ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த தமிழ்ப் புத்தாண்டு…


நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது
குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை
அடிப்படையாகக் கொண்ட சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு
இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை
மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு
கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில்
ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது
காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும்
சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும்
வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான
உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும்
கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச்
செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற
பெயரில் இணைப்புகளை (supliments) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த
ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும்,
வெட்கப்படத்தக்கதுமாகும்.

இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப்
பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி
விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தனமாக
கூசாது எழுதித் தொலைக்கின்றன.

12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை
ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு
முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும்
ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும்
கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள்
என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல்
வானியல் விடுக்கும் வினா இதுதான்:

கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை
ஏற்றுக் கொண்டிருக்கிறது?

ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன
என்றெல்லாம் மனிதர்களுக்குத் தவறான முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக்
கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில்
நிறுத்தவேண்டாமா?

சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக்
கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்,
புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்
கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி
பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல்
இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும். இது ஓர் அடிப்படைக்
கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை
மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை
எடுப்பது தவறல்ல!

குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச்
சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய
முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால்
தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில்
ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின்,
அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக்
குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே
என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

கலரவத்துக்குக் கத்தியைத் தீட்டும் இந்து முன்னணி…


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோயில் இப்பொழுது
பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்
ளது. கோயில் உள்ள இடம்
கிறித்துவர்களுக்குச் சொந்தமானது என்ற நிலையில், பிரச்சினை
கிளம்பியுள்ளது. கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இருதரப்பினரையும்
அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது கூட்டத்தின்
முடிவுக்கு ஒத்துழைக்காமல் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறும்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பேராயரிடம் கேட்டு முடிவு சொல்ல 10
நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் வரும் 15 ஆம் தேதி
மாலை நடைபெறும்; அதுவரை இப்பொழுதுள்ள நிலையே தொடரும் என்று
அறிவிக்கப்பட்டது. இந்துக்கள் சார்பில் கலந்துகொண்ட இந்து முன்னணியைச்
சாராதவர்கள் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டனர். எதையும் பிரச்சினையாக்கி,
சூடாக்கி அதன்மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதானே இந்து முன்னணி
வகையறாக்களின் அணுகுமுறை? அதன்படி 25 பேர்களைத் திரட்டிக் கொண்டு
கோயிலுக்குள் நுழைந்து வழிபட முனைந்துள்ளனர். காவல்துறை தடுத்துள்ளது.
வாக்குவாதம் சூடாகியிருக்கிறது.

இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இராமகோபாலனை அழைத்து
வருவோம் என்று மிரட்டலில் இறங்கியுள்ளனர்.

எந்தவித சட்டம் ஒழுங்குக்கும் கட்டுப்படாதவர்கள் இவர்கள். விநாயகர்
ஊர்வலம் என்று காவல்துறையிடம் அனுமதி பெறுவார்கள். அனுமதி பெறும்வரை
நயந்து, பெற்றபின் அனுமதி வழங்கப்பட்ட பாதைகள் வழியாக செல்லாமல், அனுமதி
மறுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று நுழைய
முற்படுவார்கள். காவல்துறை தடியடி நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடனே
இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்று கூச்சல் போடுவார்கள்.

இந்துக் கோயில் இருக்கிறது. எனவே வழிபட எங்களுக்கு உரிமை உண்டு என்று
இந்து முன்னணியினர் சொல்வார்களேயானால், அதே காரணம் வேலூர்
கோட்டைக்குள்ளிருக்கும் முஸ்லிம்களின் தர்காவுக்குப் பொருந்தாதா? அங்கு
மட்டும் வேறு நியாயம் பேசுவது ஏன்? எதிலும் இரட்டை அளவுகோல்தானா?

பாபர் மசூதி பிரச்சினையை சங் பரிவார்க் கும்பல் கையில் எடுத்துக்கொண்ட
காலந்தொட்டு, இதுபோன்ற பிரச்சினைகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே
வெடித்துச் சிதற ஆரம்பித்துவிட்டன.

பாபர் மசூதிக்குமுன் அங்கு ராமன் கோயில் இருந்தது; பாபர், ராமன் கோயிலை
இடித்துவிட்டுத்தான் மசூதியைக் கட்டினார் என்று தம் போக்கில்
பேசினார்கள்; பிரச்சாரம் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான மக்களை வெறியூட்டி கூட்டிச் சென்று, கரசேவை என்ற
பொய்யான தகவலை நீதிமன்றத்திற்குச் சொல்லி உள்ளே சென்று, 450 ஆண்டுகாலம்
வரலாறு படைத்திட்ட பாபர் மசூதியைத் தரைமட்டமாக இடித்துத் தள்ளியது எந்த
வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

இப்படி வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தினால் பல அதிர்ச்சியூட்டும்
தகவல்களை இந்துத்துவாவாதிகள் சந்திக்க வேண்டியிருக்கும்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், காஞ்சிபுரம்
ஏகாம்பரேசுவரர் கோயில் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு; இவை எல்லாமே
புத்த விகாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு அவ்விடங்களில் கட்டப்பட்ட
கோயில்கள் என்பதற்கு அழுத்தமான, ஆணித்தரமான ஆதாரங்கள் உண்டே! அதன்
அடிப்படையில் நடந்துகொள்ளத் தயார்தானா?

வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறதா ஆர்.எஸ்.எஸ். வகையறா?

செஞ்சியில் கலரவத்துக்குக் கத்தியைத் தீட்டப் பார்க்கிறார்கள்; கடுமையான
நடவடிக்கைகள்மூலம் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதுதான் நமது
கனிவான வேண்டுகோளாகும்.

”விடுதலை” தலையங்கம்

பூணூல் பாசத்துடன் தினமணி வெளியிட்ட செய்தி


ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்தியை எப்படி வெளியிடுகிறது?

ஆந்திரத்தில் ஆளுநராகப் பதவி வகித்த நாராயண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.

எப்படி செய்தி? புரிகிறதா? உடல்நலம் சரியில்லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!

தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்களிலும், வாசகர்களின் கண்களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்கிறதே அதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வெடித்துக் கிளம்புகிறது!

86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவநாதன் லீலைகள் விலாவாரியாக ஏடுகளில் வெளிவந்துள்ளன; தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் லீலைகள்பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளுநரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிரவாகித்துவிட்டது.

ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றினார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!

இவ்வளவு நடந்திருக்கிறது ஊர் உலகமே சிரிக்கிறது. ஆனால், தினமணியின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடுகிறார்.

இதன்மூலம் தினமணியின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்துகொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?

காரணம் என்ன தெரியுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.

ஹி… ஹி…. ஹி….. ஹி….. பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? –

—————-மயிலாடன் அவர்கள் 30-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

நன்றி :தமிழ் ஓவியா