வந்தே மாதரம் – அடிமைத்தனத்தின் குறியீடு …


சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த உலமாக்கள் மாநாட்டில் வந்தே மாதரம் என்கிற பாடல் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்கிற காரணத்தால் அப்பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என மதக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் வந்தே மாதரம் என்கிற பாடலை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதை வைத்து பார்ப்பனீய சக்திகள் அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்துவிட்டன. முதலில் அரசியலையும் மதத்தையும் கலந்து இஸ்லாமிய மக்கள் உலமாக்களின் கட்டளைக்கு கட்டுபட வேண்டும் என்கிற நோக்கத்தோடு விடுக்கப்பட்டிருக்கும் இந்த மதக்கட்டளைக்கு எதிராக எமது கண்டனத்தை பதிவு செய்கிறோம். அதே சமயம் வந்தே மாதரம் என்கிற பாடல் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற எமது கருத்தையும் பதிவு செய்கிறோம்.

வந்தே மாதரம் என்கிற பாடல் தேசபக்தியின் குறியீடு என்கிற பொய்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது. வந்தே மாதரம் என்கிற பாடலின் வரலாற்றை சீர் தூக்கிப் பார்த்தால் அது அடிமைத்தனத்தின் குறீயீடே தவிர தேசபக்தியில் குறியீடல்ல என்பது தெளிவாகிறது.

1882 ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்கிற வர்ணாசிரம வெறியன் இந்து உயர்ஜாதியினரை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக (கவணிக்கவும்: வெள்ளையனுக்கு எதிராக அல்ல) தூண்டுவதற்காக் எழுதிய ஆனந்த மத் புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் தான் வந்தே மாதரம். 19 ம் நூற்றாண்டிம் மத்தியில் வர்ணாசிரம் கொடுமை தாளாமல் கிழக்கு வங்கத்தைச் (இன்றைய பங்களாதேஷ்) பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவினர். பெரும்பாண்மை மக்களான இவர்கள் கூட்டம் கூட்டமாக் மதம் மாறியதால் கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அபரிதமாக பெருகியது. நேற்றுவரை நமக்கு அடிமையாக் இருந்தவர்கள் இன்று மதம் மாறி ஆளும் வர்க்கத்தின் (அப்போது வங்கத்தை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்) ஒரு அங்கமாக ஆகிவிட்டதை பொறுக்க முடியாத ஒரு பார்ப்பனீய வெறியனின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக எழுதப்பட்ட நூல்தான் ஆனந்த மத்.

சர்ச்சைக் குறிய வந்தே மாதரம் பாடலில் துர்கை என்கிற பெண் தெய்வத்தை போற்றி பல வரிகள் உள்ளன. இப்பாடல் எழுதப்பட்ட கால கட்டத்தில் துர்கை கோயில்களில் சூத்திரர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ நுழையக் கூட முடியாது. ஆகவே துர்கை என்பது வங்காள உயர்சாதியினரால் மட்டுமே வணங்கப்பட்டு வந்த ஒரு தெய்வம் என்பது தெளிவாகிறது.

பத்ரலோக பார்ப்பனீயத்தின் குறியீடான வந்தே மாதரம் பாடலை உயர்சாதியினரால் தீண்டத்தகாதவனாக கருதப்படும் நான் பாட மாட்டேன் என பேராசிரியர் காஞ்சா இலையா கருத்து தெரிவிக்கிறார்.

அவர் சுயமரியாதையுள்ளவர். நீங்கள் ?

Advertisements

4 Responses to “வந்தே மாதரம் – அடிமைத்தனத்தின் குறியீடு …”

 1. Basel Tamil Says:

  வந்தே மாதரம் என்றால் ஹிந்தியில் வாழ்க தாய்நாடு. அது எப்படி அடிமைத்தனத்தின் குறியீடாகும்? ஒரு தமிழன் ஹிந்துஸ்தான் சிந்தாபாத் என்றால் அது அடிமைத்தனத்தின் குறியீடு என்று சொல்லலாம்.

 2. premkumar Says:

  முழுப்பாடலையும் தர முடியுமா…. படித்துவிட்டு சுயமரியாதை உள்ளதா இல்லையா என்று சொல்கிறேன். ஆனால் நான் நினைப்பது …… ரொம்ப எளிமையானது தாய் மண்ணே வணக்கம் என்று சொல்ல என் சுயமரியாதைக்கு எந்த களங்கமும் வரவில்லை.

 3. Prasanna Says:

  Article looks good.. but do we have source about this article? If we have will help to come to conclusion.

  I tried wikipedia, but could n’t find any reason for hate this song..
  May be, the book contains this song has wrong things..

  —-Vandematharam in English..
  I bow to thee, Mother,
  richly-watered, richly-fruited,
  cool with the winds of the south,
  dark with the crops of the harvests,
  The Mother!

  Her nights rejoicing in the glory of the moonlight,
  her lands clothed beautifully with her trees in flowering bloom,
  sweet of laughter, sweet of speech,
  The Mother, giver of boons, giver of bliss.
  —-

 4. Satish Kumar Says:

  வந்தே மாதரம் என்ற பாடலை அடிமை தனத்தின் குறியீடு என்று நீங்கள் கூறுவதை எவரும் ஒப்புகொள்ள மாட்டார்கள்..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: