என்னிடம் இருப்பது ஆண்குறி…!


எனக்கு பசித்த போது…சமைத்து போட வேண்டும்…!
குளிப்பதற்கு சுடுநீர்…வைத்து கொடுக்க வேண்டும்…!
அழுக்கான உடையை…துவைத்துப்போட வேண்டும்…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
என் ஆண்மைக்கு வாரிசாக…பிள்ளை பெற்றுப் போட வேண்டும்…!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு…அடங்கிப் போக வேண்டும்…!
என் பெற்றோருக்கும்…ஏவல் செய்ய வேண்டும்…!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்…ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
என் குறி விரைத்துக் கொண்டால்…உன்னிடமும் வரும்…தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்…என் குறிக்கு கற்பு கிடையாது…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
மொத்தத்தில்…எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது…!
வலிமை இருக்கிறது…!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது…!
உன்னைவிட நானே உயர்ந்தவன்…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!

தமிழச்சி

Advertisements

3 Responses to “என்னிடம் இருப்பது ஆண்குறி…!”

 1. kathirmuruga Says:

  குறியையும் நாணிச் சோர வைக்கும்
  ஓர்மமான வரிகள்.

 2. reverse phone lookup Says:

  You have been my intake , I own few web logs and often run out out of
  to brand : (.

 3. raspberry ketones free trial uk Says:

  I think other site proprietors should take this web site because an model – very
  clean and wonderful style and design, in addition to that the content.

  You’re an expert in this area!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: