நாங்க மனுசங்கடா!!!


மனுசங்கடா!!!
நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!!
நாங்க மனுசங்கடா!!!
எங்களோட முதுகுக்கு என்ன இரும்புலத்தோலா…….டாய்
உங்க இழுப்புக்கெல்லாம் பணியுரதே
எங்களின் கணக்கா…
( மனுசங்கடா)……….
சதையும் எலும்பும் நீங்க வெச்ச
தீயில் வேவுது
உங்க சர்க்காரும் கோட்டும் அதுல
எண்ணைய ஊத்துது……..(2)
எதை எதையோ சலுகையின்னு
அறிவிக்கிறீ ங்க(2)- நாங்க
எரியும் போது……..-நாங்க
எரியும் போது
எவன் மயிர புடுங்க போனீங்க???
(மனுசங்கடா)………..
ரத்தக் கறையத் தீக்க வந்த மனுசங்கடா…..
பழங்க்கட்டையெல்லாம் வெட்டி எறியும் மனுசங்கடா….
நாங்க மனுசங்கடா…….
………………………இன்குலாப்