சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்…


இருக்கு -ந.முத்து
(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

1.

நீங்கெல்லாம்
சேத்துல கையை
வச்சாத்தா
நாங்கெல்லாம்
சோத்துல கைய
வைக்க முடியும்னு
சொல்லுறான்
கூத்துல பொறங்தவன்.

எலேய் !
சேத்துல
கைய வச்சதால
எங்க கையெல்லாம்
எரிஞ்சிகிட்டிருக்கு
சூத்துல
கைய வச்சதால
உங்க கையெல்லாம்
சொறிஞ்சிகிட்டிருக்கு.

2.

ஒருதுளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக் காசு
கொடுத்தது
தமிழ்ல்லவா…
-திரைப்படப்பாடல்

எட்டிவயசுப் புள்ள
ஒட்டின தீப்பெட்டில
ஒண்ணு,ரெண்டு
ஒழுங்கா ஒட்டுலைனு
ஒரு நா(ள்) கூலிய
புடிச்சிட்டுத் தர்ரானுக
கூறுகெட்ட கூ….யானுக.

3.

ஒவ்வொரு மாதத்தின்
முதல் சனிக்கிழமை
இரவில் துவங்குகிறது
இந்த
திருப்பள்ளி எழுச்சி

வில்ஸ் புகையில்
சுக்கா வாசம் மிதக்கும்

நிறம் மாறி இருக்கும்
குளிர்பானம்
ஊற்றப்பட்ட சரக்கு

வீட்டுக்காரக் கிழவியின்
குறட்டை தாண்டி
உள்ளறைக்குள்
வந்து சேரும்
மெட்டியணிந்த
இருபாதம்

விளக்கணைக்கப்பட்ட
உள் அறைக்குள்
ஒன்றன் பின்


ன்
றா
ய்
உருவங்கள்

அதிகலையில்
கேட்டது அந்தக் குரல்

எம் புள்ள மாதிரி இருக்கீங்க.. ஒரு
பத்து ரூவா சேத்துக்குடுங்க..

4.

குண்டி காய்ஞ்சு
கிடக்கிற ஊருக்குள்ள
எண்ணைக் கிணறு தவிர
எல்லா இடத்திலேயும்
குண்டப் போடுறானுகளேன்னு
நா பொலம்புறத கேட்டு
அப்பாத்தா சொன்னா

“இவனுங்களத்தா நம்மூர்ல
பொணம் விழுந்த வூட்டுலயும்
பொம்பளைக்கு அலையறவுனு
சொல்லுவாங்க”.

5.

கட்டுன பொண்டாடிய
காசுக்காக
கண்டவன்கிட்ட உட்டுட்டு

அப்புறம்
அரிப்பெடுக்கறப்போ
காசு கொடுத்து
போன கதையா இருக்கு
அரசாங்க சொத்த
அடுத்தவனுக்கு விக்கிறதும்
அவன் கிட்டேயே
கடன் கேட்கிறதும்.

6.

குளித்துவிட்டு
கோவிலுக்குள்
வரச் சொல்லியிருக்கிறாய்

சரி

எங்களையும்
விடச் சொல்
எல்லோரும்
குளிக்கிற
குளத்தில்.

7.

தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்டவக்கில்ல
தாயோளி
செங்கல்ல தூக்கிட்டு
போறான்
கோயில் கட்ட.

8.

குருடன் பார்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்

பிராத்தனை
கூட்டத்திற்குப்
போக முடியாமல்
மூட்டு வலியால்
படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்.

9.

சொறக்க
இருக்கற
சட்டிய
விக்கும்போது
இளிச்சிட்டு

சதவிகிதத்
தட்டோடு
சாப்பாடு கேட்கிற
சாதித் தலைவனுக்கு
சரியான பேரு
எச்சகலை..

10.

மாதவிலக்கின்
மஞ்சள் துணி மேல்
விந்துக்கறை போல்
உந்தன்
கவிதை.
எந்த பயனும்
இல்லாமல்.
(குறிப்பு : உன் அரிப்பு தீர்ந்திருக்கும்)

வாழ்பானுபவ கவிகளுக்கு…

11.

உனக்கு சொரணை
இருக்கிறத?
என்று கேட்டுவிட்டான்.
இருக்கிறது என்று
சொல்ல முடிவதில்லை.
எல்லாவற்றயும் பார்த்து
கவிதை மட்டுமே
எழுதிக்கொண்டிருப்பதால்.
***********

இருக்கு -ந.முத்து
(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

வெளியீடு:

63, பொன்னி நகர்.
கோவை-37.