காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!


கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்ஹிந்து!? என பெயர் வைத்து ஒரு தளத்தை நடத்தி கொண்டிருக்கும் பார்பனீய கூட்டம் அடிக்கும் ஜல்லிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!, இவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றுவது போல் கத்துவதும் கதறுவதும் சில ஆண்டுகளாகவே நாம் பார்த்து கொண்டு வருபவை தான், பெண்கள் சுதந்திரத்தை கெடுக்கும் வகையில் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து அது தப்பு இது தப்பு என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், நாலாந்தர பொறுக்கிகள் ரேஞ்சுக்கு அவர்களை மானபங்கபடுத்துவதும் அவர்களின் வழக்கமாக உள்ளது!,

பின் ஏனடா உங்கள் கோவில்கள் பெண் சிலைகள் பெரிய கொங்கைகளோடு இருக்குன்னு கேட்டால் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் பேசுவார்கள்! உண்மையில் இவர்களிடம் இருப்பது கலாச்சாரத்தை காப்பற்றும் எண்ணமா? இல்லை நீ மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்ற வயித்தெறிச்சலா என்பது தெரியவில்லை!

http://www.tamilhindu.com/2010/08/hindus-should-unite/

மேலோட்டமாக பார்த்தால் மேல்கண்ட பதிவு எதோ சமூக அக்கறையில் எழுதப்படுவது போல் தான் தோன்றும், ஆனால் உண்மையில் மக்களிடம் வக்கிரமான மதவெறியை தூண்டிவிடும் செயலை தான் இவர்கள் ஆதிகாலத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தோள் வரைக்கும் தலைமுடியும், நெஞ்சு(நெஞ்சு தான்) வரைக்கும் தாடியும் இருந்தால் அவன் சாமியார்! அவன் அன்பாக பேசுவானாம்! கோவமே வராதாம், வாயை திறந்தால் உண்மை மட்டுமே வருமாம்! அப்படி தான் சமீபத்தில் இலங்கை சென்று வந்த ஒரு சாமியார் அங்கே ஒன்றையும், இங்கே வந்து ஒன்றையும் உளரி கொட்டிகிட்டு இருந்தான்! பெங்களுரில் ஒரு சாமியார் என்னை கொல்ல முயற்சி என்று ஸ்டண்ட் விட்டு பிறகு அது நாயை(ரெண்டும் ஒண்ணு தானே) சுட வந்தவன் என தெரிந்ததும் வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்!

நித்தியான்ந்தன் மாட்டியவுடன் நேக்காக பீஜேபி ஆட்சி நடக்கும் கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றி நமது தேசிய வியாதியான ஞாபக மறதிக் கோட்பாட்டின் படி தற்போது ஜாமீனில் விடுவித்து அந்த எச்சக்கலையை மீண்டும் தொழில் செய்ய அனுமதித்து விட்டார்கள்.

சங்கராச்சாரி என்னும் வாழைஇலையில் கக்கா போகும் கெழட்டுக்காவிப்பய தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள, தனது தில்லுமுல்லுகளை மறைக்க செய்த தகிடுதத்தங்கள் உலகறியும், அதற்காக கொலை செய்து பின் பணத்தால் அதை மூடி மறைத்த குரூரத்தை மனசாட்சி உள்ள எவனும் அறிவான், கோர்டில் சாட்சி பிறண்டுவிட்டது என்பதால் இது பொய் குற்றசாட்டு என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தமிழ்ஹிந்து தளம் அப்பட்டமாக ஒரு குற்றவாளிக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறது!, அப்சல் குருவுக்கோ, அஜ்மல்கசாப்புக்கோ சாட்சி இல்லையென்று பிறண்டால் சும்மா இருப்பார்களா இந்த மெஜாரிட்டி கூட்டங்கள், நடுரோட்டில் வைத்து எரித்து விடமாட்டார்கள், ஒரிஸாவில் ஒரு பாதரியார் குடும்பத்தை எரித்தாமாதிரி!, மோடி திறம்பட ஆட்சி புரிகிறாராம்! கூட்டம் கூட்டமாக இஸ்லாமியர்களை கொன்று குவித்துவிட்டு, தனக்கு ஒத்துவராதவர்களை போலி என்கவுண்டர் செய்து இடிஅமின் ஆட்சி நடத்தும் மோடி இவர்களுக்கு ஹீரோ. நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம், அடுத்த மனிதனை கொன்று தான் நாம் வாழவேண்டிய கட்டாயத்திலா இருக்கிறோம்! பின் எப்படி மோடி ஹீரோ!? வேறொன்றுமில்லை புரையேறிப் போன மதவெறி தான் காரணம். இஸ்லாத்துக்கு ஒசாமாபின்லேடன் என்றால் இந்த்துவாவுக்கு நரேந்திரமோடி! பெரிய வித்யாசம் எதுவுமில்லை. மெஜாரிட்டி மக்கள் மனதில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கையும் வன்முறையையும் நியாயப்படுத்தும் விதமாக நஞ்சைக் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடும் மோடி இந்தியாவின் ஹிட்லர்!

சோனியா நாட்டின் இயங்குசக்தியாம், அவர் கிறிஸ்தவராம்! வேறு நாட்டில் ஒரு மாற்று மதத்தவர் ஒரு நாட்டை இயக்க முடியுமா என்ற கேள்வி வேறு!, நீ போய் அந்த நாட்ல குடியுரிமை வாங்கி தேர்தல்ல நிக்க வேண்டியது தானே, அதுக்கு தொடை நடங்குது. புண்ணாக்கு பயல்களுக்கு சீனாவில் மதம் சார்ந்தா ஆட்சி அமைகிறது என்ற கேள்வி ஏன் எழுவதில்லை!, சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,

அப்துல் கலாம் அன்னியநாட்டு கைக்கூலி என்று தான் இதுவரை சொல்லவ்ல்லை, அதையும் ஒருநாள் சொல்லிவிடுவார்கள்! இந்துத்வம் என்ற இவர்களின் கோஷம் வருடப் போக்கில் பெரும்பான்மை இந்துக்களிடமே நீர்த்துப் போன நிலையில் இயலாமையின் வடிகாலாக இணையங்களில் உளறிக் கொண்டிருக்கின்றனர்!

மார்க்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் இந்து மதம் தவிர மற்ற மதங்களை கேள்வி கேட்பதில்லை என்ற குற்றசாட்டு வைக்கிறார்கள்! இந்துத்வம் அளவு சாதிபிரிவினை மாற்று மதங்களிலா இருக்கு! எந்த சர்ச்சிலாவது காசு கொடுத்தால் முன்னாடி உட்கார் என்று சொல்கிறார்களா, எந்த மசூதியிலாவது காசு கொடுத்தால் சிறப்பு வழிபாடு செய்கிரார்களா? பொருளாதாரப்பிரிவினை, சாதிப்பிரிவினை என்று நாட்டின் புற்றுநோயாக இருக்கும் இந்துமதம் மற்ற மதத்தவர் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்!, உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு நொட்டைய வச்சிகிட்டு அடுத்தவனை குறை சொல்வதில் இந்து மதத்தை அடிச்சிக்க வேற ஆள்கிடையாது!

‘தலைமை ஹிந்து கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குழு ஆரம்பிக்கணுமாம், அதில் இருக்கும் தலைவர்கள் சொல்றதுக்கு 100 கோடி இந்தியர்களும் செவிசாய்க்கனுமாம்! இவனுங்க காவியக் கட்டிக்கிட்டு மார்கெட் போன நடிகைகள் கூட மஜா பண்ணிக்கிட்டு இருப்பானுக; இந்த வேலைக்கி போர்டு மெம்பர் பதவி ஒண்ணுதான் கேடு! சரி தலைவர்கள் யாருன்னு பார்த்தா மொதப்பேரே பெரிய கேடி பேரா இருக்கு! ”அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரி, கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்” எப்படி? தில்லாலங்கடி வேலை செய்து மக்களை ஏமாற்றும் ஹிப்பி தலையன் முதல் பெயர்!, இதில் கொலை குற்றம்சாட்டபட்ட சங்கராச்சாரி பெயரும் இருக்கு!, நிச்சயம் நித்தியானந்தா பெயரும் வரும்! ஏன்னா இந்த மதத்தை பொறுத்தவரை தலைமையில் இருப்பவர்கள் என்னவேண்டுமாலும் செய்யலாம், ஏமாளி மக்கள் அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது!

ஞானம் பேராபத்தில் சிக்கியுள்ளதாக வருத்தப்படுகிறார்கள், ஞானத்திற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை! என்னவோ இந்தியாவில் மட்டுமே அறிவாளிகள் இருப்பதாகவும், மற்ற நாட்டுக்காரனெல்லாம் கேனப்பசங்க போலவும், அவர்கள் இங்கே வந்து இவர்கள் அறிவை மழுங்கடிப்பது பேசிக்கொண்டிருக்கிறார்கள், மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுத்த இந்த மதவாத குரங்குகள் தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் சேர்த்து கெடுக்க நினைப்பது தான் ஏனென்று தெரியவில்லை!

எல்லா வல்ல கடவுளை கும்பிட உனக்கு எதுக்கு மீடியேட்டர்?

உன்னை படைத்த கடவுளுக்கு நீ பேசும் மொழியை ஏன் புரிந்து கொள்ள முடியாது? ஏன் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை பண்ணுவோம் என அடம்பிடிக்கிறார்கள்?

கடவுள் பெருமையை பரப்ப நினைப்பவர்கள் தானே கடவுளாக காட்டி கொண்டு, கால் கழுவிய தண்ணிருக்கு கூட பெரிய பில்டப் ஏறுவது ஏன்?

நீ மனிதனாக இருக்க மதம் உனக்கு என்ன வகையிஉல் உதவி செய்திருக்கிறது?

மத குருமார்கள் கழுவும் (எல்லாத்தயும்தான்) நீரை உள்ளங்கையில் நாம்பிப் பிடித்து பக்தி வழிய குடிப்பதால் விளையும் நன்மை என்ன?

நாட்டில் இருக்கும ஆயிரக்கணக்கான கோயில்களால் கண்ட பயன் என்ன? மேற்கொண்டு அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டி எதை சாதிக்கப் போவதாய் உத்தேசம்?

உரிய பதில்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம், ரியாக்ஸனை மட்டும் கவனிப்போம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: