இணைய தள சோதிடம்:எதற்கிந்த வலைவிரிப்பு?


உலகில் பிறந்து வாழ்கிற இத்தனை கோடி மனி தர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரியாகக் கணிக்க முடியும் என்கிற சோதி டம் அறிவியல் அடிப்படையில் நம்பக்கூடியதுதானா?

இப்படி கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்டபோது திண றியவர்களுக்குத் துணையாக அன்றைக்கு அர்த்த முள்ள இந்து மதம் புகழ் கண்ணதாசன் சொன்ன விளக்கம் ஒன்று உண்டு. சோதனையின்போது மன துக்கு ஆறுதலாகத் திடம் சொல்வதுதான் சோதிடம், என்றார் அவர். சோதிடத்தை நம்புகிறவர்கள், நம் பாதவர்கள் இரு சாராரையுமே திருப்திப்படுத்த முயல்கிற தந்திரமான விளக்கம் இது.

நகரங்களின் நட்சத்திர விடுதிகளில் குளு குளு அறைகளில் மடியில் கிடத்திய கணினி முதல், பேருந்து நிலைய நடைமேடைகளில் முக்காலியில் நிறுத்தப்பட்ட கணினித் திரை வரையில் இந்த நவீன சோதிட வர்த்தகம் பெரிய அளவிலும், சாலைவியாபார அளவிலும் நடக்கிறது.

இணைய தளம் மூலமாக திருமணத் தகவல் மோசடி, மின்னஞ்சல் வழியாக நம் வங்கிக் கணக்கை யும் கடவுச் சொல்லையும் தெரிந்து கொண்டு பண மோசடி என்றெல்லாம் நடப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் இறங்குகிறவர்களாவது அவ்வப்போது சட்டத்தின் கைகளில் பிடிபடுவதுண்டு. ஆன்மீக வலைவிரிக்கும் ஆனந்தாக்கள் கூட அவ்வப்போது அம்பலமாகிறார் கள். ஆனால் மேற்படி ஜோதிட ஸ்ரீக்கள் மட்டும் சர்வ ஜம்ப கீர்த்தியுடன் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் இணைய தள தகவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அறிவிப்பு எட்டிப்பார்த்தது. எதிர்காலத்தைத் துல்லியமாக கணித் துச் சொல்கிற சேவை என்று அதிலே இருந்தது. நம் பிக்கை வருவதற்காக, குறிப்பிட்ட மின் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு போடப்பட்டிருந்தது. உங் களைப் பற்றிய ஒரு சுருக்கமான கணிப்பை இலவச மாக அனுப்புகிறோம். அதிலே நம்பிக்கை ஏற்பட் டால் தொடர்பை உறுதிப்படுத்துங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி மட்டும் குறிப்பிடுங்கள். ஜாதகம் இல்லா மலே நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக உங்களைப் பற்றிய சில உண்மைகளை ஆங்கிலத்தில் உங்கள் மின் முகவரிக்கு அனுப்புகிறோம். இந்த சேவை முற்றிலும் இலவசம். அதிலே உள்ள கணிப்புகள் உண்மைதான் என்று உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து முழு கணிப்பையும் அனுப்புகிறோம், என்று அந்த அஞ் சல் சொன்னது.

சும்மாதான் அந்த சேவை என்பதால், சும்மா அந்த முகவரிக்குள் சென்று என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாமே என்று அதன் மேல் சுண்டெலியை முடுக்கி விட்டேன். அப்போது திரையில் தோன்றிய அட்ட வணையில் கேட்டிருந்தபடி எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டிவிட்டேன். சில நொடிகளில் ஒரு தகவல் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன், (இப்படி பெயர் குறிப் பிடுவது கூட ஒரு வலைதான்) உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உண்மைலேயே உங்களுக்கு எமது சேவை வேண்டும் என்பதை இந்த மின்முகவரியில் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உறுதிப்படுத்திய தகவல் வந்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு எங்கள் சோதிட வல்லுநரிடமிருந்து உங்களைப் பற் றிய தொடக்கக் கணிப்பு இலவசமாக வரும். அதன் பின் நீங்கள் விரும்பினால் முழுமையான கணிப்பு அனுப்பி வைக்கப்படும், என்று இருந்தது.

இப்படியே இழுத்துக்கொண்டு போவார்கள் என்ற எண்ணம் வந்ததாலும், பணிகள் நிறைய இருந்ததாலும் அந்த உறுதிப்படுத்தும் தகவலை நான் அனுப்ப வில்லை. ஆனால், மறுநாள் ஒரு அஞ்சல் வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன் நீங்கள் உறுதிப் படுத்தியதற்கு நன்றி. (நான் எங்கேயப்பா உறுதிப் படுத்தினேன்?) உங்களைப் பற்றிய அடிப்படையான கணிப்பைத் தயாரிக்க இவ்வளவு நேரம் தேவைப் பட்டது. உங்களுடைய ஜாதகம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மிக அரிதாகத்தான் இப்படி அமையும். அதைத் தெரிந்துகொள்ள பின்வரும் வலைத் தளத்தைப் பார்க்கவும். இவண், உங்களின் தொழில் முறை சோதிடர் — என்று அடுத்த கொக்கி போடப் பட்டிருந்தது. (சோதிடரின் பெயர் ஒரு பெண்ணின் பெயராக இருந்தது. அதுவும் ஒரு வலைதானோ?)

அதையும் பார்த்துவிடலாம் என்று, குறிப்பிடப் பட்டிருந்த வலைத்தளத்திற்குள் சென்றேன். அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.
… சோதிடரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமையவிருக் கிறது என்பது மட்டுமல்ல, அருமையான வாய்ப்புகள் மிகுந்த ஆசிர்வதிக்கப்பட்டதொரு எதிர்காலம் உங்களுக்கு இருப்பது எனது கணிப்பில் தெரிய வந்துள்ளது. நான் இந்தத் தொழிலில் பல ஆண்டு களாக இருந்துவருகிறேன். ஆனால் மிடர் குமரே சன், உங்களுடையதைப் போன்ற அற்புதமான ஜாத கங்கள் மிக அரிதாகவே அமைகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்… இப் போது நான் சொல்லப்போவது மிக முக்கியமானது. ஒரு முறைக்கு இரண்டு முறை நான் என் சோதிடக் கணக்கை சரி பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகி றேன்… என்று அது சொல்லிக்கொண்டே போனது.

அதன் பின், … இதுதான் என் கண்டுபிடிப்பு: நீங் கள் இப்போது ஒரு முக்கியமான மாறுதல் கால கட்டத் தில் இருக்கிறீர்கள். விண்ணில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலைகளும் கோணங்களும் உங்க ளுக்கு மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரு வதற்கு ஏற்ற வகையில் இருக்கின்றன… அடுத்த 44 நாட் களில் உங்கள் தொழிலின் மிக முக்கியமான தருணங் களை சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான வெற்றியை அடைய இருக்கிறீர்கள். அது எப்படிப்பட்ட வெற்றி என்று இப்போது சொல்வது கடினம். ஆனால், யாரோ ஒரு வெளிநாட்டில் உள்ளவரோடு அல்லது ஏதோ வொரு வெளிநாட்டு நிறுவனத்தோடு நீங்கள் நடத்தப் போகிற பேச்சுவார்த்தை தொடர்பானதாக இருக்கலாம் என்று மட்டும் இப்போதைக்கு என்னால் ஊகிக்க முடிகிறது…

… மூன்று முக்கியமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, இந்த 44 நாட் கள் மிகப்பெரும் பணத்துடன் சம்பந்தப்பட்டிருக் கின்றன; இரண்டாவதாக அந்தப் பெரும் பணம் உங் களுடைய மிகப்பெரிய லட்சியம், முதலீடு அல்லது திட்டத்திற்குப் பயன்படப்போகிறது; மூன்றாவதாக உங்களது இயற்கையான வாய்ப்புகளையும் நல்ல திர்ஷ்டத்தையும் இணைத்து மேலும் முடுக்கிவிடு வதன் மூலம் அந்தப் பணம் வரப்போகிறது… இந்த வாய்ப் பைப் பயன்படுத்த நீங்கள் உங்களைத் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்…

… இன்னும் சில உண்மைகளை நான் கண்டு பிடித்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மகத்தான சக்தி யின் அதிர்வுகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் விளைவாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு எளி தாகக் கிடைத்துவிடும்… ஒரு எச்சரிக்கையும் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் தானாக நடக்கட்டும் என்று காத்திருப் பார்கள். ஆனால் குமரேசன், ஒரு சரியான சோதிட ரின் உதவியோடு உங்களது நட்சத்திர-கோள் நிலை களை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப உங்களது செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் அந்த சாதகமான பலன் கள் முழுமையாக உங்களை வந்தடையும்…

இப்படியே தன் கணிப்பை ஓட்டிக்கொண்டே போயிருக்கிறார் அந்தப் பெண்மணி. சுமார் மூன்று பக் கங்களுக்கு உள்ள கணிப்பில் ஒரே ஒரு இடத்தி லாவது திட்டவட்டமாக ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா? நான் யார், எப்படிப்பட்ட தொழிலில் இருக் கிறேன் என்ற நிகழ்காலமோ, எந்தவிதமான வாழ்க் கையை இதுவரை வாழ்ந்துவந்தேன் என்ற கடந்த காலமோ, இனி என்னதான் குறிப்பாக நடக்கப்போ கிறது என்ற எதிர்காலமோ மருந்துக்காவது அடை யாளம் காட்டப்பட்டிருக்கிறதா?

பொத்தாம் பொதுவான ஊகங்களுக்குப் பெயர் துல்லியமான கணிப்பாம்! சாதாரணமாக எவரும் சிக்கி விடக்கூடிய பெரிய வலை இது என்பது மட்டும் உறுதி. இன்றைய இணையவலை நுட்பங்களைப் பயன் படுத்துகிற எவருக்கும், போட்டிகளின் வெக்கையில் வெந்துபோயிருக்கிற யாருக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கள் பற்றிய ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக் கும். பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் ஆகாய விமான உற்பத்தியாளர் வரையில் அவரவர் மட்டத் திற்குப் பெரும் பணம் தேவைப்படவே செய்கிறது. எல்லோருக்குமே எதிர்வரும் காலம் என்பது ஏதாவ தொரு வகையில் மாறுதல் காலகட்டம்தான்.

மக்களின் வாழ்க்கை ஏக்கங்களை முகர்ந்துபார்க் கக்கூடிய எவரும் இந்த கணிப்புகளுக்கு வர முடி யும்! வேறொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேறொரு பெயரில் இதே சோதிடரின் வலைத் தளத்தைத் தட்டியபோது, இதே கணிப்புதான் வந்தது! அன்புள்ள …. என்ற இடத்தில் மட்டும் அந்தப் புதிய பெயர் இருந்தது! இந்த இலவச முதல் சேவைக்குப் பிறகு அடுத்தடுத்த ஆழமான கணிப்புகளுக்கு சிறப்புக் கட்டணங்கள் உண்டு!

இப்படிப்பட்ட பொதுவான, எவருக்கும் பொருந்து கிற சொல்லாடல்களில் மிரண்டுபோய், மின்னஞ்சல் குறிப்புகளின்படி அடுத்தடுத்த தொடர்புகளை மேற் கொண்டு, கேட்கிற கட்டணங்களை (ஆயிரக்கணக் கான ரூபாய்கள்) செலுத்துகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

வாழ்க்கை உண்மைகளை, அரசியல் நிலைமை களை, சமுதாய சூழல்களை, இயற்கை ரகசியங்களைப் புரிந்துகொண்டால் அடுத்த நொடி எப்படி அமை யுமோ என்ற புதிரோடு, ஆக்கப்பூர்வ முயற்சிகளுக் கான முனைப்புகளோடு வாழ்வதன் சுகத்தை முழுமை யாக அனுபவிக்க முடியும். அப்படி அனுபவிக்கக் கற்றுக்கொள்கிற திட மனங்களை சோதனைகள் என்ன செய்யும்? சோதிடம்தான் என்ன செய்யும்?

Advertisements

2 Responses to “இணைய தள சோதிடம்:எதற்கிந்த வலைவிரிப்பு?”

  1. reverse phone lookup Says:

    Oh my goodness! a tremendous article dude. Thank you Nonetheless I’m experiencing difficulty with ur rss . Don identify why Unable to subscribe to it. Is there anybody getting equivalent rss query? Anyone who is aware of kindly respond. Thnkx

  2. reverse phone lookup Says:

    You have brought up a very fantastic points , regards for the post.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: