைத்தான் காங்கிரசு தன்னகத்தே கொண்டிருந்தது. இதுதானே அதன் இன்றைய கொள்கையும் கூட. ஆனால் ஒரு வித்தியாசம், இன்று பல்வேறு ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறது. “ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு வழிகள் உள்ளன. இதை காங்கிரசு தன்னகத்தே எடுத்துக் கொண்டது” ராஜீவின் சென்னை காங்கிரசு நூற்றாண்டு விழாப் பேச்சின் சாரம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
தீவிரவாதமும் ஒத்துழையாமையும்
ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி காங்கிரசும் எவ்வளவுதான் கபடத்தனமாகச் செயல்பட்ட போதும் மக்களின் உணர்வுகள் போராட்டங்களிலேயே கிளர்ந்தெழுந்தன. புரட்சிகரமான மக்கள் போராட்டங்கள் நாடு முழுதும் பேரலையாய் எழுந்தன. பம்பாய், சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களில் தொழிலாளர் போராட்டங்களும், பஞ்சாப், உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் படித்த அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய புரட்சிகரக் குழுக்களும் தோன்றின. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் “கேதார்’ கட்சி என்ற வன்முறைப் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியை அமைத்து விடுதலையை நோக்கமாகக் கொண்டனர். 1913ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ என்ற அமெரிக்க நகரில் அமைக்கப்பட்ட கேதார் கட்சி, “கேதார்’ (புரட்சி) என்ற உருதுப் பத்திரிக்கையை அச்சடித்துப் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியது. அப்பத்திரிக்கையின் இதழ் ஒன்று ஒருமுறை இவ்வாறு விளம்பரப்படுத்தியது:
தேவை : புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் : மரணம்
பரிசு : வீரத்தியாகி என்ற பட்டம்
பென்ஷன் : இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் : இந்தியா
இந்தப் பத்திரிக்கை வெளிநாடுகளில் வாழும் இந்தியரை நாட்டின் விடுதலைக்குப் பணியாற்றும் வகையில் புரட்சிகர உணர்வைத் தட்டி எழுப்பியது.
நாட்டு விடுதலை மீது மாளாக் காதல் கொண்ட புரட்சிகர இளைஞர்கள் மத்தியில் 1917ஆம் ஆண்டு ரசியப் புரட்சியைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வேகமாகப் பரவியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடு முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் தொழிலாளர்களும் புரட்சிகர வன்முறையை நோக்கித் திரும்புவதைக் கண்ட காங்கிரசிற்குத் தன்னுடைய செயல்முறையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜீவ் குறிப்பிட்டதைப் போல, “புதிய எண்ணங்களும் புதிய பார்வைகளும் சங்கமமாகி” அகிம்சை, ஒத்துழையாமை என்ற அட்டைக் கத்திப் போராட்டங்களை மக்கள் முன் வைத்தது.
மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த காந்தி அதற்கான காரணமாகக் கூறுவதைக் கேளுங்கள்:
“மனுப் போடுவது போன்றவற்றால் வளரும் தலைமுறை திருப்தியடையாது என நினைக்கிறேன்… புயல் வருவதைத் தடுத்து நிறுத்த ஒத்துழையாமைதான் ஒரே வழி என்று எனக்குத் தெரிகிறது.”
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
அதுசரி; ஒத்துழையாமை இயக்கம் என்பது என்ன? காந்தி மேலும் கூறுகிறார்: “1919ஆம் வருடம் வரை கண் மூ¬டித்தனமாக நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குச் சேவை செய்தேன். பிறகே கண்திறந்தது. அதன் பயனாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தேன். அதுவே சிறந்த ஆயுதமென இன்னமும் கருதியிருக்கிறேன். நாட்டு மக்கள் என்னோடு சேர்ந்து உழைத்தால், பிரிட்டிஷாரால் சுமத்தப் படக்கூடிய இன்னல்களைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால், கல் நெஞ்சையும் கரைத்துவிடலாமென நான் உறுதி கூறமுடியும்.” (காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதம், மார்ச்2, 1930)
பிரிட்டிஷாரின் கல்நெஞ்சைக் கரைக்க காந்தியார் முன் வைத்த ஒத்துழையாமைத் திட்டங்கள் என்ன? பிரிட்டிஷார் கொடுத்த பட்டங்களைத் துறப்பது; சட்டமன்றங்களையும், நீதிமன்றங்களையும், கல்வி நிறுவனங்களையும் துறப்பது; மதுவிலக்கு, ராட்டை சுற்றுவது, பிரார்த்தனை செய்வது ஆகியவைகளே. இந்த இயக்கம் காந்தியால் தீர்மானிக்கப்படும் ஒரு “நல்ல நாளி’ல் வரி கொடுப்பதில்லை என்ற நடைமுறையில் போய் முடியும். சொல்லிலும் செயலிலும் இது வன்முறை இல்லாமல் இருக்க வேண்டும்.
சாத்வீகச் சதிச் செயல்
1921ஆம் ஆண்டு வைசிராயாக வந்த ரீடிங்கைச் சந்தித்து காந்தி வாழ்த்துக் கூறியபோது, “காங்கிரசு இயக்கம் வன்முறையைக் கையாளாதவரை ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரசின் விவகாரங்களில் தலையிடாது” என்று உறுதி மொழியளித்தான். காந்தியும் அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதியளித்தார். இப்படித்தான் காங்கிரசும் காந்தியும் ஒத்துழையாமை நாடகத்தை நடத்தினர். மக்களின் முதுகிலே குத்தும் பச்சைத் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று இதைக் கூறுவது?
சாத்வீகப் போர் என்றால் என்ன? கோகலே கூறுகிறார்: “இந்தப் போர் வலுச்சண்டையைச் சாத்வீக ஆயுதங்களால் எதிர்க்கும் முறையாகும். சாத்வீகப் போர்வீரன் தன் ஆயுதங்களை மனதில் தரித்தவன். பிறர் கொடுமையை ஒழிக்க இந்த வீரன் தன்னைத்தானே துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்கிறான். மனிதனின் மிருகத்தனத்தை இவன் தன் ஆத்ம சக்தியால் வெல்ல எத்தனிக்கிறான். இதில் நம்பிக்கை வைத்தவன் தன்னுள் உள்ள தெய்வாம்சத்தை உபயோகத்துக்குக் கொணர்ந்து, கஷ்டங்களைச் சகித்து, நிஷ்டூரங்களைப் பயனறச் செய்கிறான். தெய்வ நம்பிக்கையை ஆயுதமாக ஏந்தி அநியாயத்தை வெல்ல சாத்வீகப் போர்வீரன் களிப்புடன் சமரில் ஈடுபடுகிறான்.”
காந்தியும் காங்கிரசும் ஏகாதிபத்தியவாதிகளை சாத்வீக முறையில் எதிர்ப்பதாக வேடங்கட்டி ஆடிய நாடகத்தைக் கண்டு மக்கள் மயங்கிவிடவில்லை. சாத்வீக முறையின் கட்டுத்திட்டங்களை உடைத்தெறிந்துவிட்டு நேரடியாக ஆயுதத்தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வங்கத்தில் மித்னாபூர் விவசாயிகள் நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுகளைச் சூறையாடினர்; அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த குண்டூர் விவசாயிகள் 1922ல் நிலப்பிரபுக்களுக்கெதிராக வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
கை கொடுத்துக் காலை வாரிய காந்தி
வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் விவசாயிகளோ தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து “எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்” என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.
உக்கிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்பால் மக்கள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காந்தியும் காங்கிரசும் திட்டமிட்டு அகிம்சை வழி ஒத்துழையாமை என நடத்திய கண்துடைப்புப் போராட்டங்களேகூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் பாதிக்கும் அளவு நடைபெற்றன. பிப்ரவரி 1922இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி வைசிராய் பின்வருமாறு லண்டனுக்குச் செய்தி அனுப்பினான்:
“நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டு வர்க்கங்கள் ஒத்துழையாமை இயக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் குறிப்பாக, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபைப் பொறுத்தவரை அகாலிகள் போராட்டம் கிராமப்புற சீக்கியர்களைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் முகமதிய ஜனத்தொகையில் பெரும் பகுதியினர் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்ததைவிட மிகப் பயங்கரத் தன்மை வாய்ந்த ஒரு குழப்ப நிலைக்கு இந்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.”
இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் காந்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கை கொடுத்தார். ஒத்துழையாமை தனது கையை விட்டு நழுவுவதைக் கண்ட காந்தி அதை வாபஸ் வாங்க சரியான தருணத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1922 பிப்ரவரியில் வங்கத்தில் சௌரிசௌரா விவசாயிகள், தங்களது அமைதியான ஊர்வலத்தின்மீது தாக்குதல் தொடுத்துக் கண் மூடித்தனமாகத் துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்த போலீசாரைத் திருப்பித் தாக்கினர்; போலீசு நிலையத்திற்குத் தீ வைத்தனர். 22 போலீசாரைக் கொன்றொழித்தனர். உடனே காந்தியார், மக்கள் வன்முறையில் இறங்கிவிட்டதாகக் காரணம் காட்டி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்; போராட்டத்தின் காலை வாரினார்.
1922 பிப்ரவரி 12ம் நாள் அவசரமாகக் கூடிய காங்கிரசு காரியக் கமிட்டி சௌரிசௌரா விவசாயிகள் “மனிதத் தன்மையற்ற முறையில்” நடந்து கொண்டதாகச் சாடியது. “வன்முறை நிகழ்ச்சிகள் நடப்பதாலும், நாடு போதுமான அளவு அகிம்சை வழியில் இல்லை என்பதாலும் போராட்டம் நிறுத்தப்படுவதாக” அறிவித்தது. அது மட்டுமா? “அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளைச் செலுத்துமாறு” ஆணையிட்டது. மக்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
1922 நெருக்கடி பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தும், காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றுத் தங்களைக் காப்பாற்றினார் என்ற கண்ணோட்டமும் அப்போதைய பம்பாய் கவர்னரான லாயிட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுகிறது:
“அவர் (காந்தி) எங்களுக்குப் பெரும் திகில் உண்டாக்கி விட்டார். அவருடைய வேலைத் திட்டம் எங்கள் சிறைகளை நிரப்பிவிட்டது. மக்களை எப்போதும் கைது செய்து கொண்டே இருக்க முடியுமா என்ன? அதுவும் 3,19,000 பேர்களை! அவர் அடுத்த படியேறி வரி கொடுக்க மறுத்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்? அது ஆண்டவனுக்கே தெரியும்.”
“உலக வரலாற்றிலேயே காந்தியின் சோதனை மிகப் பிரம்மாண்டமானது. அது வெற்றிக்கு ஓரங்குல தூரத்தில் வந்துவிட்டது. அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். காந்தி வேலைத் திட்டத்தை வாபஸ் வாங்கினார். நாங்கள் அவரைச் சிறையிலிட்டோம்.” (ட்ரூ பியர்சனுக்கு அளித்த பேட்டி, ஆர்.பி. தத் எழுதிய “இன்றைய இந்தியா’ எனும் நூலில் பக். 435)
அகிம்சையும், ஒத்துழையாமையும் காலனிய அடிப்படையைத் தகர்க்கும் போராட்டங்கள் எனக் கொள்ள முடியுமா? முடியாது. ஆயின் இதன் உண்மை நோக்கம் என்ன? போராட்ட உணர்வுகள் பொங்கி எழுந்து காலனிய ஆட்சியின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப ஆடிய நாடகங்களே இவை. பிரிட்டிசாரின் ஒத்துழைப்போடு காந்தி தயாரித்தளிக்கும் நாடகங்கள் கவர்ச்சிகரமான முறையிலே வானொலியிலும், பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது என்பது உண்மையே.
பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்க மறுப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என மக்கள் புரிந்து கொண்ட அளவில் அது எப்போதுமே வன்முறையை எட்டிவிடும். மக்களைத் தழுவிய இந்த இயக்கங்கள் காந்தியின் கட்டுத் திட்டங்களை மீறிக் கைநழுவும் போது போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; நாடகத்தின் அடுத்த காட்சியாகக் காந்தி கைது செய்யப்படுவார்; உடனே காந்தியின் பால் மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு அவருடைய செல்வாக்கு மீண்டும் பெருகும்; சிறையிலிருக்கும் காந்தியார் போராட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்வார்; போராட்டம் “எல்லை மீறியதை’க் கண்டிப்பார்; மக்களின் உணர்வுகள் மந்தமாகிப் போராட்டங்கள் பிசுபிசுக்கும்; பிரிட்டிஷார் குதூகலிப்பர். மீண்டும் மக்கள் உணர்வு பெற்று போராட்டங்களில் சீறியெழும்போது, பிரிட்டிஷாரின் ஆசியோடு காந்தி சிறையிலிருந்து விடுதலையாவார். திசை திருப்பும் திருப்பணியைத் தொடங்கி வைப்பார். இப்படித்தான் மக்களை ஏய்க்கும் நாடகத்தை பிரிட்டிஷாரும் காந்தியும் காங்கிரசும் நடத்தி வந்துள்ளனர்.
நிலப்பிரபுக்களின் தாசன்
காங்கிரசும், காந்தியும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் விசுவாசிகள் அல்லர், நிலப்பிரபுக்களுக்கும் சேவகர்களே. “மன்னர் வாழ்கவே” என்ற பாட்டை நான் எத்தனையோ தடவை ராகம் போட்டு, வெகு அழகாகப் பாடியிருக்கிறேன்; என்னுடைய நண்பர்களில் பலரையும் பாடச் செய்திருக்கிறேன்” எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் புளகாங்கிதமடைந்து கூறிய காந்தி, தனது ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது அல்ல; அதேசமயம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார். பர்தோலியில் கூடிய காங்கிரசு செயற்குழுவின் தீர்மானங்கள் இதுபற்றிய முக்கிய விவரங்களை கொண்டுள்ளன:
“பிரிவு 6: ஜமீன்தார்களுக்கு நிலவரியைக் கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு எதிரானது என்றும் நாட்டின் மிக நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரசு செயற்குழு, காங்கிரசு ஊழியர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆலோசனை கூறுகிறது.
பிரிவு 7: ஜமீன்தார்களுடைய சட்டபூர்வ உரிமைகளைத் தாக்குவதை காங்கிரசு இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை என்று ஜமீன்தார்களுக்கு உறுதியளிக்கிறது.
நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்குக் காங்கிரசு எவ்வளவு நாணயமாகச் சேவை செய்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுவதில்லை. சில ஆண்டுகள் கழித்து, காந்தி ஜமீன்தார்கள் குழு ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னது இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் அமைந்தது:
“சரியான நீதியான காரணமின்றிச் சொத்து படைத்த வர்க்கங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்வோர்களில் ஒருவனாக நான் இருக்கமாட்டேன். உங்களுடைய இதயத்தைத் தொட்டு நீங்களாகவே உங்களுடைய சொத்துக்களை தர்மகர்த்தா முறையில் உங்களுடைய விவசாயிகளுக்கு வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். வர்க்க யுத்தத்தைத் தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழு பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம்… உங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க அநீதியான ஒரு முயற்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணலாம்.
(ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த ஜமீன்தார் குழுவுக்கு காந்தி அளித்த பேட்டி, ஜூலை 1934, மராத்தா, ஆகஸ்டு 12,1934)
ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களுடைய ச க அடித்தளமாக விளங்கும் நிலப்பிரபுக்களுக்கும் காந்தி எத்தகைய விசுவாசம் மிக்க அடிமைச் சேவகன் என்பது வெள்ளிடை மலையல்லவா? இத்தகைய துரோகியின் வருகைக்காக நாடு காத்திருந்ததாம்! “காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு காந்தியின் வருகை வரை நாடு காத்திருந்தது. அவர் காங்கிரசை சாதாரண மக்களின் கட்சியாக, ஏழை, எளியவர்களின் இயக்கமாக மாற்றினார்.” ராஜீவ் காந்தியின் மொழியில் ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களுடைய தரகர்களான தரகு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் தான் மக்களாக இருக்க முடியும்.
மூக்கில் நாறிய சுயராச்சியம்
பிரிட்டிஷாரின் ஒத்துழைப்போடு எவ்வளவுதான் காங்கிரசு துரோகமிழைத்த போதும் புரட்சிகரமான நிலைமைகள் முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் காந்தியும் காங்கிரசும் “அமைதியான வேலைகளை’க் கவனிப் பதற்குப் பதிலாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் எப்போதுமே காலனியாட்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளனர். 1920களில் புரட்சிகர நிலைமைகள் திடீரென முன்னேறிய போது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி கூரை மேல் நின்று கொக்கரிக்கும் சேவலாக மாறிவிட்டார். “1921 இறுதிக்குள் சுயராச்சியம் அடைந்தே தீருவேன்… சுயராச்சியத்தை அடையாமல் டிசம்பர் 31, 1921க்குப் பிறகு வாழ்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.”
சுயராச்சியம் என்று காந்தி எதைச் சொன்னார்? “முடிந்தால் ஆங்கிலேயப் பேரரசுக்குள் ஒரு சுயாட்சி; அவசியமேற்பட்டால் அதற்கு வெளியே’. இது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து, அதன் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையையும், தேசிய சுதந்திரத்தையும் குறிப்பதாகக் கொள்ள முடியுமா? அகமதாபாத்தில் 1921இல் நடந்த காங்கிரசுக் கூட்டத் தொடர் இதற்கான விடையைக் கொடுத்தது. அந்தக் கூட்டத்தொடரில் ஹஸரத் மொஹானி என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் சுயராச்சியம் என்பதற்கு “முழுச்சுதந்திரம்; எல்லா வெளிநாட்டுக் கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம்” என்று விளக்கம் கொண்டிருந்தார். அதைக் கடுமையாக விமரிசித்த காந்தி, “ஹஸரத்தின் தீர்மானத்தில் பொறுப்புத் தன்மை குறைவாக இருப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய தீர்மானத்தின் மூலம் அவர் ஆழம் தெரியாமல் தண்ணீருக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்; ஆழம் தெரியாத தண்ணீருக்குள் நாம் போக வேண்டாம்” எனக் கூறினார்.
இந்த இடத்தில் 1918இல் இந்திய அரசாங்கக் கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆங்கிலேய அரசன் பேசியதை நினைவுபடுத்துவது சரியாக இருக்கும். அவன் சொன்னான்: “பல ஆண்டுகளாக, ஏன் பல பரம்பரைகளாக தேசபக்த இந்தியர்கள் சுயராச்சியக் கனவு கண்டு வந்திருக்கிறார்கள். இன்று நீங்கள் என்னுடைய பேரரசின் கீழ் சுயராச்சியத்திற்கான ஆரம்பத்தைப் பெறுகிறீர்கள்.” என்ன ஒற்றுமை! காந்தியார் கனவை அவன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான்.
நாடெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களும் பல்கிப் பெருகி மக்கள் தங்களைத் தியாகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது காந்தியும் காங்கிரசும் இப்படிப்பட்ட கோரிக்கைகளையும் போர்க்குணமற்ற போராட்ட முறைகளையும் அறிவித்து மக்கள் திரளை இதை நோக்கித் திசைதிருப்பி ஏகாதிபத்தியங்களுக்குத் தங்களாலான உதவிகளையெல்லாம் முடிந்தவரை செய்தனர். 1921 ஒத்துழையாமை இயக்கம் இவர்களின் கட்டுப்பாட்டை மீறி இறுதியில் வன்முறையில் திரும்பியவுடன் காந்தி “சுயராச்சியம் என் மூக்கில் நாறுகிறது” என்று அரற்றினார்.
1918 முதல் 1922 காலம் வரை மிகப் பரந்த நமது இந்திய பூமியில் புரட்சிகரப் போராட்டங்களும், ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் எல்லா வர்க்கங்களையும் உலுக்கி ஈர்த்துக் கொண்டது. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தவர்கள்கூட போராட்டங்களிலே ஈடுபட்டனர். ஆனால் காங்கிரசு தலைமை இப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து பலவீனமடைய வைத்தது. மக்களுடைய தன்னெழுச்சியான போராட்டங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியவில்லை.
இத்தகைய கால கட்டங்களில் ஏகாதிபத்தியம் அடக்கு முறையை நடத்திக் கொண்டே, இன்னொருபுறம் சட்டமன்றத் தேர்தல்கள் (நவ.1926) போன்ற முறைகளையும் கையாண்டது. காங்கிரசு தலைமையில் மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் “சுயராச்சியக் கட்சி’ என்ற ஒரு பிரிவு அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மத்திய சட்டமன்றத்தில் சுயராச்சியக் கட்சித் தலைவராக அமர்ந்த மோதிலால் நேரு தாங்கள் சட்டமன்றத்திற்கு வந்தது பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குத்தான் என்றும் தங்களுடைய ஒத்துழைப்பை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டால் சொல்லாலும் செயலாலும் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்களாக இருப்பார்கள் என்றும் புரட்சிகர இயக்கத்தைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்றதனைத்தையும் செய்வோம் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.
காங்கிரசு தலைமையில் உள்ள எந்த நபருக்கும் சரி, அவர்களுக்குத் தெளிவான ஒரு குறிக்கோள் இருந்தது. அதுநாடு முழுதாகச் சுதந்திரம் அடைந்து விடக்கூடாது; ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும், அதை விரட்டியடிக்கும், உண்மையான விடுதலையின் மீது பற்றுக் கொண்ட அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே அம்பலப்பட்டுப் போனதால் மாணவர்கள் இளைஞர்களின் கவனம் புரட்சிகர அமைப்புக்களின் மீது படரத் தொடங்கியது. அனுசீலன் சமிதி, இந்துஸ்தான் குடியரசுப் படை, நவஜவான் பாரத சபை, பஞ்சாப் கிருதி கிசான் கட்சி என புரட்சிகர இளைஞர், மாணவர் அமைப்புக்கள் தோன்றின. 1928ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 3,16,77,000 வேலை நாட்களை உள்ளடக்கிய வேலை நிறுத்த இயக்கங்களில் ஈடுபட்டனர். வங்காளத்தைச் சேர்ந்த கிஷோர்கன்ஜ் பகுதியிலும், பீகாரைச் சேர்ந்த புட்டானா பகுதியிலும் உழவர்கள் நிலப்பிரபுக்களையும் காலனி ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினர்.
அகிம்சையின் நோக்கம்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் வளரத் துவங்கியதும் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை எனக் கூச்சலிடத் துவங்கியது; அகிம்சைவழி என அரற்றியது. உண்மையிலேயே காந்தியினுடைய அகிம்சைத் தத்துவத்தின் நோக்கம் என்ன? கத்தியின்றி ரத்தமின்றிப் போராடுவதன் உள்ளடக்கக் கூறுகள் என்ன?
அகிம்சை என்றால் என்ன என்பதைப் பற்றி காந்தி கூறுவதைக் கேளுங்கள்: “அக்கிரமம் செய்கிறவனைத் துன்புறுத்துவதற்காகத்தான் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என்பது என் கருத்து. பலாத்காரத்துடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தினால் அக்கிரமங்கள் அதிகரிக்கும் என்பதையும், அக்கிரமங்கள் ஒழிய வேண்டுமானால் முற்றிலும் அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நான் இந்திய மக்களிடையே பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். அகிம்சை என்றால் துன்பங்களுக்குத் தானாகவே கீழ்படிதலாகும்.” துன்பங்களுக்குத் தானாகக் கீழ்ப்படியும் அகிம்சையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
1930 மார்ச்சில் வைசிராய்க்கு காந்தி எழுதிய கடிதத்தில் அகிம்சையின் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டது அல்லவென்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே அது துவக்கப்பட்டதென்றும் தெரிவித்தார். அவர் கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “வன்முறைக் கட்சி வலிமை பெற்று வருகிறது. அதை நன்றாக உணர முடிகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட வன்முறையை எதிர்த்து நிற்பது போலவே, வளர்ந்து வரும் வன்முறைக் கட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத வன்முறையை எதிர்த்தும் சக்தியை (அகிம்சையை) இயக்குவது எனது நோக்கமாகும். வெறுமனே கைகட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது மேற்கூறப்பட்ட இரு சக்திகளுக்கும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிப்பதாகும்!”
ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிக்கப்பட்டவனையும் ஒரே நிலையில் வைப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளனுக்குச் சேவை செய்தார் காந்தி. “அகிம்சை யினின்று மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊறுபடாத அகிம்சையோடு படுதோல்வி அடைவதையே நான் வரவேற்பேன்” என ஒருமுறை “தி டைம்ஸ்’ என்ற ஏட்டிற்குப் பேட்டியளித்தார். அரசு எந்திரத்தின் அநியாய வன்முறையை எதிர்த்து மக்கள் நியாயமான வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்பதுதான் காந்தியாரின் அகிம்சைத் தத்துவம்.
மகான் அல்ல; மக்கள் விரோதி
வடகிழக்கில் சிட்டகாங் நகரிலும், மேற்கில் பெஷாவரிலும் போர்க் குணமிக்க போராட்டங்கள் இந்நாட்களில் (1930) தோன்றின. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சார்ந்த இந்துஸ்தான் குடியரசுப் படையினர் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கைச் சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்களுக்கும் போலீசாருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
முழு எதிர்காலத்துக்கும் மிகப் பொருட்செறிவுள்ள நிகழ்ச்சி, பெஷாவரில் நடந்த கார்வாலிப் படைவீரர்களின் கலகமாகும். களத்திலிருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப்பட்டது; ஒரு இராணுவ ஆயுத வண்டி எரிக்கப்பட்டது; அதில் இருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். அதன் பேரில், கண்மூடித்தனமாகக் கூட்டத்தின் மீது இராணுவம் சுட்டது; நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். பதினெட்டாவது அரசு கார் வாலித் துப்பாக்கிப் படையின் இரண்டாம் அணியின் ஒரு பிரிவினர் எல்லோரும் இந்துக்கள், கூட்டத்தினர் முசுலீம்கள் ஆணையை மீறிச் சுட மறுத்துவிட்டனர். அணியிலிருந்து விலகிக் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களையும் கொடுத்து விட்டனர். உடனே அங்கிருந்த இராணுவமும் போலீசும் முற்றிலும் பின் வாங்கப்பட்டன. ஏப்ரல் 25 முதல் மே 4 வரை பெஷாவர் நகர், மக்கள் வசம் இருந்தது; பின் மிகப்பெரிய பிரிட்டிஷ் படையையும், விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலையும் கொண்டு அந்நகரம் அரசினால் பின்னர் கைப்பற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி “அகிம்சாமூ ர்த்தி’ காந்தியார் கூறிய கருத்துக்கள் அவருடைய அகிம்சைத் தத்துவத்தின் உண்மைச் சொரூபத்தை உலகுக்கு நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. தீரமிக்க கார்வாலிப் படைவீரர்கள் மக்களைச் சுடமறுத்த “அகிம்சை’ச் செயலுக்காக கார்வாலிப் படை வீரர்களை காந்தியார் கண்டித்தார்.
“சுடுமாறு ஆணையிடப்பட்ட படைவீரன் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், அவன் தான் செய்த பிரமாணத்துக்கு எதிராக நடப்பதோடு, கீழ்ப்பணிய மறுத்த பெரும் குற்றமும் செய்தவனாவான். அதிகாரிகளையும், வீரர்களையும் கீழ்ப் பணிய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் இருக்கையில் அதே அதிகாரிகளையும் படைவீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரலாம். கீழ்ப்படிந்து நடக்க மறுக்குமாறு நான் அவர்களுக்குக் கற்பித்தால், அதே மாதிரி நான் அதிகாரத்தில் இருக்கும் போதும் செய்யக்கூடும் என அஞ்சுகிறேன்.”
(பிரெஞ்சுப் பத்திரிகையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படைவீரர்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு காந்தியின் பதில்; மாண்ட், பிப்ரவரி 20, 1932)
இரண்டாம் உலகப் போரின் போது அட்டூழியங்கள் புரிந்த நாஜிகள் மீது நியூரம்பர்க் எனுமிடத்தில் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது நாஜிகள் சாராம்சத்தில் காந்தியின் வாதத்தைத்தான் முன்னிறுத்தினர். “நாங்கள் குற்றவாளிகள் அல்ல. ஏனெனில் மேலதிகாரிகள் உத்தரவைத்தான் நாங்கள் நிறைவேற்றினோம். அவர்கள் போடும் உத்தரவை நிறைவேற்றுவோம் என்று சபதம் ஏற்றிருக்கிறோம்” என்றனர். காந்தியின் வார்த்தைப்படி நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளல்ல. ஆனால் சர்வதேச நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை நிராகரித்து விட்டது. மேலதிகாரிகள் போடும் அக்கிரமமான, அநியாயமான, சட்ட விரோதமான உத்தரவுகளைச் சிப்பாய்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதும் ஒரு குற்றமாகும் எனத் தீர்ப்புக் கூறியுள்ளது.
நியூரம்பர்க் நீதிமன்றத் தீர்ப்பையும் காந்தியின் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காந்தியின் நயவஞ்சகத் துரோகம் அப்பட்டமாகத் தெளிவாகிறதல்லவா?
“அரசாங்கத்தைத் தொல்லைப்படுத்த ஒரு சத்தியாக்கிரகி ஒருக்காலும் முயலமாட்டான்” எனக் கூறிய காந்தி, பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது தான் ஒரு மக்கள் விரோதி என்பதை அம்மணமாகக் காட்டிக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் 20,000க்கும் மேலாகக் கூடிய அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது ஜெனரல் டயர் என்பவன் வெறிகொண்டு 1600 முறை சுட்டான். மொத்தம் 379 பேர் இறந்தனர். படுகாயமுற்ற 1200 பேர் இரவு முழுவதும் கவனிப்பாரற்று மைதானத்திலேயே கிடந்தனர். “கூட்டத்தில் இருந்தோருக்கு மட்டுமல்ல, குறிப்பாக பஞ்சாப் மக்கள் அனைவருக்கும் இடையில் ஒரு பயஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இராணுவக் கண்ணோட்டத்தோடு” தான் சுட்டதாகக் கூறிய டயர் “ரவைகள் மட்டும் தீர்ந்திராவிடில் இன்னும் மக்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பேன்” எனக் கொக்கரித்தான்.
மிருகத்தனமாக மக்களைச் சுட்டுப் பொசுக்கிய ஜெனரல் டயரை காந்தி ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இந்தப் படுகொலை நடப்பதற்குச் சில நாட்கள் முன்பாக மக்கள் ஒரு சில ஐரோப்பியரைக் கொன்றதையும் நேஷனல் பாங்க் கட்டிடத்திற்குத் தீ வைத்ததையும் கடுமையாகச் சாடினார். அமிர்தசரசு மாநாட்டில் பஞ்சாப் மக்களின் கோபாவேசத்தைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார். ஆலோசனைக் கமிட்டி இதை ஏற்க மறுத்தது. ஏமாற்றமடைந்த காந்தி “மகாஜனங்கள் பாஞ்சால நாட்டில் கோபாவேசத்தில் செய்யப் புகுந்த அதிக்கிரமங்களைக் கண்டிக்க காங்கிரசு மகாசபை இணங்காவிடில் நான் மகாசபையை விட்டு வெளியேறி விடப் போவதாக” மிரட்டினார். “கோப ட்டப்பட்ட பாஞ்சால ஜனங்கள் செய்த அதிக்கிரமங்களுக்காக மகாசபை மிகுந்த வருத்தமுறுவதாக”த் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது “இந்த மகாசபை முன் கொணரப்பட்ட தீர்மானங்களனைத்திலும் இதுவே தலைசிறந்தது” என அக

சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சை கேள்வி!


ஈழப்பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) தோழர்கள் எழுதிய நூல், பல தரப்பினரிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த நூலின் பெயர் ‘இலங்கை&துப்பாக்கிகள் மௌனித்த வரலாறு’ என்ற இந்நூலை எழுதியவர்கள் என்.மருத்துவமணி, மா.ராமசாமி.

ஈழப்பிரச்னையில் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை நிலைநாட்ட, இந்நூல் மூலம் திரும்பத் திரும்ப முயற்சிக்-கின்றனர் இருவரும். இலங்கை இனப்பிரச்னை குறித்து, சி.பி.எம். அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் அவர்கள் பல்வேறு கட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகளையும் அச்சரம் பிசகாமல், இந்நூலில் வெளியிட்டு, தங்கள் கருத்துக்களையும் சி.பி.எம். மின் நிலையை ஒட்டியே முன்வைத்துள்ளனர்.

தனி ஈழத்திற்கு எதிராக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மார்க்சிஸ்ட் லெனினிய அடிப்படையில் இல்லை. மாறாக, அவை தனி ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை மேலும் கெட்டிப்படுத்தவே பயன்படும்.

1983&ல் அன்றைய சி.பி.எம். தலைவர் பி.ராமமூர்த்தி, தனது இலங்கைப் பயணத்தின் போது, ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய அருளுரையை இந்நூல் மேற்கோள் காட்டியுள்ளது. அதன் சுருக்கம் ‘‘சிங்களவருக்கு எதிரான இயக்கங்கள் அவர்களை கோபமூட்டுவதாகவே அமையும். அவை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் மேலும் ஆபத்தை விளைவிக்கும்’’ என்பதுதான்.

ஒரு போராளியின் இந்த அறிவுரை வியப்பை அளிக்கிறது. எந்தப் போராட்டம் எதிரிக்கு உவகையை அளித்துள்ளது? உலக வரலாற்றில் சேதாரம் இல்லாமல் எந்தப் போராட்டம் நடந்துள்ளது? பத்துக் கோடி மக்களை இழந்துதான் ஹிட்லரை, சோவியத் யூனியன் தோற்கடித்தது. இந்த அறிவுரையை தர்க்க ரீதியாக அதன் எல்லைக்கு எடுத்துச் சென்றால், இந்தியாவில் விடுதலைப்போரை நடத்தியே இருக்கக் கூடாது. வங்கதேசம் பிரிந்திருக்கக் கூடாது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் சரணடைந்து பாதுகாப்பைத் தேடிக் கொண்டிருக்கவேண்டும்.

‘‘நம் கையில் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நமது எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர்’’& என்று அடிக்கடி கூறும் மார்க்சிஸ்டுகள், ஈழத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை உணராமல் போனது ஏன்?

அடுத்து, ஈழத்தில் அன்று நிலவிய ஜாதிப் பிரிவினைகளையும், முஸ்லிம் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஈழப்போராளிகளால் புறம் தள்ளப்பட்டது குறித்தும் தேவையற்ற விவாதத்தை வலிந்து இந்நூல் முன் வைக்கிறது. உண்மையில் போராளிகள் அனைத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களையும் ஜாதி, மத பேதமின்றி, சமமாகப் பாவித்தனர் என்பதே வரலாறு. ஆனால், இப்பிரிவினரிடையே மோதலை உருவாக்க இலங்கை உளவுப்படை தொடர்ந்து முயற்சித்ததும், அதற்கு சில தலைவர்கள் உடன்பட்டதும் பிளவுக்கு வழிவகுத்தது என்பதை இந்நூலின் ஆசிரியர்கள் அறிந்தார்களா? இல்லை, மறைத்தார்களா?

அடுத்து. ஈழத்தில் இயங்கி வந்த சகோதர அமைப்புகளை விடுதலைப்புலிகள் திட்டமிட்டு அழித்துவிட்டதாக இந்நூலாசிரியர்கள் அங்கலாய்க்கிறார்கள். புலிகள் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு இது. இதுகுறித்து 1985 ஏப்ரல் 5&ம் தேதியிட்ட ஃப்ரென்ட்லைன் ஆங்கில இதழில், கட்டுரையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘தனி ஈழம் கோரிக்கையில் உடன்பாடு இருந்தாலும், புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை மற்ற இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால், அவர்களிடையே பிளவு நிலவியது.’’ இப்பிளவு, மோதலாக வலுப்பெற்று, ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டது. அதில் வலுவான புலிகள் வெற்றிபெற்றார்கள்.

ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த வரதராஜப் பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘‘தனி ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் ஈழமக்களுக்குப் பெரிய ஆபத்துதான் விளையும்’’ என்று கூறியுள்ளார். புலிகளோடு முரண்பட்ட கருணா, தற்போது ராஜபக்ஷேவின் அமைச்சரவையில் இடம் வகிப்பதோடு, ஈழப்போரை காட்டிக் கொடுத்த ‘நவீன எட்டப்பன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்படிப்பட்டவர்களுடன் புலிகள் சமரச சகவாழ்வு வாழ்ந்திருக்கவேண்டும் என்று இந்நூலாசிரியர்கள் வலியுறுத்துகிறார்களா?

அது கிடக்கட்டும். இவர்கள் சார்ந்துள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இந்தியாவில் சகோதரப்போரில் ஈடுபடவில்லையா? சீனப்போரின்போது, இவர்களில் ஒரு சாரார் சிறை வைக்கப்பட்டபோது கட்சியின் மறுசாரார் அதை ஆதரிக்க-வில்லையா? கட்சி பிளவுபட்ட பின்பு, அவசர சட்டத்தின் கீழ் ஒரு கட்சியினர் சிறையில் வதைபட்ட-போது, அதன் சகோதரக்கட்சி ஆட்சியாளர்களுக்கு வெண் சாமரம் வீசிக்கொண்டிருக்கவில்லையா? பின்னர் 1968&ல் சி.பி.எம்.மிடமிருந்து பிரிந்தவர்கள் தானே இன்றைய மாவோயிஸ்டுகள். தற்போது, மே.வங்கத்தில் இந்தச் சகோதரர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்து, சகோதரப்போரில் மாண்டு கொண்டிருப்பது ஏன்?

புலிகள் மீது இந்நூலில் இவர்கள் வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு, ‘‘போர் மீது அவர்களுக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. கடந்த காலங்களில் போர் நிறுத்தங்களை தன்னிச்சையாக உடைத்தவர்கள் அவர்கள்.’’

ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டாலும், அதை அமல்படுத்துவதில் ஆரம்பத்தில் புலிகள் முழு ஒத்துழைப்பை அளித்தனர். ஆனால், ஒப்பந்தப்படி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை இலங்கை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் போர் நிறுத்தத்தையும் ஒப்பந்தத்தையும் பல கட்டங்களில் மீறியது இலங்கை அரசுதான்& என்பதை இந்திய அமைதிப்படையின் தளபதி ஏ.எல்.கல்கத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அடுத்து, நார்வே தூதுக்குழுவின் மேற்பார்வையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, புலிகள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டத்தை பிரதமர் ரணில் ஒப்புக்கொண்டபோதும், அதிபர் சந்திரிகா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நார்வே தூதுக்குழுவையே வெளியேறச் சொன்னார். இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு? நேட்டோ அணியில் நார்வே இருப்பதைச் சுட்டிக்காட்டி, நார்வே தூதுக்குழுவை அமெரிக்காவின் கைக்கூலிகள் என்ற ரீதியில் இந்நூலாசிரியர்கள் வசைபாடுவதோடு, ரணிலையே அமெரிக்காவின் அடிவருடி என்ற அளவில் நா கூசாமல் கூறுகிறார்கள். இவர்கள் யார் பக்கம்? ஏனெனில், அதே அமெரிக்கா, பயங்கரவாத இயக்கம் எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்தது.

அதற்கு முன்பு இந்திராகாந்தி-யுடனான ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனே மீறியதால்தான், தனி ஈழம் என்ற கோரிக்கையையும், அதன் போராளிகளையும் இந்திராகாந்தி ஆதரித்தார். புலிகள் செய்த மிகப்-பெரிய தவறு, ராஜீவைக் கொலை செய்ததுதான்& என்று இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதை முட்டாள்தனமான செயல் என்பது தான் சரியாக இருக்கும். அதேபோல், ‘புலிகள் ஆயுதப்போராட்டத்தை முழுக்க நம்பி, வெகுஜன இயக்கங்களை பின்னுக்குத்தள்ளிவிட்டனர். அதுதான் கடும் தோல்வியில் முடிந்தது’ என்கிற ரீதியில் இவர்கள் சொல்லியிருப்பதும் ஏற்கத் தக்கதே. மேலும் பல தவறுகளை செய்திருந்தாலும் ஈழப்போரில் புலிகளின் அளப்பரிய தியாகங்களையும் உறுதியையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஸ்டாலின் குறித்து சி.பி.எம். ஆவணம் கூறுவதென்ன? கட்சியின் சட்ட திட்டங்களையும் ஜனநாயக நெறிமுறைகளையும் ஸ்டாலின் ஏதேச்சாதிகாரமாக மீறியுள்ளார். ஆனால், சோவியத்தைக் கட்டியமைப்பதிலும், ஹிட்லரைத் தோற்கடித்ததிலும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மனதில் இருத்தி, விமர்சனத்தோடு அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று தானே..? அதே போன்று விமர்சனங்களோடு புலிகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது?

ஈழப்போரில் தமிழர்களை கூண்டோடு கொன்று குவிக்க, இந்தியா வழங்கிய ஆயுதங்கள் உதவின& என்று கூறும் இவர்கள், தங்களது தோழன் சீனா செய்த உதவியை மறைப்பதேன்? தெற்காசியாவில் தங்கள் மேலாண்மையை நிறுவ, இந்தியாவும் சீனாவும் கடும் போட்டியில் இறங்கி உள்ளதால்தான், பேரினவாத மற்றும் மதவெறி பிடித்த இலங்கை அரசுக்கு போட்டிபோட்டு உதவுகின்றன என்று பேருண்மையை இவர்கள் நூலில் எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்கவேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவுடன் சீனாவும் சேர்ந்து தோற்கடித்து, இன அழிப்புப்போரில் கோர நர்த்தனம் ஆடிய இலங்கை பேயாட்சியைத் தப்பிக்கச் செய்ததையும் இவர்கள் சுட்டிக்காட்டவில்லை. தங்கள் தோழன் சீனா கோபித்துக் கொள்ளும் என்ற பயமா?

மேலும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (ஷிtணீறீவீஸீ ஷீஸீ ழிணீtவீஷீஸீணீறீவீtஹ் னிuமீstவீஷீஸீ) இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் படிப்பது நல்லது. பிரிந்து போகும் உரிமை யாருக்கு உள்ளது என்பது குறித்து மூன்று முக்கியக் காரணிகளை ஸ்டாலின் வரையறுத்துள்ளார்.

1. அவர்கள் பொதுவான ஒரு மொழி பேசும் தனி இனமாக இருக்கவேண்டும். ஜாதியோ, மதமோ ஓர் இனத்திற்கான அடையாளங்கள் ஆகமாட்டா.

2. அந்த இனம் தொடர்ச்சியான நிலப்பரப்பில், பாரம்பரியமாய் வாழ்ந்து வரவேண்டும்.

3. அவர்களின் மொழி, கலாசாரம் போன்ற அடையாளங்கள் பேரினவாதத்தால் அழிக்கப்பட்டும், அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டும், ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்திருக்கவேண்டும். இந்த வரையறைகள் ஈழத்தமிழருக்குப் பொருந்துமா? இல்லையா? என்று இவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரிட்டனிடமிருந்து தனிநாடு கோரிப்போராடிய அயர்லாந்து மக்களை ஆதரித்து, கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதை இந்நூலாசிரியர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

‘‘இங்கிலாந்தில் உள்ள ஆளும் வர்க்கம் அயர்லாந்து விவகாரத்தில் என்ன கொள்கையைக் கடைப்பிடிக்கிறதோ, அந்தக் கொள்கையைத்தான் அங்குள்ள பாட்டாளி வர்க்கமும் (தொழிலாளர் கட்சி)கடைப்பிடிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் அயர்லாந்தில் இயங்கும் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணக்கமான கொள்கையை வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவ்வாறான ஒடுக்கும் நாடுகளில் எழும் வர்க்கப் போராட்டத்திற்கும் நசுக்கப்படும் தேசங்களில் எழும் தேசிய எழுச்சிகளுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத தொடர்பு உண்டு.’’ மேற்கண்ட மார்க்சின் கூற்றில் இங்கிலாந்துக்குப் பதிலாக இந்தியாவையும் அயர்லாந்துக்குப் பதிலாக தமிழ் ஈழத்தையும் பொருத்திப் பார்த்தால், இன்றைய நிலை தெளிவாகும்.

இறுதியாக, இந்நூலில் தரப்பட்டுள்ள சிங்களப் பெண் எழுத்தாளர் ரசியா பரூக்கின் கூற்றையே, இந்த நூலாசிரியர்கள் மீண்டும் படிப்பது நல்லது.

‘‘பிரபாகரன் ஒன்றும் திடீரென தீவிரவாதியாக முளைத்துவிடவில்லை. அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவாக, அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. இந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டு, தீர்வு காணப்படவேண்டும். இல்லாவிடில், 26 ஆண்டுகால போருக்குப்பின் நாம் பாடம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள், அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிவரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை!’’

பிரேமலதா விஜயகாந்த் என்ற சாக்கடைகளின் அரசியல் !


கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்துள்ளது அனைத்து மக்களுக்கும் தெரியும்.இதில் என்னை வேத்னைபடுத்தியது என்ன வென்றால் ஒரு மழை பெய்தால் கூட வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டதாக முன்னுரையில் எழுதும் இந்த வலைப்பதிவாளர் உலகத்தில் இது பற்றி யாரு ஒரு சின்ன துணுக்கு செய்தி கூட போடாதது ஆச்சரியம்தான்….

வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறி உள்ளார் .அந்த கட்சிக்கு இவருடைய கணவர் தலைவனா இல்ல இந்த அம்மாவா? அவன் தலைவன்னா எதுக்கு இந்த அம்மா அறிக்கை விடுது. இப்பவே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்துட்டா இந்த அம்மாவோட அதிகாரம் தான் இருக்கும் போல.

வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறார்களாம்.
ஒருமித்த கருத்துடைய கட்சிகள் விருப்பம் தெரிவித்தால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தயாராக உள்ளதாம் .இப்படி தான் பலபேர் பல ஆண்டுகளாக எங்களை ஏமாத்தி( மக்களுக்கு நல்லது செய்ய போவதாக) வருகிறார்கள். நாங்களும் ஏமார்ந்து தான் வருகிறோம்.இந்த அம்மையாரே கூட்டணி தர்மத்தை பற்றி இதற்கு முன் அளித்த விளக்கத்தை பாருங்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/04/11/tn-premalatha-comes-down-heavily-on-dmk-and-admk.html

கூட்டணி கலாச்சாரத்த பத்தி யார் பேசறது , கொள்கை ரீதியா மக்களுடன் மட்டுமே கூட்டணி வெப்போம்னு விஜயகாந்த் சொல்லலையா? எல்லாம் எங்க தலைஎழுத்து….எவனெவனோ பேசறத எல்லாம் கேக்க வேண்டி இருக்கு..என்ன செய்ய நீ பேசறதையும் கேக்கறோம்…

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அந்த அம்மையாருக்கு இல்லையாம்.இதை விட ஒரு நிமிஷம் என்னை அதிர வைத்தது என்னவென்றால் விருத்தாசலம் தொகுதி அவர்களது சொந்த தொகுதியாம்.எப்போதுமே விஜயகாந்திற்கு தனி அக்கரை உண்டாம்.விருத்தாச்சலம் என்ன உங்க சொந்தத் தொகுதியா..? ..அப்படிப்போடு அருவாள..! விருத்தாச்சலம் என்ன ஆந்திராவில இருக்குன்னு நெனப்பா? கொல்ட்டிகளுக்கு தமிழ்நாட்டுல பாதி வாங்கிட்டோம் என்ற நினைப்பா?

அதனால் தான் அவர் இயக்கும் முதல் படத்திற்கு விருத்தகிரி என்று பெயர் வைத்து, இந்தப் படத்தின் முதல் காட்சியை விருத்தசாலத்தில் எடுக்க உள்ளார்களாம்.ஓ இது வேறையா!விருத்தாசலத்துல ஷுட்டிங் நடத்தினா எல்லோரும் உங்களுக்கு ஒட்டு போட்டுருவானுவோன்னு தப்புகணக்கு போடாதிங்க

இவர்களது அரசியல் இவளவுதானா? பொதுமக்கள் தேவைக்கு ரோடு போட கலயானமண்டபம் அகற்றினால் அதை அரசியல் ஆக்கி ஆறு கோடி கிடைத்தபின் அமைதிகாத்து, அடுத்தவர் டிவி சேனல்களை விமர்சனம் செய்துவிட்டு பின்னர் தனது சொந்த சேனல் ஆரம்பிப்பது, சினிமா தயாரிப்பது அதிலேயும் அரசியல் சாயம் பூச பேரும் சூடிங்கும் நடத்துறோம் என்று மக்களை ஏமாற்றுவது – இதுதான் இவர்கள் அரசியல் தரம்.