மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே…


புரோகிதர்களுக்கு மட்டும் எழுதிக்கொள்வது…..

காலம் காலமாக திருமணத்திற்க்கு புரோகிதர்களை வைத்து திருமணம் செய்வது நமது தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது.திருமணம் மட்டுமின்றி ஏனைய சடங்குகள் அனைத்திற்க்கும் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஓதி சடங்குகள் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது…

எத்தனை பேர் அந்த மந்திரங்களை அர்த்தம் புரிந்து சொல்லியிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒருவேளை அந்த மந்திரங்கள் புரிந்தவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருக்கலாம்…ஆனால் சமஸ்கிருதமே என்னவென்று தெரியாத பாமர மக்கள் வீட்டு சடங்குகளிலும் இன்னும் இந்த சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது ஏன்?

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளும் தமிழர்கள் வாழும் ஊரில் இன்னமும் சமஸ்கிருதத்திலயே மந்திரங்கள் ஓதப்படுவது ஏன் ஓய்?

இது மாற்றாததற்க்கு காரணம் இன்னும் தானே உசத்தியென்றும் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆணவமா? இல்லை மரபாக வந்ததை மாற்ற இயலாது என்று சாக்கு போக்கா? என்ன என்னவோ கண்டுபிடிச்சாச்சு இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த சமஸ்கிருதத்திற்க்கு தமிழ் அர்த்தம் கண்டு பிடிக்காமலா இருந்திருப்பார்கள்?

கண்டுபிடிச்சுருக்கான்யா தமிழன் நான் படிச்சதை சொல்றேன் கேளுங்க…

சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரத்தை திருமணம் நடத்திவைக்கிற புரோகிதர் மணப்பெண்ணை நோக்கி சொல்றார்.இதுக்கு அர்த்தம் சொன்னா இந்த மந்திரங்கள் சொல்லி திருமணம் முடிந்த மணப்பெண்களுக்கு வருத்தமாய்த்தான் இருக்கும் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்…

கேட்டீங்களாப்பா என்னதான் அவங்க எல்லாரும் கடவுள்களாக இருந்தாலும் மூன்றுபேருக்கு மனைவியாய் இருந்த ஒருவளை எப்படி ஒரு தன்மானம் உடைய மணமகன் திருமணம் முடிப்பது ? பிறந்ததிலருந்து பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து எந்த களங்கமும் இல்லாத தன்னோட பொண்ணை ஒருத்தனுக்கு திருமணம் நடத்திவைக்கும் பெற்றோர்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் கொதித்து போய்விடமாட்டார்களா ஓய்? இதைவிட இவ்வளவு வருடங்கழித்து எந்த ஆடவரின் இச்சைக்கும் அடிபணியாத முதல் முதலாக ஒரு ஆடவனுக்கு மனைவியாகப்போகிறவளுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் அவ்வளவுதான் எரிந்து கொண்டிருக்கும் அதே அக்னியில் அந்த புரோகிதனை பொசுக்கிவிடமாட்டாளா?

இதுக்கு பதிலாக

இன்னார் மகளாய் பிறந்த இன்ன பெயருடைய நீ இன்னாருக்கு பிறந்த இன்ன பெயருடைய ஒருத்தருக்கு மனைவியாகப்போகிறாய் என்று கூறினால் போதாதா ஓய்?

நோக்கு எப்டி தெரியுன்றவாளுக்கு சொல்றேன் கேளுங்க…

விளக்க?உரை பெயர் : விவாஹ மந்த்ராத்த போதினி

எழுதியவர் : கீழாத்தூர் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் (பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுறவங்களுக்கு முதலில் கருட புராண தண்டணை கொடுக்கணும் ஓய்)

பக்கம் : 22….

இதைவிட கொடுமை

தாய் தகப்பனுக்கு திவசம் கொடுக்கப்படும்பொழுது சொல்லப்படும் மந்திரம்…

தகப்பனுக்குதிவசம் கொடுக்கும்பொழுது சொல்ற மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இதுக்கு அர்த்தம்

என்னோட அம்மா பத்தினியா இல்லாமல் வேறொருத்தருக்கு என்னை பெற்றிருந்தால் இந்த திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்.. என்ன கரும மந்திரம்டா இது அப்பன் பேர் தெரியாதவன்னு அசிங்கப்படுத்துற மாதிரியில்ல இருக்கு…

இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்…

அம்மாவுக்கு கொடுக்கிற திவசத்தில் சொல்ற மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும் மானங்கெட்ட மந்திரம்டா இது சொல்றதுக்கே வாய் கூசுது…

இதுக்கு பதிலா அம்மா என்னை பத்து மாசம் சுமந்து பெற்றதற்க்கு ஈடு இணையாக நான் எதுவும் செய்யவில்லை அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாக இப்படி சொன்னால் போதாதா ஓய்…

நானும் இந்துமதத்தை சேர்ந்தவன்தான் இல்லையென்று சொல்லவில்லை அதற்க்காக இப்படி அபத்தமான மந்திரங்களை சொல்ல தன்மானம் இடங்கொடுக்கவில்லை முற்றிலும் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதை தவிருங்கள் ஓய்..இல்லை இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சமஸ்கிருதத்தையே பிடிச்சு தொங்கிண்டு இருப்பேள் ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்… இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை…நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்….உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்க்காக மற்றவர்கள் மீதும் அதை திணிக்காதீர்கள்…

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே…
நன்றி-ப்ரியமுடன்வசந்த்.