அண்ணல் அம்பேத்கார் !


இந்திய அரசியல் தலைவர் ஒருவரை சாதியினால் புறக்கணிக்கும் கொடுமை இன்றும் அம்பேத்காருக்கே நடந்துவருகிறது. புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.

அம்பேத்கார் சொன்னவைகளில் மிக முக்கியமானது என்று இந்துத்துவ வாதிகள் எடுத்துச் சொல்வது ‘பார்பனர்கள் வந்தேறிகள் இல்லை’ என்று அம்பேத்கார் தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டார் என்பதைத்தான். இதை வைத்து அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்றும் மறைமுகமாக வருணாசிரமத்தை ஆதரித்தார் என்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ‘நான் ஒரு இந்துவாக சாகவிரும்பவில்லை’ என்பதில் உறுதியாக இருந்து புத்தமதத்திற்கு மாறியவர் அம்பேத்கார். அம்பேத்கார் ஒரு ஆன்மிகவாதி பல்வேறு மதங்களை ஆராய்ந்தே பின்னர் அவர் அம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும், பெண்களின் நிலை, குல ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு சமூகவியல் காரணங்களை ஆராய்ந்து இறுதியில் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். பார்பனர்களில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் உண்டு, ஆனால் பார்பனர்கள் அனைவருமே வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதை நானும் நம்புகிறேன். பல்வேறு உடல் நிறங்கள் தவிர்த்து இந்தியர்கள் அனைவருக்குமே பொதுவான தோற்றம் உண்டு, அந்த வகையில் பார்பனர்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பதை அம்பேத்காரும் நம்பினார். ஆனால் அவரது இந்து மதம் குறித்த பார்வையில் பார்பனர்களின் மேலாதிக்கத்தையும், அதற்கு ஆதரவு நல்கும் இந்து மதத்தையும் கடுமையாக எதிர்த்தார் என்பதே உண்மை.

அம்பேத்கார் வாழ்கை வரலாறுகளை பதிவு செய்த அம்பேத்கார் படம் சரியாக ஓடவில்லையாம். இது இயல்பான ஒன்று தான். அவதார புருஷர்கள் சாய்பாபா, ராகவேந்திரா, அண்ணமாச்சாரியா என்று படம் எடுத்தால் ஓடும், ஏனெனில் அவர்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் என்கிற பசைகளுடன் வருவதால் ஆன்மிக வியாபாரமாக படங்கள் ஓடிவிடுகின்றன. மற்றபடி தனி நபர் குறித்த வரலாறுகள் நடந்தவை என்பதால் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. பெரியார் படம் ஓரளவுக்கு ஓடியது. மற்றபடி தலைவர்களின் படங்கள் ஒரு ஆவணம் என்ற வகையில் தொகுப்பட்டிருப்பது வருங்காலத்தில் சுறுக்கமாக அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் அவ்வளவு தான் அதன் பயன்பாடு, மேலும் தலைவர்களை நினைவு கூறத்தகுந்த காரணங்கள் இன்றைய சமூகத்தில் அவ்வளவாக இல்லை, அவர்கள் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கலாம், அல்லது அது இன்றைய தேவையாக இல்லாமலும் போய் இருக்கலாம். இன்றைய காலத்தில் விதவை மறுமணம் என்பது பொதுவான நிகழ்வுகள் ஆகிவிட்டபடியால், விதவை மறுமணத்திற்கு போராடுகிறவர் என்கிற லேபிளை அணிந்து கொண்டு ஒரு தலைவர் உருவாகி விட முடியாது. அதே போல் உடன்கட்டை மற்றும் இத்யாதிகள். சமூகமாற்றத்திற்கான தேவைகள் தற்போது எதுவும் இல்லாத சூழலில் ஏற்கனவே அம்மாற்றம் குறித்து போராடியவர்கள் நினைவு கூறப்படுவர் மற்றபடி எப்போதும் மக்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இவை அண்மையில் மறைந்த காமராசர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் பொருந்தும். எனவே அம்பேத்கார் படம் ஓடவில்லை என்கிற கவலையும், தூற்றலும் கூட தேவையற்ற சிந்தனையும், குழப்பம் ஏற்படுத்துவதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

தமிழக தென்மாவட்டங்களில் அதிகமாக உடைபடுவது அம்பேத்கார் சிலைகளே. தலித்துகளுக்காக போராடிய ஒருவரை பிறப்பு வழி சாதிய அடிப்படையில் ஒரு தலித்தாகவே பார்த்து சிலையை உடைப்பதும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை தொடர்வதையே ஆவணப்படுத்துகிறது. திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு என்பதாக மதாச்சாரியார்களால் முன்மொழியப்பட்டதையெல்லாம் நினைக்கும் போது வருணாசிரம சாதிய அடுக்கை ஒப்புக் கொண்டு அதன் படி நாம அதில் ஒரு சாதி என்றும் நமக்கும் கீழே வேறொருவன் இருப்பதால் எனது சாதி உயர்ந்தது தான் என்று நினைக்கும் சுய நினைவு அற்றவர்களின் செயலை நாம் எப்படி விமர்சனம் செய்ய முடியும் ?

இன்றைக்கும் சரி என்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு போராட அவர்களுக்குள்ளேயே தான் ஒருவர் வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. வேறு யாராவது போராடினால் அவரது தனிமனித செயலை அவருடைய சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனது சாதிக்கான பெருமையாக மாற்றிக் கொள்ளும் இழிசெயல் இன்றும் நடப்பதால் ஒடுக்கப்பட்டவர்கள் பிறர் போராடுகிறோம் என்று முன்வருவதை ஏற்கிறார்களோ இல்லையோ நம்புவதில்லை. தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன. மற்றபடி தலித்துகளுக்காக பெரிதாக எதையும் கட்சிகள் செய்வது கிடையாது. இதனை எதிர்த்து தான் தலித் கட்சிகளை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.

பெரியாரை நாயக்கர் என்றும் பலிஜா நாயிடு உட்பிரிவு வரை குறிப்பிடும் சாதிவெறியர்கள் அம்பேத்காரின் சாதியைக் குறிப்பிட்டு எழுதாதது அவர்களுக்கு அம்பேத்காரின் மீதான மரியாதை என்பதாக இல்லை மாறாக வன்கொடுமை வழக்கு வரும் என்பது தான்.
Read more…

Advertisements

3 Responses to “அண்ணல் அம்பேத்கார் !”

 1. reverse phone lookup Says:

  I got what you mean , saved to fav, very nice internet site .

 2. what is the best amount of raspberry ketone to take Says:

  I discovered your blog site internet site over the internet and appearance some of your early posts.
  Continue to keep in that the great operate. I just now additional increase your Rss to my MSN News Reader.
  Looking toward reading far more from you looking
  up at a later date!…

 3. swetharao Says:

  very interesting and enthusiastic


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: