புலால் உண்பவனுக்கு இல்லை வாய்ப்பெனில் புலியிம் சிங்கமும் பாவம் என்ன செய்யும்…


சடை முடி
தவத்திற்க்கே
தரிசனமெனில்
ஆலமரத்திற்க்கே
அமையும்

பழங்களும்
திணைகளுமே
உணவெனில்
பறவைகளுக்கே
பாக்கியம்

புலால் உண்பவனுக்கு
இல்லை வாய்ப்பெனில்
புலியிம் சிங்கமும்
பாவம்
என்ன செய்யும்

எங்கு நீ
இருந்தாலும்
எதனை நீ
உண்டாலும்
யாராக நீ
வாழ்ந்தாலும்

ஊணுக்குள் உயிராக
உயிருக்குள் ஒளியாக
ஒருவனை வைத்தால்
இறைவன் என்று

அர்ச்சனைத்தட்டுடன்
அவன் நாமம் சொல்லி
அன்பினை வேண்டி
அடியேனாய் நிற்ப்பான்
நீ வாழும்
கருவரை வாசலில்