ஆரியர்கள் பூர்வகுடிகளா?


ஆரிய இனம் ஒன்று இல்லை. என்று சொல்லி அதற்கான ஆராச்சியில் ஈடுபட்டு புதிய குழப்பங்களை ஆதாரமாக காட்டப்படுகிறது.

இது போன்ற பொய் செய்திகளை எழுதிவிட்டு பின்னர் இதை வேறு ஒருவர் ஆதாரமாக காட்டி நிறுபணம் செய்யும் வேலையை இவர்கள் செய்வது இன்று நேற்றல்ல.

இவர்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருவதுதான்.

இங்கே பார்ப்பன இனத்தை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

“உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த இடத்தை( ஸ்தானத்தை) ஒரு காலத்தில் வகித்து வந்தது – அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமானது.”
(பண்டிதர் நேரு – உலக சரித்திரம். – முதல் பாகம்- பக்கம் 2002-2003)
“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிப்பதாகும். ” (பண்டிதர் நேரு – டிஸ்கவரி ஆப் இந்தியா – பக்கம் – 82)
“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ- ஆரியர் காலத்தையும் இவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டு சண்டைகளையும் பற்றிக்கூறுவதாகும். இவைகளை நான் உண்மை என்று நான் நம்பவேயில்லை. பஞ்ச த்ந்திரம் அராபியன் இரவுகள் போன்று இது ஒரு கற்பனைக்கதை தான் என்பதே என்கருத்து” (பண்டிதர் நேரு – டிஸ்கவரி ஆப் இந்தியா – பக்கம் – 76-77)
ஆரியர் என்ற ஒரு இனம் இல்லை என்றால் நேரு எதைக் குறிப்பிட்டார்.
“ஆரியர் ஆதிக்கத்தினால் திராவிடர்கள் அடிமை சாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்: ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததினாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்காகவே வந்தார்கள்”. – ஏ. எல். சாண்ட்ர்ஸ்.

“ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.” -எச். ஜி. வெல்ஸ்
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே இருக்க வேண்டும். அப்படி அவர்களை திராவிடர்கள் தாம் என்றால் ஆரியர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர்கள் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும். (பெருஞ்சித்திரனார்- ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் பக்கம் -15)
இவர்மட்டுமா?
கீழே கெளுங்கள்………..
ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே
ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!
போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!………
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!
போதும் நிறுத்து, போதும் நிறுத்து போதும் நிறுத்தடா!………
உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி பேச்சை நிறுத்தடா!………….
தொடப்பம் எடு எடு……….,
செறுப்ப எடு எடு………..
ஓடடா ஓடு, ……………..ஓடடா ஓடு………………..

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை பார்த்தால் ஆரிய இனம் என்று இருந்தது என்பதை ஆரியர் நேருவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
இவர்கள் எப்போதும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
” தமிழரிடமிருந்த பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்ததைப் போலவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது போலவும் காட்டி தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தனர்.பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி (தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-33)
” இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு புல்லைத்தேடிக் கொண்டு ஊர் ஊராய் திரிந்தவர்கள்”. பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி
(தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-29).
உ.வே. சாமிநாத அய்யர் தமிழுக்கு தொண்டு செய்தார். ஆனால், அவர் தன் பெயருக்கு அருகிலேயே அய்யர் என்ற சொல்லை, தன் உயர்நிலை என்று கருதும் ஒன்றை எப்போதும் தன்பெயர் அருகில் வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த பார்ப்பனர் எப்படியெல்லாம் திருத்தல் வேலைகளை செய்தார் என்பதை பார்ப்போம்.
புறநானூற்றில் ” ஆண்முலையறுத்த” என்று தொடங்கும் பாடலின் ஒரு சொல் “அறவோர்” என்று வந்துள்ளது . இதனை யாழ்ப்பணத்து பழைய வெளியீடு ஒன்றில் சொல்லப்படுகிறது. ஆனால், உ.வே.சா அவர் பதிப்பில் அந்த சொல் “பார்ப்பனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை.
“அறவோக்குக் கொடுமை செய்தல் கூடா” – தெனும் அறம் பற்றிச் சொல்லும் அப்பாடலை
“பார்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா” -தென்பதாக இவர் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ”
கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக்கொலை”
என்ற காஞ்சி புராண அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி வரலாற்றை இவர்கள் திருத்துவது இன்று நேற்றல்ல.
காலம் காலமாக செய்து வருவதுதான்.
அன்று
மன்னன் அதிகாரத்தை வைத்து இவர்கள் அதிகாரம் செய்தார்கள்.
மனுநீதி எழுதி உலக நீதியை கெடுத்தார்கள்.
தமக்கு மட்டும் தனிநீதி எழுதிக் கொண்டார்கள்.
பின்னர் செய்தி ஏடுகளில் எழுதி ஊரைக் கெடுத்தார்கள்.
இன்று இணையம் உள்ளிட்ட வற்றில் எழுதி நம்மைக் கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றுதான் காலம் இடம் தான் வேறு படுகிறது.

Advertisements

4 Responses to “ஆரியர்கள் பூர்வகுடிகளா?”

 1. தமிழன் Says:

  http://rajasugumaran.blogspot.com/2006/07/blog-post.html

 2. தமிழன் Says:

  http://rajasugumaran.blogspot.com/2006/07/blog-post.html

  இந்த செய்தி இந்த தளத்திலுள்ளது

 3. reverse phone lookup Says:

  But wanna say that this is invaluable , Thanks for taking your time to
  write this.

 4. raspberry ketones thinslim Says:

  I was just looking for this info for a while. After six hours of continuous
  Googleing, at last I got it in your website. I question what’s that the lack of Google strategy that don’t rank this type of informative internet sites in top of that the list. Generally the top web pages are full of garbage.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: