எல்லாம் ..இல்லை… ஆனால் …எல்லாம் …இருக்கிறார்கள் …


”முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்” இது அரை டவுசர்களின் விஷப் பிரச்சாரம். இதில …………… எல்லாம் …………. இல்லை. ஆனால் ……………. எல்லாம் ……………. இருக்கிறார்கள் என்கிற டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு அதில் சொற்களை மட்டும் மாற்றிப் பார்த்தேன். இதைப் போல பல சொற்றோடர்களை உருவாக்கலாம் போலிருக்கிறது.

சில உதாரணங்கள்.

உயர்ஜாதி ஹிந்துக்கள் எல்லாம் பங்குசந்தையில் ஊழல் செய்வதில்லை. ஆனால் பங்குசந்தை ஊழல் செய்பவர்கள் எல்லாம் உயர்ஜாதி இந்துக்களாக இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் எல்லாம் கோவில், மடங்களில் காமலீலை புரிவதில்லை. ஆனால் கோவில், மடங்களில் காமலீலை புரிபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.

பணக்காரர்கள் எல்லாமே சாமியார்களாக இருப்பதில்லை. ஆனால் சாமியார்கள் எல்லாம் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

பி.ஜே.பி காரர்கள் எல்லாம் ஜின்னாவை புகழ்வதில்லை. ஆனால் ஜின்னாவை புகழ்பவர்கள் எல்லாம் பி.ஜே.பி காரர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த டெம்ப்ளேட்டை வைத்து நீங்களும் பின்னூட்டமிடலாம்.

வந்தே மாதரம் – அடிமைத்தனத்தின் குறியீடு …


சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த உலமாக்கள் மாநாட்டில் வந்தே மாதரம் என்கிற பாடல் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்கிற காரணத்தால் அப்பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என மதக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் வந்தே மாதரம் என்கிற பாடலை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதை வைத்து பார்ப்பனீய சக்திகள் அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்துவிட்டன. முதலில் அரசியலையும் மதத்தையும் கலந்து இஸ்லாமிய மக்கள் உலமாக்களின் கட்டளைக்கு கட்டுபட வேண்டும் என்கிற நோக்கத்தோடு விடுக்கப்பட்டிருக்கும் இந்த மதக்கட்டளைக்கு எதிராக எமது கண்டனத்தை பதிவு செய்கிறோம். அதே சமயம் வந்தே மாதரம் என்கிற பாடல் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற எமது கருத்தையும் பதிவு செய்கிறோம்.

வந்தே மாதரம் என்கிற பாடல் தேசபக்தியின் குறியீடு என்கிற பொய்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது. வந்தே மாதரம் என்கிற பாடலின் வரலாற்றை சீர் தூக்கிப் பார்த்தால் அது அடிமைத்தனத்தின் குறீயீடே தவிர தேசபக்தியில் குறியீடல்ல என்பது தெளிவாகிறது.

1882 ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்கிற வர்ணாசிரம வெறியன் இந்து உயர்ஜாதியினரை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக (கவணிக்கவும்: வெள்ளையனுக்கு எதிராக அல்ல) தூண்டுவதற்காக் எழுதிய ஆனந்த மத் புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் தான் வந்தே மாதரம். 19 ம் நூற்றாண்டிம் மத்தியில் வர்ணாசிரம் கொடுமை தாளாமல் கிழக்கு வங்கத்தைச் (இன்றைய பங்களாதேஷ்) பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவினர். பெரும்பாண்மை மக்களான இவர்கள் கூட்டம் கூட்டமாக் மதம் மாறியதால் கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அபரிதமாக பெருகியது. நேற்றுவரை நமக்கு அடிமையாக் இருந்தவர்கள் இன்று மதம் மாறி ஆளும் வர்க்கத்தின் (அப்போது வங்கத்தை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்) ஒரு அங்கமாக ஆகிவிட்டதை பொறுக்க முடியாத ஒரு பார்ப்பனீய வெறியனின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக எழுதப்பட்ட நூல்தான் ஆனந்த மத்.

சர்ச்சைக் குறிய வந்தே மாதரம் பாடலில் துர்கை என்கிற பெண் தெய்வத்தை போற்றி பல வரிகள் உள்ளன. இப்பாடல் எழுதப்பட்ட கால கட்டத்தில் துர்கை கோயில்களில் சூத்திரர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ நுழையக் கூட முடியாது. ஆகவே துர்கை என்பது வங்காள உயர்சாதியினரால் மட்டுமே வணங்கப்பட்டு வந்த ஒரு தெய்வம் என்பது தெளிவாகிறது.

பத்ரலோக பார்ப்பனீயத்தின் குறியீடான வந்தே மாதரம் பாடலை உயர்சாதியினரால் தீண்டத்தகாதவனாக கருதப்படும் நான் பாட மாட்டேன் என பேராசிரியர் காஞ்சா இலையா கருத்து தெரிவிக்கிறார்.

அவர் சுயமரியாதையுள்ளவர். நீங்கள் ?

எடக்கு மடக்கு – கேள்வி பதில்கள்…


2009 ம் ஆண்டின் சிறந்த குழப்பவாதி யார்?

சந்தேகமேயில்லாமல் காங்கிரஸ்தான். தெலுங்கானா பிரச்சினையில் அவர்கள் குழப்பியது போல தெளிவாக குழப்ப வேறு யாராலும் முடியாது.

ஒரு குற்றவாளி தேசியவாதியாக மாற என்ன செய்யவேண்டும்?

சிபு சோரனை கேட்டால் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தால் போதும் என்கிறார்.

பணம் பாதாளம் வரை பாயுமா?

இப்போதெல்லாம் வாக்கு பதிவு இயந்திரம் வரை பாய்கிறது.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய என்.டி. திவாரி உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்?

பா.ஜ.க வில் சேர்ந்துவிட சொல்வேன். கர்நாடகாவில் ரேணுகாச்சார்யா அமைச்சரானதை போல அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஈழப் பிரச்சினையில் தி.மு.க வின் நிலைப்பாடுப் பற்றி?

பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்.

இடஓதுக்கீட்டின் காரணமாக தகுதி இரண்டாம்பட்சமாகிறது என்று சிலர் புலம்புகிறார்களே?

2006 ம் ஆண்டு நான் பெங்களூரில் பணியில் இருந்தபோது IIT மற்றும் IIM போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தருவதாக அறிவித்தபோது அதனால் தகுதி அடிப்படுகிறது என்று புலம்பிய கன்னட உயர்சாதியினர், 2 வருடம் கழித்து அரசியல் இடஒதுக்கீட்டினால் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து (ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட குறைந்தபட்சம் 1500 – 2000 ஆண்டு பழமையான இலக்கியங்கள் அம்மொழியில் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என பல தகுதிகள் வேண்டும்) வழங்கப் படடபோது வரவேற்றனர். ஆக இடஒதுக்கீட்டினால் அவர்களுக்கு லாபம் எனும் பட்சத்தில் தகுதி பற்றிய கேள்வி எல்லாம் எழாது.

கமலிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி?

அதை சுப.வீ ஏற்கனவே கேட்டுவிட்டார். (நீங்கள் யார்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?)

ரயில்வே அமைச்சராக மம்தாவின் செயல்பாடு?

பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். மம்தா இரண்டாம் வகை.

பொதுவிடத்தில் மத உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள் பற்றி?

மதஉணர்வு என்பது மர்ம உறுப்பு போன்றது. என் வீட்டுக்குள் நான் அம்மணமாக இருக்கலாம். பொதுவிடத்தில் அப்படி இருந்தால் அநாகரிகம்.

காங்கிரஸ் – பா.ஜ.க ஒப்பிடுக?

ஒன்று பார்ப்பனியத்தை தேவைப்பட்டால் பயன்படுத்தும், மற்றொன்று பார்ப்பனீயத்தை எல்லாவற்றிற்கும் பயன் படுத்தும்.