சொல்லுங்கள் கமல் யார் நீங்கள்?


ஒரு முறைக்கு இரண்டு முறை, ஒரு பக்கத்திற்கு இரண்டு பக்கம் விசாரித்து மரண தண்டனை கூடாது என்று சொன்னது ‘விருமாண்டி’. விசாரணை, நீதிமன்றம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, தனக்குத் தீவிரவாதி என்று படுகின்றவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று சொல்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இரண்டும் கமல்ஹாசனின் படங்கள்.

இரண்டு மணிநேரத்திற்கும் சற்றுக் குறைவாக எடுக்கப்பட்டுள்ள படம் உன்னைப் போல் ஒருவன்.தொடக்கம் முதல் இறுதிவரை, ஒரு குதிரைப் பந்தயத்திற்குள்ள விறுவிறுப்பு.மிக உயர்ந்த தொழில் நுட்ப நேர்த்தி.வழக்கமான காதல் பாடல்கள், ஆபாசக்காட்சிகள், இரட்டைப் பொருள் உரையாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி வெவ்வேறு தோற்றங்களிலும் ஒப்பனைகளிலும் வெளிப்பட்ட கமல்ஹாசன், இந்தப் படத்தில், முதல் காட்சியில் இருந்து கடைசி வரையில் ஒரே உடை, ஒரே தோற்றம், எந்த மாற்றமும் இல்லை. மொட்டை மாடியில் அமர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு பாத்திரம். தன்னைக் காட்டிலும், உடன் நடிக்கும் மோகன்லாலுக்கு கூடுதல் முக்கியத்துவம். தேர்ந்த கலைஞர்களின் திறன்மிக்க நடிப்பு. இதமான இசை.

இத்தனை சிறப்புகளும் கொண்ட அப்படத்தைப் பார்த்த பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சிதான் நமக்கு மிஞ்சியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய மன உளைச்சலையே என் போன்றவர்களிடம் அந்தப் படம் ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்று திரும்பத் திரும்ப ‘சங்பரிவாரங்கள்’ உருவாக்கியுள்ள கருத்து மாயையை இப்படம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறது. படத்தில் காட்டப்படும் நான்கு தீவிரவாதிகளில் மூவர் இஸ்லாமியர்கள், ஒரே ஒருவர் இந்து. அவரும்கூட பணத்துக்காக வெடிமருந்து வாங்கி விற்கும் ஒரு தவறான வணிகர் அவ்வளவுதான். தீவிரவாதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு படம் முடியும் வேளையில், திரையில் ‘சம்பவாமி யுகே யுகே’ பாடப்படுகிறது. கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள், கொன்றவர் இந்துக் கடவுள் போல இருக்கிறது. (சுட்டுக் கொல்லும் இன்பெக்டர் பெயர் ஒர் இஸ்லாமியப் பெயராக இருப்பது, மிகப் புத்திசாலித்தனமான தற்காப்பு)

கணிப்பொறித் துறையில் வல்லுனர் ஒருவர் வேண்டும் என்று கேட்கும் காவல்துறை ஆணையர் எப்படிக் கேட்கிறார் தெரியுமா? ‘Call one expert from IIT’ ( ஐஐடியில் இருந்து ஒரு வல்லுனரைக் கூப்பிடுங்கள்). ஐஐடி-யைத் தவிர வேறு எங்கும் வல்லுனர்களே கிடையாதா? அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அங்கிருந்து வரும் ஒரு மகா மேதை படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். ஆனாலும் அவர்தான் மகா மேதை. அசல் அம்மாஞ்சியாக அப்படி ஒரு ஒப்பனை. பார்த்த உடனேயே ‘அவாள்’ என்று தெரியும் தோற்றம்.

காவல் துறை ஆணையர், உண்மையில் மட்டுமல்லாமல், படத்திலும் ஒரு மலையாளி. மகா கெட்டிக்காரர். தமிழக அரசின் தலைமைச் செயலாளரையே எள்ளி நகையாடும் அளவுக்கு கம்பீரமானவர்.

முதலமைச்சரின் கோபாலபுரம் வீடு காட்டப்படுகிறது. அவர் குரலைப் போலவே தொலைபேசியில் குரல் ஒலிக்கிறது. படத்தில் வரும் முதலமைச்சர் கலைஞர்தான் என்பது மறைமுகமாக நிறுவப்படுகிறது. முதலமைச்சரோ மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க் கட்சிகளுக்கு இந்தச் செய்தி தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளைக் கவனமாக வலியுறுத்துகிறார். அப்போது அந்தக் காவல் துறை அதிகாரியான மலையாளியின் முகத்தில் ஒளிவிடும் ஓர் அலட்சியப் புன்னகை தமிழகத்தையே கேலி செய்கிறது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, அல்காய்தா போன்ற இயக்கங்களின் பெயர்கள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.

இப்போது கமலிடம் நமக்கு மூன்று கேள்விகள்.

1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங்களை மையமாக வைத்துப் படம் எடுக்கும் எண்ணம், விருப்பம், துணிச்சல் உங்களுக்கு உண்டா?

2.தனிமனிதர்கள்/குழுக்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பது மட்டும்தான் தீவிரவாதமா?பயங்கரவாதிகளை உருவாக்குகிற அரச பயங்கரவாதம் பற்றியும் பேச உங்கள் பேனாவும் கேமராவும் முன்வருமா?

3.படத்தில் வரும் மோகன்லால் இரண்டு மூன்று முறை தொலைபேசி மூலம் உங்களிடம் கேட்கிறாரே, அந்தக் கேள்வியை மீணடும் ஒருமுறை உங்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. யார் நீங்கள்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?

வலைவிரித்தாள் வசந்தசேனை மாட்டிக்கொண்டான் புருஷோத்தமன்


கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு… ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள. அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே… அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்). அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்… போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார்.

ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்… நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம். சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை. புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான். தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே…?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது. கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

‘மனோகரா’ கதை இது.

‘ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை. அப்பன் புருசோத்தமன் என்ன… மகன் மனோகரனே மாட்டிக் கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது. விடுவாரா புருசோத்தமன்! ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு. புகுந்து விளையாடிவிட்டார்.

‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா

யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே…

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு. பெரிய தில்லாலங்கிடி! அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது. அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம். ‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள். சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை. தேவை ஒரேயொரு கணினி. ‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’… அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும். ‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன… அடையாறு பார்க் என்ன… என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்கார ன்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.
இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.
இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.
காலம் கடந்த போதனை. சரி, அது போய் தொலையட்டும்; பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில் “இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?
பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!
ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே. அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!
என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!
சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ… ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே…. ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு! துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே… ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்… இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே! ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை. சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது… போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது. போராளிகளுக்கு சரிப்படாது.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது. அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது: ‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’

இந்திய மரபும் பார்ப்பன திரிபும்


இந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது போதாதுனு இப்ப புதுசு புதுசா கிளம்பிட்டாங்க. உங்க வாழ்க்கையில என்ன கஷ்டம்னாலும் எங்கிட்ட சொல்லு. லெட்டர் போடு. ஜோசியப்படி கணிச்சு உன் வாசப்படியில கொண்டுவந்து சொருவுரேங்குறான். இதுக்கு இணைப்பு, பிணைப்பு, வெங்காயம், வெள்ளப்பூண்டு, வாஸ்துசாஸ்திரம் என்கிறான். எந்த நாட்டில் வாஸ்துசாஸ்திரம்? தமிழ்நாட்டில், மாராத்தியில், குஜராத்தில், வாழ்வதற்கே வசதியில்லாமல், வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில படுத்துட்டிருக்கிற ஜனங்ககிட்ட வாஸ்து மசுரு என்னத்துக்குன்னு கேட்போமா? கேட்கமாட்டோமா?

இதுக்கு வாஸ்துசாஸ்திரமா? வீடே இல்லையாம் இதுக்கு வாஸ்த்தாம். வாஸ்து எதுக்கு வைப்ப?ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வெளிக்கு போறதுக்கு இடமில்லாமல் டாய்லெட்டுன்னு ஒன்னுதெரியாமல் வெளியபோயிகிட்டிருந்தான். இதுக்கு ஒரு 3 கிலோமீட்டர் போயி குப்புசாமி வரல, கோயிந்தசாமி வரல, நீ சொம்பு எடுத்துக்குனு வா, நா டார்ச் லைட் எடுத்துக்குனு வாரேன்னு பாகப்பிரிவினை பண்ணிக்கினு போனானுங்க. இப்ப வாஸ்துவா? இப்ப பங்களா கட்டுற வீட்டுல வாஸ்துன்னா டாய்லெட் எப்படி வைப்ப? உன் வாஸ்து குளத்தங்கரையில வெளிக்கு போறது. எந்த வாஸ்து சாஸ்திரத்திலே எங்கடா இருக்குது உங்களுக்கு டாய்லெட்டு. கேட்போமா? கேட்கமாட்டோமா? இதை கேட்கிறதுக்குத்தான் இப்போ நான் பேச வந்திருக்கிறேன் என்பது என்னுடைய முன்னுரை.

இவர்களுடைய சாஸ்திரம் இவர்களுடையதா? இப்ப ஆயுர்வேதன்றான். விளக்கெண்ணெய் விக்கணும்னா கூட திடீர்னு ஆயுர்வேதமுறைப்படி தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்ன் றான். அது இவனுடைய சாஸ்திரமாம். ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம். வாஸ்து இவன் சாஸ்திரம். சோசியம், காலக்கணிதம், நியூமராலஜி, அவனோட ஆயாலஜி எல்லாத்தையும் சேத்து உழைக்கிற நம்மள ஒரு அங்குலங்கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்குற இந்த சதிகளுக்குப் பெயர் இந்து மதம்.

எல்லாரையும் சேத்துக்குவாராம், இவரு. சங்கராச்சாரியாருக்கு இப்ப வந்திருக்கிற பெரிய ஃபுல் டைம் டியூட்டி, 24 மணிநேர வேலை, என்னன்னா? இந்துக்கள் யார், யார்னு பார்த்து அவர்களை ஒன்றிணைக்கிறாராம். இதுவரைக்கும் ஊருக்குள்ள வராதடான்னு துரத்திக்கிட்டிருந்தீங்க, சேரியிலேயே இருடான்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க, உன்ன நா தொடமாட்டன்டான்னு சொல்லிக்கிட்டீருந்தீங்க. இப்ப கூப்புடுறானாம்!

1932இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாட்டுல நீயும் இந்து நானும் இந்துன்னு பாபா சாகேப் அம்பேத்கரைப் பார்த்து அவர் சொன்னாராம். யாரு? மகாத்மா காந்தி. நாமெல்லாம் வெறும் ஆத்மா. அவங்க மட்டும் தான் மகாத்மா. அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர் பதில் சொல்லியிருக்கிறார். ஹலோ மிஸ்டர் காந்தி! மகாத்மான்றத ஒத்துக்காம முதன் முதல் போர்க் குரல் கொடுத்த பெருந்தலைவன் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்த வெறும் ஆத்மாவே இல்லன்னு சொன்னார் புத்தர். ஆத்மாவே இல்லை இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா! அந்த மகாத்மாவை பார்த்து ஹலோ மிஸ்டர் காந்தி வாயை மூடுங்கன்னு சொல்லிட்டு நீ எப்படி இந்துன்னு என்ன சொல்லற? நீ சொல்லிக்கோ நீ இந்து. என்ன எப்படி சொல்ற? என்று கேட்டதற்கு, இல்ல. நீயும் இந்து நானும் இந்துன்னாரு அவரு.

இந்த விவகாரமெல்லாம் பண்ணாத, “”நா இந்து இல்ல”ன்னு சொன்னாரு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். நீயும் இந்து நானும் இந்து, அப்படின்னா, அப்பதான் கேட்டாரு மலத்த தொட்டிருக்கியான்னு? யாரு? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். அப்பதான் ஞாபகம் வந்தது “”2” தடவை தொடுற, ஒருநாளைக்கு. கழுவிதான ஆகணும். அவரு மகாத்மான்றதால “”எவாப்ரேட்டா” ஆயிடும்? இப்ப சங்கரச்சாரியாரு வெளிக்கு போனா கழுவிதான ஆவனும். மலத்த தொட்டுதான ஆவனும் தொட்டு கழுவிதான ஆவனும் இரண்டு வேளை. இரண்டுமுறை மலத்த தொடுகிற நீ கைய மட்டும் சோப்பு போட்டு கழுவுற, ஆனா மனிதனா பிறந்த என்னை தீண்டப்படாதவன் என்று சொல்லி தொட்டா குளிக்கணுன்னு சொல்ற, நீயும் இந்து, நானும் இந்துன்னு சொல்றியே ராஸ்கல், அப்போ யார் இங்க இந்து? இவங்க சொல்றாங்க எல்லாருமே இந்துவாம். யாருடா இந்துன்னா? இந்திய தத்துவ மரபில் வந்தவங்க எல்லாரும் இந்துன்றான்.

நாங்க சுடலமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடாவெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுப்பாடி, “”சுடலை மாடன் வந்து….. நின்றான் நின்றானங்கே” நின்றான், நின்றான்னு அரைமணி நேரமா நிற்கிறோமே, நானும் இந்து. சேரிக்குள்ளயே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிச்சிக்கிட்டிருக்கிற நீயும் இந்துவா? என்னுடைய மரபும் உன்னுடைய மரபும் ஒன்றா? இந்தக் கேள்வியைத்தான் இன்றைக்கு இங்கே எழுப்புகிறோம். இந்திய தத்துவ மரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்திய தத்துவ மரபு மிகப் பெரியது. அகலமானது. ஆழமானது. அது சாங்கியர் என்று சொல்லப்படுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார் வரை வந்து இன்றைக்கும் பாமர மக்களென்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தினரிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.

இந்திய மரபு என்று சொல்லும் பொழுது அது வடக்கே, இமயமலையிலிருந்து, கங்கையாறு போல் குதித்து வந்த மரபு மட்டுமல்ல, நம்முடைய தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, காவிரி இந்தக் கரையிலே இருந்தெல்லாம், இமயத்தை நோக்கியும் சென்றது இந்த மரபு. இந்திய மரபு என்பது வடக்கேயிருந்து வந்தது என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டிலே இருந்து போனது இந்திய மரபு. இது நமக்கு தெரியலை என்பதை வைத்துக் கொண்டுதான் எப்பப்பார்த்தாலும், இந்துக்கள் என்றால் இந்தியர்கள், இந்தியர் என்றால் இந்துக்கள், இதுல முஸ்லீம்களெல்லாம் வெளியில இருந்து வந்துட்டாங்கன்னு இராமகோபாலன் அண்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட் புருடா உட்டுக்குனு வராங்க! டுபாக்கூரு! யோசிச்சு பாருங்க. ஊர் ஊருக்கு வந்து மீட்டிங் போட்டு சொல்றாரு இராமகோபாலு. என்னான்னு சொல்றாரு? ஊர் ஊருக்கு வந்து நம்ம கிராமத்துல முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காத. அப்படி என்னா வாங்கிட்டோம், நாங்க எங்க ஊரு முஸ்லீம் கடையில 50 பைசாவுக்கு தேங்காய் எண்ணெய் வாங்குவோம். ஒரு 10 பைசாவுக்கு கடுகு வாங்குவோம். இத தவிர வேற என்னா மூ­ட்ட மூ­ட்டையா வாங்கறதுக்கு எங்ககிட்ட காசு இருக்குது. நாங்க என்னமோ பெரிசா முஸ்லீம் கடையில வாங்குற மாதிரி இஸ்து கட்டிக்கினு, கோமணத்தை வெளியே கட்டிக்கிட்டு. கோமணத்த உள்ள கட்டி வௌசாயம் பாத்தவன், வேட்டிய வெளிய கட்டிக்கிட்டு இருக்கான். இவன் கோமணத்தையே வெளியில கட்டிக்கிட்டு நம்ம ஊருக்கு வந்து நம்மகிட்ட சொல்றான் முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காதே, எதுவும் வாங்காதேன்னு. அப்படி என்ன வாங்கிட்டோம்னு கேக்கறன் நானு. தயவு செய்து யோசியுங்கள். எங்கள முஸ்லீம் கடையில எதுவும் வாங்காதன்னு சொல்ற அந்த இராமகோபலன் மெட்ராஸ்ல இருந்து கார்ல வரும்போது, அரேபியாவுல இருந்து முஸ்லீம் எடுத்த பெட்ரோல ஊத்திக்கிட்டுதான் வரானே தவிர, முருகப் பெருமான் சொன்னாமாதிரி அவரு போன மாதிரி மயிலுமேல ஏறியா வரான். முருகப்பெருமான் மயில்ல ஏறி வந்த மாதிரி நீயும் மயில் ஏறி கீர் போட்டுக்கினு எங்க ஊருக்கு வா. அப்புறம் முஸ்லீம் கடையில எதுவும் வாங்காம இருக்கலாம். இப்ப, சொல்றது வேற, செய்றது வேறன்னு இருக்குறாங்கன்னு புரியுதா உங்களுக்கு?

இந்திய மரபு என்பது எங்கள் மரபு. தமிழனுடைய மரபு. தெலுங்கனுடைய மரபு, மலையாளியுடைய மரபு. மராட்டியனுடைய மரபு. குஜராத்தியுடைய மரபு. இது பார்ப்பானுடைய மரபு இல்லை, இல்லை. இந்து மரபு என்று இவன் சொல்லுவது, பார்ப்பான் மரபு மட்டுந்தான். அந்த மரபு என்னன்னு எடுத்த எடுப்புலேயே சொல்றேன். இந்து சமய மரபுல கொஞ்சம் குடுமி மயிரும், கிழிஞ்சிபோன கோமணத்தையும் தவிர வேற ஒரு மசுருமில்ல. தத்துவ பேராசிரியராக 32 ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியில இருக்கிற நான் சொல்றேன். இன்றைக்கு இந்து தத்துவ மரபுன்னு சொல்லுவதை நான் சும்மா இந்த கூட்டத்துல பேசிட்டு போகல. இதே இராமகோபாலன வச்சிக்கிட்டு விவாதம் பண்ணேன், அந்தாளு டி.வியில ஒத்துக்கிட்டான்.

இந்து தத்துவ மரபுல ஒரு மசுருமில்லேன்னு சங்கராச்சாரியார்கிட்ட நான் குமுதத்துக்காக பேட்டி கண்டு விவாதித்து அது பத்திரிக்கையிலேயே வந்தது. அதையும் ஒத்துக்கிட்டான். அந்த ஆளுக்கு எதுவும் தெரியலேன்னு. இப்ப நான் மக்கள் மத்தியிலே இந்த விசயங்களை எடுத்து வைக்கிறேன். இந்து தத்துவ மரபு வேறு, இந்திய தத்துவ மரபு வேறு. இந்திய தத்துவ மரபு என்பது, கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, கொஞ்சம் கடினமாக இருந்தாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாங்கியம், யோகம் என்று ஒரு மரபு, தத்துவ மரபு. யோகம் என்று ஒரு தத்துவ மரபு, யோகாசனமெல்லாம் பண்றாங்களே அது. சாங்கியம், யோகம், மீமாம்சம், ஞாயம், வைசேஷிகம், வேதாந்தம். இது வரைக்கும் இந்திய தத்துவ மரபு ஆறு.

இது இல்லாமல், பௌத்தம், ஜைனம், இதுக்கப்புறம் சித்தாந்தம் அதுக்கப்புறம் வேறு மரபுகள் இருக்கிறது. இதுல வேதத்தை ஒப்புக் கொள்கிற மரபு எது என்று பார்த்தால் வேதாந்தம் என்று சொல்லுகின்ற அந்த ஒரே ஒரு மரபுதான் வேதத்தை ஒப்புக் கொள்ளுவதாய் பெயரளவில் சொல்லுகிறது. அதுவும் நான்கு வேதத்தை ஒப்புக் கொள்வதில்லை. ஆரண்யகங்களை ஒப்புக் கொள்வதில்லை. வேதாந்த மரபு உபநிடதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறது. உபநிடதம் என்பது வரலாற்றுப்படி பௌத்தத்துக்கு பின்னால் வந்தது, அல்லது சமகாலத்தில் வந்தது என்று சொல்லலாம். உபநிடதம் எத்தினின்னு சங்கராச்சாரியார கேட்டேன். எத்துனையோ இருக்குது, அதெப்படி சொல்றது அப்படின்னான் அந்தாளு. அட எத்தனையோ இருக்குது அதுல அஞ்சு, ஆறு, நாலு, ஏழு, சொல்லுடான்னு கேட்டா, அது எத்துனையோ இருக்கு அதெப்படி சொல்றதுன்னு சொன்னான். ஏதாவது ஒண்ணு சொல்லுயான்னா தெரியல. அப்பதான் நான் கேட்டேன்.

உபநிடதங்கள் எத்தினின்னு தெரியாதவன் பெரிய ஜாதி, தெரிஞ்ச நானு சின்ன ஜாதியாடா நாயேன்னு கேட்டேன். கோவம் வந்தா கேட்பேனா? கேக்கமாட்டேனா? இதுதான் கேட்டேன், பத்திரிக்கையில் இதை ரொம்ப நாகரிகமா போட்டாங்க. உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைத்து நான் சொன்னேன்னு எழுதியிருக்குறான். உனக்கு இது தெரியாத நீ பெரிய ஜாதி தெரிஞ்ச நான் சின்ன ஜாதியா? பஜகோவிந்தம்னு சொல்றியே, பஜ கோவிந்தம் என்ன பாட்டுன்னு கேட்டேன். ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம், நன்னா தெரியுமேன்னாரு. எத்தினின்னு கேட்டேன். தெரியலையேன்னாரு. அதுல உண்மையா என்ன இருக்குதுன்னா பன்னிரண்டு பாட்டுதான் அந்த ஆளு எழுதியிருக்கிறான். நான் எழுதப்போறது 12 பாட்டுன்னு சொல்லி அதுக்கு முன்னால ஒரு பாட்டெழுதியிருக்கிறான்.

“”துவாதச மஞ்சரி காபிர தெக்ஷ”, பன்னிரண்டு பாடல்களை நான் எழுதப்போகிறேன். இது எதுக்குத் தெரியுமா? “”வையா கரணி ஸ்பண்டித வைஷ்ய” பண்டிதர்களுக்காக இந்தப் பாட்டை நான் எழுதுகிறேன்னு சொல்லியிருக்கிறான். அதில் பஜகோவிந்தமே இல்லை. அந்த பன்னிரண்டு பாட்டுக்கும் ஒரு முன்னுரை தான் இருக்கிறது. இந்த நூலுக்கு என்னடா பேருன்னா, எழுதுன ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறாரு, துவாதச மஞ்சரிகாரி. துவாதசன்னா பன்னிரண்டுன்னு பேரு, சமஸ்கிருதத்துல. நாம பத்து இரண்டு பன்னிரண்டுன்னு சொல்லுவோம். சமஸ்கிருதத்துல இப்படி சொல்வாங்க இரண்டு பத்துன்னு. துவாதசன்னா இரண்டு தச பத்து, இரண்டு பத்துன்னுவான், நமக்கு இரண்டு பத்துன்னா இருபது, இந்த இரண்டு மரபும் ஒரு மரபா? பத்தும்ரெண்டும் பன்னிரண்டுன்னு சொல்றது என் மரபு, உன் மரபு, இல்லையா? இரண்டு பத்துன்னு சொன்னா பன்னிரண்டுன்னு அர்த்தமாம். நமக்கு இரண்டு பத்துன்னு சொன்னா இருபதுன்னு பாட்டியம்மாவுக்கு கூட தெரியும். உண்டா இல்லையா? அப்போ இந்த துவாதச மஞ்சரி பிரவேகவு. துவாதச மஞ்சரிதான்னு அவரு எழுதுனாரே, அதுவும் அவனுக்கு தெரியல.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம், அதற்கு முன்னால் ஞாயம், வைசேஷிகம் இவ்வளவுதான். ஜைனம் இருக்கிறது. பௌத்தம் இருக்கிறது. இதுல வேதாந்தம் கூட உபநிடதத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, வேதங்களையோ, ஆரண்யகங்களையோ அடிப்படையாகக் கொண்டது இல்லை. மதிமாறன் அவர்கள் ஒரு பத்திரிக்கையிலே, தலித்முரசு பத்திரிக்கையிலே, ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார். “பாரதிய ஜனதா பார்ட்டி’ன்னு பாரதியை விமர்சித்து எழுதினார். அதுக்கு கோவை ஞானி அவர்கள், நான் மதிக்கிற தலைவர்களிலும், அன்பர்களிலும், நண்பர்களிலும் ஒருவர், அதற்கு விமர்சனம் எழுதும்பொழுது இப்ப ஒரு புத்தகத்துக்கு என் நண்பர் பாரதி புத்திரன் எழுதிய புத்தகத்தில எழுதும்போது சொல்லியிருக்கிறாரு, “”இப்பொழுது திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் உணர்வு, தமிழ் தேசிய உணர்வு கொண்டவர்களும், தவறான பின்புலத்திலிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வேதத்தில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவில்லை” என எழுதி இருக்கிறார்கள். நல்லவேளை அவரு என்னை சொல்லியிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.

ஏன்னா வேதத்தில் என்ன இருக்கிறதுன்னு தெரிந்தவன் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்கள். அதிலே ரிக் வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம், சாமவேதம் என்று நான்கு இருக்கிறது. இந்த ரிக் வேதத்திலேதான் மீன் குழம்பு வச்ச மாதிரி, இந்த நரிக்குறவர்கள் சாப்பாட்டை பிரிச்சு வச்ச மாதிரி, அதில் மீன் குழம்பும் இருக்கும், கருவாட்டுக் குழம்பும் இருக்கும், சாம்பாரும் இருக்கும், சுத்தமா, சைவமா வெண்டக்கா குழம்பும் இருக்கும், எல்லாம் கலந்து இருக்கும். ரிக் வேதத்திலே அப்படித்தான் இருக்கிறது. ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பே இல்ல. சில விசயம் ரொம்ப அறிவு பூர்வமா இருக்குது. சில விசயம் முட்டாள்தனத்துக்கு மகுடம் சூட்டின மாதிரி இருக்குது. எங்கேயிருந்துடா இந்தக் கலப்படச் சோறு வந்ததுன்னு பார்த்தா ரிக் வேதத்துல எங்கெல்லாம் கொஞ்சம் அறிவுப் பூர்வமா சொல்லியிருக்குதோ, அதுக்கெல்லாம் கீழே எழுதியிருக்கிறான் திராவிட ரிக்குன்னு. அது எல்லாம் திராவிட ரிக்கு, தென்னாட்டுல இருந்தவன் ஏதாவது சிந்தித்து சொன்னா அந்த சிந்தனையை, சிந்தினதை எடுத்துக்கிட்டு போயி சேர்த்து வைத்துக் கொண்டு, திராவிட ரிக்குன்னு சொல்லிக்கிட்டிருக்கிறானுங்க. அதுதான் ரிக் வேதத்துல இருக்கறது. இன்னொரு வேதம் இருக்கிறதே யசூர் வேதம், அது என்னா சொல்லுது? நம்ப பேட்டையிலே சில பேர் பேசிக்குவாங்க, மாப்ள என்ன ரொம்ப ராங் பண்றான். நா, அந்தப் பக்கமா போனா எனுக்கு ரொம்ப பயமா இருக்குது. நீ மட்டும் ஊம்னு சொல்லு, அவன கீசிர்றன். இத அப்படியே மொழி பெயர்த்தீங்கன்னா, அதுதான் யசூர் வேதம். மாப்ள எனக்கு பயமா இருக்குது, அந்தப் பக்கமா போனா உதைப்பான் போலருக்குது, நீ மட்டும் ஊம்னு சொல்லு நீ மட்டும் எனக்கு சப்போட் பண்ணு நான் அவங்கள கீசிர்றன். இத ட்ரான்ஸ்லேட் பண்ணினா அது யசூர் வேதம்.

மூ­ன்றாவது இருக்கிறதே அது சாம வேதம். அதிலேதான் தெளிவு பெற்ற சில விசயம், மன்னிக்க வேண்டும், ரிக்வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம் அதில் பாதி சடங்குகள் கற்பூரத்தை எப்படி கொளுத்துறதுன்னு சடங்கு இருக்கிறதுன்னு வச்சிக்குங்க, நல்லா கவனிங்க கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு 1218 வருசம்தான் ஆவுது. கற்பூரம் 1218 வருசத்துக்கு முன்னால கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது உலக வரலாறு, ஆனால் கற்பூரத்தை எப்படி கொளுத்தறதுன்னு, எப்படி தீபாராதனை காட்டணும்னு ஐயாயிரம் வருடத்துக்கு முன்னால எழுதி வச்சிருக்கான்னு சொன்னா கேட்கறவன் கேனையா இருந்தா, எருமமாடு ஏரோப்பிளேனு ஓட்டும்னு சொல்லுவான்! 1218 வருசத்துக்கு முன்னால இல்லாத கற்பூரத்தை எப்படி காட்டுறதுன்னு அதுக்கு முன்னால எப்படி சொல்ல முடியும். அப்ப இதையும், அதையும் எல்லாம் சேர்த்துக்கணும், இன்னொரு பெரிய வேடிக்கை 2,200 வருசத்துக்குமுன்னால வந்த புத்தர், அவரைப்பற்றிய செய்தியெல்லாம் கூட 5000ம் வருசத்துக்கு முன்னாலேயே வந்துவிட்டது, யசூர் வேதத்துல. அது எப்படியிருக்கும்? இதுல இருந்து தெரியவில்லையா உங்களுக்கு. திருட்டு பசங்க மாத்தி மாத்தி கெடச்சதெல்லாம் சேர்த்து வச்சுட்டு அதையும் பிரிண்ட் பண்ணாம வச்சிக்கினு, இது எழுதாக் கிளவி, இது சும்மா செவி வழியில் பாரம்பரியமா படித்துக் கொண்டு வருவதுன்னு பிலிம் காட்டிக்கினு இருந்தானுங்க. இப்ப அதை பிரிண்ட் பண்ணி பார்த்தா! அதுல தப்பு தப்பா இருக்குது. கடைசியாக சாம வேதம் ஒன்று இருக்கிறது.
அருமைத் தோழர்களே! தோழியர்களே! அது என்னான்னு டிரான்ஸ்லேட் பண்ணி உங்களுக்கு சொல்றேன், ஒரு பொம்பளய 10 ஆம்பிளைங்க தனி அறையில் பலாத்காரம் எப்படி பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்கனும்னா சாம வேதத்தை படிச்சா தெரிஞ்சுக்கலாம். டீடெய்லா இருக்குது அதுல. பின்னால் வாத்சாயனர் காம சூத்திரம் எழுதறதுக்கு அடியெடுத்து கொடுத்ததுதான் சாம வேதத்தின் பல பகுதி. இப்ப அத என்னான்னு பேசிக்கிட்டு இருக்கறாங்கன்னா, இப்ப இருக்கறாரே சங்கராச்சாரியார், இவரு எவளோ ஒரு நேபாளக்காரி கூட ஓடிப் போயி, திரும்பி ஓடி வந்தவரு. ஓடாமலேயே பரலோகம் போயி சேர்ந்தாரு இதுக்கு முன்னால் இருந்த பெரிய சங்காரச்சாரியார். அவரு சொல்லியிருக்கிறாரு, சாம வேதம் கலை ஞானம் உடையதுன்னு!

எது… ஒரு பொம்பளைய பத்து ஆம்பிளைங்க எப்படி பலாத்காரம் பண்றதுன்னு டீடெய்லா ஸ்டடி குடுத்திருக்கிறானே, அது கலை ஞானம் உடையதாம். இப்படி சினிமா படம் எடுக்கிறவங்களும், டி.வி தொடர் எடுக்கறவங்களும் இதே காட்சியை காட்டினா முகம் சுளித்தால் எதனாவது அர்த்தமிருக்குதா? அவர்கள் சாமவேதம் படித்தவர்கள். அவர்கள் சாம வேதத்தின் படி படமெடுக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா? தயவு செய்து யோசிங்க. இந்த வேதங்கள் நான்கும் நாசமா போவுதுன்னா, அப்போ, வேதத்திலே எங்களுக்கு கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? அந்தக் கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழர்களுக்கு, தெலுங்கர்களுக்கு, மலையாளிகளுக்கு, குஜராத்திகளுக்கு பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாம வேதத்தில் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை. அதர்வண வேத்தின் சடங்குகள் எங்களுக்கு தேவைப்படவில்லை. ரிக் வேதத்தின் சில பகுதிகளை தவிர, இயற்கை வர்ணணைகளைத் தவிர அதுவும் திராவிட ரிக் தவிர அவர்கள் தந்த ரிக்கிலே ஒரு மசுரும் இல்லை என்பது புரிந்து போய் விட்டது.

அதர்வண வேதத்தில், ஒன்றுமில்லை, ரிக்வேதத்தில் ஒன்றுமில்லை, யசூரிலே ஒன்றுமில்லை, சாம வேதம் வெறும் காமக் களஞ்சியம் என்று ஆன பின்னால், இதை சும்மா நான் கூட்டத்தில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், இங்கே கூட, எந்தப் பார்ப்பன பண்டிதர்களிருந்தாலும், அவர்கள் பெயரை வச்சுக்குவான் சிலபேரு, நான் சாம வேதம் படித்தவன், அதனால் சாமவேதி. நான் யசூர் வேதம் படித்தவன் யசூர் வேதி, நான் சீதபேதி! அப்படின்னு அவன் பேரு வச்சுக்குவான். எவனா இருந்தாலும், யாரா இருந்தாலும், பணிவோடு சவாலுக்கு அழைக்கிறேன். இதே போல ஒரு கூட்டத்தைக் கூட்டி வியாக்கியானம் செய்வதற்கும், விவாதம் செய்வதற்கும், நான் தயார். நான் சொல்வதை தவிர வேதத்தில் ஒரு மசுரும் இல்லை. யார் கூப்பிட்டாலும் நான் வருவதற்குத் தயார். இந்த வேதங்கள் இப்படியென்றால், அதற்குப் பிறகு இவர்களுக்கு ஆரண்யகங்கள் என்று இருக்கிறது. அசபர்ணர், அசக பர்ணர், யார்னா தெரிதா உங்களுக்கு அசக பர்ணர், அவர் நம்ம சித்தப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் ஒண்ணுவிட்ட தம்பிபுள்ள மாதிரியா இருக்குது. அந்த அசக பர்ணர், அசக மர்ணர், பிருகஸ்பதி, நாராயணர், வெங்காயத்தார், வெள்ளபூண்டார்னு பத்து பேர் சேர்ந்து ஆரண்யகங்கள்ல ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த பிரபஞ்சம் எதிலேயிருந்து தோன்றியது?!

நல்லா கவனியுங்க. சோத்துக்கு உழைச்சு, செத்து, சுண்ணாம்பாயி இதோ, என் முன்னால உக்காந்துக்கிட்டு இருக்காங்கள்ல, இவர்களுக்கு இதுவா பிரச்சனை? பிரபஞ்சம் எதிலே இருந்து வந்தது எதுல இருந்து வந்தா எனக்கென்ன? உழைப்புல இருந்துதான் எல்லாம்வர முடியும். மனிதனுடைய உழைப்பு மட்டும் இல்லையென்றால் மலை மலையாக இருக்குமே தவிர, மலையை குடைந்து தள்ளி பாதையை அமைக்க மனிதனின் உழைப்பு சக்தியால் தான் முடியுமே தவிர வேறு எதனாலும் முடியாது. கடல் கடலாகத்தான் இருக்குமே தவிர மனிதனின் உழைப்பு சக்தி சேராதவரை கடலின் சொத்து கரைக்கு வராது. “”மச்சாவதாரம் எடுத்த சிறீமன் மகாவிஷ்ணுவே நாராயண பெருமாளே, வராலு மீனே. நீயே கரைக்கு வா, நீயே கரைக்கு வா, நீயே கரைக்குவா”ன்னு இன்னிக்கெல்லாம் உடுக்கு சிலம்படி மவனெ. ஒரு வரால் குஞ்சு கூட வராது, இல்லியா?

மனித உழைப்பு சேராவிட்டால் ஒன்றுமே மாறாது; நடக்காது; வாழ்க்கைக்கு உதவாது என்று தெரிந்து வைத்திருக்கிற உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஆரண்யகங்கள் என்ன சொல்கிறது என்றால், இந்தப் பிரபஞ்சம் எதிலேயிருந்து வந்தது? ஒருத்தன் சொன்னான் பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. நல்லா கவனிச்சீங்கன்னா புரியும். கொஞ்சம் கடினமான செய்திதான் இது. பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. பக்கத்துல ஒருத்தன் நின்னான். இவன் சொக்காய புடிச்சு, கோமணத்த புடிச்சு இழுத்து, நீரு எதுல இருந்து வந்தது; அப்புறம் பிரபஞ்சம், நீரில இருந்து வந்ததுன்னா, நீரு எதுல இருந்து வந்தது. பக்கத்துல இருந்தவன் ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போவனுமில்ல, நீர் நெருப்பிலே இருந்து வந்ததுன்னு அவன் போயிட்டான்.

இவரு ஒரு ஆரண்யக தத்துவ ஞானி. முதல் ஞானி பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது என்றார். பக்கத்துல இருந்தவர் கேட்டார் நீர் எதுல இருந்து வந்ததுன்னு? நீர் நெருப்புல இருந்து வந்ததுன்னார். நெருப்பு எதுல இருந்து வந்ததுன்னு, பக்கத்துல இருந்தவன் சொக்காய புடிச்சு இழுத்தான். அவன் சொன்னான் கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா, இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியை இங்கேயே கொண்டு வந்து இவங்களை அமுக்கிறதா? இதெல்லாம் ஒரு தத்துவமாம். இது என்னா மசுருக்கு உதவும்.

உழைக்கும் மக்களுக்கு, கஞ்சிக்கு வழியில்லாம செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு, காவிரியில தண்ணி வராம சம்பா பயிர் கருகிக்கிட்டு இருக்குதேன்னு வயிறெரிஞ்சுகிட்டு இருக்கிற விவசாயிக்கு, ஊராரின் மானத்தை மறைக்க, நெசவாளி, துணியை தயாரித்து கொடுத்துவிட்டு கஞ்சிக்கு செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு ஒரு கட்சிகாரங்க சொன்னாங்க, நாங்க கஞ்சி ஊத்தறம்னாங்க. இன்னொரு கட்சிகாரங்க சொன்னாங்க நாங்க பிரியாணி போடறம், முட்டை பிரியாணின்னாங்க. கஞ்சி ஊத்தனவங்க, 1,000 ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி வைத்து, அதை ஊத்தற நிகழ்ச்சிக்கு 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சாங்க. ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சு 3 லட்ச ரூபாய்க்கு விழா ஏற்பாடு பண்ணி, அதுவும் பொறுக்காத போலீசு உதைச்சு துரத்தினாங்க.

இன்னொரு பக்கம் முட்டை பிரியாணி போடறான். தோழர்களே! தொழிலாளித் தோழர்களே! உழைக்கும் பெருமக்களே! நீங்கள் என்ன வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இங்கு வந்தவர்கள் யாரும் வேறு ஒரு வர்க்கமும் இல்லை உழைக்கும் வர்க்கம் தான் இங்கு வரும். டாட்டா, பிர்லா, டால்மியா, கோயங்கா, சிங்கானியா, ஐ.எஸ்.டி இராம­மூர்த்தி, செட்டியார் எல்லாமா முன்வரிசையில் உட்கார்ந்து இருக்கப் போறாங்க. இதெல்லாம் உழைக்கற கூட்டம். வர்க்கம், நம்முடைய ஒரே வர்க்கம்தான். ஆனால் நீங்கள் எந்தச் சார்புசிந்தனை உடையவர்களானாலும் தயவு செய்து யோசியுங்கள். நெசவாளியை ஒரு தேசம் பட்டினி போட நினைக்கிறதென்றால் அந்த தேசம் நிர்வாணத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டதாக அர்த்தம்.

இவ்வளவு பிரச்சனையில அழுதுகிட்டிருக்கிறோம். எனக்கு 17 வயசிருக்கும் போது எங்கத் தம்பிக்கு 12 வயசிருக்கும்போது எங்க அம்மா கூப்பிட்டாங்க. “”டேய் வீட்ல பணக்கஷ்டமா இருக்குதுடா கண்ணு”ன்னாங்க. நான் சின்னப்பையன் 17 வயசு. என் தம்பி அதைவிட சின்னப்பையன் 12 வயசு. எங்களுக்கு என்ன தெரியும்? “”என்னம்மா பண்றது”ன்னு கேட்டோம் நாங்க ரெண்டு பேரும். “”என்னடா பண்றது? பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடா”ன்னாங்க, எங்கம்மா. படிப்பறிவில்லாத எங்கள்தாய். தறி கணக்குகூட கரிக்கோடு போட்டு எழுதறவங்க. படிக்காதவங்க எங்கம்மா. அவங்க சொன்னாங்க. பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடான்னாங்க. அந்தப் பணக்கஷ்டம் என்பதை பொருளாதார நெருக்கடின்னு டிரான்ஸ்லேசன் பண்ணி கூட சொல்லத் தெரியாத படிக்காதவங்க எங்கம்மா, ஆனா இப்ப இருக்கறவங்க என்னங்கறாங்க. பொருளாதார நெருக்கடி வந்து விட்டது. பணக்கஷ்டம். இதுக்கு இப்ப என்ன தீர்வு சொல்றாங்கன்னா வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. எங்கம்மா வேலைக்குப் போங்கடான்னுச்சி. பணக்கஷ்டமா இருக்குது. வேலைக்குப் போங்கடான்னுச்சி எங்கம்மா. இப்ப இருக்கிறவங்க ரொம்ப படிச்சவங்க பிரெசன்டேசன் கான்வென்ட்ல கிராஜிவேட்டு. அதனால வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. பொருளாதார கஷ்டத்தை தீர்க்கறதுக்கு. இப்போ கஷ்டத்திலே அவஸ்த பட்டுட்டிருக்கிற நம்பளுக்கு ஆரண்யகம் என்னா உதவும்னு கேட்கறேன்.

நாலு வேதமும் இன்னான்னு சொல்லிப்புட்டேன். ஆரண்யகம் என்னான்னு சொல்லிப்புட்டேன். அதுக்கப்புறம் உபநிடதம். ஆரண்யகம் என்பது இதான். நெருப்பிலேருந்து வந்ததா, நீரிலே இருந்து வந்ததா? வெங்காயத்திலேயிருந்து வந்ததா? வெள்ளப்பூண்டிலிருந்து வந்ததா? எதுலேயிருந்து வந்தா எங்க மசுருக்கு என்ன? பிறப்புக்கு முன்னால் இருப்பதைப் பற்றிக் கவலைப்படும் உத்தேசம் இங்கு எவருக்கும் இல்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு. இறப்புக்குப் பின்னால் நாங்கள் என்ன ஆகப் போகிறோம் என்கிற கவலை எங்களுக்கு இல்லை. பிறப்புக்கு முன்னாலோ, இறப்புக்குப் பின்னாலோ நாங்கள் எந்த இழவாய்ப் போனாலும் இருக்கும் காலத்தில் உழைப்பை நம்பி வாழுகிற நாங்கள் உத்திரவாதமான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் அல்லவா? அதற்கு உத்திரவாதம் தராமல் டகுள்பாச்சி வேலை பண்றதுக்குப் பேர்தான் ஆரண்யகம். அதுக்கு அப்புறம் உபநிடதங்கள்.

உபநிடதத்திலே பெரிய கேள்வி. பிரம்மம் வேறா? ஆன்மா வேறா? ரொம்ப முக்கியம். தஞ்சாவூர்ல அரிசி விலை ஏறிப் போச்சு, பருப்பு விலை ஏறிப் போச்சு ஏன் ஏறிப்போச்சின்னு கவலைப்பட வந்தா இந்துவே முன்னணிக்கு வா! இந்து முன்னணிக்கு வான்றானே எதுக்கு வரணும் நானு. உன்னுடைய உபநிடதம், உன்னுடைய ஆரண்யகம் அதற்கு முன்னால் நான்கு வேதமும் பிரச்சனை எதைத் தீர்க்கும்? தயவு செய்து யோசிங்க. நம்ம பிரச்சனை எதைத் தீர்க்கும் உபநிடதம்? பிரம்மம் வேறா ஆன்மா வேறா என்று ஆராய்ந்து பிரம்மம் வேறல்ல, ஆன்மா வேறல்ல. பிரம்மம்தான் ஆன்மா, அதைத் தெரியாமல் நடுவிலே அவித்யா குறுக்கே கோடு போட்டிருக்கிறது இதான் உபநிடதச் சாரம்.

உபநிடதம் என்ன சொல்கிறது என்றால் மொத்தம் 108 உபநிடதம் இருக்கிறது. அதில் 18 பிரதானமான உபநிடதங்கள் ஒன்றை ஒன்று முரண்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி முரண்படுகிற இந்த உபநிடதங்கள் இந்து தத்துவ மரபு என்று சொன்னால் அது எங்களுக்கு இல்லை. எங்கள் இந்திய மரபில் அதற்குத் தேவையும் இல்லை. அது எங்களுக்குத் தேவை இல்லை என்கிறோம். சரி, உபநிடதங்கள் இப்படி போச்சு. அதுக்கப்புறம் சாஸ்திரங்கள். ஆறு சாஸ்திரங்கள். இப்பொழுது, உழைக்கும் தோழர்களும், தோழிகளும் கொஞ்சம் கூர்மையாய் கவனியுங்கள், சாஸ்திரம், சாஸ்திரம் என்று சொல்றானே, எது நமக்கு இவன், சாஸ்திரம் என்று சொல்லியிருக்கிறானென்றால், ஆறு சாஸ்திரமும் சமம். நீங்கள் யாரை வேண்டுமானாலும், பார்ப்பன, பண்டித சாமவேதி, யசூர்வேதி, விஷிஸ்டாத் வைதியை கூடக் கேளுங்கள், தஞ்சாவூர்ல தான் நிறைய பேர் இறைஞ்சி கிடப்பாங்க. எவனையாவது பிடிச்சி கேட்டுப் பாருங்க, ஆறு சாஸ்திரம்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னான்னு கேட்டுப்பாருங்க. பத்திரிக்கையாளர்கள் தயவு செய்து கேளுங்கள். பத்திரிக்கையில் இந்த பெரியார்தாசன், இந்த கேள்வியை கேட்டான் என்றே கேளுங்கள். எந்தப் பார்ப்பன, வித்யாபூஷண, விதாரண, வைத்யா ஆசாரண, சாஸ்த்ர, ­மூத்ர, எந்த பாப்பானாவது பதில் சொல்வானா பார்க்கலாம்.

எது ஆறு சாஸ்திரம்? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விபரீதமான அரசியல் தத்துவம். அது ஒரு சாஸ்திரம். கௌடில்யரின், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், பிற்காலத்திலே 1542 வாக்கிலே இத்தாலியிலே, மாக்கியவல்லி என்பவன் எழுதிய பிரின்ஸ் என்கிற விபரீதமான, கொடுங்கோல் அரசியலுக்கு ஆதாரமாக எழுதப்பட்ட நூல்தான். இந்த தேசத்தில் அலகாபாத் கோர்ட்டிலே, சின்ஹா என்பவர், இந்திராகாந்தியை நாளையிலிருந்து, நீ பிரதமருமில்லை, வெங்காயமுமில்லை என்று தூக்கியடிச்சவுடனே அன்றைக்கு இரவு அந்த அம்மா, கொடுங்கோன்மையாக, மக்கள் விரோதமாக எமர்ஜென்ஸி என அறிவித்து, எல்லா கிழவனையும், 60 வயதுக்கு இருக்கிற எந்த கிழவனா இருந்தாலும், அது மொரார்ஜிதேசாயா இருந்தாலும் சரி, சரண்சிங்கா இருந்தாலும் சரி, பெருந்தலைவர் காமராசராக இருந்தாலும் சரி, எல்லாக் கிழவனையும் உள்ள போடுன்னாங்களே அதுக்கு ஐடியா உனக்கு எப்படியம்மா வந்ததுன்னு பி.பி.சி.இண்டர்வியூ ஒண்ணுல கேட்டபோது, அந்தம்மா சொன்னாங்களே அன்னைக்கு ராத்திரி இந்த கேசுல தீர்ப்பு வந்தவுடனே நான் ரொம்ப சோர்ந்து போயி மாக்கியவல்லியோட பிரின்ஸ் படிச்சேன் அதுலதான் ஐடியா கெடச்சுதுன்னு சொன்னாங்களே.

அந்த மாக்கியவல்லிக்கு மாமாதான் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம். கொடுங்கோலனுக்கு ஆதரவாக எழுதப்பட்ட விபரீத சாஸ்திரம் அது. அது ஒரு சாஸ்திரம். இது நம்ம இந்திய மரபா? இப்ப இருக்கிற இந்தியனும் சரி, இதுவரைக்கும் வாழ்ந்த இந்தியர்களும் சரி, எந்த இந்தியர்களுக்கு இதிலே உடன்பாடு. மொகலாயர்களால் ஆளப்பட்டவர்களுக்கு உடன்பாடா? நம்ப வரலாற்று புத்தகத்திலே படிக்கிறோம், பிள்ளைகளுக்கெல்லாம் கற்றுத் தருகி÷றாம். ஏன் கற்றுத் தருகிறோம் என நமக்கும் தெரியறதில்ல, ஏன் கத்துக்குறோம் என அவங்களுக்கும் தெரியறதில்லை.

1526இல் பாபர் வந்தார். வந்தா வந்துட்டு போறார். நாம என்ன பண்ண முடியும். நாம லெட்டர் போட்டு கூப்டோமா அவங்கள. அவரு வந்தாரு. அத நாம பெருசா படிக்கிறோம், 1526இல் பாபர் வந்தார் அவருக்குப் பின் அவர் மகன் ஹிமாயூன் ஆட்சிக்கு வந்தார். இறந்த பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தார். இதுவரைக்கும் நல்லா கவனிச்சு பாருங்க வேறு ஏதாவது சொல்லிருக்கிறோமா? இதெல்லாம் வெறும் நேம்லிஸ்ட். ஸ்கூல்ல அட்டனன்ஸ் எடுக்கற வாத்தியாரு இதே வேலையத்தான் செய்றாரு, மணிமேகலை வந்தாச்சு மலர் விழி வந்தாச்சு, சின்சாமி வந்தாச்சு, பெரியசாமி வந்தாச்சு வெறும் நேம்லிஸ்ட், இது எங்கடா இருந்து வந்துச்சு.

வரலாற்று முறைன்னு பார்த்தால், காலைல சுப்ரபாதம் பாடறாங்களே, நல்லா கேட்டு பாருங்க, சனிக்கிழமை காலைல ரேடியோவுல கீச்சுக்கினு ஆடுதே, அத கேட்டுபாருங்க, “”ஸ்ரீபத்மநாப புருசோத்தம வாசுதேவ, வைகுண்டநாத ஜனார்த்தன சக்ரபாணி ஸ்ரீமத் ஜகந்நாத பாரிஜாத ஸ்ரீ வேங்கடாசல பதே தவசுப்ரபாதம்.” அருள் இன்னமோ பொழியுதாம் ரேடியோவில கூர்ந்து கவனிச்சா நல்லா இதென்னமோ நம்மாளுக்கு ரொம்ப புரிஞ்சுட்ட மாதிரி நாமகாரு இப்டி இப்டி போட்டுக்குறாரு. என்ன புரிஞ்சுது ஒனக்கு? புரியும். வெறும் நேம்லிஸ்ட். அட்டடென்ஸ் லிஸ்ட் கடைசியா தவசுப்ரபாதம். ஸ்டேண்டப் ஆன் தி பெஞ்ச்னு அர்த்தம். எழுந்துடுறாப்பான்னு அர்த்தம். இது இன்னான்னே தெரியாம தொட்டுத் தொட்டு கும்பிட்டுகினுகிறான் டேப் ரெக்கார்டரை நம்மாளு. இதே முறைதான் இந்த வரலாற்றில இருக்குது. 1526ல பாபர் வந்தாரு. அவரு மகன் வந்தாரு, வெங்காயம் வந்தாரு, வெள்ளபூண்டு வந்தாருன்னு. வரலாறு என்பது என்ன என்று கார்ல் மார்க்ஸ்தான் மிகச் சரியாக சொன்னார்.

மன்னர்கள் செய்த போர்களும் அவர்கள் விதித்த வரிகளும் ஆடிய அந்தரங்க விளையாட்டுகளும், கட்டி வைத்த கோட்டைகளும் மட்டும் அல்ல வரலாறு. மனிதர்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டு வர்க்கங்களுக்கு இடையே நடந்த மோதல்தான் வரலாறு. இந்த வரலாறு நமக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இந்த பிலிம் காட்றது. இப்ப தோழர்களும் தோழியரும் பாடறாங்களே நாமக்கட்டி ஆளப்போகுது உசாருன்னு இந்த நாமக்கட்டி வந்ததுன்னா நமக்கு வரலாறே இந்த வரலாறுதான். எந்த வரலாறு ? பாபர் வந்தாரு. அவர் மகன் ஹிமாயூன் வந்தாரு. வந்தா வந்துகினு போறாரு. நாம என்ன பண்றது. உண்மையான வரலாறு இது இல்லை. வரலாறு மக்கள் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் சந்தித்த பிரச்சனைகளின் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் போராடிய போராட்டங்களின் வரலாறாக இருக்க வேண்டும் என்றுதான் அறிகிறோம். இப்ப இந்த கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் விபரீத அரசியல் என்று சொன்னேன். இரண்டாவது சாஸ்திரம் மனுவினுடைய சாஸ்திரம். இது அதைவிட விபரீதம். அது சமுதாய சாஸ்திரம்.

சமுதாயத்திலே கீழ்சாதிக்காரன் இப்படி இருப்பான். மேல்சாதிக்காரன் இப்படி இருப்பான். புருச சூக்தம் என்று ஒன்றை இணைத்து தலையில் பிறந்தான், கால்ல பிறந்தான், தோள்ல பிறந்தான், இடுப்பில் பிறந்தான்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே! மக்களைப்பிரித்து வைத்து அவர்களை ஏணிப்படிகளாய் கீழிறக்கி வைத்து பார்ப்பானுக்கு மேல பெரிய சாதி இல்லை. சக்கிலியன் என்று சொல்லப்படுகிற அருந்ததியனுக்குக் கீழே சின்ன சாதி இல்லை. இடையில் எந்த சாதியும் சமம் இல்லை என்ற ஏற்பாட்டைச் செய்ததுதான் மனு சாத்திரம் அது இந்திய தத்துவ மரபா? இந்திய மண்ணில் உழைத்துக் கொண்டிருக்கிற உழைப்பாளியே உன்னுடைய தத்துவ மரபா அது? இல்லை. இல்லை. இல்லவே இலலை.

அப்போ கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொன்னேன். மனுவினுடைய சமுதாய சாஸ்திரம் சொன்னேன். மூ­ன்றாவது வாத்யாய அண்ணனுடைய காம சாஸ்திரம். காம சூத்திரம் என்று சொல்வாங்க அதை. அது சாம வேதத்தில இருக்கிறதுக்கு விளக்க உரை. இலக்கணம் அது. இலக்கியம் இது. இதுலதான் பத்துபேரை என்னா பண்றது அஞ்சு பேரை என்னா பண்றது, பின் பக்கம் எப்படி பண்றது, முன்பக்கம் எப்படி பண்றதுன்னு கேவலமா எழுதி வச்சிருக்கிறான்.

இந்திய தத்துவமரபா அது. காதலிக்கும் பொழுது காதலனும், காதலியும் பெரிய கல்வி, இலக்கணம், இலக்கியம், எல்லாம் படிக்கணும்னு நான் சொல்லல. சாதாரணமா கிராமத்துல காதல் வரவுங்க காதலிக்கும் போது பாத்தீங்கன்னா, காதலியை, சினிமாவுல காதலியை எப்படியெப்படியோ காட்றாங்க. ஐ லவ் யு, ஐ லவ் யு என்கிறான். எவனாவது அப்படி சொல்வானா, எங்க வீட்டு அல்சேசன் கூட அப்படி சொல்லாது. இவ்ளோ கத்து கத்துவாளா எவளாவது. கிராமத்துல லவ் பண்றது நாம பாத்து இருக்கறோம். அரசல், புரசலா காதல் நடக்கதான் செய்து. எல்லா ஊரிலயும் அந்தம்மா வந்து நிக்கும். அவங்கிட்ட சொல்லும். “”நா ஒண்ணு சொல்லணுமே” “”சொல்லுமா!” இவரு. ரொம்ப ஆசையா கேப்பாரு. சொல்லப் போறா லவ் பண்ற மேட்ருன்னு. அப்படியே ஜொல்லுட்டுக்கினு நிப்பாரு. “”சொல்லுமே, சொல்லு”. வேர்த்து, விறுவிறுத்து கைநடுங்கி, கால்நடுங்கி ஒண்ணுல்ல நாளைக்கு சொல்றன்”னுட்டு போயிடும். இது காதல் இதுதான் நம்ம மரபு.

இன்னிக்கு வரைக்கும் இந்த மரபு உயிரோடு இருக்குது காதல்ல. ஆனால் இவங்க காதல், காம சூத்திரத்துல, வாத்ஸாயனர் எழுதிய காம சூத்திரத்துல முன்னால எப்படி செய்யறது, பின்னால எப்படி செய்யறது, வாயில எப்படி செய்யறது, தொப்புல்ல எப்படி செய்யறதுன்னு எழுதி வச்சிருக்கிறான். த்தூ.. நாய்ங்களா, இதுவா இந்திய தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லை. இது இந்து தத்துவ மரபு, பார்ப்பன தத்துவ மரபு, சங்கராச்சாரியானின் தத்துவ மரபு, இராமகோபாலனின் தத்துவ மரபு. உழைக்கும் பாட்டாளியான என்னுடைய தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இதெப்படி என் தத்துவ மரபாகும். என் அம்மாவுக்கு தெரிய என் மனைவி மேலேயே கை வைக்க மாட்டேன். இது என்னுடைய மரபு. அவனுடைய வாத்ஸாயனுடைய காம சூத்திரத்துல, அம்மாவே விளக்கு புடிக்கறா. இதுவா என்னுடைய மரபு. இல்லை. ­மூணுசாத்திரம் முடிஞ்சுது. அப்புறம் என்னடா மூணுசாத்திரம். மீதி மூணு என்னாடான்னா, இதுவரைக்கும் வாய ­மூடிக்கினு இருந்துட்டு இப்பதான் ஆரம்பிக்கிறாங்க,

ஆயுர்வேத சாஸ்திரம்னு, பேரறிஞர் அண்ணாவுக்கு, புற்றுநோய் வந்ததே அப்ப அமெரிக்கா அனுப்பனாங்களே அப்ப இங்க இருந்த ஆயுர்வேதிகளெல்லாம் என்ன புடிங்கிகிட்டு இருந்தாங்க? கேப்பனா கேக்கமாட்டனா கோவம் வந்தா, கேப்பேன். இன்னா அநியாயம் இது அப்போ எங்க போயிருந்தீங்க. இப்பகூட மத்திய மந்திரி முரசொலி மாறனுக்கு உடம்பு சரியில்லை. போவ வேண்டியதுதானே? ஆயுர்வேதியெல்லாம் அப்ளிகேசன் எடுத்துக்கிட்டு. வாஜ்பாய்கிட்ட போய் சொல்ல வேண்டியதுதானே? நாங்க ஆயுர்வேதத்திலேயே தீத்துடுவோம்னு அவங்களுக்கும் தெரியும், வாஜ்பாய்க்கும் தெரியும். இவங்க ஆயுர்வேதத்துல ஆள தீக்க முடியுமே ஒழிய நோயை தீக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரியும்.

அதனாலதான் விளக்கெண்ணெய் வித்துக்கிட்டிருக்கிறானுங்க. பேஸ்ட் சாதாரண பல் துலக்கிற பேஸ்டுகூட ஆயுர்வேத முறைப்படி செய்ததுன்னு ஃபிலிம்காட்டிக்கினு இருக்கறானுங்க அஞ்சு வருசமா, புரியுதா உங்களுக்கு. அது எங்கள் மரபு இல்லை. எங்கள் மரபு கிராமத்துல சித்தர்களின் மரபு எதையும் கொஞ்சம் புரியறதுக்காக பிற்காலத்துக்கு வரதுக்காக கொஞ்சம் மறைபொருளா எழுதிவச்சுட்டு போயிருக்காங்க. பிள்ளையார் பொம்மையை வச்சுகிட்டு, பெரியவங்கள்லாம் கிராமத்துல பாட்டு பாடிக்கிட்டிருப்பாங்க.

“”வாக்குண்டாம், நல்லமனமுண்டாம், மாமலரால் நல்நோக்குண்டாம் துப்பார் திருமேணி தும்பிக்கையான் பாதம், தப்பாமல் சார்வார் தமக்கு.” இது விநாயகருக்கு பாட்டுன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனால் கிராமத்துல இருக்கிற எல்லாருக்குமே இவ்விசயம் தெரியும். எவன் ஒருவனுக்கு, திக்கு வாய் இருக்கிறதோ, தெளிவாய் பேச முடியவில்லையோ, எவன் மனம் சித்த பிரமை அடைந்திருப்பது போல் இருக்கிறதோ. எவனுடைய கண்பார்வை மங்கலாக இருக்கிறதோ இந்த மூன்றுக்கும் மருந்து சொல்லப்பட்டிருக்கிறது இந்த பாட்டிலே. வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலரால் நோக்குண்டாம் யாருக்குத் தெரியுமா? துப்பார்த் திருமேனி அதுக்கு பேரு இந்த குப்பமேனின்னு சொல்றமே. குப்பமேனி இலைமேல இன்னிக்கே குப்பை எதாவது கொட்டிப்பாருங்க. காலையில எழுத்துபோய் பார்த்தீங்கன குப்பை அதுமேல இருக்காது.

அதனாலதான் அது குப்பைமேனின்னு சொல்றது. அது தன்னைத்தானே சிலிர்த்துக் கொள்கிற தன்மையுடைய ஒரு தாவரம் என்பதாலே அது மேல எந்த குப்பையை போட்டாலும் தள்ளி விட்டுடும். அதனால அதன் பேர் துப்பார்த்திருமேனி. தூய்மையாய் இருக்கிற மேனியை உடையது என்று பெயர். துப்பார்த்திருமேனி. நம்மாளு பேர் வச்சிருக்கறான் குப்பை மேனின்னு. அந்த துப்பார்த் திருமேனி, தும்பை தும்பைப்பூ பார்த்திருப்பீங்க. அந்த தும்பைப் பூவையும், துப்பார்த்திருமேனி இலையையும் அந்த குப்பைமேனி இலையையும் கையாந்தரைன்னு ஒரு வேர் இருக்கிறது. அந்த கையாந்தரை வேரையும் இந்த மூ­ன்றையும் கசாயம் வெச்சி குடிச்சா திக்குவாய்க்காரனுக்கு திக்குவாய் திரும்பி நல்ல பேச்சு வரும். இதுக்கு யாரும் சாட்சி தேவையில்லை. உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கும் பெரியார்தாசனே சாட்சி. பன்னிரண்டு வயது வரை திக்குவாய்க்காரனாக இருந்தவன். பன்னிரண்டு வயது வரை திக்குவாய்க்காரனாக இருந்தவன் இன்று தமிழகத்திலேயே சிறந்த பேச்சாளர்களிலே ஒருவனாகப் பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இந்த துப்பார்த்திருமேனி, தும்பை, கையாந்தகரை சிகிச்சை எடுத்துக் கொண்டதால்தான். இதுதான் எங்கள் மரபே தவிர ஆயுர்வேதம் எங்கள் மரபில்லை. அண்ணாத்த அது இந்து மரபு.

இப்ப வாஸ்து சாஸ்திரம்னு புதுசா சேர்த்திருக்கிறான் இதுக்கப்புறமும் கூட ஐந்து சாஸ்திரம்தான் வந்திருக்கிறது ஒண்ணு மிஸ்சிங். 108 புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் விளக்கவே வேண்டியதில்லை. 108 புராணமும் ஆபாசம். அறிவுக்குப் பொருந்தாதது. பகுத்தறிவுக்குப் பொருந்தாதது. மூ­ட நம்பிக்கை உடையது. இராமாயணம் இதிகாசம்னு உங்களுக்குத் தெரியும். எங்க ஊர்ல சாதாரண கேசு; டெய்லி நடக்குது. இங்க வந்திருக்கிற எல்லா முன்னால உட்கார்ந்திருக்கிற எல்லா மக்களுக்கும் தெரியும். உழைக்கும் மக்களுக்கு நம்ம ஊர்ல அன்னாடம் நடக்கற கேசு. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துகுனு போயிட்டான்.

இதுக்கு என்னா பண்ண முடியும்? போலீசுல போயி கம்ப்ளைண்டு கொடுக்கலாம். இல்ல ஆள் அம்பாரி இருந்தால் சொந்தகாரங்கள திரட்டிகிட்டுப்போயி, முனுசாமி பொண்டாட் டிய கந்தசாமி இஸ்துகினுபோனா கந்தசாமிகிட்ட சின்னசாமி சண்டைபோட்டு இழுத்துகினு திருப்பி கொண்டாந்து வைச்சிருக்கலாம். இதான் நடக்குது. அன்னாடம் போலீசு ஸ்டேசனிலே கேசு புக்காவுது. இதுக்காக முனுசாமிக்கு கோயில்கட்ட முடியுமான்றதுதான் என்னுடைய கேள்வி. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துக்குனு பூட்டாம்பா. அத சின்னசாமி பாத்துகினு வந்து சொல்லிட்டான். முனுசாமி போய் சண்டை போட்டோ, பஞ்சாயத்து பண்ணியோ மீட்டுகிட்டு வந்துட்டான். இதுக்காக முனுசாமிக்கு கோயில் கட்ட முடியுமா?

இப்ப கவனிங்க. இராமன் பொண்டாட்டிய இராவணன் இஸ்துகினு போயிட்டான். அத அனுமாரு பார்த்துட்டு வந்து சொல்லிட்டான். இதுக்காக ஆள தெரட்டிகிட்டு போயி இராமர் மீட்டுகிட்டு வந்தாராம். இதுக்கு போய் கோயில் கட்டுன்றான். நான் இன்னா சொல்றன்னா நான் இராமனுக்கு கோயில் கட்டாதேன்னு சொல்லல. முனுசாமிக்கு எப்ப கோயில் கட்ட போற? ஊருக்கூரு கோயில் கட்டனுன்றன் நானு. இந்த கேசு நிறைய இருக்குது. ஏகப்பட்ட இராமாயணம் ஏகப்பட்ட மகாபாரதக்கதை நடந்துக்கினு இருக்குது. அது இந்திய தத்துவ மரபு இல்லை.

தத்துவம் என்பது தகவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது வாழ்க்கை நெறி என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் முடிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் தெளிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது செயல் ஊக்கம் என்று புரிந்து கொண்டால், இந்து தத்துவ மரபு இந்திய மக்களுக்கு ஏற்ற தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. உழைக்கும் மக்களான நம்முடைய தத்துவ மரபு அல்ல, இந்து தத்துவ மரபு.

மீண்டும் இந்திய தத்துவ மரபை விளக்குவதற்கு முன்னால் இதுவரை சொன்னதை சுருக்கிப் பார்த்துக் கொள்ளலாம். நான்கு வேதங்களும் நம் மரபு இல்லை. ஒப்புக் கொள்கிறவர்கள் கையொலி எழுப்புங்கள். நம்முடைய மரபு இல்லை. நான்கு வேதங்களும் நம்முடைய மரபு இல்லை. (கரவொலி அதிர்கிறது). ஆரண்யகங்கள் நம்முடைய மரபு இல்லை. இல்லையா? உபநிடதங்கள். பிரம்மமும் ஆன்மாவும் வேறா? ஒன்றா? பெரிய புடுங்கற வேலை இது. எங்களுக்கு, போட்டது முளைக்க மாட்டங்குது. காவிரியில தண்ணி வரமாட்டங்குது. உழைச்சதுக்கு கூலி கிடைக்க மாட்டங்குது. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, படிக்க படிப்பில்லை, படிச்சவனுக்கு வேலை கிடைக்கல.

வேலை கெடச்சவனுக்கு கூலி போதல, கூலி வாங்கறவனுக்கு வாங்கற மாதிரி வெலவாசி இல்ல. நொந்து நூடுல்சா ஆகிப் போயிருக்கிறோம். இதில் பிரம்மம், ஆன்மா, வேறுவேறா, ஒண்ணு, ஒண்ணா, இந்த உபநிடதம் நமக்கு தேவையா? இந்த தத்துவ மரபு நம்முடையதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. அப்போ உபநிடதமும் இல்லை. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம் என்று, ஜாதிபிரித்து உழைப்பவனை பார்ப்பனுக்கு மேல் பெரிய ஜாதி இல்லை, சக்கிலியனுக்கு கீழே சின்ன ஜாதி இல்லையென்று நம்மை பிரித்து வைத்து அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறானே மக்களை பிரித்தாண்டு கொண்டு இருக்கிறானே, இந்த மரபு நம்முடைய மரபா அந்த சமுதாய மனு ஸ்ம்ருதியும், நம்முடைய மரபல்ல, அப்புறம் இந்த சாஸ்திரம், வாத்சாயணரின் காம சாஸ்திரம், செருப்பாலடிப்பாங்க வீட்டுல போய் சொன்னா? வாத்சாயணரின் காமசூத்திரப்படிதான் நீயும் நானும் படுத்துக்க போறோம்னா, தொடப்பக்கட்ட பிஞ்சிடும். இததான் பாட்டெழுதி, சினிமாவுல கூடக் காட்னாங்க. “”வாடி … நாட்டுக்கட்ட” உண்மையிலே கிராமத்துல போய் பாடிக் காட்டு. பிஞ்சிடும் துடப்பக்கட்ட. இதெல்லாம் வாத்சாயணர் கம்பெனி பிரைவேட் லிமிடெட். தோழர்களே! தோழியர்களே! இதெல்லாம் நம் மரபு இல்லையென்றால், எது நம்முடைய மரபு?

இவர்களுடைய ஆயுர்வேதமும் நம்முடைய மரபு இல்லையென்றால் பாட்டாளி வர்க்கம், தமிழர்களாய் இருந்தாலும், தெலுங்கர்களாய் இருந்தாலும், மலையாளிகளாய் இருந்தாலும் சரி, குஜராத்திகளாய் இருந்தாலும் சரி, இமாச்சல பிரதேசத்தில் வாழ்பவர்களாய் இருந்தாலும் சரி, உழைக்கும் இந்திய மக்களுடைய சிந்தனையை வளப்படுத்திய, செயலை ஊக்கப்படுத்திய, பயன் அனுபவிப்பைத் திரட்டிய, அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிற மரபு இந்திய தத்துவ மரபு. இதுவரை நான் விளக்கிய இந்து தத்துவ மரபு இல்லை. அப்ப அது சாங்கியம், யோகம், மீமாம்சம், அடுத்தது ஞாயம், வைசேசிகம், வேதாந்தம், அதற்குப் பிறகு, வேதாந்தத்திலே சில விவகாரம் இருக்கிறது. அது அந்த இடத்திலே வரும்போது சொல்கிறேன். வேதாந்தம்ன்றது எல்லாரும் நெனச்சுக்கிட்டிருக்காங்க. காலடியிலே பிறந்த சங்கரர் சொன்னதுதான் வேதாந்தம்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க.

அவரு சும்மா டுபாகூரு வேதாந்தி, அதை விளக்கி சொல்ல எனக்கு நேரம் இல்லை. நேரம் இருக்கற வரையில் அதை சுருக்கமாகச் சொல்கிறேன். உண்மையாக வேதாந்திகள் வேறு யாரோ இருந்திருக்கிறார்கள். அவரு நம்ம சினிமா டைரக்டர் ஐயா வந்திருக்கிறாரு. தங்கர்பச்சான், அவரு சினிமாவுல ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது டைரக்ட் பண்றன்னு புது டைரக்டர் புரடியூசர்கிட்ட போய் கதை சொன்னா இவர அனுப்பிடுவாங்க கதை நல்லா இல்லன்னு. இரண்டு வருசம் பொறுத்து வேறு எவன் பேர்லியோ அந்த கதை வந்திடும். சினிமாவே எடுத்துடுவானுங்க திருட்டு பசங்க. இந்த வேலைய செய்தவருக்குப் பேருதான் சங்கரரு. இந்த டுபா­க்கூர் வேலை செய்தவர்ல பர்ஸ்ட் மேன் சங்கரரு. அவர் எங்கியோ இருந்த தத்துவத்தை கிட்நாப் பண்ணிட்டு போயிட்டாரு அதை நான் விளக்கி அந்த இடத்தில் சொல்லுகிறேன்.

அடுத்தது பார்த்தீங்கன்னா இன்னொன்று கேள்விப்பட்டிருக்கலாம். உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், சித்தாந்தம், வேதாந்தம் என்று ஒரு செட்டிருக்குது. அதை சடாந்தம் என்று சொல் வார்கள். இந்த சடாந்தத்தை ஒன்றிணைத்து அந்த வேறுபாட்டை நீக்கி, சுத்த சன்மார்க்க சங்கம் வைத்த வள்ளலார் சடாந்த சமரச சங்கம் தான் வைத்தார். இந்த சடாந்தம் என்று சொல்லப்படுகிற நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், வேதாந்தம் என்கிற தத்துவ நெறிகள் நம்முடைய இந்திய மரபை சார்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் அங்கு போவோம்.

திருமூலர் சுத்தமான தமிழர். அவருக்கும் பார்ப்பானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறதுக்காக அவரு மூவாயிரம் ஆண்டு வாழ்ந்தாருன்னு ஒரு புருடா உட்டானுங்க. எந்த மனிதனாவது மூ­வாயிரம் ஆண்டு காலம் வாழ முடியுமா? இனிமேல் வாழலாம். ஒருவேளை மனிதன் வாழுகிற விஞ்ஞானம் அவனுக்கு கை கொடுக்கலாம். மூவாயிரம் ஆண்டு வாழலாம். ஆனால் நேற்று வரை வாழ்ந்தவர்களுக்கு, இன்று வரை வாழ்பவர்களுக்கு மூ­வாயிரம் ஆண்டு வாழ்வதென்பது முயன்றால் கூட முடியாத காரியம். இந்த வேலை இல்லாத வேலைய ஒருவருசத்துக்கு ஒரு பாட்டுன்னு ­மூவாயிரம் வருசத்தில மூ­வாயிரம் பாட்டு எழுதினாராம் திருமூ­லர். இது அவரை அவமானப்படுத்துற மாதிரி இல்லையா? அவ்ளோ பெரிய கவிஞர். ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதுவார்னா மீதி நாளெல்லாம் என்னா பண்ணுவார். இது திருமூ­லரையே கேவலப்படுத்துற மாதிரி இல்ல? நாலுவரி பாட்டு எழுதறதுக்கு நம்மாளுங்க சினிமா பாட்டுல கொளுத்தறாங்க அவனவன் உக்கார்ந்து, டேப்பு வந்து சேர்ந்து உடனே பாட்டு எழுதி அனுப்பிட்டு அடுத்த டேப்பை அனுப்பச் சொல்றாங்க. ஸ்பீடு பிரேக்கரே இல்லாம போயிட்டிருக்கிறான் நம்மாளு, பாட்டெழுதுறவன். கம்பரு அவ்ளோபன்னெண்டாயிரம் பாட்டெழுதினார்னா இன்னா அர்த்தம். வேற வேல இல்லன்னு அர்த்தம். அவர் பாட்டுக்கு எழுதிகிட்டே இருந்திருக்கிறாரு. எல்லாம் ஸ்பீடா இருக்கிறாங்க. மாமனாருக்கு கடிதாசி எழுத சொன்னாலே கவிதை கவிதையா எழுதுறாங்க. இந்த நாட்ல போயி ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதினாரு திருமூ­லர். இது பொய்யில்லையா? ஆக உண்மையை மறைப்பதற்கு, திரு­மூலரை நாம யாரும் படிச்சிடக் கூடாதுன்னு பண்ணியிருக்கிறான்.

திருமூ­லர் ஒரு பாட்ல சொல்லியிருக்கிறாரு “”உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், வள்ளல் பிராணார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே” என்றிருக்கிறாரு. இது கொஞ்சம் கடுமையான நடையில் இருந்தாலும் எளிதாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தால் புரிந்து கொள்ள முடியும். உள்ளம் பெருங்கோயில் என்றால் மனத்தைப்பற்றி சொல்வதற்கு ஒரு செக்சன் என்று அர்த்தம். மனத்தை பற்றிய தத்துவத்தைச் சொல்லுவது சாங்கியம். ஊனுடம்பே ஆலயமாம், உடலை வளப்படுத்திக் கொள்கிற தத்துவம். அதற்குப் பெயர் யோகம். சாங்கியம், யோகம் என்று இரண்டாயிற்று. மூ­ன்றாவது செயல்பாடுகளை சொல்வது “”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயமாம், தர்க்கம், நியாயம், வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், வாய் என்பது தர்க்கத்துக்கு குறியீடு, தர்க்க ரீதியாக பேசுவது, நியாயம் என்கிற அந்த தத்துவ மரபைச் சேர்ந்தது அது. வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், அதுதான் வேதாந்தம் என்பது தெள்ளத் தெளிவது, கடைசியாய் சொல்வது, கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே, கள்ளப்புலனைந்தையும், புலன்களை அடக்கி நம் வசப்படுத்திக் கொள்வது.

அந்த புலன்களை நம்வசப்படுத்தி நடத்தினால் ஒளிமிக்க வாழ்வு பெற முடியும் என்று சொல்வது இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறாரு. இந்த சாங்கியம், யோகம், மீமாம்சம் என்பது அவர் காலத்தில் இல்லை என்று நினைக்கிறேன். மீமாம்சம் என்பது செயல்களைப் பற்றிய தத்துவம். இப்போது கவனியுங்கள். இந்திய தத்துவ மரபு இந்த ஆளைச் சேர்ந்தது. இது இந்து தத்துவ மரபு இல்லை. அவர்கள் இதை ஏற்பதும் இல்லை. சாங்கியத்தை எழுதியவர் கபிலர். கபிலர் என்பவர் “”பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” அழிந்து போன நம்முடைய பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த பெரிய ஞானிக்குப் பெயர் கபிலர். தொல்காப்பியருக்கு முன்னாலேயே வாழ்ந்த பல அறிஞர்கள் இருந்ததால்தான், தொல்காப்பியம் அவராலே எழுத முடிந்தது. அந்த இலக்கணத்தை அவராலே தர முடிந்தது. அப்போ தொல்காப்பியத்துக்கு முன்னால் இங்கே நூற்றுக்கணக்கிலே, ஆயிரக்கணக்கிலே இங்கே எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும். அறிஞர் பெருமக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

அவர்கள் பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதே அந்தப் பகுதியில் அமிழ்ந்து போன அந்த தமிழகத்துக்குரிய அந்த ஞானிதான் கபிலர். கவனியுங்கள், இதில் ஒரு பெரிய வேடிக்கை நடந்தது. சாங்கியம் என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். எண்ணம் என்ற பொருள் அதற்கு. எண்ணம் என்பது எண்ணுதல் என்பது நினைத்தல் என்று பொருள் அதற்கு. மனம் சார்ந்த விசயம் அது. இதை வடமொழியில் மொழிபெயர்த்தவன் பார்த்து எழுதியவன், தவறா எழுதிக்கிட்டு போய் எண்ணுதல் என்பதை அவன் எப்படி டிரான்ஸ்லேட் பண்ணான்னா, எண்ணுதல் 1,2,3,4,… ன்னு டிரான்ஸ்லேசன் பண்ணிவிட்டான். சாங்கியன்னா, கவனியுங்கள், கொஞ்சம் கடினமான விசயம், சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் அதை எண்ணுகிறேன். இதை எண்ணுகிறேன், தோழர் மருதையன் ஒன்றை எண்ணுகிறார். நான் ஒன்றை எண்ணுகிறேன். அய்யா ஒன்றை எண்ணுகிறார், நீங்கள் ஒன்றை எண்ணுகிறீர்கள், நினைக்கிறோம் என்று ஒன்று இருக்கிறதே, அதுவும் எண்ணுதல் என்று தமிழில் இருக்கிறது. எண்ணம் 1,2,3,4,…ன்னு எண்றது எண்ணுதல், அது இந்த எண்ணுதல் என்கிற நினைத்தலை எண்ணுதல் இணிதணtடிணஞ்ன்னு மொழி பெயர்த்துக்கிட்டு போயி, சாங்க்யான்னு பேர் வச்சு கபிலான்னு எழுதிக்கிட்டான். இவரு பேரு கபிலா, “”க” இந்த பெரிய “”பி” சான்ஸ்கிரிட் ல அவன் “”பி” போட்டு கபிலான்னு எழுதியிருக்கிறான். ஏன்னா நம்ம ஆளுன்னு தெரியக்கூடாதுன்றதுக்கு. மயிலாடுதுறையை மாயவரம்ன்னு மாத்தினவனுக்கு இது சுலபம்தானே இந்த திருட்டு பசங்களுக்கு இந்த மயிலாடுதுறையிலேயே, மயில் ஆடுதுறைன்னு அழகா இருக்குது பெயரிலே இதைப் போயி மாயவரம்னு மாத்திட்டாங்க.

மாயவரம்னா என்னடான்னு கேட்டா, மயூரம்ன்னா மயில். அந்த மயிருக்கு மயில்ன்னே சொல்லிட்டுப் போறது. மயிலுன்னே சொல்லிட்டு போலாம்ல, இதப் போயி மயூரம்னு டிரான்ஸ்லேட் பண்ணுவாராம். எண்ணத்தை டிரான்ஸ்லேட் பண்ணி எண்ணுதல் என்றாச்சு, எண்ணுதலை இணிதணtடிணஞ்னு போட்டு சாங்க்யான்னு கடைசியில் இப்ப என்னான்றாங்க சாங்க்ய தத்துவம் என்பது இப்பொழுது மறைந்து போய்ட்டதுன்றான். அடப்பாவி! இப்போது மீண்டும் யாரும் தவறாக நினைக்கக்கூடாது, நம்மவர்க்கு இல்லை என்னுடைய சவால், உழைக்கும் வர்க்கத்துக்கு நான் சவால் கொடுக்கல. இந்து தத்துவ மரபு தேவை என்று சொல்கிற எவன் வந்தாலும், என்னுடைய சவால் சாங்கியம் உங்களுடைய இந்து தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லை, அந்த சாங்கியம் முழுவதும் எங்கள் தத்துவ மரபு.

எங்க சகோதரன் தங்கர் பச்சான் இன்று ஒன்பது ரூபாய் நோட்டு என்று சிந்தித்தானே. அந்த கதை எழுதும்போதே பத்து ரூபாய் நோட்டு இருக்கு, அம்பது ரூபாய் நோட்டு இருக்குது, அதுல பாதி கள்ள நோட்டு இருக்குது, அதுவேற விசயம். ஆனால் ஒன்பது ரூபாய் நோட்டுன்னு சிந்திச்சாரு பாருங்க, இந்த சிந்தனை இப்படி மாறுபாடாய் ஒரு விசயத்தை அழுத்தமாய் ஆரவாரமில்லாமல் அதிரடியாய் இல்லாமல் மிகைப்படுத்தாமல், அதே நேரத்தில் புதுமையாய், நவீனமாய், எவனால் எது சொல்ல முடிந்தாலும், அது சாங்கிய தத்துவ அடிப்படையில் சொல்லப்படுவது என்று பொருள். அது படிக்காமலேயே நம் தமிழர்களுக்கு பழக்கமான ஒரு கலை. இது நம்முடைய தத்துவ மரபு. நீ அதை படிக்காமலே சிலசமயம் நாம் யோசிப்போம்.

வீட்டுல கிராமத்துல எல்லாம் பேசுவாங்க, “”நான் நினைச்சன்டா, நீ வந்துட்ட”ன்னுவாங்க என்ன அர்த்தம். சில சமயம் நினைக்காமலேயே நினைச்சன்னு புருடா உடுவாங்க. அது வேற விசயம். “”நான் நினைச்சன்டா நீ வந்துட்ட”ன்னு அதான் சாங்கியம். எண்ணத்தில் அதை வைத்திருக்கிறான் என்று அர்த்தம். கனவுல கூட வந்துருக்குதுப்பா அந்த விசயம் என்பான். பல சமயம் தோணுதுப்பான்னுவான். என்னா அர்த்தம், அதைப் பற்றி இவன் சிந்தித்திருக்கிறான். அது அவனுக்கு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு நமக்குரியது. சாங்கியம் நமக்குரியது. ஆனால் சிந்திக்காமலே சொல்லுவதை ஏற்றுக் கொள் என்று அடம்பிடிக்கும் இந்து மரபு. அது, இந்திய மரபு அல்ல, அல்ல, அல்லவே அல்ல என்பது தான் என்னுடைய கருதுகோள்.

அது இந்து மரபில் நீ சிந்திக்கவே கூடாது. இல்லன்னா, பி.ஏ. பிலாசபி படிச்சிருக்கிற ஒரு ஆளு, தத்துவம் படிச்சிக்கிட்டிருக்கிற ஒரு ஆளு நேரா ஒரு சாமியார்கிட்ட போனானாம். அந்த சாமியார் முன்னால போயி கடவுள நீ பார்த்திருக்கியா? காட்டுன்னானாம். அந்தாளு ஒரு அறை விட்டானாம். இவனுக்கு உடனே வலிச்சுதாம். வலிச்ச உடனே புரிஞ்சிக்கிட்டாராம். ஓ இந்த வலிதான் கடவுள் என்று புரிந்து கொண்டாராம். அடுத்த கட்டம். இந்த சீன் நடந்தா இன்னா செய்வாங்க. எடுத்துகிட்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பாங்க. வலிகடவுளா? அப்போ நல்லா கேட்க மாட்டேன் வாயில கோபம் வந்தா? என்னங்கடா இது வலி கடவுளு, நோவு கடவுளு, நமைச்சலு கடவுளு, அரிப்பு கடவுளு இந்தக் கடவுளை உணர்த்தியவர் இராமகிருஷ்ண பரம அம்சராம். உணர்ந்தவர் விவேகானந்தராம். ரெண்டு பேரையும் ஒரே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ­மூணாம் நம்பர் பெட்டுல நாலாம் நம்பர் வார்டுல கட்டிப் போட வேண்டாம். இது என்னா மரபு இது? இதெல்லாமா கடவுளை உணர்த்தும். நம்மாளு கடவுள சிந்தித்து போடுபோடுன்னு போடறான் பாருங்க, அது சாங்கியம்.

மாணிக்கவாசகர் சொல்றாரு. தயவு செய்து கவனியுங்க. மாணிக்கவாசகர் கடவுள் எப்படி இருப்பாருன்னு யோசிக்கிறாரு. அவரு பார்த்த கடவுளை ஏத்துக்கல. நடராஜப் பெருமான் டேன்ஸ் ஆடறாரே அவருதான் கடவுள்னு ஒத்துக்கல. பக்கத்துல சக்தி பராசக்தி உமாதேவி இப்படி இப்படி பெரிய முலை வைச்சிகினு நின்னுகிற மாதிரி சிலை இருக்குதே அதப் பார்த்து கடவுளுன்னு ஒத்துக்கல, பக்கத்துல முருகர் வள்ளி தெய்வானையோட டபுள்ஸ் வைச்சிகினு கீறாரே அதப்பார்த்து கடவுள்னு ஒத்துக்கல. அவராகச் சிந்திக்கிறார். மாணிக்கவாசகர் அவராகச் சிந்திக்கிறார். அது சாங்கியம். சிந்தித்து, தான் சிந்தித்ததை வெளியே சொல்லுகிறார்.

“”வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி அதுவரை” வந்துட்டு ஒரு பிரேக் போடறார். வானாகி இருப்பானோ கடவுள், வளியாகி காற்றாகி இருப்பானோ கடவுள்? ஒளியாகி இருப்பானோ? அப்புறம் தான் சந்தேகம் வருது அவருக்கு. அப்படியெல்லாம் இல்ல உண்மையுமாய் இருப்பவனாய் கடவுள் இருப்பானோ? இன்மையுமாய் இல்லாதவனாயும் கடவுள் இருப்பானோ? அதாவது வாரியாருக்கும் இருப்பானோ பெரியாருக்கும் இருப்பானோ என்று அர்த்தம். வாரியாரு இருக்குதுன்னாரு. இவரு இல்லன்னாரு, பெரியாரு. மாணிக்கவாசகர் ரெண்டு பேருக்கும் அல்வா குடுத்தாரு. உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, குடியாகி, யான் எனது என்பவரை கூத்தாட்டு வானாகி, நின்றாயை… இது வரை எல்லாரும் பாடிக்கினு கடைசிவரி வரும்போது என் சொல்லி வாழ்த்துவனே! என் சொல்லி வாழ்த்துவனேன்னு டுபாக்கூர் வேலை பார்க்கிறான்.

இந்த இடத்தில நிறுத்தி கவனிச்சி பார்த்தா இந்திய தத்துவ மரபு எது என்று புரியும். வானோ, மண்ணோ, வையகமோ, வளியோ, ஒளியோ, உண்மையோ, பொய்யோ, கோனோ, குடியோ, எல்லாம் சொல்லிட்டு உண்மையோ இன்மையோ எதுவும் தெரியலடாப்பான்னான். ஆளவுடுன்னு அர்த்தம் இந்தப் பாட்டுக்கு. இல்ல மாணிக்கவாசகருக்கே புரியல. இந்த குச்சி வச்சிருக்கறவன் சங்கரச்சாரிக்கு புரிஞ்சிரிச்சின்னா எப்படிடா நம்பறது. மாணிக்கவாசகரே கைதூக்கிட்டாரு.

வானும், வளியும், ஒளியும், ஊணும், உயிரும், அதுவும், இதுவும் ஏமி தெல்லேதுறா பகவானேன்னு கை தூக்கிட்டான். அதனால்தான் உண்மையுமாய், இன்மையுமாய் கோனாகி, குடியாகி, யான் எனதென்பவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே என்னடாப்பா செய்றதுன்னா, முடிஞ்சு போச்சா கதை. இந்த சிந்தனைதான், சிந்தனை முறைதான் சாங்கியம் தோழர்களே. இது மாணிக்கவாசகன் ஏற்றுக் கொண்ட இந்திய தத்துவ மரபு. இது இந்து மரபு அல்ல, அல்லவே அல்ல. இதற்கு அப்பறம், சில நூற்றாண்டு கழித்து வறான் இன்னொரு பாட்டு. கொஞ்ச கவனிங்க எல்லாரும். கொஞ்சம் கடினமான விசயம், இத எப்படி என்னால சொல்ல முடியும்னு நீங்க நம்புனீங்களோ தெரியல, பொதுக்கூட்டத்துல இத எப்படி சொல்ல முடியும் இவ்வளவு கூட்டத்தில. இது வகுப்பறையில் அங்கங்க போர்டு வச்சுகிட்டு விளக்கக்கூடிய விசயம். ஆனால் நண்பர்கள் எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்றேன்னு நினைக்கிறேன்.

முயற்சி பண்றேன். மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது ஆறாம் நூற்றாண்டில் மறைந்து போகிறார் இறந்து போகிறார். பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து 14 ஆம் நூற்றாண்டில் ஒருத்தர் வரார். கவனியுங்கள், அவர் வந்து பட்டிமன்றம் நடத்த வரார். மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்க வரார். அலோ! மிஸ்டர் மாணிக்கவாசகம் தீடச்t தூணித டச்திஞு ண்ச்டிஞீ? கடவுள் எப்படியிருக்கிறார்னு சொன்ன? வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி இருக்கிறார்னா சொன்னா. பிளடி நான்ஸன்ஸ், யார்யா உனக்கு சொன்னது. மாணிக்கவாசகர் மறைந்து சில நூற்றாண்டுகள் கழித்து வந்து பட்டிமன்றம் நடக்குது.

மாணிக்கவாசகர் அங்கேயிருந்து சொல்றாரு. நான் தான் சொன்னேன் அடியேன் தான் சொன்னேன்றாரு. ஹாய் பிளடி நான்ஸென்ஸ், இடியட், சட் அப் யுவர் மவுத், நீ சொன்னது தப்பு, நான் சொல்றேன் கேளு. நான் சொல்றதும் நான் சொல்லல. எங்கப்பன் முருகன் சொன்னது. அதுவும் முருகன்னா யாரு “”தேனென்றும், பாலென்றும் உவமிக் கொணா” தேனென்றும் உவமிக்க முடியாதாம். பாலென்றும் உவமிக்க முடியாதாம். அவ்வளவு டேஸ்ட்புல்லா இருக்கற தேனென்றும், பாலென்றும் உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி. அந்த தெய்வ மொழி வள்ளி இருக்காளோ இல்லியோ, அவளுடைய டைலாக் வருதோல்லையோ அந்த டயலாக் எப்படி டேஸ்டா இருக்கும் தெரியுமோ, அந்த மணி மொழியாளுடைய குரலிருக்கிறதே அது தேனென்று பாலென்று உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி, அந்த வள்ளியோட கோன் ஹஸ்பண்ட் வள்ளிக் கோன், மிஸ்டர் முருகன்தான் சொன்னாரு, எனக்கு அன்று உபதேசித்தது ஒன்றுண்டு. தேனென்று, பாலென்று உவமிக்கொணாத தெய்வ மொழி வள்ளிக்கோனன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறிடிலோ.

இப்பதான் மாணிக்கவாசகருக்கு ஆப்பு, நீ எப்படி சிந்தித்த. சாங்கிய முறைப்படி நீ சிந்தித்த. அதே சாங்கிய முறைப்படி சிந்தனை முறைப்படி கட்டில்லாத சிந்தனை முறைப்படி, கட்டுப்பாடில்லாத சிந்தனை முறைப்படி நான் சிந்தித்தேன். எனக்கு முருகப் பெருமான் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு அவர் உபதேசித்தது என்ன தெரியுமா மிஸ்டர் மாணிக்க வாசகா, எனக்கு சொன்னது என்னா தெரியுமான்னு அருணகிரி நாதர் சொல்றாரு கவனியுங்கள். வானன்று, அவர் வானாகின்னாரா அந்தப்பக்கம் நின்னு, இவரு வானன்று, நீரன்று, நிலனன்று, வளியன்று, ஒளியுமன்று, ஊணன்று, உயிரன்று, நீயன்று, நானன்று, நம்பொணாதே. கந்தரனுபூதி பத்தொன்பதாவது பாடல். கந்தரனுபூதியில எழுதியிருக்கிறாரு. இப்போ கூப்பிடு கும்மி கம்பெனிய, இதுல எத நீ ஏத்துக்கப் போறீங்க? இப்படி கட்டற்று சிந்திப்பது, ஹரியானாவுல, மாட்டுத்தோல, பசுமாட்டுத்தோல, உரிச்சிட்டானாம் யாரோ ஒருத்தன். இந்த தொக்காடியா, புக்காடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு அப்படியே நட்டுக்கிச்சாம்.

மாட்டுத் தோல உரிச்சா, மாடு கோமாதான்னா, கோமாதாவே கடவுள்ன்னா, அந்த மசுரு புடுங்கி மாடுல்ல அவன முட்டியிருக்கனும். நீயென்னடா டப்பா டக்கரு. அதான் செத்துபோச்சில்ல. நீ மூடிக்கிட்டு போக வேண்டியதுதான. இப்போகூட மசூதி கட்டினானாம் பாபர், இடிக்கறதுக்குனு போனானுங்க வேல மெனக்கெட்டு. நான் கேட்கிறேன் பாபர் கோயில இடிச்சபோது ராமர் லீவுலயா போயிருந்தார். அவரு பாபரு கைய எட்டி புடிச்சிருக்க வேண்டியதுதானே. அவருக்கே தெரிஞ்சிருக்குது. பாய்கிட்ட வச்சுக்கக்கூடாதுன்னு. இராவணுடைய பத்து தலையில ஒத்த தலைய கூட விடாம சிக்கு சிக்குனு திண்ண புடுங்கி பாபர் கிட்ட சும்மாதான இருந்தாரு. அத்வானி ஏன் அப்படி அரை மரத்து வேப்பிலையை ஒண்ணா கட்டிகிட்டு ஆடறாரு அப்படின்னு நான் கோவம் வந்த கேட்பனா இல்லையா? இப்ப கோவம் வரல. இப்ப இவரு கேக்கறாரு. வானாகி, மண்ணாகி, வளியாகின்னு சொல்றியே அதே சிந்தனை முறைப்படி கட்டற்று சிந்தித்துதான் நான் கேக்கறேன். வானன்று, மண்ணன்று, நிலமும், நீரன்று, ஒளியன்று வளியன்று, ஊணன்று, உயிரன்று எதுவுமில்ல போடான்னா. இப்போ பாய்ங்க காலை மாலை ஐந்து வேளை தொழுகை நடத்தும் போது லாயிலா…உல்லா…ன்றாங்க இதுக்கு என்ன அர்த்தம், இல்லப்பா, இல்லப்பா அல்லாவ தவிர வேற கடவுள் இல்லப்பா அத சொன்னவர் முஸ்தபா ரஸூலல்லா, முகமது சல்லப்பா அத நீ நம்புப்பா, அவ்வளவுதான் அது. அவரு எல்லையற்ற அன்பாளர் எல்லையற்ற அறிவாளர், எல்லாவற்றையும் படைத்து காத்து இரட்சிக்கிறவர், இது பாய் சொல்றது. கவனியுங்கள் தோழர்களே, இந்து தத்துவ மரபு இதை ஏற்கிறதா? மறுக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

இந்து தத்துவ மரபு இதை ஏற்காது. ஏன்னா வேதத்தில் வருணன், இந்திரன், வெங்காயத்தான், வெள்ளப்பூண்டான் எல்லார்கிட்டயும் போய் மாப்பிள என்ன அடிக்கிறாங்கப்பா, பயமா இருக்குதுப்பா, சப்போர்ட்டுக்கு கொஞ்சம் வறியா? அதுதான் வேதம். எல்லா சாமியும் கூப்பிடறது. அதுக்கு, ஊனும், மதுவும், எல்லாத்தையும் கொட்டி யாகம் வளர்க்கிறது உயிர்பலி கொடுக்கறது. இது இந்து தத்துவ மரபே தவிர, இந்திய தத்துவ மரபு அல்ல. இந்திய தத்துவ மரபுல இப்போ நாம என்ன சொல்லிக்கிட்டு இருக்கறோம்னா, ஆழ்வார் பாசுரத்தில குலசேகர ஆழ்வார் சொல்றாரு, அவர் சொன்னது, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கவனியுங்கள்,

ஏழாம் நூற்றாண்டுல குலசேகர ஆழ்வாருக்கு அந்த குரான் புத்தகம் மொழி பெயர்ப்பா தந்தனுப்பி இருந்தார்கள். அத அவர் படிச்சிட்டா சொல்லியிருப்பாரு. அவரு என்னமோ படிச்சு பார்த்து சிந்திச்சு பாடறாரு கடவுள் எப்படி இருப்பான்னு கேக்கறாரு. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்லிக்கிறாரு, நல்லா கவனியுங்க, நாராயணன் ஆமைமேல உட்கார்ந்திருக்கிறான் உலகத்தையே தாங்கிக்கிட்டிருக்கிறான் ஆமைமேல உலகம் உட்கார்ந்திருக்கிறது. சங்கொடு, சக்கரம் அதெல்லாம் சொல்லல. நல்லா கவனியுங்க. குலசேகர ஆழ்வாருக்கு எப்படி தோணுது, மன்னிக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு எப்படி தோணுது, “”உயர்வர உயர் நலன் உடையவன் எவன் அவன்” எவன் என்றே பதில் சொல்லவில்லை, உயர் வர உயர் நலம் உடையவன் எவன் அவன், கேள்வி மட்டும் கேட்டாச்சு. இதற்கு இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம். எல்லாரும் கவனிச்சிங்கனா புரியும், உயர்வர உயர்நலம், தனக்கு இணை இல்லாதவனாய், தன்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லாதவனாய் இருக்கிற நலமுடையவன் எவன்னு கேள்வி கேட்டாச்சு பதில் வரல. உயர்வர உயர்நலன் உடையவன் எவன் அவன், மயர்வரமதி நலம் எல்லையற்ற, மயக்கமற்ற, மதிநலம் அறிவுநலம் உடையவன் எவன் அவன், எவன் என்றே சொல்லவில்லை. மூ­ணாவது வரி “”அயர்வரு அமரர்கள் சதிபதி எவனவன்” எவன் சொல்லவே இல்லை.

கடைசியா முடிக்கும் போது துயர் கெட என்னுடைய துயரம் கெட்டுப் போக என்னுடைய துயரம் கெட்டு நல்லவனாய் இருக்க, மகிழ்ச்சியா இருக்க என்ன செய்யலாம்னா, அவனடி தொழுதெழு மனமே, மனமே அவனடியை தொழு எவனடியை? எவனடி என்றே சொல்லாத உயர்வர உயர்நலம், தனக்கு இணையில்லாதவனாய் அகில உலகத்துக்கும் தனக்கு இணை இல்லாதவனாய் இருக்கிறவன்னு அவன் சொல்றான் பாருங்க, லாயில்லாவு இல்லில்லாவு அதுக்கு டிரான்ஸ்லேசன் மாதிரி இல்ல இது. உயர்வர உயர்நிலம், உடையவன் எவனெவன் அந்த பக்கம் பார்த்தா லாயில்லாவு இல்லல்லாவு அவருக்கு இணையே கிடையாது. அதுவே தான் இது. இப்போ இந்த ரண்டு கம்பனியையும் முட்ட வைக்க பார்க்கிற பார்ப்பான கூப்ட்டு இங்கேயே முட்டணுமா? வேணாமா? அவன் சொல்றததான் எங்க ஆழ்வார் சொல்லியிருக்கிறாரு. லாயிலா உல்லாவு, முஸ்தபா ரஸூலல்லாவு, முகம்மது சல்லல்லா, எங்காளு உயர்நலம், உயர்வர உடையவன் எவனவன். மயர் வர மதிநலம் அருளினவன் எவன் அவன், அயர்வரு அமரர்கள் அதிபதி எவனவன், கடைசி வரையிலும் எவன்னே சொல்லல. அவன் யார்னு நீயே கண்டு பிடித்து சிந்திச்சு நீயே தொழுன்னு பொருள். இப்போ சாங்கிய சிந்தனை முறை இந்திய தத்துவ மரபு இதற்கு சில உதாரணங்கள் சொன்னேன். அடுத்தது யோகம்.

நம்முடைய சித்தர்கள் எல்லோரும் யோகிகள். ஊணை சுருக்கி, உள்ளொளி பெருக்கி யோக முறையை கற்றவர்கள். இப்ப கூட நம்ம கிராமத்துல காலைல 4.30 மணிக்கு எழுந்திருக்கணும்னு யாரும் அலாரம் வைப்பது கிடையாது. நம்ம டவுனுக்கு வந்துட்டவங்க தான் அலாரம் வச்சுட்டு 4.30 மணிக்கு எழுந்து ரயிலுக்கு போலான்னு நினைச்சுட்டு 4.30 மணிக்கு அலாரம் அடிச்ச உடனே டயர்டா ஆகிப்போயி எழுந்து அது தல மேல ஒரு தட்டு தட்டி திரும்பவும் படுத்துகிட்டு தூங்கி விடுகிறோம். ஆனால், அருமை சகோதரர் தங்கர் பச்சான் ஒத்துக்குவார், கிராமத்து கதையெல்லாம், அருமையா எடுக்கறவர். அவர் கிராம வாழ்க்கை வாழுகிறவர். அங்கே 4.30 மணிக்கு எழுந்திருக்கணும் கண்ணே! போய் மடை மாத்தணும்டா, தண்ணி கட்டணும்டா. அலாரமில்ல, டைம்பீஸ் இல்ல, ஒரு மசுருமில்ல.

அவனவன் தானா எழுந்து போவான். பயலாஜிகல் இடூணிஞிடு உடம்புல இருக்கற ஒரே இனம் தமிழினம். உழைக்கும் இனம். நம்ம கிராமத்துலதான் இதை பார்க்கலாம். இதே ஆளு டவுனுக்கு வந்து கெட்டுப் போயிடறான். அது வேற விசயம். ஆனா கிராமத்துல நான்கு மணிக்கு எழுந்துக்கணுண்டா கண்ணுன்னு சொல்லிட்டா சரியா எழுந்துக்குவான். எப்படி அவனுக்கு டைம் தெரியும். அதுதான் யோகம். மனமும், உடலும், ஒன்றி செயல்படுவதற்கு பெயர் யோகம். அது இந்திய தத்துவ மரபு. சரிதானா? மீமாம்சம் செயல்திறன் இதுக்கு விளக்கமே சொல்லத் தேவையில்லை. கூடியிருக்கும் எல்லோரும் உழைக்கும் மக்கள், ஒரு நெல்லை நூறு நெல்லாய் மாற்றுகின்ற மீமாம்ச தத்துவ வாதிகள் இவர்கள். செயல்முறை வித்தகர்கள். செயல் சோம்பேறிகள் இங்க யாருமில்லை.

பார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். ஏன்? அண்ணா, “”அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா, பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!” “”அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்” பெரியார். அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு. யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார். பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது, பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன். இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு அதுக்கு பெரியார் சொன்னாராம்.

பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. இன்னைக்கு வரைக்கும் பார்ப்பான்தான் மீமாம்சகனாக இல்லையே தவிர செயலூக்கம் உள்ளவனாக இல்லையே தவிர, யோசியுங்கள். எந்தப் பாப்பானாவது கதை எழுதுற சிவசங்கரியோ, கதை எழுதுற நம்ம சுஜாதாவோ உழைப்பாளிகள் என்று இந்த உலகம் ஒப்புக் கொள்ளுமா? இந்துமதி உழைப்பாளியா? எங்கள் பிரபஞ்சனோ, எங்கள் தங்கர்பச்சானோ, எங்கள் திலகவதியோ ஒரு செய்தியை எழுதணும்னா உழைச்சு களைச்சு அந்த செய்தியை தெரிஞ்சுக்கிட்டு எழுதறாங்களே. இந்த உழைப்பாளிக்கு முன்னால் எங்கியோ உட்கார்ந்துகிட்டு டுபாக்கூர் கதை எழுதற எழுத்தாளர்கள் எப்படி இணை ஆவார்கள். எங்கள் சிந்தனை முறை மீமாம்ச சிந்தனை முறை சாங்கிய சிந்தனை முறை யோக சிந்தனை முறை, அதெல்லாம்தான் எங்கள் மரபு. மீமாம்சம்.

இன்னும் அதற்கடுத்தது முக்கியமானது தர்க்கத்திலே தர்க்கம்னு சொல்லுவாங்களே, ஏரணம் என்று மாணிக்க வாசகர் சொல்லுவாரே இந்த விவாதத்திலே மெய்ப்பொருள் காணுவதற்கு விவாதிக்கிற முறை இருக்கிறதே. அதுல டாப்பு டக்கரு நாமதான். இந்து மதத்துல எதையுமே விவாதிக்க முடியாது. எதைச் சொன்னாலும் அதை நீ நம்பு. இதை நம்பு. ஏண்டா நம்புறதுன்னு கேட்டா நம்புன்னு சொல்றன் இல்ல. அதுக்காக நம்பு. எப்படிப்பா நம்பறது?

எங்கிட்ட ஒரு கிறிஸ்தவர் வந்தாரு. ஏசுவை நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்ன்னாரு. சரி நான் இரட்சிக்கப்படுவது எனக்கும் ஆசைதான். ஏசுவை விசுவாசிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏன் நான் அவரை விசுவாசிக்க வேணுன்னு கேட்டா அதான் பைபிள்ல இருக்குதேன்னாரு. சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏனய்யா நம்பணும்னா, அதான் ஏசுவே சொல்லியிருக்காரே என்றார். ஏசு சொன்னாருன்னு எப்படி தெரியும்னு கேட்டா, அதான் பைபிள்லே இருக்குதே, சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏன்யா நம்புறதுன்னா, ஏசுவே சொல்லிட்டாரே. ஏசு சொல்லிட்டாருன்னு எப்படிடா நம்புறதுன்னா அதான் பைபிள்ல இருக்குதே. அண்ணாந்த நம்ம கதையே முடியாது போய்வான்னிட்டேன். அவரு இன்னொரு நாள் வந்து ரொம்ப கோவிச்சிகிட்டாரு என்கிட்ட. பிரிய சகோதரரே நீங்க நல்லா பேசறீங்க. ஆனால், ஏசுவை நீங்கள் விசுவாசித்தால் நல்லா இருக்கும்னாரு. எதுக்குங்க’ன்னு கேட்டேன். நீங்கள் ஏசுவை விசுவாசிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இன்னாயா காரணம் என்று கேட்டதற்கு, நீங்கள் புஷ்பத்தை பார்த்திருக்கிறீர்களா? ஏன்யா 56 வயசாச்சி, பூவே பார்த்திருக்க மாட்டேன் நானு. பார்த்திருக்கேன்னேன்.

புஷ்பத்தை பார்த்திருக்கிறீங்களா அதிலே மொய்க்கிற வண்ணத்து பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டாம் பூச்சி? பார்த்திருக்கிறேன். அந்த அழகான காட்சியைக் காணும்போது தோன்றவில்லையா. இந்த அழகிய காட்சியைப் படைத்து அளித்த கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டாமா? ன்னாரு. உடனே நான் கைதூக்கிட்டேன். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். அழகான புஷ்பத்தையும் அற்புதமான வண்ணத்து பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்னேன். பார்த்தீர்களா கர்த்தர் உங்களுக்குள் புகுந்து விட்டார்ன்னாரு. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்கண்ணே. ரொம்ப அவசரப்படாத கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. மேட்டரு கொஞ்சம் இருக்குது. நானு அழகான புஷ்பத்தையும் அதில் மொய்க்கிற அற்புதமான வண்ணத்துப் பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லிவிட்டேன்; அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் படைத்தளித்த கர்த்தரை கட்டி வைத்து உதைக்க வேண்டும். எப்போ போலாம்னேன். அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும்? அப்படீன்னு கேட்டேன். அவரு கையத்தூக்கிட்டாரு. எப்படிங்க இப்படியல்லாம் பேசறீங்க. பயமா இருக்குது. நான் இந்த வேலைய விட்டுடுவம்போல இருக்குது என்றாரு. இதுதான் தர்க்க முறையான சிந்தனை. இது தமிழன் இரத்தத்தில் ஓடுகிற தர்க்க சிந்தனை.

இதுதான் எங்களின் இந்திய மரபு. லேட்டா வேலைக்கு போயிட்டு லேட்டா வந்துட்டு அங்க எங்கனா ஊர் மேஞ்சிட்டு வந்து வீட்ல பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது மவன எவனாலேயும். ஏன்? நம்முடைய தாய்மார்கள் இயற்கையிலேயே, படிக்காமலேயே தர்க்கம் அறிந்த மரபு தத்துவ வாதிகள் என்பதாலே, அன்னிக்கு அப்படி சொன்னியேன்னு இன்னிக்கு கொக்கி போடுவாங்க. கல்யாணம் ஆனப்ப என்னா சொன்ன நீ எனக்கு எதுவுமே வேணாம், நீ ஒன்னு இருந்தா போதுன்னு சொன்னியேன்னு கொக்கி போடறாங்க பாரு, அது தர்க்கம். இந்த வாய் கோபுர வாசல்னு சொன்னானே திருமூ­லர், தர்க்கம் என்பது நம்முடைய மரபு, இந்திய தத்துவ மரபு. அதற்கு இந்து தத்துவ மரபில், வேதத்திலும் இடமில்லை, ஆரண்யகத்திலும் இடமில்லை, உபநிடதத்திலும் இடமில்லை. இந்த முரண்பாடுகளை தவிர்க்க மகாபாரதத்திலும் இடமில்லை. வேற எதுலயும் இடமில்லை. புரியுதா உங்களுக்கு, இந்து தத்துவ மரபுல இப்ப தர்க்க ரீதியா பேசப்போனா, உங்கள்ள யாரு பார்த்தீங்களோ தெரியல இராமகோபாலனோட விவாதிச்சது சன் டிவியில் வந்ததே, பார்த்தவங்க யோசிச்சு பாருங்க, அந்தாளால என் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததா? கரெக்டா சொல்றேளே, சரியா சொல்றேளே ஊ…. ஆன்னான். நான் அப்படி என்னா சொன்னேன்னா, மாட்ட உரித்தான், பசுத்தோலை உரித்தான் என்பதற்காக, அஞ்சு பேர் தோல உரிச்சு கொன்னுட்டு இதுதான் எங்களுடைய இந்துமத சாஸ்த்திர, சம்மதம்னு சொன்னியே, இங்க எங்காளு ஒருத்தன் சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்தாளு சொல்லியிருக்கிறான் நான் வணங்கற கடவுள் யார் தெரியுமாடா? அப்படின்னு கேக்கறான்.

நீ மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிச்சுட்டு அதுதாண்டா சாஸ்திரம், இந்து மதம்னு சொல்ற இங்க எங்க ஊர்ல சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்த ஆளு காலைல எழுந்து பாட்டுப் பாடறான். என்னாடா பாட்டுன்னு நான் உத்து கேட்டேன். அவன் என்னா சொல்றான், “”சங்க நிதி, பதும நிதி இரண்டும் தந்து, சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும், மங்குவார். அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்.” சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய் ஆ உரித்து, பசுத்தோல் உரித்து, தின்று உழலும் புலையரேணும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில், அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுள் ஆவார்” அவர் தான் நான் வணங்கும் கடவுள். அங்கம் குறைந்து அழுகி தொழு நோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரைத்தான் நான் வணங்குவேன் என்கிறான் சைவன்.
அப்பரடிகள், திருநாவுக்கரசர், இதுவும், மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிப்பேன்னு சொன்னியே, அந்த இந்து மதமும் ஒண்ணான்னு இராம கோபாலன கேட்டா இல்லியே, அது இல்லியே, அத நாங்க கண்டிச்சிட்டோமேன்னான். அது நாங்க கண்டிச்சோமேன்னா எத கண்டிச்ச? கண்டிச்ச இல்ல, இந்துமத கோவணத்த அவுத்து போட்டுட்டு வெளியே வா. அத கண்டிக்கறதுன்னா எப்படி இந்துவா இருக்க முடியும். நாங்கள் யாரும், இதோ ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறோமே, நாங்கள் யாரும் இந்துக்கள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. எங்கள் இந்திய மரபு வேறு. அது தர்க்கம் சார்ந்தது. இப்படி யோசிப்பது. அதனால்தான் சங்கராச்சாரியாராலயும், பெரியார்தாசனுக்கு பதில் சொல்ல முடியல.

அதனால்தான் இராமகோபலனால பதில் சொல்ல முடியல. அதனாலதான் யாராலயும், இன்னும் சவால் விடறேன். பண்டித சிரோமணி, குரோமணி, கூப்பிட்டு வா, எங்கிட்ட பதில் சொல்ல முடியாது. எங்கிட்ட மட்டுமில்ல, எங்க ஊர்ல படிக்காத கைநாட்டு, சாதாரண விவசாயி, இங்கு எல்லோருக்கும் தர்க்கம் தெரியும், படிக்காமலேயே. ஆக, தர்க்க மரபு எங்களுடையது.

அடுத்தது வைசேசிகம். பொருளறிவு. எங்கள் பொருளறிவு, உலக பிரசித்திபெற்றது. அதனால்தான் எந்த ஊர்லருந்து என்னத்த ஏற்றுமதி பண்றதுன்னு அந்த காலத்துலயே தெரிஞ்சு இருந்தது. புதுக்கோட்டை பக்கத்துல, பட்டுக் கோட்டையிலும், புதுக்கோட்டையிலும், காப்பர்னு சொல்றாங்களே, தாமிரத்தை, எழுவது நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே கவனியுங்கள் தோழர்களே 70 நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே, காப்பர் என்று சொல்கின்ற தாமிரத்தை எகிப்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து, அங்க எகிப்து, சமீபத்துல போனபோது அங்கே எகிப்துல, பார்த்தேன் கெய்ரோவிலே அந்த பிரமிட்களுக்கு பக்கத்திலே ஒரு எக்ஸிபிஸன் மாதிரி வைத்திருக்கிறான். ஓவியக் கண்காட்சி மாதிரி. அந்த எக்ஸிபிஸன்ல இந்த புதுக்கோட்டையில இருந்து அந்த காலத்துல வந்திருக்கற காப்பர்னு போட்டுருக்கான். பொருளறிவு வைசேசிகம். இந்த இந்திய மரபு அறிந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்துக்கள் இல்லை, இல்லவே இல்லை.

ஏன்னா இந்து தத்துவத்துல வைசேசிகம் பொருளறிவே கிடையாது அதனாலதான் வாழ்வாவதே மாயம், மண்ணாவதே திண்ணம், வெங்காயம் வெள்ளப் பூண்டுன்னு சொல்றான். அவர்களுக்கு பொருளறிவு இல்லை. வேதாந்தம், வேதத்தின் அந்தம் என்று பொருளில்லை அதற்கு. மெய்பொருள் முடிவு என்று பொருள். மெய் பொருள் முடிவு மறைந்திருப்பதை வெளிக் கொணரும் முடிவு. இது தமிழருக்கே உரியது. நேரம் அதிகம் இல்லாமையால் முழு விளக்கம் தர முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றேன். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், வேதம் சார்ந்த, உபநிடதம் சார்ந்த, விபரீதமான மனுஸ்மிருதி சார்ந்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும், வாத்சாயணரின் காம சூத்திரமும் சார்ந்த அந்த இந்து மரபு பார்ப்பனர்களுக்குரியது. அவர்கள் கூட இதில் எதையும் இப்பொழுது பின் பற்றுவதில்லை என்பதுதான் விபரீதம். இப்போ கேட்டீங்கன்னா பார்ப்பன இந்து மரபிலே என்ன மிஞ்சியிருக்கிறது என்று கேட்டால் முடிக்கும் போது சொல்கிறேன். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஊர் எல்லாம் இந்தக் கருத்தை பரப்புங்கள். வாய்ப்பு நேரும் போதெல்லாம் இந்தக் கருத்தை சொல்லுங்கள். இன்றைக்கு இந்து தத்துவ மரபுகூட கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை, வாஜ்பாயும், அத்வானியும் கூட ஏற்பதில்லை. அவனால சொல்ல முடியுமா? தைரியமா? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை நாங்க ஏற்கிறோம் என்று. வேதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா அவர்களாலே. நான் சொன்ன மனு ஸ்ம்ருதியை ஏற்றுக் கொள்கிறேன் என்று டிக்ளேர் பண்ண முடியுமா வாஜ்பாயாலே? யாராலயும் முடியாது. காரணம் என்னன்னா பார்ப்பனர்களாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாது என்பதை அறிக. பார்ப்பானாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாதுன்னா அப்போ பாப்பான்கிட்ட இந்து மதம்ங்கற பேர்ல மிச்சமாயிருக்கறது என்ன என்பதை ஆராய்ந்து நாம் எடுக்கற முடிவு கொஞ்சம் குடுமி, கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல வேற ஒரு மசுரும் இல்ல. கொஞ்சம் குடுமியும், கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல எந்த மரபும் இல்ல. எங்கள் இந்திய மரபு, தமிழ் மரபு தத்துவ மரபு, சாலப் பரந்தது.

அதுபோதும் இந்துவே இந்த நாட்டைவிட்டு வெளியேறு. இந்திய மரபுடைய உழைக்கும் மக்களான, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், எங்கள் தத்துவ மரபைச் சார்ந்ததாய் எங்கள் ஆட்சி இங்கே வரும். இங்கு உழைக்கும் மக்களின் ஆட்சி மலர வேண்டும். இந்த ஓடு காலிகள் ஓட வேண்டும். அவர்களுக்கு பதிலடி கொடுக்க இங்கு படை வீரர்களாய் திரண்டிருக்கின்ற அனைவருக்கும், என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வணக்கம், நன்றி, வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

“வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்


“வெள்ளையனே வெளியேறு!’ என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு “செய் அல்லது செத்துமடி’ என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட “ஆகஸ்டு தியாகிகள்’ என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.

வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. “வெள்ளையனே வெளியேறு!” என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூ­ண்டது.

போர் தொடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ஆங்கிலேய வைசிராய், இந்தியா “போரிலுள்ள ஒரு நாடு” என அறிவித்தார். யுத்த செலவிற்காகப் புதிய வரிகளைப் போட்டு இந்திய மக்களைக் கசக்கிப் பிழிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தயாரானது. தனது இராணுவ பீரங்கிக்குத் தீனி போட இந்தியர்களைத் தீவிரமாகப் பட்டாளத்தில் சேர்க்க ஆரம்பித்தது. எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க அவசரச் சட்டங்களைப் போட்டு, அடக்குமுறையை ஏவிவிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டது; ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைக்கே மாற்றிவிடுவது என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் ­மூலம் அரசியல் மோசடி மூ­ட்டைகளை அவிழ்த்துவிட்டது.

ஜெர்மனி ஜப்பான் ஒரு பக்கமும், இங்கிலாந்து பிரான்சு மற்றொரு பக்கமுமாக நின்று நாசகார யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றின் காலனிகளை இன்னொன்று அபகரிக்க நடத்திய யுத்தம்தான் அது. எனவே, அது உலக மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தமாகும். இந்த யுத்தத்தில், இரண்டு முகாம்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியதே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நம்மை அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து அநியாய யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த நேரம், அதனால் இந்தியா மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதில் பலவீனப்பட்டிருந்த நேரம். எனவே, இந்தியா தனது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வாய்ப்பான நேரம். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பறித்தெடுக்க விரும்பும் எந்த தேசபக்த இந்தியனும் இவ்வாறுதான் எண்ணுவான். யுத்தத்திற்கும் காலனிய ஆட்சிக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரமாக்குவான்.

ஆனால் காந்தியும் காங்கிரசும் மக்களைத் திரட்டி சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோர் தனித்தனியாக விடுத்த அறிக்கைகளில் உறுதி கூறினர். 1939 செப்டம்பர் 5ல் வைசிராயைச் சந்தித்த காந்தி தனது முழு அனுதாபமும் ஆங்கிலேய ஆட்சிக்கு உண்டு எனச் சொன்னார். அந்தச் சந்திப்பின்போது, “நான் அவருக்கு (வைசிராய்க்கு) இங்கிலாந்து பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் யுத்தத்தால் அழியக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கியபோது கண்கலங்கிப் போனேன்” என்று காந்தி எழுதினார். “இங்கிலாந்து ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்” என்று 1940, மே 20ல் நேரு அறிவித்தார். இதே நேரத்தில் காந்தி, “பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தை தேடவில்லை” என்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இங்கிலாந்து ஒரு நியாயமான இலட்சியத்திற்குப் போராடுவதாகவும் அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார். “ஆகையினால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆவது?”1 என்று காலனியாதிக்கவாதிக்காகக் கண்ணீர் வடித்தார்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதிகூட காந்தி பின்வருமாறு சொன்னார்: “இங்கிலாந்தின் நெருக்கடியான நேரம்தான் நமக்குச் சரியான சந்தர்ப்பம் என அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பம்பாய் தீர்மானம் அத்தகைய கொள்கை எதையும் நிராகரிக்கிறது. நாம் எவ்வாறு இங்கிலாந்தை அதன் நெருக்கடியான வேளையில் சங்கடப்படுத்திக் கொண்டே, அகிம்சாவாதிகள் என நம்மை அழைத்துக் கொள்ள முடியும்?2

இவ்வாறு காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டு அமைதியாக இருந்தனர். மக்களுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம், இந்தியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் யுத்தத்திற்கு எதிராகவும் இந்தியாவை இங்கிலாந்தின் போர் இரதத்தில் மாட்ட வைத்ததற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏகாதிபத்தியக் காலனி அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளை அமுலுக்குக் கொண்டு வந்து ஏராளமான பேரைக் கைது செய்தது.

இந்த நிலையில் 1942ஆம் ஆண்டு வந்த உலக யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாமான அச்சு நாடுகளின் கை மேலோங்கியது. அனேகமாக ஐரோப்பா கண்டம் முழுவதையும் நாஜி ஜெர்மனி படைகள் படுவேகத்தில் தமது காலடியில் கொண்டு வந்தன. ஜப்பானியப் படையெடுப்பிற்கு முன் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இங்கிலாந்தின் காலனிய அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. ஜப்பானியப் படைகள் படுவேகத்துடன் இந்திய எல்லைவரை முன்னேறியது. இவையெல்லாம் சேர்ந்து அச்சு நாடுகள்தான் உலக யுத்தத்தில் இறுதி வெற்றியடையும் என்று ஒரு பிரிவு இந்திய தரகு முதலாளிகளையும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளையும் நம்ப வைத்தன. ஜப்பானின் அடுத்த ஒரு தாக்குதலில் இந்தியா அதன் வசம் வந்துவிடும் என்று இவர்கள் உறுதியாக நம்பினர். உண்மை நிலையும் அதுவாகத்தானிருந்தது.

எனவே, இனிமேலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. வெற்றி பெறப்போகும் புதிய எஜமானனான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்ய விரும்பினர். ஜப்பானிய ­மூலதனத்துடன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணினர். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க விரும்பினர். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் மூ­ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை விட்டுத் தப்பத் துடிக்கும் எலிகளைப் போல இருந்தனர். காந்தியின் தளபதியான பட்டாபி சீதாராமையாவின் வார்த்தைகளில் இந்தச் சிந்தனை பின்வருமாறு பிரதிபலித்தது: “இந்தியா ஒரு மூ­ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுடனோ, உதிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்துடனோ தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா?”3

ஜப்பானின் தாக்குதல் வேகத்தைக் கண்டு காலனிய ஆங்கிலேய அரசாங்கமும் பீதியுற்று, அசாமையும் வங்காளத்தையும் கை கழுவியது. அதற்கு முன் அந்தப் பகுதிகளில் எதிரிப்படைகளுக்குப் பயன்படலாம் எனக் கருதப்படுகின்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளுதல், பயிர்களை எரித்தல் ஆகியவற்றை — நிலத் தீய்ப்புக் கொள்கையை (குஞிணிணூஞிடஞுஞீ ஞுச்ணூtட ணீணிடூடிஞிதூ) ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்டது. பீகாரில் புதிய தற்காப்பு அரண்களைக் கட்டியது. இவையெல்லாம் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடையே பீதியை உருவாக்கிற்று.

நிலைமையைக் கணிப்பதிலும் செயல்படுவதிலும் காங்கிரசிற்குள் மூ­ன்று பிரிவினர் தோன்றினர். ஜப்பானிய முகாம் வெற்றி பெற்று இந்தியாவைக் கைப்பற்றும் என உறுதியாக காந்தி நம்பினார். எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஜப்பானியரோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று விரும்பினார். நேரு, ராஜாஜி, ஆசாத் ஆகியோர் ஆங்கிலேய ஏகாதிபத்திய முகாமே உலக யுத்தத்தில் இறுதி வெற்றி பெறும் என நம்பினார்கள். எனவே, தொடர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு பிரிவினர் பாசிச ஜெர்மனி ஜப்பான் முகாமை நேரடியாக ஆதரித்துப் படைதிரட்டிக் கொண்டு களத்திலேயே இறங்கினர்.

1940இல் இட்லரிடம் ஹாலந்து சரணடைந்ததிலிருந்து காந்தியின் பார்வையில் இட்லரின் நிலை “சீராக உயர்ந்து கொண்டிருப்பதாகவும்” யுத்தத்தில் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று காந்தி நம்புவதாகவும்4 ஜி.டி. பிர்லாவிடம் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் தெரிவித்தார். 1940ஆம் ஆண்டு மே 26இல் வைசிராய் லின்லித் கௌவுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “சமாதானத்தை நாடுமாறு” ஆங்கிலேய அமைச்சரவைக்கு ஆலோசனை கூறினார். மேலும் அக்கடிதத்தில், “சித்தரிக்கப்படுவதைப் போல இட்லர் அவ்வளவு மோசமான மனிதராக இருப்பார் என்று நான் நம்பவில்லை” என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்கிலாந்து மக்களை, “நீங்கள் எல்லோரும் உங்களையோ, மானுடத்தையோ காப்பாற்ற முடியாத உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட வேண்டும். போராடுவதற்குப் பதில் திருவாளர் இட்லரையும் சீமான் முசோலினியையும் வரவேற்று உங்களுடைய நாடுகள் என்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அவர்களுக்கு எது வேண்டுமா அதை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்”5 என்று வற்புறுத்தி காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலேயர்களிடம் காந்திக்கு இருந்த முந்தைய அனுதாபம் நாஜிப் படைகளுக்கு அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைவதே சிறந்தது என அறிவுறுத்துவதாகவும் உருமாற்றம் அடைந்தது. 1942 ஏப்ரலில் காந்தி, “தாம் முன்பு இங்கிலாந்திற்கு முற்றிலும் கொடுத்து வந்த தார்மீக ஆதரவை இப்போது கொடுக்க மனம் மறுக்கிறது.”6 என்று கூறினார். ஆம், “மகாத்மா’வின் “அந்தரங்கக் குரல்’ இப்போது முற்றிலும் வேறுபட்ட பாதையை மேற்கொள்ளக் கட்டளையிட்டது. எனவே, ஆங்கிலேய அரசுப் பிரதிநிதி கிரிப்ஸ் திரும்பிச் சென்ற பிறகு காந்தி, காங்கிரசின் காரியக் கமிட்டிக்கும் அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கும் நகல் தீர்மானம் ஒன்றை, ஏப்ரல் 27 தொடங்கி நிகழவிருந்த அலகாபாத் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ள அனுப்பினார். அத்தீர்மானத்தில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:

“அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி, இந்தியாவை இனியும் இங்கிலாந்தால் பாதுகாக்க முடியாது எனக் கருதுகிறது… ஜப்பானின் சண்டை இந்தியாவுடனானது அல்ல… இந்தியா விடுதலை அடையுமானால் அதன் முதல் நடவடிக்கை ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருக்கும். இக்கமிட்டி ஜப்பானிய அரசு மற்றும் மக்களுக்கு இந்தியா அவர்களுடனோ வேறெந்த நாட்டுடனோ எவ்விதப் பகைமையும் கொண்டிருக்கவில்லை என உறுதியளிக்கிறது.”7

வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி போன்றோரால் ஆதரிக்கப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தை நேரு பின்வருமாறு விமரிசித்தார்: “நாம் பாபுவின் (காந்தியின் மொர்) அணுகுமுறையை ஏற்போமாகில், அச்சு நாடுகளின் மறைமுகக் கூட்டாளிகளாகி விடுவோம். இத்தீர்மானத்தின் முழுச் சிந்தனையோட்டமும் பின்னணியும் ஜப்பானுக்குச் சாதகமாக இருக்கிறது. ஜப்பானும் ஜெர்மனியும் போரில் வெல்லும் என்று காந்தி நம்புகிறார். இந்த நம்பிக்கை அவரது முடிவை அவரையும் அறியாமலேயே ஆளுமை செய்கிறது.”

ராஜேந்திர பிரசாத்தால் திருத்தப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தைப் பற்றி கருத்து கூறும்போது ராஜகோபாலாச்சாரி, “ஜப்பான் ஆங்கிலேயரின் வெளியேற்றத்தால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிரப்பும்… இத்தீர்மானம் சொல்வது போல் ஜப்பானின் கரங்களில் ஓடி விழுந்து விடக் கூடாது.”8

காந்தியோ மிகவும் அவசரப்பட்டார். மே 1942ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காந்தி கூறினார்: “இந்த ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடான அராஜகம் (அதாவது ஆங்கிலேய ஆட்சி) ஒழிய வேண்டும். இதன் விளைவாக முற்றிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையுமானாலும் அதை நான் எதிர்கொள்வேன்”. மேலும் 1942 ஜூன் 7ஆம் தேதியிட்ட “அரிஜன்’ ஏட்டில் “அடிமை ஓட்டுனர்களை எதிருங்கள்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 1942 மே 28இல் ராஷ்ட்ரிய யுவக் சங் எனும் அமைப்பினுடைய உறுப்பினர்களிடம், “இந்த அடிமைத்தனத்தின் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் வன்முறையைக் கூட ஏற்கலாம்”9 என்றார் காந்தி.

இவ்வாறு காந்தி, படேல், பிரசாத் ஆகியோர் ஜப்பானியப் படைகளின் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி அதன் ­மூலம் தாங்கள் ஜப்பானுடன் ஒப்பந்தத்திற்கு வர இங்கிலாந்தை நெருக்கியபோது, நேருவும் ஆசாத்தும் நேசப்படைகள் (அமெரிக்கா இங்கிலாந்து பிரான்சு முகாம்) இறுதி வெற்றியடையும் என உறுதியாக நம்பினர். நேரு சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய ஆதிக்கமே தொடர வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்பதல்ல என்ற நேருவின் கருத்தை ஆதரித்தார் ராஜாஜி. முசுலீம் லீகுடன் அவர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக் குடையின் கீழ் ஒரு “தேசிய அரசாங்கத்தை” நிறுவி ஜப்பானை எதிர்க்க வேண்டுமென்று வாதாடினார்.

காங்கிரசின் மேல்மட்டத் தலைமையில் ஏற்பட்ட இந்தப் பிளவு இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் முரண்பட்ட விருப்பங்களையே பிரதிபலித்தது. லால் சந்த், ஹீராசந்த் போன்றபல குஜராத்தி, மார்வாரி மில் முதலாளிகள் ஜப்பானிய எஜமானர்களை வரவேற்கக் காத்திருந்தபோது மற்றொரு பிரிவு, ஆங்கிலேய ஆதரவுக் குழுவாகவே நீடித்தது. ­மூன்றாவதாக ஒரு பிரிவு உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள முன்வந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையான காங்கிரசுக் கட்சி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்றுமே பாடுபட்டதில்லை. மாறாக, தரகுப் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதியான காங்கிரசு, சுதந்திர வேட்கையால் தன்னெழுச்சியாகப் போராடிய இந்திய மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தது; துரோகமிழைத்தது. மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்பி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கேடயமாக விளங்கியது. காலனிய ஆட்சியைப் புதிய அடித்தளங்களில் தக்க வைக்கும் கருவியாகச் செயல்பட்டது. இதுவரை ஒரே முகாமாக இருந்த காங்கிரசில்தான், ஜப்பானின் படுவேகமான முன்னேற்றம் மேற்சொன்ன பிரிவுகளைக் கொண்டு வந்தது.

இந்தப் பிரிவினர் கொண்டிருந்த கருத்து வேறுபாடெல்லாம் எந்த ஏகாதிபத்திய முகாம் வெற்றி பெறும் என்ற கணிப்பில்தான். ஆனால் வெற்றி பெறும் முகாமிற்கு இந்தியா அடிமையாக இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமையிருந்தது.
“வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தியும் காங்கிரசும் அறைகூவல் விடுத்ததன் பின்னணி இதுவே. எதிர்ப்பு தெரிவித்த நேரு, ஆசாத் ஆகியோரை காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியும் பிறவாறு உருட்டியும் காந்தி தனது தீர்மானத்தை ஏற்குமாறு செய்தார். ஓர் எதேச்சதிகாரியாகவே நடந்து கொண்டார். இப்படித்தான் ஏகமனதாக, “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் பம்பாயில் நடந்த காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி நிறைவேறியது.

ஒரு பக்கம் ஜப்பானிய புது எஜமானர்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்று நிரூபிக்க “செய் அல்லது செய்துமடி’ என்று தீவிரமாக காந்தி அறைகூவல் விட்டாலும் இன்னொரு பக்கம் மக்களின் போராட்டங்கள் தனது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்தார். எனவேதான் போராட்டத்திற்கு எவ்விதத் தயாரிப்போ, திட்டமோ தீட்டப்படவில்லை. பேச்சு வார்த்தை நடத்துவதே நோக்கம் என்று சொல்லப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் “நான் பெரும் நடவடிக்கைகளைத் தொடங்கும் வரையாவது இந்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டும். உருப்படியான ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப பூரணமாகச் சிந்திப்பதாய் நான் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். போராட்டம் தொடங்கும் முன், பிரச்சினை எழுவதற்கு முன், முதல் நடவடிக்கையாக வைசிராய்க்குப் பேச்சுவார்த்தை வேண்டி எழுதப்படும் என்று காங்கிரசால் விளக்கம் தரப்பட்டது. காங்கிரசுக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வைசிராய்க்குக் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். முடிக்கும் முன்பே ஆகஸ்ட் 9ம் தேதி காந்தி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்ட விரோதமான ஸ்தாபனம் என அறிவிக்கப்பட்டது. “ஒரு வாரத்தில் வெற்றி’ என்று படேல் சவடால் அடித்தார்.

காங்கிரசுத் தலைவர்களின் கைது மக்களது போராட்டங்களைத் தூண்டிவிடும் என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குத் தெரியும். எனினும், காங்கிரசுத் தலைவர்கள் எவ்வித முன் தயாரிப்பும் செய்யாததால் தன்னெழுச்சியான திட்டமிடாத போராட்டங்களைச் சுலபமாக அடக்கி விடலாம் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கருதியது.

ஆனால் இந்திய மக்களோ, காந்தியின் நயவஞ்சக விருப்பத்தை மீறி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தியின் உபதேசங்களை மீறியும் அவருடைய கண்டனங்களைப் புறக்கணித்தும் மக்கள் நாடெங்கும் வன்முறைக் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். இந்தியாவெங்கும் கொந்தளிப்பு; குழப்பம்; தனிப்பட்ட பிரிவுகளும், குழுக்களுமே இப்போராட்டங்களை நடத்தின.

இதுதான் “புகழ்பெற்ற’ ஆகஸ்ட் போராட்டம்; இந்தப் போராட்டத்தை காங்கிரசு ஆரம்பிக்கவில்லை; மாறாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தினை நடத்தினர்; காந்தியும் காங்கிரசும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவே செயல்பட்டனர். ஆனால் இன்றோ, ஆகஸ்ட் தியாகிகள் என வெட்கமின்றி காங்கிரசுக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். இந்தியாவை புதிய எஜமானனுக்கு (ஜப்பானுக்கு) அடகு வைக்க “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் போட்ட காந்தியும் காங்கிரசுக்காரர்களும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் காட்டிக் கொள்வது கயமைத்தனத்தின் உச்சமாகும்!

194344ம் ஆண்டுகளில் யுத்தத்தின் போக்கு மாறியது; உலக அளவில் ஜெர்மனி ஜப்பான் பாசிச முகாம் வீழ்ச்சியடையத் தொடங்கியது; இங்கிலாந்து பிரான்சு முகாம் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது; ஜெர்மனி ஜப்பான் முகாமினுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பார்த்தார் காந்தி! அடித்தார் ஒரு “அந்தர்’ பல்டி! அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடப் போகிறதே என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத் திற்கு மீண்டும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட வாலை ஆட்டினார். நடந்த போராட்டங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்று வலியச் சொல்ல ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உள்துறைக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “மொத்தமாகப் பெருமளவில் காங்கிரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்களை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை இழக்கும் அளவிற்கு மக்கள் சினத்தால் வெறிகொண்டு விட்டதாய்த் தோன்றுகிறது. நடந்துள்ள நாசத்திற்கு காங்கிரசு பொறுப்பல்ல; அரசாங்கமே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.”

“இந்தியா முழுவதும் கைதுகள் செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிக வன்முறையாக இருந்ததால், காங்கிரசிடம் பரிவு உள்ள மக்கள் தன்னடக்கத்தை இழந்து விட்டார்கள். இந்தத் தன்னடக்க இழப்பிற்கு காங்கிரசு உடந்தை என்று பொருளாகி விடாது” என்று தெரிவித்தார்.

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடந்த அகில இந்திய காங்கிரசுக் கமிட்டி கூட்டில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அது முழுமையாக வரையப்படாது நின்றுவிட்டது. 1943 ஜூலை 15ல் காந்தியார் இந்த வரையப்படாத சுற்றறிக்கையைத் தயக்கத்துடன் மேற்கோள் காட்டினார்; அதில் பின்வருமாறு இருந்தது.

“மகாத்மா முடிவு செய்யும் வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது; எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். ஆயத்தமாக இருங்கள்; ஏற்பாடு செய்யுங்கள்; விழிப்போடு இருங்கள்; ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்”.

காங்கிரசின் சார்பில் நேரு, வல்லபாய் படேல், ந.பி.பந்த் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அறிக்கை 1945, செப்டம்பர் 21ல் வெளியாயிற்று. அதில், “அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு, ஆகஸ்டில் நடந்த போராட்டங்களுக்கும் காங்கிரசிற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனக் காலனியாதிக்கவாதிகளிடம் தன்னை நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்ட காங்கிரசு, ஆகஸ்டு மாதத்திலும் அதை அடுத்த மாதங்களிலும் நடைபெற்ற தலைமையற்ற தன்னெழுச்சியான நிகழ்ச்சிகளைப் பின்னாளில் “ஆகஸ்டு போராட்டம்’ என ஏற்பதென்று முடிவு செய்தது. அதாவது, காந்தியின் கண்டனங்களைப் புறக்கணித்து விட்டு மக்கள் நடத்திய போராட்டங்களையே காந்தியும் காங்கிரசும் நடத்திய “ஆகஸ்டு போராட்டம்’ என சுவீகரித்துக் கொண்டனர்.

உண்மையான விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு, இந்திய உழைக்கும் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கண்டனம் செய்த காந்தியும் காங்கிரசும், பின்னர் அந்தப் போராட்டங்களையே காங்கிரசின் தியாகமாக, விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்துச் சுவீகரித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வக்கிரம்! வரலாற்றுப் புரட்டு!

உண்மையில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான் காந்தியின் நோக்கமென்றால், சிறையிலிருந்து 1944ஆம் ஆண்டு காந்தியார் வெளிவந்தபின் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காந்தியாரோ “ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது” என்று சொன்னார். ஏனென்றால், “1944ஆம் ஆண்டில் 1942ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது” என்று விளக்கெண்ணெய் விளக்கமளித்தார்.

எனவே, போர் முடியும் தறுவாயில் (ஆகஸ்ட் 1945) உலகெங்கும் மக்கள் விடுதலையை நோக்கி முன்னேறிய போது காந்தியாரின் துரோகத்தனத்தால் இந்தியா போரின் தொடக்கத்தில் இருந்தது போல் ஓர் அடிமை நாடாகவே போரிலிருந்து வெளிப்பட்டது.

தனது புதிய எஜமானர்களான ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்தியங்களை வரவேற்கவே “வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தி சொன்னார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ எவ்வித நிபந்தனையும் இன்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குப் பக்கபலமாக நின்று போருக்கான உதவிகளைச் செய்தது; யுத்த நிதி திரட்டிக் கொடுத்தது; படைக்கு ஆட்களைச் சேர்த்தது; வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இவ்வாறு காந்தியைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் மக்களுக்குத் துரோகமிழைத்தது. ஆனால் காங்கிரசுக்காரர்களோ தாங்கள் “24 காரட்’ சுத்த தேச பக்தர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள்தான் துரோகிகள் என்றும் நேற்றுவரை பிரச்சாரம் செய்து வந்தனர். இன்று காங்கிரசும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பொன் விழா கொண்டாடுகிறார்கள். ஆக, தங்களைத் தேசத்துரோகிகள் என்று காங்கிரசு சொல்லி வந்ததை இரு போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நேற்றுவரை துரோகிகளாய் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று திடீரெனத் தேச பக்தர்களாக மாறிவிட்டார்கள் என்று காங்கிரசு சொல்கிறது.

இதுதான் காங்கிரசின் “தேசிய’ கலாச்சாரம்!
இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் “புரட்சி’க் கலாச்சாரம்!
புரிந்து கொள்வோம் இவர்களை!
புறந்தள்ளுவோம் இவர்களை!

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்


என்னையும்

எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்….
..
“சூத்திரன்”- என்ற சங்கரமடத்தின்
கழிப்பறை வாக்கியத்தை
பெரும் “பாக்கியம்”
என்று சுமந்து திரியும்
தாமரைக்கனியின்தோலைப்
போல
எனக்குத் தோல் தடிப்பில்லையே!
..
தமிழ் “நீச பாஷை” என்றுமுகம்
சுளிக்கும் சங்கராச்சாரிக்கு
அன்றாடம்”அம்மா”
என்று அழைக்கும்
என்மே கரிசனம் வந்ததெப்படி?
..
நான் சாணிபோடும்
ஓசைசமஸ்கிருதமோ?
எங்கள் குடும்பக்காளைகளைக
சாப்புக்கு அனுப்புவதைக்கண்டு
கொள்ளாமல்
எம் மேல் மட்டும்பாசம் வந்ததென்ன?
பெண்டாளும் தந்திரம்
மாடுகளை வரையிலுமா!
..
வேள்விகளில்
உயிரோடு எரிக்கப்பட்ட
எம் மூதாதையர்களின்
வாரிசுகள்
நாங்கள்வழக்காடுகிறோம்….
..
இந்துவாக
இருந்ததில்லை நாங்கள்
வைக்கோல் மொம்மைகளைக்
காட்டும் போனும்
வாஞ்சையுடன் சுரக்கும்எம்
..
பால்மடி
வழியும் கண்ணீரையும்
நடுங்கும்
முகங்களையும் கூட
விடாது
பசியாறும் இந்து மதவெறி
..
எப்படி நாங்கள்
இந்துவாக முடியும்?
..
எம் சந்ததிப் பகையே
சங்கர மடமேவேண்டாம்
விலகுஉழைக்காத வகையினம்
என்றுஎன்மேல் உள்ள குற்றச்சாட்டை
உறுதி செய்வதாய் இருக்கிறது
உனது ஒட்டுறவு
..
எப்படி பொருந்தும்?
கரப்பதே என் பாடுகறப்பதே
உன் பண்பாடு
பனிக்குடம் உடையும்
முன்பேசீம்பாலுக்குச் செம்பு தேடும்
உன் வக்கிரங்களுக்கு
மத்தியில்வாழ்வதைவிட
கன்றின் கறியை காமுற்ற
யாக்ஞவல்கியனின் சந்ததியிடம்
..
உயிர்பிச்சை பெறுவதைவிட
செத்த பின்பும்
சினை பார்த்து அறுக்கும்
எம் மக்களுக்கு உணவாகவே
எனக்கு சம்மதம்
.
இந்துவாக வாழ்வதைவிட
விலங்காகச் சாவதே
எனக்குச் சம்மதம்
..
-துரை.சண்முகம்

கையேந்தி வல்லரசுக்கு கையேந்துபவன் இழுக்காம்!


டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் “”உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது சொந்த விருப்பத்தினால் வருவதும் போவதும் அல்ல”, என்று சொல்கிறார்கள். அதாவது அந்த எடுபிடிகளின் டெல்லி மாநகரத்தில், ஒரு பொது விடுதியில் லெபனான் சமையல் மணக்கிறது; ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நவீன இசை கதறுகிறது; உள்ளே ஐரீஷ் நாட்டுப் பீப்பாய்களிலிருந்து சாராய மழை பொழிகிறது;

மேட்டுக்குடி பள்ளிக்கூடத் திடலில் ஏதோ ஒரு ஆங்கில இசை நாட்டிய நாடகத்துக்கான அறிவிப்பு விளம்பரத் தட்டியாகக் கண்ணைப் பறிக்கிறது. சுருக்கமாக, அரசியல் வியாபாரம் உடல்நலம் கேளிக்கை பொழுது போக்கு என்று அனைத்துத் துறைகளும் உலகமய முத்திரையோடு உருமாறி டெல்லியில் உலாவுகின்றன. நமது டெல்லி நகரத்தை அவர்களின் ஆட்சி மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

மேட்டுக்குடிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படும் டெல்லி நகரத்தில் அந்த மாற்றத்துக்காக உழைத்து உருக்குலையும் சாதாரண மக்களுக்கு இடமில்லை. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.

· சுற்றுச்சூழலுக்கு நல்லது என்ற பெயரில் ஆட்டோ, டாக்சி, பேருந்து எல்லாமே எரிவாயு மூலம் ஓட்டவேண்டும். மற்ற வாகனங்கள் தடை செய்யப்படும்.

· மூன்று சக்கர வண்டிகள், மீன்பாடி வண்டிகள், பார வண்டிகள், மாடுகுதிரை வண்டிகள் நகர்ச்சாலைகளில் ஓடக்கூடாது.

· குடியிருப்புப் பகுதிகளில் கடைகளே இருக்கக்கூடாது. நடுத்தர வியாபாரிகளின் கடைகளுக்குப் பூட்டு போட்டுச் சீல் வைத்தார்கள்.

· குடிசைப் பகுதிகள் ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டருக்கு வெளியே அள்ளி வீசப்பட்டன.

— இவை அத்தனையும் உச்சநீதிமன்ற ஆணைகளாக வெளிவந்து மக்கள் மீது திணிக்கப்பட்டவை.

இந்த அடக்குமுறை ஆணைகளில் கடைசியாக வந்திருப்பது, தெருவோர சாப்பாட்டுக் கடைகளை மூடவேண்டும் என்ற ஆணை. வேலை தேடி டெல்லிக்கு வரும் இலட்சக்கணக்கான மக்கள் அற்பக்கூலியை வைத்தே வாழ்கின்றனர். இவர்களது வயிற்றுப்பசி ஆற்றும் ஆதாரம் இந்தத் தெருவோரக் கடைகள்தாம். இனி அம்மக்கள் என்ன செய்வார்கள்?

டெல்லியில் மட்டும் சுமார் 3 இலட்சம் தெருவோர உணவுக் கடைகள் இருக்கின்றன. ஒரு கடை சுமார் ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளிக்கும் என்றால் சுமார் 15 இலட்சம் உயிர்கள் இன்று நிர்க்கதியாகப் போகின்றன. இப்படி உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தி டெல்லியைச் சுத்தப்படுத்தி முதல்தரமான நகரமாக உருவாக்குவதே அரசின் நோக்கம். சொல்லப்போனால் நாட்டின் ஏனைய நகரங்களை இப்படி மாற்றுவதற்கு டெல்லி ஒரு முன்னோட்டம். இது தவிர, ஏற்öகனவே வெவ்வேறு மாநிலங்களில் அங்கு திணிக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஹைடெக் நகரங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றுக்காகப் பல புதிய ஆணைகளும் திட்டங்களும் அந்தந்த மாநில அரசுகளால் “சுதந்திரமாக’ப் போடப்பட்டு வருகின்றன.

டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, இந்த அழகு படுத்தும் முயற்சிக்கு ஒரு முகாந்திரமாகியிருக்கிறது. இனியும் இப்படிப்பட்ட பல முகாந்திரங்கள் தொடரும்.

அந்த முகாந்திரங்களுக்காக பிழைப்பையும், வாழ்வையும் ஒரு சேரப் பறிகொடுத்திருக்கும் ஏழை எளிய மக்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?

“”தெருவோரக் கடைகளில் சுத்தம், சுகாதாரம், தரம் மூன்றுமில்லை” என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, தெருக்கடையில் பிரியாணி விற்கும் ஷப்பீர் பதில் தருகிறார்: “”கறி ஒரு கிலோ ரூ. 40, அரிசி ஒரு கிலோ ரூ. 30, பருப்பு ஒரு கிலோ ரூ.35 இதிலிருந்து தயாரிக்கப்படும் எங்கள் பிரியாணி பாருங்கள்” ஒரு ஸ்பூன் பிரியாணியை அள்ளி தூவிக் காட்டுகிறார் ஷப்பீர். பிரியாணி குங்குமப்பூ நிறத்தில் மின்னுகிறது. “”நாங்க சனங்களைக் கொள்ளை அடிக்க மாட்டோம், நம்ம ஆளுங்க இங்க ஏன் வராங்க? சுத்தமான பிரியாணி, மலிவு, ருசி மூணும் வேற எங்க கிடைக்கும்? ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல கிடைக்குமா?”

மீன்கறிச் சோறு விற்கும் அனில், சுத்தம் என்பதற்கு வேறு விளக்கம் தருகிறார். “”நாங்க கண் முன்னால சமைச்சு விக்கிறோம். பெரிய ஓட்டல்ல போடற மீன், கறி, நண்டு, எறா, சொறா, சோறு என்னைக்குச் செஞ்சதுன்னு நீங்க கேக்கத்தான் முடியுமா? ஏழைங்க வேற எங்க சாப்பிடப் போவாங்க? அத முதல்ல சொல்லுங்க. சரி, எங்க கடைங்கள நம்பர் ஒன் கடையாக்க என்ன செய்யணுமாம்? பிளாட்பாரத்துல ஷோரூம் போடணுமா?” சுற்றி வளைத்துப் பேசத் தெரியாத அனிலின் பதில் இது.

தெற்கு டெல்லி ஓக்லா தொழிற்பேட்டையின் ஒரு மூலை. ஓக்லா தொழிற்பேட்டையில் பாரதி, பகார்டி, நிக்கான் போன்ற பிரபலமான பன்னாட்டுக் கம்பெனிகளின் பளப்பளவென நிற்கும் கட்டிடங்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் — பழைய டெல்லியின் கதை சொல்லும் பூச்சுக்கள் வெளிறிப்போன, இடிந்து அழிந்து வரும் பழைய கம்பெனிகள்.

அதில் ஒரு பழைய கம்பெனிதான் மோடி ஆலை. அருகே பஸ் ஸ்டாண்டு. வரிசையாக நடுத்தர ஓட்டல்கள், கடைகள். இங்கே வண்டிக் கடை போட்டதற்காக ஓட்டல் முதலாளிகளாலும் போலீசாலும் விரட்டப்பட்டவர் ஹர்பால் சிங். நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசின் லஞ்ச ஊழல்களுக்குள்ளே சிக்கி நாசமாகி, வாழ்க்கையில் ஏராளமாகக் கற்றுக் கொண்டுவிட்டார் ஹர்பால்சிங். இப்போது கொஞ்சம் தொலைவில் குப்பைமேடுகளின் அருகே, தொழிலாளிகள் பகுதி ஒன்றில் பிளாட்பார வண்டிக் கடை போட்டிருக்கிறார்.

ஹர்பால், அவரது மனைவி, இரு பெண் குழந்தைகள், ஊரிலிருந்து இவரை அண்டி வாழ வந்துவிட்ட இரண்டு உறவுப் பையன்கள். மொத்தம் 6 பேர் அந்தக் குடும்பம். பசங்களின் படிப்புக்கும், எதிர்காலத்தில் மூத்த பெண்ணுக்கு மணம் முடிப்பதற்காகக் கொஞ்சம் சேமிக்கவும், அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்காகவும் அவர் சம்பாதிக்க வேண்டும். ஹர்பால் சிங்கின் கேள்வி எளிமையமானது. “”தடைக்கு யார் காரணம்? என்ன காரணம்? காமன் வெல்த் விளையாட்டு மேளா 2010இல் வரப்போகுது. அதுக்காக டெல்லிய அழகு படுத்தறாங்க. ஆஸ்திரேலியாவப்போல டெல்லி அழகா இருக்கணுமாம். அப்ப ஆஸ்திரேலியாக்காரங்க வாழற மாதிரி எங்கள எப்ப வாழ வைக்கப் போறீங்க?”

இவரைப் போலவே 1981இல் டெல்லிக்கு தன் தம்பியோடு வந்தவர் ஷியாம் சிங். இவரது ஊர் பரேய்லி. தெருக்கடை போட்டு பரோட்டா விற்கிறார். அந்த ஏரியாவிலேயே பிரபலமான கடை. அவர் யதார்த்தமாகக் கேட்கிறார். அரசின் வரப்போகிற சதித் திட்டங்களையும் ஊகித்துச் சொல்கிறார்.

“”எங்கள மாதிரி ஏழைகளை எல்லாம் டெல்லியை விட்டு விரட்டணும்னு நெனைக்கிறாங்க. எத்தனை நாள் விரட்டுவாங்க? அப்படி விரட்டுனா, நகரத்துலே கால்வாய், பள்ளம் தோண்டுறவங்களுக்கு யார் சோறு போடுவாங்க? என்ன இப்படிப் பேசறானேன்னு நினைக்காதீங்க, அவுங்க ஒருவேளை இப்படிகூடச் செய்யலாம் டெல்லியில ஆகவேண்டிய உடல் உழைப்புக்கும் அழுக்கு வேலைகளுக்கும் எங்களை தினமும் வெளியிலிருந்து கொண்டுவந்து, உழைப்பை ஒட்ட உறிஞ்சிக்கிட்டு கண்காணாத் தொலைவுல மறுபடி அங்கேயே கொண்டு போய்ப் போட்டுருவாங்களோ?” செய்வார்கள். நாட்டின் பல இடங்களில் இனி இப்படித்தான் நடக்கும்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பந்த் என்பவர் தெரு உணவுக் கடைகளைத் தடை செய்யும் நீதிபதி உள்ளிட்ட மேட்டுக் குடிகள் ஏகாதிபத்தியச் சந்தைக்குச் சோரம் போனவர்கள் என்றும் “”சர்வதேசத் தரம் கொண்ட

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் :வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!


மார்ச் 2ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். “”தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை அறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை.

கலவரத்துக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்தத்துக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்ததை மட்டும்தான் பார்க்க முடிந்தது.

ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சில நூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. “”தில்லை வாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை… இல்லை… இல்லவே இல்லை” என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும்தான்.

அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிகழ்வைப் பார்த்த அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டிருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கே நடந்தது “வழிபாடு’ அல்ல, போராட்டம்!

“சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குவதாக’ கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை “வழிபடவில்லை’. வழிபட முடியவும் இல்லை. அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும்தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.

நேர்ப்பொருளிலும் இதுதான் உண்மை. ஆறுமுகசாமி வாய்திறந்தவுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிதர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண் முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.

···ஆம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதன்தான்” என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்று வரை நிலைநாட்டி வரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களுக்கு பாத்தியதை கொண்டாடி வரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்,

பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.

எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்க விடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி பாடினார். எந்த ஆறுமுகசாமியை 8 ஆண்டுகளுக்கு முன் கேட்பாரின்றி அடித்துக் கையை உடைத்துத் தூக்கி வீசினார்களோ, அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.

இது இறுதி வெற்றி இல்லை, முதல் அடி மட்டுமே என்பதென்னவோ உண்மைதான். ஆனால் முதல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராஜராஜனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது என்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டை தான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆணையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத் தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. “”தீட்சிதர்கள் போலீசு கைகலப்பு” பிறகு “”ஆறுமுக சாமியின் ஆதரவாளர்கள் போலீசு கைகலப்பு” “”தீட்சிதர்கள் 11 பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35 பேர் ஆக மொத்தம் 46 பேருக்கு சிறை!” இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூறவேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள்தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற் படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச் 2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட முடியும்.

நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே “”மார்ச் 2ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்” என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.

கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப் பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?

சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றம்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. “பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது’ என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம்தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகத்துக்கே ஒளிபரப்பப் பட்டது.

காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, “போதும் பக்தனே போதும்’ என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியைப் நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.

சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் “கண்ணால் காண்பது பொய்’ என்ற முதுமொழிக்கு மிகப்பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டருந்தது.

···இதை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. “”சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல் துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர் மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்” என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.

“”நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்க முடியாது” என்றனர் போலீசு அதிகாரிகள். “”ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்” என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு கூறினார். ஆனால் “”அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது. கலைந்து செல்லுங்கள்” என்றார் ஆர்.டி.ஓ. “”மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது” என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.

உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறி கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.

சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிகைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கின்றன. “”போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்” என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களை வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.

அதே போலீசு அன்று மாலை தோழர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக் கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!

“சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி’ என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமல்படுத்தக் கோரினால் “சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி’ என்ற அதைவிடப் பெரிய அரசாணை அமலாகிறது! “”தமிழ் பாடலாம்” என்று ஆணையிடுகிறது அரசு. “”அதை அமல்படுத்த உத்திரவாதம் தர முடியாது” என்று அந்தக் கோயிலின் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஓ. “”அமல்படுத்து” என்று கேட்ட எமது தோழர்கள் போலீசு வேனுக்குள் இரவு முழுவதும் வைத்துப் பூட்டப்படுகிறார்கள்.

மார்ச் 2ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை நகர வீதிகளில் நாயகனாகப் பவனி வந்த ஆறுமுகசாமி அன்று மாலையே “அவருக்கு உரிய’ இடத்துக்கு தள்ளப்பட்டு விடுகிறார். “”எனக்காகப் போராடிய பிள்ளைகளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!” என்று தன்னந்தனியனாக போலீசு நிலையத்தின் முன் மறியல் செய்கிறார். காலையில் சிற்றம்பல மேடையில் போராட்டம்! மாலையில் போலீசு நிலையத்தின் முன் போராட்டம்!

பார்ப்பனத் திமிரையோ, போலீசின் அராஜகத்தையோ, இந்த அரசின் இரட்டை வேடத்தையோ அம்பலப் படுத்துவதற்காக மட்டும் இவற்றையெல்லாம் விவரிக்கவில்லை. இதுவரை விவரிக்கப்படாத ஒரு கொடுமையை, பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு எதார்த்தத்தை, நந்தனின் உள்ளத்தை எரித்திருக்கக் கூடிய அந்த உண்மையை வாசகர்கள் உணரச் செய்வதற்காகத்தான் இவற்றை விவரித்தோம்.

***
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நுழையக்கூடாத கோயிலுக்குள் நுழையக் கனவு கண்ட நந்தனை “கிறுக்கன்’ என்று அவனுடைய சொந்த சாதிக்காரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். “திமிர் பிடித்த மூடன்’ என்று பார்ப்பன உயர்சாதி ஆண்டைகள் வெறுத்திருக்கக் கூடும். கேட்பாரில்லாத அநாதையாய் அவன் அந்த ஆலயத்தின் வாயிலில் எரிந்திருக்கக் கூடும்.

நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. அரசும் ஆணையிட்டு விட்டது. ஆனால் மார்ச் 2ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எமது தோழர்கள் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நந்தனைப் போலவே, கேட்பாரற்ற அநாதையாக, நந்தன் எரிந்த அதே வாயிலில் ஆறுமுகசாமியும் அமர்ந்திருந்தார். “என்னை எரித்துக் கொல்’ என்று நந்தன் பார்ப்பனர்களிடம் மன்றாடவில்லை. ஆறுமுகசாமியோ, “என்னை கைது செய்’ என்று போலீசிடம் போராடினார். நீதிமன்றத்தில் மன்றாடினார். ஏனென்றால் நாங்கள் அகற்றப்பட்ட பின் அவருக்குத் துணை நிற்க அங்கே யாரும் இல்லை. தமிழுக்குத் துணை நிற்க ஒரு தமிழனுமில்லை. பக்தனுக்குத் துணை நிற்க ஒரு பக்தனுமில்லை.

ஆறுமுகசாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப்போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்..! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி!

தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் “திருச்சிற்றம்பலத்தை’ மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்தர்கள் அல்ல. திருமறையில் ஒரு வரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!

எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழகத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பல மேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்க முடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது.

கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மை தான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. கசப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.

இந்த உண்மையைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். “”யாருக்கும் பிரச்சினை இல்லை. இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!

இந்த உண்மையின் காரணமாகத்தான் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறலாமென்ற அரசாணை வந்தபிறகும், தமிழர்கள் கிடைக்காமல் அந்த மேடை தவித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் ஆறுமுகசாமியின் போராட்டத்தைத் தொடர்வதற்கு அடுத்தொரு “சாமி’ வரவில்லையென்றால், எந்தச் சாமியின் மீதும் பூதத்தின் மீதும் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அந்த மேடைமீது ஏறிநின்று “”உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” என்று பாடவேண்டியிருக்கும். அது இன்னொரு வரலாற்றுச் சாதனையாக அமைய நேரிடும்.

அத்தகையதொரு “சாதனை’ தமிழகத்துக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது. எங்களுக்குச் சிறுமையும் சேர்க்காது.·

மகரஜோதி பொய்! ஐஸ் லிங்கம் பொய்! பக்திப் பரவசமும் பொய்!


“”சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “”வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “”சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “”தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய “குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “”முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “”பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “”குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, “அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு’ என்று சொன்னால், “இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். “அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் “இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“”கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? “அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “”பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? “மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை “மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கைபகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த “பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து “தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் “ங’ப் போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த “உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக “உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு “தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் “ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து “ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் “தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

“டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “”இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “”ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “”ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, “எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி “சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக “சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, “சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். “கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். “பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. “கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

“மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், “ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். “பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “”இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “”மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், “பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’ பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

“டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். “குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் “பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் “பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது “ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

· மருதையன்

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!


மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “”குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு “”ராமன் என்ன எஞ்சினீயரா?” என்று கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

“”சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்” என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த “அட்டைக்கத்திகள்’ நிறைந்த இந்தக் காலத்தில் “ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை’, நினைவு கூர்வது, வேறெதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.

···

சென்னையிலுள்ள சூளையில் 14 ஏப்ரல் 1907இல் பிறந்தார் ராதா. தந்தை இராணுவத்தில் இருந்ததால் தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதா அது பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் டப்பி ரங்கசாமி நாயுடுவைச் சந்தித்ததால் அவரது பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ராதா. சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் பல வேலைகளைக் கற்றுக் கொண்டார். வீட்டார் வந்து அழைத்ததால் திரும்பிய ராதா பிறகு உடன்பிறந்தோரையும் கூட்டிக்கொண்டு மைசூர் சென்று நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

சுயமரியாதையோடு நடத்தப்படாததால் அங்கிருந்து வெளியேறி சாமண்ணா ஐயர் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு படிக்காதவர்களுக்கு மரியாதை இல்லாததால் ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார் ராதா. இங்கு கதரின் வெற்றி, பதிபக்தி போன்ற நாடகங்களில் நடித்தார். சினிமா முதல் சிவகாசி காலண்டர் வரை அனைத்திலும் கடவுளர்களின் பின்புறத்தில் இன்று நாம் காணும் ஒளிவட்டத்தை உருவாக்கி பதிபக்தி நாடகத்தில் அறிமுகப்படுத்தியவர் ராதா தான். அந்த ஒளிவட்டத்தை ஒழிக்கும் வேலையையும் பிற்காலத்தில் அவரேதான் செய்ய வேண்டியிருந்தது.

யாருக்கும் பயப்படாத மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ராதாவின் தன்மை மற்ற நடிகர்களுக்கு அவர்பால் அச்சத்தையே தோற்றுவித்தது. ஆனால் ராதாவின் நடிப்பு, கற்பனை வளம் ஆகியன மக்களிடம் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியிருந்ததால் அவரைத் தவிர்க்கவும் முடியவில்லை. நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்தபோது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது.

மரபுகளின் புனிதத்தன்மை குறித்து ஒரு ஏளனப்பார்வை அவரிடம் எப்போதும் நிலவி வந்திருக்கிறது. இழந்த காதல் என்ற புகழ்பெற்ற நாடகத்தில் ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரத்தை ஏற்ற ராதா நாடக சம்பிரதாயத்துக்கு மாறாக பார்வையாளர்களுக்குத் தனது முதுகைக் காட்டியபடி நீண்ட வசனம் பேசினாராம். அப்போது ராதாவின் நீண்ட தலைமுடி கூட நடிக்கும் என பின்னாளில் நினைவு கூர்ந்தார் கருணாநிதி.

அறுபதுகளில் வெளிவந்த “ப’ வரிசைப் படங்கள், உதிர்ந்து கொண்டிருந்த இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சசொச்சமான அற்பவாத உணர்வுகளைத் தூண்டி, சமூக மாற்றத்தில் ஒரு தேக்கத்தைக் கோரின. வாழ்ந்து கெட்டாலும் மாற்றுக் குறையாத மேன்மக்களையே அவை சுற்றி வந்தன. ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்ட சமூக அமைதியை போலிக் கையறுநிலையோடு குழைத்து இளைஞர்களுக்கு வழங்கின இத்திரைப்படங்கள்.

பார்ப்பனரல்லாத “மேல்’சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.

1942இல் ராதா நடித்த “இழந்த காதல்’ எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த “போர்வாள்’ நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய “தூக்குமேடை’ பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

தூக்குமேடை நாடகத்தைத் தஞ்சையில் நடத்தும்போது வேண்டுமென்றே பண்ணையாருடைய பெயரை “தென்பாதி மங்கலம் தியாகராஜ முதலியார்’ என வைத்தார் ராதா. கீழத்தஞ்சையில் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் கோலோச்சி வந்த அந்தக் காலத்தில் ராதாவிடம் வெளிப்பட்ட இந்தத் துணிச்சல் அசாத்தியமானது.

ராதாவின் திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவில் நாடகம் துவங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்திற்குப் பதில் இனவுணர்ச்சிப் பாடல்கள், பெரியார் தொண்டு பற்றிய நிழற்படங்கள் இடம்பெறும். “உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் கையில் சுத்தியல் அரிவாள் பிடித்தபடியுள்ள படத்துடன் திரையும் இருக்கும். பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டமும், அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் துப்பாக்கிச்சூடும், அரசின் அடக்குமுறையும் ராதாவை மிரட்ட முடியவில்லை.

ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நண்பனுக்கே தனது மனைவியை மணம் முடித்து வைப்பார் தொழுநோயாளியான ராதா. தாசி வீட்டுக்குப் போனாலும் கணவனே கண்கண்ட தெய்வமென்று காத்திருந்த கண்ணகிகளுக்கு சரியான வழியைக் காட்டினார் ராதா. தனது சிலையை ஊருக்கு நடுவே வைத்து எப்படி வாழக்கூடாது என்பதற்கு தன்னுடைய பாத்திரத்தையே உதாரணமாக்குமாறும் கோருவார். இளைஞர்கள் ரசித்தார்கள். பழமை விரும்பிகளுக்கோ இப்படம் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அன்று ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்கு சுதேசமித்திரனில் விமர்சனம் எழுதிய சாண்டில்யன், “”ஒருவரே வில்லனாகவும் கதாநாயகனாகவும் வருகிறார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுபவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பானா?” என ஐயமெழுப்பி இருந்தார். விடை காணப்பட வேண்டிய கேள்விதான் இது.

கதாநாயகனை நன்மைகள் அனைத்தின் திருவுருவமாகவும், பலவீனங்களும் குறைகளும் அற்ற சொக்கத் தங்கமாகவும், வில்லனைத் தீமையின் திரண்ட வடிவமாகவும் சித்தரிக்கின்ற உண்மையும் கலைத்தரமும் அற்ற நம்முடைய இலக்கிய மரபையும், சினிமா ஃபார்முலாவையும் ஒரே நேரத்தில் தாக்கித் தகர்க்கிறது ரத்தக்கண்ணீர். நாயகனே வில்லனாகிறான், பிறகு வில்லனே நல்லதைச் சொல்கிறான், நல்லவர்கள் எனப்படுவோரிடம் படிந்திருக்கும் பழமையையும் எள்ளி நகையாடுகிறான், எதிர்மறைக்குச் சிலை வைத்து நேர்மறையைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறான்.

ரசிகனோ “யார் யார் வாய் கேட்பனும் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று வில்லனின் நகைச்சுவையைக் கைதட்டி ரசிக்கிறான். இப்படத்திற்கான வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுதியிருக்கிறார் என்பது உண்மையானாலும், ராதாவின் வாயிலிருந்து அல்லாது வேறோரு நடிகரின் வாயிலிருந்து இந்த வசனங்கள் வந்திருந்தால் அவை இதே போன்ற வெற்றியைப் பெற்றிருக்குமா என்று சொல்ல முடியாது.

ராதா அந்த வசனங்களைப் பேசும்போது, கதா பாத்திரத்தின் குரல் அல்லாத வேறு ஒரு அலைவரிசையில் அது ரசிகனின் காதில் விழுகிறது. திராவிட இயக்கமும் பகுத்தறிவுக் கருத்துக்களும் அன்று பெற்றிருந்த அரசியல் செல்வாக்கும், அவற்றுடன் ஒன்று கலந்திருந்த ராதாவின் ஆளுமையும் கலைத்திறனும்தான் சாண்டில்யன் எழுப்பும் கேள்வியை ரசிகனின் மனதில் எழும்ப விடாமல் செய்கின்றது.

ஒரு நடிகன் என்ற முறையில் பல விதமான பாத்திரங்களில் நடித்தார் எனினும், ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் எற்று நடித்த எல்லாப் பாத்திரங்களின் மீதும் பதிந்திருந்தது. அதுதான் வில்லன் என்ற பாத்திரத்தையும் மீறி அந்தக் கருத்துக்களை ரசிகனிடம் கொண்டு சேர்த்தது.

···

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வருகையில் சென்னையில் 28.8.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார். நாடகத்திற்கு தடை விதித்தது அரசு. இதற்காகவே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார். ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா. அரசு பணிந்தது.

ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது. வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா. பார்ப்பனர்களால் ராதாவின் நாடகத்தை கீமாயணம் என்று தூற்ற முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை.

ஆறு வாரம் சென்னையில் நாடகம் நடத்திய பிறகு திருச்சி சென்றார் ராதா. “”என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்” என்று விளம்பரத் தட்டியை வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்.

பெரியாருக்கு கிடைத்த கல்லடியும், சொல்லடியும் ராதாவிற்கும் கிடைத்தது. தலித் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் என்று அறியப்படும் வைத்தியநாத அய்யர் தலைமையில் சில வீடணர்கள் மதுரையில் ராதாவை நாடகம் நடத்த விடாமல் தடுத்து இடையூறு செய்தனர். மக்கள் அவர்களை விரட்டியதோடல்லாமல் நாடகத்திற்கு தடைவிதித்து ராதாவைக் கைது செய்த காவல்துறையினரையும் சூழ்ந்து கொண்டு விரட்டியடித்தனர். காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்த பின்னரே கூட்டத்தைக் கலைக்க முடிந்தது.

கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. “ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் “வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, ஒரு கையில் கள்ளுக் கலயமும், மறுகையில் சிகரெட்டுமாக காவல் நிலையம் நோக்கி நடந்தார் “ராதா’ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. கோவையில் பழமைவாதிகள் பிரச்சினை செய்தனர். “”உயிருக்குப் பயப்படாதவர்கள் மாத்திரம் நாடகம் பார்க்க வாருங்கள்” என்று விளம்பரம் செய்தார் ராதா. மக்கள் முண்டியடித்து நாடகம் பார்க்க வந்தனர். போலீசு திகைத்து நின்றது.

வேலூர் முள்ளிப்பாளையம் தியேட்டரில் ராதாவின் நாடகம் நடந்த போது காங்கிரசு காலிகள் எதிர்ப்பு தெரிவித்து அடிதடியில் இறங்கினர். நாடகத்தையே கலகமாக நடத்திக் கொண்டிருந்த ராதா, தன் குழுவினரை நடிப்பில் மட்டுமின்றி, கம்புச்சண்டையிலும் பயிற்றுவித்திருந்தார் என்பது அந்த மூடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வேலூர் கடைத்தெரு வரை அவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள் ராதாவின் கலைஞர்கள்.

காங்கிரசார் விட்டுச் சென்ற வேட்டி, சட்டை மற்றும் துணிகளை மறுநாள் தியேட்டர் நுழைவுவாயிலில் மாட்டி வைத்து “வேலூர் பேடிகள் விட்டுச் சென்றவை’ என எழுதி வைத்தார் ராதா. பல ஊர்களில் ராதாவின் நாடகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நாடகம் நடத்தியதற்காக ஆறு வழக்குகளும், 16 நாள் சிறைவாசமும் ராதாவிற்கு கிடைத்தது.

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தது. அதற்கான விவாதம் நடந்த போது சட்டமன்றத்திற்கும் சென்றார் ராதா. மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தனக்காகவே சட்டம் வருவதால் அவ்விவாதத்தைத் தானும் அவசியம் பார்க்க வேண்டும் எனக் கோரினார் ராதா. ஒரு கலைஞனுக்காக தடைச்சட்டம் இயற்றிய “பெருமை’யை அன்று பெற்றவர் சி.சுப்ரமணியம்.

“”எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது” என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.
தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, திருவாரூர் தங்கராசுவை எழுத வைத்து, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் “தசாவதாரம்’ நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார்.

ராதாவின் இந்தப் போர்க்குணம் இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார் என்றால் அந்தக் காலகட்டத்தில் ராதா இளைஞர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

···

ராதா வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் எனினும் அதிகார வர்க்கத்தின் மீதும், பணக்காரர்கள், மிட்டாமிராசுகள் மீதும் ஒருவிதமான வெறுப்பையும் ஏளனப் பார்வையையும் அவர் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. அவரைப் போலவே பாய்ஸ் கம்பெனிகளில் படாதபாடு பட்டு, பின்னாளில் வசதி வாய்ப்புகளைப் பெற்ற எம்ஜியார், சிவாஜி போன்றவர்கள் ஆளும் வர்க்கத்தினருடன் சுமுகமாக ஐக்கியமாகிவிட்ட நிலையில், ராதாவின் ஆளுமை மாத்திரம் தனித்து நின்றது.

அதிகாரவர்க்கத்தின் தயவு தேவைப்பட்ட நாடக வாழ்க்கைக் காலத்திலேயே, இலவச பாஸில் நாடகம் பார்க்க வந்து, முன் வரிசையிலும் அமர்ந்து கொண்டிருக்கும் வசதி படைத்தோரையும் அதிகார வர்க்கத்தினரையும் நாடக வசனத்தின் மூலமாகவே நக்கல் செய்வார் ராதா.

ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் ராதாவின் சொல்லடிக்குத் தப்பவில்லை. “”அடியே காந்தா, சினிமாவுல முதலாளிங்க அதச் செய்றேன், இதச் செய்றேன்னு ஆசை காட்டுவாங்க. அதெல்லாம் நம்பி மோசம் போயிராத” என்று காந்தாவை எச்சரிப்பார் ராதா. செட்டியாரை மட்டம் தட்டுவதற்காகவே சேர்க்கப்பட்ட வசனம் அது.

இம்பாலா காரில் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்புவார் ராதா. அந்தஸ்தின் சின்னமாக இந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பெரிய மனிதர்கள் இதைக் கண்டு புழுங்கினர். சிவாஜி போன்ற நடிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது “”சாயம் பூசிய தகரத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்களே” என்று அவர்களைக் கேலி செய்திருக்கிறார் ராதா.

“”நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான்” என்று பொது மேடையிலேயே சாடியிருக்கிறார் ராதா. பகல் நேர சினிமாக் காட்சியை எதிர்த்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்கள் கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் “கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று தாக்கியிருக்கிறார்.

அன்றைய திராவிடர் கழக மாநாடுகளில் ஊர்வலத்தின் முகப்பில் கருஞ்சட்டை அணிந்து குதிரையின் மீது ஏறி அணிவகுப்பார் ராதா. மாநாடுகளின் இறுதியில் சமூக நாடகங்களும் நடத்துவார். அவர் தி.க. உறுப்பினராக இல்லாத போதிலும், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரில் உள்ள பிராமாணாள் என்ற வார்த்தையை அழிக்கும் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

“”கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது”, என்று தனது நாடகத்தில் சேர்க்கப்படும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களைக் குறை சொன்னவர்களுக்குப் பதில் அளித்தார் ராதா.

“”என்னைப் பொருத்த அளவில் நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக என்றுமே இதைவிட அதிகத் தொல்லைகளை ஏற்க வேண்டியிருந்தாலும் சரி, அந்த விலைகள் எனது உயிராக இருந்தாலும் சரி, அதற்கு நான் எப்போதுமே தயார்” என்று 1964இல் வெளியான பகுத்தறிவு ஆண்டு மலரில் எழுதினார் ராதா.

அது மிகையல்ல, அவரையும் அவரது நாடகக் குழுவையும் அழிப்பதற்காக நடைபெற்ற தாக்குதல்கள் ஒன்றிரண்டல்ல. தனது நாடகக் குழுவையே ஆயுதக் குழுவாக்கி தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்திருக்கிறார் ராதா. அடிதடிக்கும் சிறைக்கும் அவர் அஞ்சியதில்லை.

ஆனால், காமராசர் ஆட்சிக்காலத்தில் அவரது நாடகத்துக்கு அரசு தடை விதித்தபோது, ஆத்திரம் கொண்ட மக்களை அவரே முன்நின்று அமைதிப்படுத்திக் கலைந்து செல்ல சொல்லியிருக்கிறார். தன்னை பகத்சிங் கட்சி என்று சொல்லிக் கொண்டே நடைமுறையில் காங்கிரசு ஆட்சியை ஆதரித்திருக்கிறார். “பச்சைத் தமிழர் ஆட்சியைப் பாதுகாப்பது’ என்ற திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டால் அவரது அரசியல் பார்வை வரம்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், போலீசால் தேடப்பட்ட ஜீவாவுக்கு, தி.க நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறிப் பாதுகாப்பும் கொடுத்திருக்கிறார்.

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.

நாடகசினிமா வாழ்க்கைச் சூழல் மற்றும் அவை தந்த வசதிகளின் காரணமாக அவருடைய தனிப்பட்ட வாழ்வில் மைனர்த்தனங்களும் இருந்தன. திருமணத்திற்கு அப்பால் பெண்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளும், அந்த உறவுகளில் அவர் எதிர்பார்த்த ஆணாதிக்க “நேர்மை’யும், மீறினால் அவ்வீட்டு வாயிற்படியைக் கூட மிதிக்க மனமற்ற நிலப்பிரபுத்துவ கவுரவமும், திரையுலகில் இருந்த போதும் விருப்பமில்லாத பெண்களை நிர்ப்பந்திக்காத “ஜனநாயக’ப் பண்பும், தனது குறைகளைக் கூச்சமின்றி வெளிப்படையாகப் பேசும் தன்மையும் ரத்தக்கண்ணீர் ராதாவிற்குள் கலந்திருக்கும் நிஜ ராதாவின் சாயலைக் காட்டுகின்றன.

“கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று முழக்கமிட்ட ராதாவின் பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூறியபோது அதைக் கூச்சத்துடன் நிராகரித்தார் ராதா. 1963இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது “”மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்” என்று பேசினாராம் பெரியார். அது இன்று நடிகர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?

· வசந்தன்

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. “சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது’ என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் “ஜோதி’யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்…

மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய “குற்றத்துக்காக’ 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள்.

“சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்’ என்று பிப்.29ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்து விட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள், ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அரசு ஆணையை அமல்படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப் பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து “ஊழிக்கூத்து’ ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது தமிழ்!

இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை முயன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். “”தேவாரம் மீட்கப்பட்ட ஆலயத்திலேயே தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?” என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.

8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி. ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. “சாட்சியில்லை’ என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. “”இது வெறும் மனித உரிமை வழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு” என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. “”தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!” என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

“சிற்றம்பலத்தில் தேவாரம் பாடலாம்’ என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த பிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் “சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்’ என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப் பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!

“”அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்திக் கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்” என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர் நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.

அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுகளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.

சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?

சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணை எதற்கு?

சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.

தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்… என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!

வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!

உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!