ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…


அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் “பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்” என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல – மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த “பிற்படுத்தப் பட்டோ ர்” என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் – குறிப்பாக மாண்டேகு – சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் – இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.

இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் – நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் – தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் – வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் “வன்னிய குல சத்திரியர்” என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல ‘ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?” என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் ‘ஆண்ட பரம்பரை’ப் பொறுக்கிகளுக்குத்தான்…இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை ‘தேவர்’தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் – தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்–கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்…2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
…….
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை ‘ஓசிச்சோறு’ என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ‘எனக்கு சிரைத்து விடு’ என்றோ ‘என் செருப்பைத் தைடா’ என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்…மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் – ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்… இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே – சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் ‘சமூக நீதியை’ காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ‘சமத்துவப் பெரியாரும்’ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் – அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் ‘தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டிருந்தபோது ‘இரட்டைக்குவளைகள் முறை பற்றி’கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது “தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்..”

****************

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said…

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

“There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920’s to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society”

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது…கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது…ரெட்டை டம்ளர் டீ க்கடை… எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்…நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்…பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு…ன்னு மீசையை முறுக்கறதும்… ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்…ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்… பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?

இந்துவும், இந்து தேசியமும்!


நம்மை நோக்கி எப்பொழுதுமே வெகு சுலபமானதொரு கேள்வி ஒன்றை கேட்பார்கள் பார்ப்ப்னியத்தின் ஆதரவாளர்கள். அதாவது, ‘ஏன் எப்பொழுதும் இந்துத்துவத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் இதே போன்று மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையே’.

இதற்க்கு நாம் பொதுவாக, இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே எனவே அதனை எதிர்ப்பதுதான் எமது முதல் கடமை. மற்றபடி பிற மத அடிப்படைவாதங்களை தேவையான போது மதம் என்ற அடிப்படையில் விமர்சித்தே வந்துள்ளோம். என்பதாக நமது பதில் இருக்கும்.

ஆனால் இந்த இடத்தில் பார்ப்ப்னியத்தின ஆதரவாளர்கள் ஒரு பித்தலாட்ட வேலை செய்கிறார்கள். நாம் இந்துத்துவம் என்று எதிர்ப்பது பார்ப்ப்னியத்தை மட்டுமே, ஆனால் இவர்கள் நம்மை பார்த்து கேள்விக் கேட்க்கும் போது இஸ்லாம், கிறுத்துவர் தவிர்த்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் இந்துத்துவத்திற்க்குள் அடக்கி கேள்வி கேட்பார்கள்.

ஆக, விசயம் இதுதான். ‘இந்துத்துவத்தை தான் நீ எதிர்ப்பாயா? வேறு எதையும் எதிர்க்க மாட்டாயா?’ என்று நம்மிடம் கேள்விக் கேட்க்கப்பட்டால், நாம் பதிலுக்கு அவர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்வி:

‘இந்துத்துவம் என்று நீ எதை சொல்கிறாய்?’

‘நான் எதிர்ப்பதைத்தான் இந்துத்துவம் என்று சொல்கிறாய் எனில் அது பார்ப்னியம் மட்டுமே’.

நாம் பார்ப்ப்னியத்தை திட்டுவதையே எல்லா இந்திய வழிபாட்டு முறைகளையும் திட்டுவதாகவும், நாம் பார்ப்ப்னிய தேசியத்தை திட்டினால் ஒட்டு மொத்த இந்திய தேசியத்திற்க்கே விரோதமாக திட்டுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம் இவர்கள் இரண்டு உண்மைகளை இவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறார்கள்.

#1) இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே. அதாவது அது ஒரு மதமல்ல. சமூக ஒடுக்குமுறை தத்துவம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.

#2) இந்து அல்லது பார்ப்னிய தேசியம் என்பதுதான் இந்திய தேசியம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு முறைகளை அழிக்கும் பார்ப்பனியம் குறித்து நாம் கேள்விகள் கேட்ட பொழுது இவர்கள் பதில் சொல்லாமல் நழுவிப் போனதில் இந்த உண்மை இன்னும் எடுப்பாக தெரிந்தது.

பார்ப்ப்னியம் குறித்தும், தேசியம் குறித்தும் இந்த புரிதல்தான் இவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக கூச்ச நாச்சமின்றி வேலை செய்யச் செய்கிறது. எப்படியெனில் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய இறையாண்மையை குப்பைத் தொட்டியில் வீசினால் இவர்களுக்கு வலிக்காது. ஏனேனில் அவ்வாறு செய்யும் போது இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் ஏற்ப்படுவதில்லை. அத்துடன் தரகு பணமும் கிடைக்கிறது(ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கே சுரண்டுவதற்க்கு மாமா வேலை பார்த்து கிடைக்கும் தரகு பணம்).

இதே அடிப்படையில்தான் இவர்களின் தலைவன் ‘பெரும் பொய்யன்’ கோல்வால்கர் பிரிட்டிஸ் காலனியாதிக்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்தான். எப்படியெனில், “பிரிட்டிஸ் அரசு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பதி விரதை பாரத மாதவை கூட்டிக் கொடுக்கலாம். ஆனால் இந்து (ie: பார்ப்ப்னியத்தின்) பெருமைக்கு மட்டும் குந்தகம் வந்து விடக் கூடாது. எமது கருத்தில் பிரிட்டிஷ் அரசு இந்து தர்மத்திற்க்கு (அதாவது பார்ப்ப்னிய தர்மத்திற்க்கு) குந்தகம் விளைவிக்கும் அரசாக இல்லாதவரை அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை”(#1, #2) என்றான்.

அப்போ பாரத மாதா? அட போடா அபிஸ்டு, கூட்டிக் கொடுத்தா காசு வருமுன்னாக்க அத்த செய்றதுல என்ன துன்பம் வந்தச்சு? ஒரு யாகம் செஞ்சாக்க எல்லாம் சரியாப் போயிடாது?

பாரதா மாதகி ஜொய்ங்…………

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடமிருக்கும்?

ஆக, பெரும்பான்மை இந்துக்கள் என இவர்கள் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையுடன் எவன் எப்படி விளையாண்டாலும் பரவாயில்லை. பழைய காலத்து நம்பியார் படம் போல பாரத மாதாவை துரத்தி துரத்தி வன்புணர்ச்சி செய்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு நோக்கம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள ‘பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி’ என்ற பலகை மீது ஏகாதிபத்தியமோ அல்லது வெறு வெளிநாட்டு சக்திகளோ(வேற யாரு? கம்யுனிஸ்டுகள், ஜனநாயக சக்திகளைத்தான் வெளிநாட்டு சக்திகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்) கை வைத்து இந்து தர்மத்திற்க்கு அழிவை உண்டாக்கிவிடாமல் இருந்தால் போதும். இதற்க்காக பல தலைமுறைகள் வெளிநாட்டிலேயே வாழ்ந்த பார்ப்ப்னிய தேசத்து மைந்தர்கள் சதி செய்வதெல்லாம் உள்நாட்டு புனித போராக பார்க்கப்படும்.

நீங்களே பாருங்கள், ஆடம் பிரிட்ஜ் என்று இயற்கையாக உருவான ஒரு பாலம் சிரிலங்காவையும் இந்தியாவையும் இணைக்கிறது. இதனை உடைத்து சேது சமுத்திரம் கட்டுவதில் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஒன்று உள்ளது. அது இந்திய கடல் வளத்தை கொள்ளையடிப்பது மற்றும் யுத்த கேந்திர ரீதியாக இந்திய கடல் பரப்பில் இலகுவாக அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நலன்களுக்கான ஒரு திட்டமே. ஆக, இவர்களின் சந்தைப் போட்டிக்காக இந்திய மக்களின் வாழ்வை நிர்மூலமாக்காதே என்ற அடிப்படையில் நாம் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இதே திட்டத்தை இதே அமெரிக்க மேலாதிக்கம் என்ற ஆச்சர்யகரமான முழக்கத்துடன் இன்னொரு கும்பலும் எதிர்க்கிறது. என்னாடாதி அதிசயம் ‘கண்ணை மறைக்கும் காவிக் குடுமி’யையும் மீறி அமெரிக்க மேலாதிக்கம் இவர்கள் கண்ணுக்கு தெரிந்ததோ என்று ஆச்சர்யப்படும் வேலையில்தான் இன்னோரு முழக்கம் காதில் விழுகிறது – ‘ராமன் பாலத்தை உடைக்காதே! அங்குதான் ராமன் குந்த வைத்து மேம்படி வேலைகளைச் செய்தான்!’ என்று.

இதோ இங்கு மீண்டும் பார்ப்ப்னிய தேசத்தின் இறையாண்மை என்பது ராமன் மேப்படி வேலைகள் செய்த இடத்தின் புனிதம் காக்கும் அளவில்தான் உள்ளது என்பதையும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த கற்பனாவாதி கபோதிகளுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். உண்மையில் இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதையும் எடுப்பாக காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடம் இருக்கும்? இவர்கள் வாயிலிருந்தே நமக்கு தெளிவாக புலப்படும் விசயம் இந்து என்று இவர்கள் சொல்வது பார்ப்ப்னியர்களையே(பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக பார்ப்ப்னிய பண்பாட்டை சுவீகரித்த எவரும் பார்ப்ப்னியரே). அப்படியெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது என்பதுதான் இவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏனேனில் பார்ப்ப்னியம் என்று இவர்கள் சொல்லும் விசயங்களை ஒருவன் படித்து தத்துவரீதியாக அதனை சுவீகரிக்க வேண்டும் எனில் அவன் குறைந்தது நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். எனவே உழைக்கும் மக்கள் இந்து என்ற பொதுவாக நிலவும் கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அடியாள் வேலை செய்ய திரள்வார்களே அன்றி, இவர்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் நலனுக்கென்று ஒன்றும் கிடையாது. ஆக, இந்துக்கள் அல்லாதவருக்கு இந்து தேசத்தில் என்ன இடம் என்று கோல்வால்கன் சொல்கிறானோ அதே இடம் தான் சர்டிபிகேட் படி இந்து எனப்படுபடும் உழைக்கும் மக்களுக்கும் தரப்படும்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை நயவஞ்சகமாக அழிப்பதற்க்கும், பிற மதத்தவர் வழிபாட்டு தளங்களை அப்பட்டமாக அழிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் போன்ற ஒரு வித்தியாசம் வேண்டுமானால் உழைக்கும் மக்கள் இந்துவுக்கும், பிற மதத்தவருக்கும் இருக்கலாம். அழிவு என்னவோ நிச்சயம். பார்ப்ப்னியத்தில் கறைந்தது போக சில சொற்ப அடையாளம் மட்டும் மிஞ்சலாம். ஆனால் ஒரு விசயம், சர்டிபிகேட்டி இந்து என்று போட்டுக் கொள்ளும் உரிமை விட்டு வைக்கப்படும். ஏனேனில் அடியாள் வேலை செய்ய ஒரு ஐடெண்டிட்டி தேவைப்படுகிறதல்லவா?

இவர்களின் நடவடிக்கைகளும் பார்ப்ப்னியத்தின் நலன் காக்கும் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தின் நாகரிக நடவடிக்கைகள் பார்ப்ப்னியத்தின் பழைய பஞ்சாங்க (ஆடம் பிரிட்ஜை இடிப்பது போன்று) நடவடிக்கைகளுடன் முரன்படும் இடத்தில் மட்டும்தான் இவர்கள் இருவரும் வேறு வேறு வர்க்கங்கள் என்ற விசயம் வெளி வருகிறது. இடஓதுக்கீடு விசயத்தில் கூட சும்மா ஒரு கொள்கை தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு உண்மையில் இவர்களின் அணிகளை எல்லாம் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். ஏன் இடஓதுக்கீடை ஆதரிக்கும் இவர்கள் அதனை எதிர்த்தவர்களின் மண்டயை உடைத்து வீட்டுக்கு அனுப்பும் ஒரேயொரு போராட்டம், ஒரேயொரு துண்டறிக்கை வெளியிட்டார்களா? ஷில்பா செட்டியின் ஜட்டி வெளியே தெரிந்தால் கூட ஊரே அலற ஒப்பாரி வைக்கும் இந்த மடவெறி கூட்டம் இடஓதுக்கீட்டிற்கு ஆதரவாக வெறும் தீர்மானம் மட்டும் இயற்றினார்கள் எனில் இவர்களின் மொசடி என்னவென்பதை புரிந்து கொள்ளலாம்.

சாதியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையே?
ஆம் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் சாதி என்ற மேல் ஓடு தனது உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. “பாருங்களேன் கொடுமையை, டோண்டு என்ற ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் பிராமணனுக்குரிய எந்த பண்பும் இன்றி வெறும் அடையாளத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வலம் வருவதை, பாருங்களேன் பாசமிகு தம்பி நீலகண்டன் ஒரு பிராமணனுக்குரிய எல்லா அம்சங்களுடன் வலம் வருவதை” – இப்படி மறைமுகமாக நமக்கு சொல்கிறார்கள் நீலகண்டன் போன்ற RSS வெறியர்கள்.

ஏன் இது ஏற்பட்டது? எவ்வளவுதான் சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் பொருளாதார நலன்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தாலும், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சாதி வேறுபாடுகளை மீறி தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக மாறி நிற்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்ப்னியம் அவ்வப் பொழுது சந்தித்து வரும் ஒரு பிரச்சனைதான். அதுவும் குறிப்பாக பிரிட்டிஸ்க்காரகள் இந்தியாவின் ஆசிய பொருளாதார அமைப்பை சிதைத்தன் மூலம் இந்த போக்கை வீரியமாக்கினார்கள். பட்டா போட்டு நிலத்தை தனியுடமை ஆக்கினார்கள். நிலவுடைமை என்பதை சாதி கடந்த ஒரு விசயமாக வெள்ளையர்கள் மாற்றினார்கள்.

ஆக, இன்று சாதி என்பது எந்த வகையிலும் வர்ண அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சாதியை ஏற்றுக் கொள்வது எனில் சில அபிஷ்டு சர்டிபிகேட் பார்ப்பனரை பிராமனராக பார்க்க வேண்டும். அந்த முட்டாள்தனத்தை செய்வது நீலகண்டன் போன்ற சுத்தமான RSS பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதல்ல. ஆள் சேர்த்து ஆங்கீகாரம் பெறுவதற்க்கும் பிற சாதி அறிவுஜீவிகளை ஜீரணிக்க வேண்டியுள்ளது.

இந்த வர்க்க வர்ண முரன்பாட்டை எப்படி சமாளிப்பது? பார்ப்பனியத்தின் உண்மையான இன்றைய வரலாற்று கடமை என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே சொன்னது போல பார்ப்ப்னியத்திற்க்கு இது ஒரு புதிய சிக்கலல்ல. வரலாற்றில் இது போல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் அது தன்னை சிறிது ஜனநாயகப்படுத்திக் கொண்டு தப்பித்துவிடும்.

வர்க்க பிரிவுக்கும் வர்ண பிரிவுக்குமான முரன்பாடிற்க்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்ரியர், பார்ப்ப்னர் சண்டையும் அதன் விளைவாக தத்துவங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கின் வரலாறாகத்தான் வேத காலம் (மீமாம்சம், வேதாந்தம், சாருவாகம் etc) தொட்டு பகவத் கீதை காலம் வரையிலான வரலாறு உள்ளதாக பல வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். விஸ்வாமித்திரர் எனும் சத்ரிய முனியன், பரசுராமன் எனும் பார்ப்ப்ன வெறியன் – இப்படி இன்னும் பல உதாரணங்கள். இந்த அம்சத்தில் விலாவாரியாக பேசுவது இந்த கட்டுரையில் சாத்தியமில்லை. இதை ஒரு hypothesisஆக எடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

ஆக, சாதி என்பதை இவர்கள் இந்த அம்சத்தில்தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது இனிமேலும் வர்ண அமைப்பின் புனிதம் காக்கும் வரையறைக்குள் சாதி என்ற வடிவம் இல்லை என்ற அர்த்தத்திலேயே.

அப்படியேனில், வர்ண அமைப்பு சரிதானா? என்று கேள்வி எழுகிறது. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் உருவாகிறது என்கிறார்கள் இவர்கள். குணம் என்று இவர்கள் சொல்லும் மூன்று குறிப்பான குணங்கள் யாவும் பிறக்கும் போதே எற்படுவதல்ல என்பதை உயிரியலின் இது வரையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே சொல்லலாம். அப்படியானால் வேறு எப்படி ஏற்ப்படுகிறது? உண்மையில் ஒருவனது குணம் அவன் பிறந்து வளரும் சூழலாலேயே பிரதானமாக தீர்மானிக்கப்படுகிறது. அப்படியெனில் இவர்கள் சொல்லும் இந்த குணங்கள் என்பவை இயல்பாகவே ஒருவனுடைய பொருளாதார பிரிவினடிப்படையிலான குணங்களே ஆகும். ஒரு ஏழை வீட்டில் பிறந்தவன், சேரியில் வளருபவன் எந்த காலத்திலும் பிராமனனுக்குரியதாக இவர்கள் சொல்லும் குணங்களுடன் வளரும் வாய்ப்புகளை மிக மிக குறைவாவே பெறுகிறான். அப்படியெனில் அவன் வர்ண படிக்கட்டில் கீழ் நிலைக்கு செல்கிறான். அவனது குழந்தையும் அதே நிலையில் தொடர்கிறது. ஆக மீண்டும் அது பிறப்பனடிப்படையிலான சாதி அமைப்பில்தான் போய் முடியும். ஒரு வேளை அதற்க்கு அப்பொழுது வேறு ஏதாவது பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால் விசயம் இதுதான் – “ஒரு வர்க்க சமுதாயத்தில் , வர்ண சமுதாயம் சாதி சமுதாயமாகவே சீரழியும். தனியுடைமை அழிந்த ஒரு நவீன எதிர்கால வர்க்கமற்ற சமுதாயத்தில் வர்ண சமுதாயம் என்பது தேவையின்றி அழிந்து போகும்”.

இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தேசியத்தின் லட்சணம், இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மம். இதுதான் வரணாஸ்ரமத்தின் தன்மை. இவ்வளவுதான் இந்து உழைக்கும் மக்களுக்கு இவர்கள் தரும் இடம். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத தத்துவத்தை வேரோடு அழிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் புரட்சிகர சக்திகளுடன் அணி திரண்டு போராட வேண்டும். அதுதான் இந்திய தேசியத்தை இந்து தேசம் எனும் பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்தும், மறுகாலனியம் எனும் ஏகாதிபத்திய கொடுங்கோன்மையிலிருந்தும் விடுதலை செய்யும் போராக இருக்கும்.

அதற்க்கு முதல் தேவையாக இந்து என்று இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் மக்களின் நலனும் உண்மையில் இவர்களின் சித்தாந்த பொருளாதார சார்பின் கீழ் பிரதிநிதித்துவப் படுத்தும் பார்ப்ப்னியர்களின் நலனும் வெவ்வேறு என்ற புரிதல் வேண்டும்.(அதாவது இந்து என்ற பொதுப் புரிதல் வேறு அவர்களின் அர்த்தத்தில் அது பார்ப்பனியர்களையே குறிக்கிறது).

இரண்டாவது தேவையாக இந்தியாவில் சாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அணி திரண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இவர்களை எதிர்த்து எந்த பலனையும் அடைந்து விட முடியாது என்பது. உண்மையில் இப்படி அணி திரள்வது என்பது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே அவர்களை எதிர்ப்பது என்பதாகும்.

மூன்றாவது தேவையாக, பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு என்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதையும், அந்த அம்சத்தில் அதனது பொருளாதார சுரண்டல் அடிப்படையை எதிர்க்காமல் அவர்களை தத்துவ தளத்தில் மட்டும் வெற்றி கொள்ள முடியாது என்பதாகும்.

இந்த புரிதல் வரும் பொழுது புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமே இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி பார்ப்பினியத்திற்க்கு சாவு மணியடிக்கும் சித்தாந்த-அமைப்பு பலம் பெற்றவையாக இருப்பது புரிய வரும்.

“அடிமை நாடும், போலி சுதந்திரமும்”


1947 – இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு – முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.

இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.

இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் “இந்தியா ஒளிர்கிறது” என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, “இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி” என்று குதூகலிக்கிறார்கள்.

இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் – ஆனால் படித்த புழுக்கள், “ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்” என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.

அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?

“பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.

அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, ‘நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்’ எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.

அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.

அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், ‘கொத்தடிமையாவோம்’ என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.

எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!

விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:
1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. “இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு” மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.

1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.

திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை ‘குடிமகன் திப்பு’ என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ “ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.

சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த ‘தீபகற்பக் கூட்டிணைவு’ தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.

1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.

தூரோக வரலாறும் – தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். “200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்” என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.

‘கடவுளே’ என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை ‘நாய்’ என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை “இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்” என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.

அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.

மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:
முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை ‘ஈனப்பிறவிகள்’ என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.

விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!