நிலம் மக்களின் உரிமை …


தமிழகத்தில் மிகவும் வேகமாக அவசராமாக புதிதாக கட்டப்படுள்ள புதிய சட்டப்பேரவையில் நடந்த முதல் கூட்டத்தொடரில் (கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில்) கலந்து கொண்டு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக கூறினீர்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 50 லட்சம் ஏக்கர் நிலத்தை தலா 2 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, திரும்ப திரும்ப எதிர்க்கட்சி துணைத் தலைவர் இந்த குற்றச்சாட்டை கூறுகிறார். நில மற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என்று அந்த நேரத்தில் அறிவித்தோம். 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக அதிமுக அரசின் சார்பாக வைக்கப்பட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட நிலப் பரப்பைதான் கூறினோம் என்றார்.

அதாவது தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது அதிமுக அரசு சொன்ன விபரங்கள் அடிப்படியில் என்றார். ஆனால் இப்போது அந்த நிலங்கள் உள்ளதா என்பதை ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் தனது அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பேச்சு அது. எப்படியென்கிறீர்களா? அந்த விவாதத்தில் குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி, “தமிழகத்தில் எவ்வளவு தரிசு நிலங்கள் உள்ளது என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. அதற்கு வருவாய்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டார். அதனடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?” என்று கேட்டார்.

ஆனால் இந்த கேள்விக்கு பதிலளிக்காத முதலமைச்சர், “இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு முன்பு, நிலங்களை பிரித்து கொடுப்பதில் முன்னணியில் உள்ள, புரட்சிகரமாக செயல்படக்கூடிய மேற்கு வங்கத்திற்கு சென்று வருவாய் துறை அமைச்சர் ஆய்வு செய்துவிட்டு வந்தார். தமிழகத்திலேயே நாம் பிரித்துக் கொடுப்பதை விட மேற்கு வங்கத்திலே கொடுப்பது குறைவு” என்று கூறினார். ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று. இப்படி இருக்கிறது முதல்வரின் பேச்சு. கேட்ட கேள்விக்கு பதில்சொல்லாமல் கேள்வி கேட்ட உறுப்பினர் சார்ந்த கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தின் மீது சேற்றைவாரி பூசுவதில் முதல்வர் கலைஞர் ஈடுபட்டார். அவருக்கும் தெரியும் அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர் என்று. எனினும் அவர் பேசுகிறர். ஆகவே நாமும் நிலச்சீர்திருத்தத்தில் தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது.

உண்மை என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் நில விநியோகத்தில் மகத்தான சாதனை புரிந்துள்ளது. அதனால்தான் அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான் என்பது போல அவரகள் தொடர்ந்து பல்லாண்டுகாலம் ஆட்சி புரிகின்றனர். இதில் நாட்டுக்கே மேற்கு வங்க இடது முன்னணி அரசு வழிகாட்டியாக உள்ளது. அவர்கள் விநியோகம் செய்தது தரிசு நிலத்தையோ அல்லது அரசுப் புறம்போக்கு நிலத்தையோ அல்ல. உண்மையில் அகில இந்திய அளவில் மொத்த நிலப்பரப்பில் தரிசு உள்ளிட்டு அரசுப் புறம்போக்கு நிலம் சராசரி 17 சதவிகிதமாகும். ஆனால் மேற்குவங்கத்தில் இத்தகைய தரிசு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலம் என்பது 1 சதவிகிதம் மட்டுமே. எனவே மேற்குவங்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தையோ தரிசு நிலத்தையோ நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதில் சாதனை புரிந்துள்ளதாக மேற்கு வங்க அரசு சொல்லவில்லை.

மேற்குவங்கத்தில் 1977 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இடது முன்னணி அரசு இதுவரையில் நிலச் சுவான்தாரர்களிடமிருந்த சுமார் 12 லட்சம் ஏக்கர் (விவசாய விளை நிலத்தை) உபரி நிலத்தை எடுத்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டின் விவசாய நிலப்பரப்பில் 3 சதவிகிதம் மட்டுமே மேற்கு வங்கத்தில் உள்ளது. ஆனால், தேசிய அளவில் மறுவிநியோகம் செய்யப்பட்ட உபரி நிலத்தில், மேற்கு வங்கத்தின் பங்கு மட்டும் 22 சதவிகிதம் ஆகும். சுமார் 30 லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளனர். அதாவது தேசிய அளவில் நிலவிநியோகத்தால் பலன் பெற்றவர்களில் 55 சதவிகிதம் பேர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு பயனடைந்தவர்களில் 57 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்த சட்டத்தை, முறையாக செயல்படுத்தி உபரி நிலத்தை எடுத்து மறுவிநியோகம் செய்ததால், மேற் குவங்கத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பு 70.7 சதவிகிதம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கையில் உள்ளது. மேலும் 15 லட்சம் குத்தகை சாகுபடிதாரர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சாகுபடி செய்யும் 11 லட்சம் ஏக்கர் நிலத்தில் அவர்களது சாகுபடி உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பாராட்டுக்குறியது மட்டுமல்ல அந்த அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடு அது.

ஆனால் தமிழகத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு வந்த 1967க்குப் பிறகு எவ்வளவு ஏக்கர் நிலம் விநியோகம் செய்தது என்பதை திமுக அரசு சொல்லுமா என்றால் சொல்ல மறுக்கிறது. தினமும் தனது தம்பிகளுக்கு கடிதம் எழுதும் கலைஞர். கேள்வியும் நானே பதிலும் நானே என்ற வடிவத்தில் அறைக்கைவிடும் முத்தமிழ் வித்தகர் தமிழ்குடிமக்களுக்கு கொடுத்தது என்ன?

Advertisements

One Response to “நிலம் மக்களின் உரிமை …”

  1. reverse phone lookup Says:

    Keep in mind that it is an opinion, people might not think the same thing.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: