தனியார் மயம் வந்தாதான் இவனுங்கள்ளெல்லாம் திருந்துவானுங்க“


“ஐம்பது பைசா சில்லறை தர மாட்டேங்குறான் இந்த கன்டக்டரு தனியார் மயம் வந்தாதான் சார் இவனுங்கள்ளெல்லாம் திருந்துவானுங்க“

‘‘காலைலேல ஒன்பது மணிக்கே வந்தேன் சார். இன்னும் கரண் பில் கவுண்டருக்கு வந்து காசை வாங்கிட்டு பில்லை தரமாட்டேங்குறானுங்க பாருங்க தனியார் வந்தான் சார் இவனுங்க எல்லாம் திருந்துவானுங்க”

நேத்துதான் சார் டிக்கெட் அவலபிளா இருந்தது இன்னைக்கு வந்தா வெயிட்டிங் லிஸ்ட் இருநூறைத் தாண்டுது. தனியார் டிர்யின் உட்டாதான் சார் இவனுங்க எல்லாம் வழிக்கு வருவானுங்க”

பால் பூத்தில்,பேருந்தின் நெருக்கத்தில், மின்சார அலுவலகத்தில்,பஞ்சாயத்து அலுவலகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கேட்டு பழகிய வார்த்தைகள்தான் இவைகள். இன்னும் கொஞ்சம் பேர் ‘‘ராணுவ ஆட்சி வரணும்.என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். மத்யமரின் மனோபாவத்திலிருந்து உருவாகும் சொற்களை இன்றைக்கு கேட்பது கடினமாக இருக்கிறது.

“சில்லறை இல்லைணா அவன் என்ன சார் செய்வான்”

“அரசாங்கத்திடம் கரண்ட் இருந்தாதானே தரும்.அவங்களும் எங்கதான் போவாங்க“என்ற பொருமல்களை சமீபத்தில் கேட்க முடிகிறது.

இதோ தனியார் தாராள மயம் ஊரெங்கும் கடை விரித்திருக்கிறது. நாம் நடந்து பழகிய சாலைகளில் இன்றைக்கு வரி வசூலிக்கிறான். நம் ஊருக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதைகள் நெடுகிலும் சுங்கச்சாவடிகள்,அவசரமாக சிறுநீர் கழிக்க இலவசமாக போன காலம் மாறி இரண்டு ரூபாயை ஏதோ ஒரு கோடீஸ்வரனுக்கு கட்டியழ வேண்டியிருக்கிறது. குடிக்கிற தண்ணீர், சுவாசிக்கிற காற்று கூட விற்பனைக்கு வந்து விட்டது. எல்லாம் சந்தைதான் இயர்க்கையான காற்றும் தண்ணீரும் கூட நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு எங்கும் தனியார் மயம்.

ரத்தத்தைச் சிந்தி உளைத்த காசும் அம்மாவின் தாலியை அடகு வைத்த காசையும் கொண்டு போய் ஆசிரியர் பயிர்ச்சி பள்ளியில் கொடுத்த மாணவிகள் அரசுத் தேர்வு எழுத முடியாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள்

. அவர்களை அப்புறப்படுத்த ரௌடிகளை கொண்டு அச்சுறுத்துகிறது. அரசு அங்கீகாரமே பெறாத தனியார் ஆசிரியர் பயிர்ச்சி பள்ளி நிர்வாகம்.மருத்துவக் கல்லூரியையும் தனியாருக்கு கொடுத்தாயிற்று.பணக்காரன் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் கல்வியாக மருத்துவம் மாற்றப்பட்டு விட்டது. அடுத்து சட்டக் கல்லூரிகள் அதுவும் தனியார் மயம் எதிர்த்துக் கேட்டால் தடியடி கைது மிரட்டல்கள்.

பணக்காரன் கையில் அதிகாரமும் அரசும் இருக்கிறது ஏழைகள் கையில் கட்டியிருக்கும் ஒடுத்துணியை விட என்னதான் மிச்சம்.
கோவணத்தோடு தூக்குக் கயிறுகளை மட்டுமே வைத்திருக்கும் விவசாயிக்கு

,மீனவனுக்கு, பெண்களுக்கு உதவ வருகிறார்கள் தன்னார்வக் குழுக்கள். சுனாமிக்கு பின்பு பல நூறு தன்னார்வக் குழுக்கள் தென் கிழக்காசிய கடலோரங்களை ஆக்ரமித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிலும் தமிழக கடலோரங்களை குறிவைத்து புற்றீசல் போல் படையெடுத்திருக்கும் தன்னார்வகுழுக்கள். ஏழைகளுக்கு கடன் கொடுப்பது, வீடு கட்டிக் கொடுப்பது,சிறு சிறு குழுக்களை அமைத்து முற்போக்கு பேசுவது அப்படியே அதை போட்டோ எடுத்துப் போட்டு வெள்ளைக்கரனிடம் பிச்சை எடுத்து கோடிகளை சுருட்டுவது இவைகள்தான் தன்னார்வக் குழுக்களின் பணிகள். சுனாமி. வெள்ளச் சேதம் இப்படி ஏதோ ஒன்றில் ஏழை பாளைகள் பாதிக்கப் பட்டால் இந்த தான்னார்வக் குழுக்களுக்கு கொண்டாட்டம்.இவர்களின் வங்கிக் கணக்கு கொழுத்து விடும்.

அன்றாடம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வாழ்வுரிமை இழந்து வாழும் இந்த உளைக்கும் மக்கள் புரட்சிகர சக்திகளின் பால் ஒன்றிணைவதை தடுப்பதே இந்த தன்னார்வக் குழுக்களின் பணி

. அறிவு ஜீவிகள்,குறும்பட இயக்குநர்கள்.பத்திரிகையாளர்கள்,முற்போக்காளர்கள் எனக் கூறிக் கொள்வோர் என யாரையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை.இந்த துரோகக் குழுக்களோடு சேர்ந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கூட்டம்தான் இந்த அறிவு சீவிக் கூட்டம்.

ஒருவர் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் நடத்துகிறேன் என்றார்

. எங்கிருந்து வந்தது இந்த அக்கறை.எல்லாம் ஃபன்ட்…..போர்ட் பவுண்டேசனும்.பி.எம்.டபிள்யூ கம்பெனிக்காரனும் கொட்டிக் கொடுக்கிறான் அதை வைத்து இவர்கள் நக்கிப் பிழைக்கிறார்கள்.

சரி

,

அரசாங்கம் செய்கிற வேலைகளை எல்லாம் தன்னார்வக் குழுக்களே செய்து விட்டால் அரசாங்கம் என்னதான் செய்யும். அது பட்டினியால் செத்துப் போகும் விவசாயியை நறு மணப் பொருட்கள் தூவி அடக்கம் செய்யும் இதுதான் அரசாங்கத்தின் பணி என்றால் அதற்கு எதற்கு ஒரு கோட்டை தேசீயக் கொடி…மயானக்காட்டில் அல்லவா இருக்க வேண்டும்.

எல்லாம் தனியாரின் கையில் கொடுத்து விட்டு வருடா வருடம் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற மட்டும்தான் அரசா? கடந்த 2004&ல் சுனாமி அலை தென்கிழக்காசிய கடலோரங்களை தாக்கிய போது தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8,000 பேர் கோரமாக பலியானார்கள். மாநில அரசுகள் இந்தப் பேரிடரை எதிர் கொள்ள நிதியில்லை என்று சொல்லி மத்திய அர்சிடன் கேட்டது. அதில் பாதி கூட மத்திய அரசு கொடுக்க வில்லை கொடுத்த தொகையும் சுனாமிக்கு பயன் படுத்தப்பட வில்லை.ஆனால் தன்னார்வ அமைப்புகள் மூலம் தமிழகத்துக்கு வந்த தொகையோ 37,000 கோடி இதில் பாதி கூட மீனவ மக்களுக்கு செலவிடப் படவில்லை.முறையாக வந்த நிதிகள் செலவளித்த தொகைகள் குறித்து விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.
நாடே தனியாருக்கு இறையாக்கப்படும் சூழலில்…

இதோ, இந்தியாவில் இனி தனியார்களும் அணு மின் நிலையத் தொழிலில் ஈடுபடலாம். இந்திய தொழில் கூட்டமைப்பு இந்இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. ரிலையன்ஸோ முந்திக் கொண்டது அணு தொழில் நுட்பத்தின் சாத்தியங்களை ஆராய முன்னாள் அணு சக்தி தலைவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது ரிலையன்ஸ்.

எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை

. கொதிப்பு உயர்ந்து வருகிற போது இந்தக் கேவலங்களை மீறிச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

கடைசியாக

,

கடற்கரை மேலாண்மைத் திட்டம் என்ற கடற்கரைச் சட்டத்தை விரைவில் கொண்டு வர இருக்கிறது மத்திய அரசு. காலம் காலமாக கடலை மட்டுமே நம்பி வாழும் பாரம்பரீய மீனவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தி விட்டு அதை தனியார் முதலாளிகளுக்கும் பெரும் ஹோட்டல் பண்ணையார்களுக்கும் கொடுக்க திட்டம். இப்போது நீங்கள் சென்னையில் இருக்கும் பட்டினப்பாக்கத்துக்குப் போங்கள் அங்கு செட்டிநாட்டு அரசர் என்று சொல்லப்படும் ஒருவர் கடற்கரையையே ஒரு செட்டி நாடு அரணமனையாக மாற்றியிருக்கிறார். சரி நாட்டுக் கோட்டையில் இருந்து வரும் போது பட்டினப்பாக்கத்துக்கு பட்டாவோடா வந்தார் இந்த செட்டிநாட்டரசர். இந்த கடலோரத்தில் இருந்த குடிசைகளும் மீனவ மக்களும் எங்கே?

அவர்கள் துரத்தப்பட்டார்கள் இன்று மாளிகைகள் எழும்பி நிற்கின்றன.

கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை இன்று எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் தன்னார்வக் குழுக்கள்தான்

. முட்டாள்தனமான மக்களும் இந்த தன்னார்வக் குழுக்களை நம்பி இருக்கிறார்கள். ஆனால் இது திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களாலும் தன்னார்வக் கைக்கூலிகளாலும் நடத்தப்படும் நாடகம். எதிர்ப்பது போல் எதிர்த்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் கடற்கரை மேலான்மைத் திட்டத்தை கொண்டு வருவதுதான் இவர்கள் நோக்கம். நாளை நீங்கள் கடற்கரைக்கு போகலாம் கேளிக்கை விடுதிகளில் பொழுது போக்கலாம் எதிர் மின்னணு தன்மை அதிகம் உள்ள கடற்கரை காற்று வாங்கவும் நீங்கள் காசு கொடுக்க நேரிடலாம். ஆனால் இந்த கடலோரங்கள் நெடுகிலும் பரந்து விரிந்த மக்கள் மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான தடயங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும். என்ன செய்யப் போகிறோம் நாம்.