ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…


அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் “பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்” என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல – மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த “பிற்படுத்தப் பட்டோ ர்” என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் – குறிப்பாக மாண்டேகு – சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் – இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.

இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் – நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் – தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் – வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் “வன்னிய குல சத்திரியர்” என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல ‘ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?” என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் ‘ஆண்ட பரம்பரை’ப் பொறுக்கிகளுக்குத்தான்…இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை ‘தேவர்’தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் – தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்–கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்…2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
…….
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை ‘ஓசிச்சோறு’ என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ‘எனக்கு சிரைத்து விடு’ என்றோ ‘என் செருப்பைத் தைடா’ என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்…மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் – ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்… இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே – சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் ‘சமூக நீதியை’ காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ‘சமத்துவப் பெரியாரும்’ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் – அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் ‘தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டிருந்தபோது ‘இரட்டைக்குவளைகள் முறை பற்றி’கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது “தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்..”

****************

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said…

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

“There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920’s to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society”

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது…கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது…ரெட்டை டம்ளர் டீ க்கடை… எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்…நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்…பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு…ன்னு மீசையை முறுக்கறதும்… ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்…ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்… பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?

Advertisements

2 Responses to “ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…”

  1. Mallar vamsam Says:

    dont use dalit word

  2. kalidas Says:

    Good VIRAIVIL MATRUVOM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: