மதம் என்பது மனிதனுக்காகவே …


விடுதலைக்கு என்ன வழி

1935 அக்டோபர் 13ஆம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில், இயோலாவில் டாக்டர் அம்பேத்கர் ஒரு பிரகடனம் செய்தார்.

“”நான் ஓர் இந்துவாக சாகப்போவதில்லை என்று உங்களுக்கு உறுதிமொழி தருகிறேன்.”

இந்தப் பிரகடனத்தின் பின்னணியில் அவர் பம்பாய் தாதரில் 1936 மே 30-31 தேதிகளில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். தமது மதமாற்ற இயக்கத்துக்குத் தம்முடைய மக்கள் எந்த அளவு ஆதரவு தருகிறார்கள் என்பதை அறியும் ஒரே நோக்கத்தோடு இந்த மாநாட்டைக் கூட்டினார். இதில் 35,000 தீண்டத்தககாத மகர்கள் கலந்துகொண்டார்கள்.

மாநாட்டு பந்தலில் கீழ்க்கண்ட முழக்கங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல.
உங்களுக்கு மனிதத் தன்மை வர வேண்டுமானால் நீங்கள் மதம் மாறுங்கள்.
அமைப்பு ரீதியாகத் திரள வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
வலிமை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
விடுதலை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
உங்களை மனிதர்களாக நடத்தாத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
கோயில்களுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி மறுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
உங்களை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
உங்களுக்குக் கல்வி மறுக்கும் மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
உங்கள் வேலை வாய்ப்புக்குத் தடையாக நிற்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற மதம் மதமே அல்ல; அது அடக்குமுறையின் அடையாளம்.
மனித குலத்தை ஒரு சீராக மதிப்பதை மத விரோதமாகக் கருதும் மதம் மதமே அல்ல. அது ஒரு மன நோய்.
புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம் மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.
ஒரு வகுப்புக்குக் கல்வி உரிமை இல்லை என்றும், அவ்வகுப்பு செல்வம் சேர்க்கக்கூடாது என்றும், ஆயுதம் ஏந்தக் கூடாது என்றும் தடை செய்யும் ஒரு மதம் மதமே அல்ல. மனித வாழ்வையே கேóக் கூத்தாக்கும் ஒரு மார்க்கம்.
கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை ஏழையாகவே நீடிக்கவேண்டுமென்றும் வóயுறுத்துகின்ற மதம் மதமே அல்ல; அது ஒரு தண்டனை.
கடவுள் எங்கும் உள்ளார் என்று உபதேசம் செய்து விட்டு, சக மனிதர்களை விலங்குகளை விடவும் கீழ்த்தரமாக நடத்துபவர்கள் வேடதாரிகள். அவர்களோடு நட்புறவே வைத்துக்கொள்ள வேண்டாம்.
எறும்புகளுக்குச் சர்க்கரை போடுபவர்கள் மனிதர்களைத் தண்ணீர் குடிக்காத வண்ணம் தடுத்து,அவர்களை உயிர்க் கொலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வேடதாரிகள்; அவர்களுடன் நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம்.

அந்த மாநாட்டில் திரு. ஸ்டான்லி ஜோன்ஸ் என்னும் ஐரோப்பியப் பாதிரியும், திரு.பிஜே. ஜாதவ் என்பவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். அங்கே பல சீக்கிய, முஸ்லீம் தலைவர்களும் மத குருக்களும் தங்கியிருந்தார்கள். இந்த மதமாற்றத்தில் தங்கள் மதங்களை நேரடியாகவோ, மறை முகமாகவோ குறிப்பிடுகிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளவே, அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். இயோலா தீர்மானத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை அறியும் நோக்கத்தோடு மாநாடு கூட்டப்பட்டது. திரு.டி. டோலாஸ் பிரதிநிதிகளை வரவேற்றார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் தலைவர் திரு.வி.எஸ்.வெங்கட்ராவ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

1936 மே 31 அன்று டாக்டர் அம்பேத்கர் மராத்தி மொழியில் மிக விரிவாகச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் ஆற்றிய சொற்பொழிவு தயாரிக்கப்பட்ட சொற்பொழிவு.

– ஆசிரியர்கள்

சீமாட்டிகளே, சீமான்களே,

நான் அண்மையில் பிரகடனம் செய்த மதமாற்றத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்றுதான் இந்த மாநாடு கூட்டப் பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த மாநாட்டின் பொருள் எனக்கு மிகவும் நெருக்கமானது. அது மட்டுமல்ல, உங்கள் எதிர்காலம் முழுக்க முழுக்க இந்தப்பொருளையே சார்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று சொல் வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. இல்லாவிட்டால் இப்படிப் பெருந்திரளாக நீங்கள் இங்கே கூடி இருக்க மாட்டீர்கள். எனக்கு முன் ஒரு மக்கள் வெள்ளத்தை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மதமாற்றத்தின் தேவை

மதமாற்றப் பிரகடனம் செய்ததிலிருந்து நமது ஆட்கள் பல்வேறு இடங்களில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பார்வைகளையும், எண்ணங்களையும் உங்களிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்; எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இன்று வரை மதமாற்றப் பிரச்சினை பற்றி விவாதிக்கவும் தீர்மானம் செய்யவும் நமக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தகைய வாய்ப்புக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த மதமாற்ற இயக்கம் வெற்றியடைய வேண்டுமானால் இதற்காக முன்கூட்டியே திட்டமிடுதல் மிகமிக அவசியமாகிறது. மதமாற்றம் என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. இது ஒரு பொழுதுபோக்கும் அல்ல. இதன் நோக்கம் மனித வாழ்வை வெற்றிகரமாக்குவதே. ஒரு படகுக்காரன் பயணம் தொடங்கு முன்னால் எல்லா முன்னேற்பாடுகளையும் எப்படிச் செய்து கொள்கிறானோ, அவ்வாறே நாமும் நமக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மறு கரையை அடைய நம்மால் முடியவே முடியாது. படகில் சரக்குகளை ஏற்றுவதற்கு முன்னால் அந்தப் படகுக்காரன் எத்தனை பயணிகள் படகில் ஏறப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன்.

உறுதியான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் நான் முன் அடி எடுத்துவைக்க முடியாது. எத்தனை பேர் இந்து மதத்தைவிட்டு நீங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியாமல் மதமாற்ற ஏற்பாடுகளை நான் ஆரம்பிக்க முடியாது. பம்பாயில் சில தொழிலாளர்கள் முன்பு நான் பேசினேன். ஒரு மாநாட்டில் சந்திக்காவிட்டால் பொதுமக்கள் கருத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர என்னால் முடியாது. இப்படிச் சொன்னதும் அவர்கள் மாநாடு கூட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கான செலவுகள், உழைப்புபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் பட்ட இன்னல்களைப் பற்றி நமது மதிப்பிற்குரிய தலைவரும், இந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான திரு. ரேவ்ஜி டாக்டுஜி டோவாஸ் தம்முடைய சொற்பொழிவில் விவரித்து விட்டார். வரவேற்புக் குழுவிற்கு நான் மிகமிக கடமைபட்டிருக்கிறேன். கடினமான முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.

மகர்களுக்காக ஒரு தனி மாநாடு ஏன்?

மகர்களுக்காக மட்டுமே ஏன் இப்படி ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டுமென்று சிலர் கேள்வி எழுப்பலாம். மதமாற்றப் பிரகடனம் எல்லாவிதமான தீண்டத்தகாதவர்களையும் பாதிக்கும். அப்படி இருக்கும்போது தீண்டத்தககாத எல்லா வகுப்பினர்களுக் குமான ஒரு பொது மாநாட்டை ஏன் கூட்டியிருக்கக் கூடாது? பிரச்சினைகள் மீது விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது என் கடமையென்று கருதுகிறேன்.

ஒன்று, இந்த மாநாட்டின் மூலம் அரசிடம் இருந்து எந்தப் பாதுகாப்பையும் நாம் கோரவில்லை. அதே போல் இந்துககளி டமிருந்து எந்தச் சமூக உரிமைகளையும் நாம் கோரவில்லை. நம் வாழ்வின் உயர்வுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் எதிர்கால வாழ்வுக்கான பாதையை நாம் எப்படி வடிவமைத்து கொள்ளப் போகிறோம் என்பதே இந்த மாநாட்டின் முன் உள்ள கேள்வி. இதற்கான தீர்வுகளை அந்தந்த வகுப்புகள் தனித்தனியாகத்தான் கண்டாக வேண்டும். ஏன் தீண்டத்தகாகதவர்களுக்கான ஒரு பொது மாநாட்டைக் கூட்டவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்னொரு காரணமும் உண்டு – மதமாற்றப் பிரகடனம் நடந்து 10 மாதங்கள் ஆயிற்று. இந்தக் கால இடைவெளியில் பொது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எண்ணத்தை அறியும் தருணம் வந்துவிட்டதாகவே நான் உணர்கிறேன். என் கருத்தப்படி இப்படி ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியான கூட்டங்கள் கூட்டுவதுதான் பொதுமக்கள் கருத்தை அறியும் எளிமையான வழி. மத மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் பொதுமக்கள் கருத்தை அறிய வேண்டியது மிக அவசியம். இப்படித் தனித்தனியே வகுப்பு வாரியாக மாநாடு நடத்திப் பொதுமக்கள் கருத்தை அறிவது ஒரு பொது மாநாட்டின் மூலம் அறிவதை விட லகுவாக இருக்கும். அப்படி அறியப்படும் கருத்தும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருக்கும்; நம்பிக்கைக்குரிய தாகவும் இருக்கும். மாறாகப் பொது மாநாடு அப்படிப்பட்ட தெளிவான கருத்துகளைப் பெற வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது. இதுவே மகர்களுக்கான தனி மாநாடு கூட்டக் காரணம். பிற வகுப்புகளை இதில் சேர்க்காததால் அவர்களுக்கு எதுவும் இழப்பில்லை. அவர்களுக்கு மதம் மாற விருப்பம் இல்லையே; எனவே இந்த மாநாட்டில் தங்களையும் சேர்க்க வில்லையே என்று அவர்கள் வருந்த நியாயமில்லை. அவர்கள் மதத்தை விட்டு நீங்க முடிவு செய்திருந்தால், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போன காரணத்தினால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை. மகர்களைப் போலவே தீண்டத்தகாகத மற்ற மதத்தைச் சர்ந்தவர்களும் தங்கள் தங்கள் மாநாடுகளைக் கூட்டவும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எந்தத் தடையும் இல்லை. அப்படி கூட்டுங்கள் என்றுதான் நான் சொல்லுவேன். என் திறமைக்கேற்ற அளவில் என்னாலான உதவிகளும் செய்வேன். இந்த அளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். இனி மையப் பொருள்பற்றி விவாதிக்கலாம்.

ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த மதமாற்றம் என்னும் விஷயம் மிகமிக முக்கியமானது. ஆனால் அவர்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். இந்த விஷயத்தில் அவர்களைத் திருப்தி செய்வது அத்தனை எளிதல்ல; ஆகவே, உங்கள் எல்லோருக்கும் திருப்தி ஏற்படாவிட்டால் மதமாற்றம் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகமிக கடினமானது. எனவே, என்னால் இயன்றவரை எளிமையாக இந்தப் பொருள் பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்.

மத மாற்றத்தின் ஸ்தூலமான அம்சம்

மதமாற்றத்தை இரண்டு அம்சங்களில் அணுக வேண்டும். ஒன்று – சமூக அணுகுமுறை மற்றும் மத அணுகுமுறை; ஸ்துல மான மற்றும் ஆன்மீகமான அணுகுமுறை. எப்படி இருந்தாலும் முதóல் தீண்டாமையின் இயல்பையும் அது நடைமுறையில் எப்படிக் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த புரிதல் இல்லாமல் மதமாற்றப் பிர கடனத்தின் உண்மையான பொருளை உங்களால் உணர முடி யாது. இதற்கான சரியான புரிதல் ஏற்பட வேண்டுமானால் உங் களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளின் வரலாற்றை நீங்கள் மறுபடியும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் உரிமை கோரியதற்காக உங்களை ஜாதி இந்துக்கள் அடித்து நொறுக்கி இருக்கலாம். பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமை கோரியபோது அதே நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்க லாம். கல்யாண மாப்பிள்ளை குதிரையின் மீது ஊர்வலம் போகும்போது உரிமையை நீங்கள் கோரிய போதும் அதே கதி நேர்ந்திருக்கலாம். இவை வெகு சாதாரணமாக நடந்து கொண் டிருக்கின்றன. உங்கள் கண்முன் அத்தகைய சம்பவங்கள் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜாதி இந்துக்கள் உங்கள் மீது நடந்த எத்தனையோ காரணம் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் வெளியிட்டால் இந்து அல்லாத பிற பொது மக்கள் வியப்பில் ஆழ்ந்து போவார்கள். தரமுள்ள துணி மணிகளை அணிந்து கொண்டதற்காக உங்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். செம்பு போன்ற உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தியதற்காகவும் நீங்கள் சாட்டையடி வாங்கியிருக்கிறீர்கள். தம்முடைய நிலத்தில் பயிற்ஈ செய்ததற்காக தீண்டத்தகாதவர்களின் வீடுகளையே எரித்துச் சாம்பலாக்கி யிருக்கிறார்கள். பூணூல் அணிந்தமைக்காகவும் அவர்களுக்கு அடி விழுந்திருக்கிறது. இறந்த விலங்குகளைத் தூக்கிச் செல்ல மறுத்ததற்கும் அவற்றின் பிணத்தை உண்ண மறுத்ததற்கும், காலணிகளுடன் கிராம வீதி வழியாக நடந்ததற்கும், ஜாதி இந்துக் களைக் கண்டபோது உடல் வணங்கித் தொழாமல் போனதற்கும், மல ஜலம் கழிக்க வயல்வெளிக்குச் செல்லும்போது செப்புக் குவளையில் நீர் கொண்டு போனதற்கும், இப்படி எல்லாவற்றிற்கும் அவர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் ஒரு விருந்தில் சப்பாத்தி பரிமாறியதற்காகவும் அவர்களை அடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தண்டனைகளின் அனு பவத்தை உங்களில் பலர் கேள்விபட்டிருக்கக்கூடும். அடி உதை தர முடியாது என்னும் பட்சத்தில், “தள்ளி வைத்தல்’ என்னும் கொடுமையான தண்டனையும் தரப்பட்டது. உங்களது அன்றாட வாழ்க்கையை இப்படிச் சகிக்கமுடியாத வண்ணம் சிதைத்தார்கள். உங்களுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத வண்ணம் தடுத்தார் கள். உங்கள் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப் போவதிலும் இடை யூறு செய்தர்கள். ஏன் உங்களுடைய ஆட்கள் சில கிராமங் களுக்குள் நுழைவதையே நிறுத்தி வைத்தார்கள். என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று உங்களில் சில பேருக்குத்தான் புரிந்திருக்கும். இந்தக் கொடுங்கோன்மையின் மூல காரணம் என்ன, இதன் வேர் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறது? என்பதை அறிவது மிகமிக அவசியம்.

இது ஒரு வர்க்கப் போராட்டம்

மேலே கூறிய நிகழ்வுகளுக்கும் தனிமனிதர்களுடைய நல்ல குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகைமை கொண்ட இரு பிரிவுகளுக்கு இடையிலான மோதல் என்றும் இந்நிகழ்வுகளை எடுத்துக்கொள்ள முடியாது. தீண் டாமைப் பிரச்சினை ஒரு வர்க்கப் போராட்டம், ஜாதி இந்துக் களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடையிலான போராட் டம். இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கெதிராக அநீதி இûôக்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திறகு அஸ்ரீதி இழைக்கிறது என்பதே இதன் பொருள். இந்த வர்க்கப் போராட்டம் சமூகத் தரத்தோடு தொடர்புடையது. அதாவது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்துடன் எப்படிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் எனப்தே இந்தப் போராட்டத்தின் குணாம்சம். நீங்கள் மற்றவர்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டாலே போதும். இந்தப் போராட்டம் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் சப்பாத்தி பரிமாறுவது, தரமுள்ள துணி மணிகளை அணிந்துகொள்வது, பூணூல் தரித்துக்கொள்வது, உலோகக் குவளையில் தண்ணீர் மொண்டு பருகுவது, மாப் பிள்ளை குதிரைச்சவாரி செய்வது போன்ற அற்பக் காரணங் களுக்காகவா ஒரு போராட்டம் நடக்க முடியும்? இந்த நிகழ்வுகளை நீங்கள் உங்கள் பணத்தைச் செலவிட்டு செய்கிறீர்கள். இதில் ஜாதி இந்துக்கள் எரிச்சல் அடைவதற்கு என்ன இருக் கிறது? அவர்களது கோபத்திற்குக் காரணம் மிகமிக எளிமை யானது. நீங்கள் அவர்களுக்குச் சமமாக நடக்க முயல்கிறீர்கள். உங்கள் சமத்துவம் அவர்களுக்கு அவமானமாகத் தோன்றுகிறது. அவர்கள் பார்வையில் நீங்கள் தரம் குறைந்தவர்கள்; அசுத்த மானவர்கள்; நீங்கள் கீழ்மட்டத்தில்தான் இருந்தாக வேண்டும்; அப்போதுதான் உங்களை அவர்கள் வாழ விடுவார்கள். நீங்கள் எல்லை மீறினால் போராட்டம்தான். மேலே கூறிய எடுத்துக் காட்டுகளிலிருந்து இன்னொரு உண்மையும் புலப்படுகிறது. தீண்டாமை என்பது தற்காலிகமானதல்ல; அது நிரந்தரமானது. இன்னும் நேரடியாகச் சொன்னால் ஜாதி இ‰துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான போராட்டம் ஒரு நிலையான நடைமுறை விதி; அது தெய்வீகமானது. ஏனென்றால் தீண்டாமையை அனுமதிக்கும் மதம் உங்களை அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. மதம் தெய்வீகமானது; அதேபோல் தீண்டாமையும் தெய்வீகமானது; நிரந்தரமானது. இப்படித்தான் ஜாதி இந்துக்கள் நினைக்கிறார்கள்.

காலம் அல்லது சூழலக்கேற்ப எந்த மாற்றமும் இதில் சாத்தியமில்லை. சமூக ஏணியின் கடைசிப் படியில் நீங்கள் நிற்கிறீர்கள். இதே படியில்தான் நீங்கள் நிரந்தரமாக இருந்தாக வேண்டும். இதன் பொருள் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர் களுக்குமான போராட்டம், எக்காலத்துக்கும் நீடிக்கும் என்பது தான். இந்தப் போராட்டத்திலிருந்து நீங்கள் எப்படி மீளப் போகிறீர்கள்? எப்படி உயிர் வாழப் போகிறீர்கள்? என்பதுதான் மையமான கேள்வி. இந்தச் சிந்தனை உங்களுக்கு ஏற்படா விட்டால் உங்களுக்கு விடுதலையே இல்லை. இந்துக்களின் ஆணையை ஏற்று அவற்றிற்கு அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்று விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத் தோடும் வாழ விரும்புபவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும். இந்தப் போராட்டத்திலிருந்து மீண்டு நாம் எப்படி வாழ முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் தருவது என்னைப் பொறுத்தவரை கடினமான விஷயமில்லை. எந்தப் போராட்டத்திலும் வலிமை மிகுந்தவன் வெற்றியடைவான் என்பதை இங்கே கூடியிருக்கும் நீங்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டீர்கள். வலிமை இல்லாதவன் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்று அநுபவங்களால் நிரூபிக்கப்பட்ட பாடம். இதை விளக்க மேலும் எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.

ஆற்றலை முதலில் அடையுங்கள்

இப்பொழுது நீங்கள் அணுக வேண்டிய கேள்வி இதுதான். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நிலைத்திருக்கும் அளவு உங்களிடம் ஆற்றல் இருக்கிறதா? மனிதரிடம் மூன்று வகையான ஆற்றல்கள் இருக்கின்றன. (1) மனித ஆற்றல், 2. செல்வம், 3. அறிவாற்றல், இம்மூன்றில் உங்களிடம் எந்த ஆற்றல் இருக்கிறது, மனித ஆற்றலைப் பொறுத்தவரை ஒன்று தெளிவாக வேண்டும். நீங்கள் சிறுபான்மையினர். பம்பாய் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் தீண்டத்தகாதவர்கள் 8இல் ஒரு பங்கு தான். அந்த 8 இல் ஒரு பங்குதான் அமைப்பு ரீதியாகத் திரளாதவர்கள். பல பிரிவுகளாக சிதறிக் கிடப்பவர்கள். இக்காரணங்களால் இந்தக் குறைந்த அளவு மக்கள் தொகையை வைத்துக்கொண்டு நமக்காக ஒரு வாழிடத்தை வென்றெடுக்க நாம் போராட முடியாது. நம்மிடம் பணபலமும் இல்லை. மனித ஆற்றலாவது ஏதோ கொஞ்சம் இருக்கிறது. செல்வம் என்பது அறவே இல்லை. உங்களுக்கு வணிகம் இல்லை, தொழில் இல்லை. பணியில்லை, நிலமுமில்லை. உயர் ஜாதிகள் தூக்கி வீசுகிற ரொட்டித் துண்டுக ளையே நீங்கள் வாழ ஆதாரமாக நம்பியிருக்கிறீர்கள். உங்களுக்கு உணவில்லை, ஆடைகள் இல்லை, உங்களிடம் செல்வத்தின் வலிமை எப்படியிருக்க முடியும்? அநீதி இழைக்கப்பட்டால் அவற்றிற்கு பரிகாரம் தேட நீதிமன்றங்களை அணுகும் வலிமை கூட உங்களுக்கு இல்லை; மன வலிமை என்பது இன்னும் மோசம்; நுற்றாண்டுகளாக நீங்கள் உயர் ஜாதிகளுக்குத் தொண்டு புரிந்தது மட்டுமில்லாமல் அவர்கள் இழைக்கும் அவமானங்களை யும் அவர்களது கொடுங்கோன்மையையும் எத்தகைய முணு முணுப்பும், புகாரும் இல்லாமலேயே சகித்துக்கொண்டீர்கள். அதனால் பதிலுக்கு பதில் கூறுதல் எதிர்த்துக் கலகம் செய்தல் என்னும் உணர்வுகளே உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தன்னம்பிக்கை, மனத்திட்பம், லட்சியம் எல்லாம் உங்களிடமிருந்து அடியோடு மறைந்து விடும். ஆதலால் நீங்கள் உதவியற்ற நிலைக்கு ஆளாகி விட்டீர்கள். வலிமை குன்றி விட்டீர்கள். சோகை பிடித்தவர்களாகி விட்டீர்கள். பெரும் தோல்வி மனப்பான்மையும், விரக்தியுமே உங்களது சூழல் என்று ஆகிவிட்டது. நீங்களும் எதாவது செய்ய முடியும் என்பதற்குரிய லேசான ஒரு கருத்துக் கீற்றும் உங்கள் உள்ளங்களில் தோன்றவில்லை.

நீங்கள் மட்டுமே நசுக்கப்படுவது ஏன்?

நான் விவரித்தவை உண்மையென்றால், அந்த விவரிப்பின் முடிவான தீர்மானத்துக்கும் நீங்கள் வந்தாக வேண்டும். உங்கள் வலிமை ஒன்றை மட்டுமே நீங்கள் நம்பினால் இந்த அடக்கு முறையை எதிர்கொள்ள எப்போதும் உங்களால் முடியாது. நீங்கள் மட்டுமே சிறுபான்மையல்ல. முஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் – மாங்க் ஜாதிகளைப்போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்? ஒரு கிராமத்தில் முஸ்லீம்கள் இரண்டே இரண்டு வீடுகளில்தான் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களைக் காயப் படுத்த யாருக்காவது துணிவு இருக்கிறதா? பத்து வீடுகளை வைத்திருக்கும் உங்களை முழு கிராமமும் சேர்ந்துகொண்டு வாட்டி வதைக்கிறார்களே! இது ஏன்? இது ஒரு நிலையான கேள்வி. இதற்கு ஒரு சரியான பதிலைக் கண்டறிய வேண்டும்.

என் கருத்தில் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. இந்திய முஸ்லீம் மக்கள் தொகையின் பலம் என்னவென்றால் அந்த இரண்டு வீட்டு முஸ்லீம்களுக்குப் பின்னால் இந்திய முஸ்லீம் சமுதாயமே திரண்டு நிற்கிறது. அதனால் அவர்கள் மீது கை வைக்க அனைவருக்கும் அச்சம். அந்த இரண்டு வீட்ஜி முஸ்லீம் கள் அச்சமில்லாமல் சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள். எந்த இந்துவாவது அவர்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்ய முற்பட்டால் பஞ்சாப் முதல் மதராஸ் வரை பரவியுள்ள எல்லா முஸ்லீம்களும் அவர்களின் பாதுகாப்புக்காகப் புறப்படுவார்கள். ஆனால் உங்களுக்கு ஆதரவாக உங்களைக் காப்பாற்ற உங்களுக்கு நிதி உதவி வழங்க எவரும் தயாரில்லை. எந்த அரசு அலுவலகமும் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போவதில்லை என்று இந்துக்களுக்குத் தெரியும். தாசில்தாரும், காவல் அதிகாஃயும், ஜாதி இந்துக்களுக்கும் உங்களுக்கும் மோதல் என்றால் எல்லா அதிகாரிகளும் அவர்களுடைய சொந்த ஜாதியைச் சேர்ந்தவர் களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்களே ஒழிய தங்கள் கடமைகœ மீது அவர்கள் அக்கறை காட்டப்போவதில்லை. இந்துக்கள் உங்களுக்கு எதிராக அத்தனை கொடுங்கோன்மை யையும் கையாளுவதற்குக் காரணம் நீங்கள் ஆதரவு அற்றவர்கள் என்பதுதான் – இந்த விவாதத்தில் இரண்டு உண்மைகள் நிறுவப் படுகின்றன.

1. வலிமையில்லாமல் கொடுங்கோன்மையை எதிர்க்க உங்களால் முடியாது. 2. கொடுங்கோன்மையை எதிர்கொள்ள போதுமான வலிமை உங்களுக்கு இல்லை. இந்த இரண்டு உண்மைகளை அடுத்து மூன்றாவது உண்மை தானே புலப்படுகிறது. கொடுங்கோன்மையை எதிர்கொள்வதற்கான வலிமையை நீங்கள் வெளியிலிருந்துதான் பெற்றாக வேண்டும். இதை எப்படிப் பெறப் போகிறீர்கள் என்பது கேள்வி. விருப்பு வெறுப்பு இல்லாமல் இது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

வெளியிலிருந்துதான் வலிமை கிடைக்க வேண்டும்

ஜாதி வெறியும் மத வெறியும் மக்கள் மனத்திலும் ஒழுக்கத்தி லும் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வறுமை, மக்களின் துயரம் இவற்றைப் பற்றி எவருக்கும் இந்நாட்டில் கõலையில்லை. அப்படிக் கவலைப்படுகிறவர்களும் இவற்றை நீக்க எந்த முயற்சியும் செய்வதாகத் தெரியவில்லை. அதனால் சொந்த ஜாதி, சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் வறுமை, துன்பம் ஆகியவற்றிற்கு எதிராக அவர்களுக்கு உதவுவதற்கு மக்கள் தயார். இது ஒரு வக்கிரமான மனித ஒழுக்கம். இதுதான் இந்நாட்டில் காணப்படும ஒழுக்கம். கிராமங்களில் இந்து‚களின் கைகளில் தீண்டத்தகாதவர்கள் அவதிப்படும்போது மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாக வாழத்தான் செய்கிறார்கள். தீண்டத் தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் நியாயமற்றவை என்று எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்றுச் சொல்ல முடியாது. உணரத்தான் செய்கிறார்கள். ஆனாலும் உதவி செய்ய முன்வருவதில்லை. இதற்குக் காரணம் என்ன? அவர்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்வில்லை என்று கேட்டால் அது எங்கள் வேலை இல்லை என்பார்கள். எங்கள் மதத்தைச் சேராதவர்களின் பிரச்சினைகளில் குறுக்கிட எங்களுக்கு உரிமையில்லை என்பார்கள். நீங்கள் அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டோம் என்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும். இன்னொரு சமூகத்துடன் நெருங்கிய உறவுகளை நிறுவாவிட்டால் இன்னொரு மதத்தில் சேராவிட்டால் நீங்கள் வெளியிலிருந்து ஆதரவையும் வலிமையையும் பெறமுடியாது. நீங்கள் இப்போது இருக்கும் மதத்திலிருந்து விலக வேண்டும். இன்னொரு மதத்தில் சேர வேண்டும். இன்னொரு சமூகத்தில் சேர வேண்டும். அப்படி இல்லையேல் அந்த சமூகத்தின் வலிமையை நீங்கள் பெறமுடியாது. வலிமையில்லாத பட்சத்தில் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் உங்களைப் போலவே அனுதாபத்திற்குரிய சூழலில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

மத மாற்றத்தின் ஆன்மிகக் கூறுகள்

உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத் தின் அவசியம் பற்றி விவாதித்தோம். இனி ஆன்மிகப் பயன் பற்றிப் பார்ப்போம். மதம் ஏன் இருக்கிறது? அது ஏன் அவசியமாகிறது?

இந்தப் பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்றால் என்ன என்று பலர் பல விதமாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். அவற்றுள் ஒரே ஒரு விளக்கம்தான் பொருள் புரிந்தாகவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம் – இதுதான் மதம் என்பதற்கு உண்மையான விளக்கம். இது என்னுடைய விளக்கமில்லை; சனாதன இந்துக்களின் தலைவரான திலகர் தந்த விளக்கம். ஆகவே புதிதாக ஒரு விளக்கம் தருகிறேன் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். திலகரின் விளக்கத்தை வாதத்திற்காக மட்டுமே நான் ஏற்றுக்கொண்டதாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமுதாயத்தை நிர்வகிப்பதற்காகச் சில விதிகளை அதன் மீது திணிக்கிறோம். அது மதம். மதத்தைப் பற்றிய என்னுடைய கருதுகோளும் அதுவேதான். இந்த விளக்கம் எதார்த்த அடிப்படையிலும் தர்க்க அடிப்படையிலும் சரியாகவே இருக்கிறது. ஆனால் சமூகத்தை ஆளும் அந்த விதிகளின் இயல்பு கள் என்னவென்று தெளிவாக்க இந்த விளக்கம் முயலவில்லை. அவ்விதிகளின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் கேள்விக்கு இதில் பதிலில்லை. மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விதிகளின் இயல்பு பற்றிய இந்தக் கேள்வி முக்கியமானது. எது – மதம் – எது மதமில்லை என்பது மதத்திற்கு தரப்பட்ட விளக்கத்தைப் பொறுத்து அமைவதில்லை. மாறாக, சமுதாயத்தின் மீது ஆளுமை செலுத்தும் விதிகளின் இயல்புக்கு என்ன நோக்கமோ, அதை அடிப்படையாக வைத்து இந்தப் பிரச்சினையை அலசும்போது இன்னொரு பிரச்சினையும் எழுகிறது. மனிதனுக்கும், சமுதாயத்திற்குமான உறவு என்ன, நவீன சமூகத் தத்துவாசிரியர்கள் இந்தக் கேள்விக்கு மூன்று விதத்தில் பதில் தந்தார்கள். தனிமனித மகிழ்ச்சியைப் பெற்றுத் தருவதே சமுதாயத்தின் இலக்கு என்பது சிலர் கருத்து. இன்னும் சிலர், மனிதனின் இயல்பான பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவே சமுதாயம் நிலைத்திருக்கிறது. அவன் தன்னைத் தானே வளர்த்ஹிக் கொள்ள அது உதவுகிறது என்றார்கள் வேறுசிலர். இப்படித் தனிமனிதனுக்கு முக்கியத்துவம் தராமல் லட்சிய பூர்வமான சமுதாயத்தைப் படைப்பதே நோக்கமென்று சொன்னார்கள். இந்து மதத்தின் கருதுகோள் மேலே கூறிய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்து மதத்தில் தனி மனிதருக்கு இடமில்லை. அதன் அடிப்படைக் கருதுகோள் வர்க்கம் சார்ந்தது. ஒரு தனிமனிதன் இன்னொரு தனிமனிதருடன் எப்படி உறவாட வேண்டுமென்று இந்துமதம் கற்பிக்க முயலவில்லை; தனிமனிதனை ஏற்காத எந்த மதத்தையும் நான் ஏற்பதற்கில்லை. ஒரு தனிமனிதனுக்குச் சமுதாயம் என்பது தேவைதான். ஆனால் சமூக நலன் மட்டுமே ஒரு மதத்தின் லட்சிய எல்லையாக இருக்கமுடியாது. தனிமனிதன் நலனும் முன்னேற்றமும் மதத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தே தீரவேண்டும் என்பதே என் கொள்கை. தனிமனிதன் என்பவன் சமுதாயத்தின் அம்சம்தான். ஆனால் அவனுக்கும் சமுதாயத்துக்குமான தொடர்பு உடலுக்கும், உறுப்புகளுக்கும் இடையிலான தொடர்பு, வண்டிக்கும் சக்கரங்களுக்கும் இடையிலான தொடர்பு போன்றதோ ஆகாது.

சமுதாயமும் தனிமனிதனும்

ஒரு சொட்டு நீர் கடலில் விழும்போது அது கடலுடன் ஐக்கியமாகிறது. அதுபோல் சமுதாயத்தில் வாழ்கிற மனிதர்கள் சமுதாயத்தில் ஐக்கியமாவதில்லை. மனித வாழ்க்கை சுதந்திரமானது. அவன் சமுதாயத்திற்கு தொண்டு புரிவதற்காக மட்டுமே பிறக்கவில்லை. சுய மேம்பாடும் அவனுடைய நோக்கமாகும். இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒருவன் இன்னொருவனை அடிமை கொள்ளலாகாது என்னும் கருத்தோட்டம் நலிவுகிறது. தனி மனிதனுக்கு முக்கியத்தவம் தராத மதத்தை நான் ஏற்கமாட்டேன். இந்து மதம் தனிமனித முக்கியத்தவத்தை ஏற்பதில்லை. எனவே, அதை நான் ஏற்பதற்கில்லை. ஒரு வர்க்கம் மட்டுமே அறிவை ஈட்டமுடியும். இன்னொரு வர்க்கம் ஆயுதம் மட்டும்தான் பயன்படுத்த முடியும். மூன்றாம் வர்க்கம் வணிகம் செய்யவேண்டும். நான்காம் வர்க்கம் முதல் மூன்று வர்க்கங்களுக்கும் ஏவல் செய்ய வேண்டும் என்று விதிக்கும் ஒரு மதத்தை நான் ஏற்பதற்கில்லை. ஒவ்வொருவருக்கும் அறிவு தேவை, ஆயுதம் தேவை, பணம் தேவை; சிலருக்கு மட்டுமே கல்வி தந்து மற்றவர்களை இருளில் வீழ்த்தும் நோக்கம் கொண்ட மதம், மதமே அல்ல. மக்களை மன அளவில் அடிமைத் தனத்தில் ஆழ்த்துகின்ற மதத்தை சதி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வர்க்கம் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், இன்னொன்று அதைத் தொடவே கூடாது என்றும் சொல்லுகிற மதம், அந்த இன்னொரு வர்க்கத்தை மீளாத அடிமை நிலையில் வைத்திருக்கும் ஒரு தந்திரமே தவிர வேறில்லை என்பேன். சொத்து சேர்க்கும் பாதையை ஒருவர்க்கத்திற்கு மட்டுமே திறந்துவிடுவது, பிறரின் அன்றாடத் தேவைகளுக்குக்கூட முன்கூறிய வர்க்கத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிற மதம், மதமே அல்ல. அது ஒரு ஏதேச்சதிகாரம். இதைத்தான் இந்து மதம் சதுர்வர்ணம் என்கிறது. சதுர்வர்ணத்தின் மீது என் கருத்துகளை நான் தெளிவாகத் தெரிவித்திருக்கிறேன். இந்து மதம் உங்களுக்குப் பயன் அளிக்க கூடியதா? என்பதை நீங்களே எண்ணிப் பார்த்தக் கொள்ளுங்கள். மதம் என்பதன் அடிப்படை நோக்கம் தனிமனிதனின் ஆன்மிக வளர்ச்சி‚கான சூழலை உருவாக்குவதுதான். இதை ஏற்றுக் கொண்டால் இந்து மதத்தின் மூலம் உங்கள் ஆன்மிகம் ஒருபோதும் மேம்பாடு அடையாது என்பது தெளிவாகிறது. தனிமனிதனை உயர்த்துவதற்கு மூன்று காரணிகள் வேண்டும். அவை : 1. அனுதாபம், 2. சமத்துவம், 3. சுதந்திரம். இந்து மதத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றாவது உண்டா? உங்கள் அநுபவத்தை வைத்துப் பதில் சொல்லுங்கள்.

இந்து மதத்தில் உங்கள்மீது அனுதாபம் உண்டா?

அனுதாபம் இந்து மதத்தில் அறவேயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை எவரும் அனுதாபத்தோடு பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் உங்கள் அனைவருக்குமே அனுபவம் உண்டு. உங்களை இந்துக்கள் எப்போதும் சகோதரத்துவத்துடன் நடத்தியதில்லை. அயல் நாட்டுக்காரர்களைவிடக் கேவலமாகத் தான் நடத்தியிருக்கிறார்கள். இந்துக்களும் தீண்டத்தககாத வர்களும் பக்கம் பக்கமாக வாழ்கின்ற ஒரு கிராமத்தில் இரு சாராரையும் சகோதரர்கள் என்று யாராவது சொல்கிறார்களா? ஏதோ எதிரெதிர் முகாம்களில் முட்டிமோதிக் கொள்வதற்காகத் தயார் நிலையில் இருக்கும் இரு படைகள் என்றுதானே சொல்லுகிறார்கள். இந்துக்களுக்கு எள்ளளவும் உங்கள் மீது நேசமில்லை. முஸ்லீம்கள் மீதாவது அவர்களுக்கு ஓளரவு நேசம் உண்டு. உங்களை விட முஸ்லீம்களை அவர்கள் நெருக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் உள்ளூர் குழுக்களிலும், சட்டமன்றங்களிலும், வணிகத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக்கொள்ளுகிறார்கள். ஜாதி இந்துக்கள் அத் தகைய அயீதாபத்தை உங்கள் மீது காட்டியதாக ஒரு சான்று தர முடியுமா? அவர்களுடைய மனங்களில் உங்கள் மீது வெறுப்பைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெறுப்பால் எத்தகைய பயங்கர விளைவுகள் ஏற்பட்டுள்ளன? நீதி கேட்டு நீதிமன்றம் போகிறவர்களையும் உதவி கேட்டு காவல் நிலையத்தை அணுகுபவர்களையும் கேட்டுப் பாருங்கœ. அவர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையென் றால் உங்கள் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வதற்கான காரணம்தான் என்ன? இந்து‚களுக்கு உங்கள் மீது அநுதாபம் இல்லை. தங்களிடம் உள்ள அதிகாரத்தை அவர்கள் சரியாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இத்தகைய வெறுப்புக்கு இடையில் வாழ்வதில் என்ன பயன்?

இந்து மதத்தில் உங்களுக்கு சமத்துவம் உண்டா?

இப்படி ஒரு கேள்வியைக் கேட்கவே கூடாது. தீண்டாமை என்றாலே சமத்துவமின்மை என்றுதான் பொருள். தீண்டாமையை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலக வரலாற்றில் இத்தகைய ஏற்றத்தாழ்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இதனால் உயர்வு மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு ஒருவர் மகளை இன்னொருவருக்குத் திருமணம் செய்வது ஒருவர் இன்னொருவருடன் நன்றாக அமர்ந்து உண்ணுவது கூட முடியாத செயலாகிறது. இந்து மதத்தில் இவை சர்வ சாதாரணம். ஒருவன் இன்னொரு மனிதனைத் தீண்டக்கூடாது என்று தள்ளி வைக்கும் கீழ்த்தரமான மரபு இந்து மதத்தையும் இந்து சமுதாயத்தையும் தவிர வேறு எங்காவது இருக்கிறதா? ஒரு மனிதனை இன்னொருவன் தீண்டுவதால் அவன் அசுத்தமாகிப் போகிறான் என்றும், அந்த தீண்டுதலால், தண்ணீருக்குக்குக்கூட தீட்டு வந்து விடுகிறது என்றும், அவன் கடவுளைத் தொழவும் அருகதை அற்றவன் என்றும் இங்கு நிலவுகிற மரபு மனித சமுதாயத்தில் வேறு எங்காவது உண்டா? தீண்டத்தகாதவர்களையும் தொழுநோயாளியையும் ஒரே மாதிரிதானே நடத்துகிறார்கள்? தொழுநோயாளியைப் பற்றிய நினைப்பே மக்களுக்கு அருவருப்பைத் தருகிறது. உங்களைத் தொடுவார்கள்; சமமாக நடத்துவார்கள் என்கிறார்கள். படித்த, பணமுள்ள, சுத்தமான மகரும் படிக்காத ஏழ்மையான அசுத்தமான மகரைப் போலவே மோசமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இன்னொன்று, படிப்பும் சொத்தும், நல்ல ஆபரணங்களும் ஆடைகளும் பெற முடியாத ஒருவன் சமத்துவத்தை மட்டும் எங்கிருந்து பெறுவான்?

அறிவு, சொத்து, துணிமணிகள் என்பவை ஒருவனுக்குப் புற அடையாளங்கள்; இவற்றிற்கும், சமத்துவத்திற்கும் முடிச்சுப் போடக்கூடாது என்பதுதான் கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் கற்பிக்கப்படுகிற கோட்பாடு. காரணம் அந்த மதங்கள் மனித நேயத்தை அடிப்படையாக கொண்டவை. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்; அவமரியாதை செய்தல் கூடாது; எல்லோரையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்றுதான் அந்த மதங்கள் போதிக்கின்றன. இத்தகைய போதனைகள் இந்து மதத்தில் அறவே இல்லை. மனித நேயத்தையே வலியுறுத்தாத ஒரு மதத்தால் என்ன பயன்? அதில் நீடிப்பதில்தான் என்ன நன்மை? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முற்படும் சில இந்துக்கள் உப நிஷதங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். கடவுள் எல்லோரிடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று உபநிஷதம் சொல்கிறது என்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒன்றைக் கூறிவிட வேண்டும். மதமும் விஞ்ஞானமும் இரண்டு வேறுபட்ட விஷயங்கள். ஒரு கோட்பாடு விஞ்ஞான கோட்பாடா? அல்லது மதக் கோட்பாடா? என்பதை ஆராய வேண்டும். கடவுள் எல்லோரிடத்திலும் நிக்கமற நிறைந்திருக்கிறார் என்பது விஞ்ஞானக் கோட்பாடு; மதக் கோட்பாடு அல்ல. ஏனென்றால் மதம் என்பது நேரிடைமயான மனித நடத்தையைச் சார்ந்தது. அவ்வாறே கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதும் விஞ்ஞானக் கோட்பாடுதான். மதக் கோட்பாடு அல்ல. இந்துக்கள் மேலே கூறிய கோட்பாடுகளின்படி நடப்பதில்லை. அதற்கு மாறாக எங்கும் நிறைந்துள்ளார் என்பது தத்துவக் கோட்பாடு அல்ல – அது இந்து மதத்தின் கோட்பாடு என்று இந்துக்கள் வலியுறுத்தினால் நான் அவர்களுக்கு மிகச் சுலபமாகப் பதில் சொல்லுவேன் – இந்துக்களிடையே நிலவுகிற இழிநிலை உலகில் வேறு எங்குமே கிடையாது. சொல்லும், செயலும் இரண்டு துருவங்கள் அளவு முரண்படுகிற மிகக் கொடுமையானவர்கள் இந்துக்கள். அவர்கள் நாவில் ராம நாமமும் கட்கத்தில் கூரிய வாளும் இருக்கின்றன. அவர்கள் முனிவர்களைப் போல் பேசுகிறார்கள். கசாப்புகாரர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சக மனிதனை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்துகின்ற வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம். எறும்புகளுக்கு ஒரு பக்கம் சர்க்கரை போடுவது, இன்னொரு பக்கம் சக மனிதர்களுக்கு குடிநீர் உரிமையை மறுப்பது, அவர்களைக் கொலையும் செய்வது என்று வாழும் வேடதாரிகளுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளாதீர்கள்.

அவர்கள் உறவால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு மரியாதையில்லை; சமூகத் தகுதியில்லை; இந்துக்கள் மட்டுமே உங்களை மதிப்பதில்லை என்று சொல்வதற்கில்லை; முஸ்லீம்களும் கிறித்தவர்களும்கூட அப்படித்தான். அவர்களும் உங்களைப் பொறுத்தவரை அதே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே நாம் இந்துக்கள் கண்களுக்கு மட்டுமின்றி எல்லோர் கண்களுக்கும் இந்தியா முழுமையிலும் கீழினும் கீழான நிலையில் இருக்கிறோம். இத்தகைய வெட்கங்கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரவமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானனால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்து மதத்தையும், இந்து சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான் அந்த வழி.

இந்து மதத்தில் உங்களுக்குச் சுதந்திரம் உண்டா?

பிற குடிமக்களைப் போலவே வணிகம் செய்யும் உரிமையைச் சட்டம் உங்களுக்கு உறுதி செய்திருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். அவ்வாறே தனிமனிதச் சுதந்திரமும் உண்டு என்கிறார்கள். நீங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் சொல்லுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? மூதாதைகள் செய்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று விதித்திருக்கிற சமுதாயத்தில் வணிகம் செய்யும் உரிமை உண்டு என்றால் அதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? சொத்து சேர்ப்பதற்கான எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு உங்கள் சொத்தை நீங்கள் அனுபவியுங்கள் என்றும், உங்கள் பணத்தை யாரும் தொட மாட்டார்கள் என்றும் சொல்லுவதில் என்ன பயன்? பிறப்பிலேயே நீங்கள் களங்கம் உள்ளவர்கள் என்று கற்பித்துவிட்டு எந்தப் பணிக்கும் தகுதி அற்றவர்கள் என்றும் விதித்துவிட்டு உங்களுக்கு வேலை செய்யும் உரிமை உண்டு என்று சொல்வதில்தான் என்ன பயன்?

ஆக இந்த உரிமைகள் எல்லாம் உங்களைப் பார்த்து சிரிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சட்டம் பல்வேறு உரிமைகளை உறுதி செய்யலாம். ஆனால், சமுதாயம் அனுமதித்தால்தானே நீங்கள் அவற்றை அனுபவிக்க முடியும்? தீண்டத்தகாதவர்களுக்குக் கவுரவமான துணிமணிகளை அணிந்து கொள்ளும் உரிமையைச் சட்டம் வழங்கியிருக்கிறது. இந்த உரிமையால் என்ன பயன்? அப்படி அணிந்துகொள்ள இந்துக்கள் அவர்களை அனுமதிப்பதில்லை. உலோகக் குவளையில் தண்ணீர் மொள்ளவும், உலோகப் பாத்திரங்களில் சமைக்கவும், பரிமாறவும், கூரைகளை ஓடுகளால் வேய்ந்து கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் சமுதாயம் அனுமதிப்பதில்லை. வெறும் உரிமைகளால் என்ன பயன்? இப்படிப் பல்வேறு உரிமை மீறல்களை அடுக்கிகொண்டே போகலாம்.

சமுதாயத்தால் அனுமதிக்கப்பட்ட உரிமைதான் உண்மையான உரிமை. சட்ட அனுமதியுண்டு. சமுதாய அனுமதியில்லை என்றால் அது உரிமையே அல்ல. தீண்டத்தகாதவர்களுக்குச் சட்டம் உறுதி செய்திருப்பதை விட அதிகபட்சமான சமூக விடுதலை தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் சட்ட ரீதியான சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்குப் பௌதிக சுதந்திரம் இருக்கிறதல்லவா, எங்கு வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அவை சட்டம் விதித்திருக்கிற கட்டுப்பாடுகளை மீறாத அளவில் சரி என்று சிலர் சொல்லுஆøôர்கள்; இந்தச் சுதந்திரத்தால் தான் என்ன பயன்? மனிதனுக்கு உடல் மட்டுமில்லை; உள்ளமும் உண்டு. பௌதிக விடுதலை என்றால் என்ன? சுதந்திர எண்ணம், சுதந்திரச் செயல் இவையே பௌதிக விடுதலை, ஒரு கைதியின் விலங்குகளை அகற்றி அவனை விடுதலை செய்து விடுகிறார்கள்; இதன் உள்ளர்த்தம் என்ன? அவன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்பதுதானே? உடல் திறன் அளவுக்குத் தகுந்தபடி அவன் செயல்படலாம், என்பதுதானே? மனத்திற்கு விடுதலை இல்லையென்றால் இந்த உடல் விடுதலையால் அவனுக்கு என்ன பயன்? மன விடுதலைதான் உண்மையானது. மன விடுதலையற்ற வன் விலங்குகளால் பிணைக்கப்படாத நிலையிலும் ஓர் அடிமைதான். அவனது மனம் சுதந்திரமாக இல்லையென்றால் அவன் சிறைவாசம் புரியாவிட்டாலும் கைதிதான். மன விடுதலையில்லாதவன் உயிரோடு உலவினாலும் பிணம்தான். மன விடுதலை அல்லது சிந்தனைச் சுதந்திரம் ஒருவனது இருப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது. ஒருவனது சிந்தனைச் சுதந்திரத்தின் சுடர் அணைக்கப்பட்டு விட்டது என்றும் அல்லது அவனது மனம் விடுதலையாகி விட்டது என்றும் எப்படித் தெரிந்துக் கொள்வது? சுய உணர்வோடு தன்னுடைய உரிமைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றை எவன் உணர்கிறானோ சூழ்நிலை அடிமையாக எவன் இல்லையோ, சூழலைத் தனக்கேற்ற முறையில் மாற்றிக் கொள்ள எப்போது முனைகிறானோ, அவனையே நாம் சுதந்திரமானவன் என்கிறோம். பழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள், போதனைகள் போன்றவை அவனது முன்னோர்களிடமிருந்து வந்தவை என்பதற்காக அவற்றின் அடிமையாக மாறிவிடாதவன் எவனோ அவனே சுதந்திரமான மனிதன் சரணாகதி அடையாதவன் எவனோ – எதனையும் காரண காரிய அறிவுடன் பரிசோதித்து தெரிந்து கொள்பவன் எவனோ அவனே சுதந்திர மனிதன் என்பேன்.

தன் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், பொது மக்கள் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் இருக்கவும் பிறரது கைப்பாவை ஆகாத வண்ணம் அறிவும் சுயமரியாதையும் உள்ள ஒருவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன். பிறர் ஏவலுக்குத் தகுந்தபடி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் எத்தகைய வாழ்வை நடத்த வேண்டும் என்று விரும்புகிறானோ அது பற்றி தன்னுடைய சொந்த தர்க்க நியாயங்களுக்கு உட்பட்ட முறையில் அவற்றின் மீது தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவனையே நான் சுதந்திரமானவன் என்பேன். தனக்குத் தானே எஜமான் எவனோ அவனே சுதந்திர மனிதன்.

மேலே கூறியவற்றின் பின்னணியில் நீங்கள் சுதந்திரமானவன் தானா? உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு உண்டா? உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையைவிடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இணையேயில்லை. இந்து மதத்தில் யாருக்குமே பேச்சு உரிமையை இழந்துவிடத் தயாராக இருக்க வேண்டும். வேதங்களின்படி நடக்க வேண்டும்; வேதங்கள் ஒரு நடத்தையை அனுமதிக்கவில்லை என்றால் ஸ்மிருதிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்; அவற்றிலும் தெளிவு ஏற்படாவிட்டால் மகாகன்கள் எடுத்துக்கொடுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும். இந்து மதத்தில் உணர்வு, தர்க்கம், சிந்தனை ஆகிய எதற்கும் இடம் கிடையாது. ஓர் இந்து வேதங்களுக்கோ, ஸ்மிருதிகளுக்கோ, மகான்களுக்கோ. அடிமையாக இருக்கவேண்டும். தன்னுடைய சொந்த தர்க்கத்தை அவன் பயன்படுத்தக்கூடாது. இந்து மதத்தின் அங்கமாக இருக்கும் வரை உங்களுக்குச் சிந்தனை உரிமையே கிடையாது. இந்து மதம் உங்களை மட்டுமே சிந்தனை அடிமைத் தனத்தில் தள்ளிவிடவில்லை. பிற வகுப்பினரைக்கூட அப்படித் தான் சிந்தனைச் சுதந்திரம் அற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்று சிலர் வாதம் செய்வது உண்மைதான். எல்லா இந்துக்களுமே சிந்தனை அடிமைத்தனத்தில்தான் ஆழ்ந்து போய்க்கிடக்கின்றனர். இதை வைத்து எல்லோர் துன்பங்களும் ஒரே மாதிரியானவை என்று முடிவு செய்ய முடியாது. இந்தச் சிந்தனை அடிமைத்தனம் ஜாதி இந்துக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உலகாய்த மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்ததில்லை வேதங்கள், ஸ்மிருதிகள், மகான்கள் என்னும் மூன்று அதிகாரி களுக்கு எல்லா ஜாதி இந்துக்களும் அடிமைகளே. ஆனாலும் இந்துச சமூக அமைப்பில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ளது. பிறர் மீது அவர்கள் ஆளுமை செய்ய முடியும். உயர் ஜாதிகளின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக ஜாதி இந்துக்களே உற்பத்தி செய்துகொண்ட மதம்தான் இந்துமதம். அவர்கள், மதம் என்று அழைக்கும் ஓர் அமைப்பில் உங்களுக்கு ஓர் அடிமைப் பாத்திரத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அடிமை எண்ணத்திலிருந்து நீங்கள் தப்பித்து விடாமல், இருக்க எல்லா விதமான முன்னேற்பாடுகளையும் மத அமைப்பிலேயே செய்து வைத்திருக்கிறார்கள். எனவே இந்தச் சிந்தனை அடிமைத்தனத்தை உதறிவிட்டு வெளியே வருவது மிகமிக அவசியமாகிறது. இப்படி இந்தச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியே வரும் அவசியம் பிற இந்துக்களுக்கு இல்லை. இப்படித்தான் இந்துமதம் உங்கள் முன்னேற்றத்தை இரண்டு விதத்தில் சிதைத்து விட்டது. உங்கள் சிந்தனைச் சுதந்திரத்தைப் பறித்து உங்களை அடிமையாக்கிவிட்டது; புற உலகிலும் உங்களுக்கு அடிமை நிலையே வழங்கப் படுகிறது. எனவே விடுதலை தேவை என்றால் நீங்கள் மதம் மாறு வதைத் தவிர வேறு வழியில்லை.

தீண்டத்தகாதோர் அமைப்புகளும் மத மாற்றமும்

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. தீண்டத்தகாதோர் மத்தியிலும் பல உட்பிரிவுகள் அல்லது ஜாதிகள் இருக்கின்றன. அவற்றைச் சேர்ந்தவர்கள் தத்தம் விவகாரங்களில் ஜாதியத்தைக் கடை பிடிக்கிறார்கள். ஆக அவர்களும் ஒரு வகையில் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் என்பது விமர்சனம். சான்றாக மகர்களும் மாங்குகளும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ணுவதில்லை. இந்த இரண்டு ஜாதிகளும் மலம் அள்ளுவோரைத் தொடுவதில்லை. இப்படி இருக்கும்போது உயர் ஜாதிகள் தீண்டாமையை அனுசரிக்கக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்னும் கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. முதலில் உங்களுக்குள் இருக்கும் ஜாதி அமைப்பை உடையுங்கள். பிறகு நால்வர்ண ஜாதி அமைப்பினால் ஏற்படும் குறைகளைத் தீர்த்துக் கொள்ள எங்களிடம் வாருங்கள் என்கிறார்கள். இந்த விமர்சனத்தில் உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் ஒட்டுமொத்தமான தீண்டாமைக்கு இது சமாதானமாக அமைய முடியாது.

தீண்டத்தகாதவர்களுக்குள்ளும் ஜாதிகள் உண்டு. அவர்களிடையே ஜாதியும் உண்டு, தீண்டாமையும் உண்டு. அமைப்பு அடிப்படையில் நிகழும் இந்தக் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பல்ல. ஜாதியும் தீண்டாமையும் அவர்களால் அவர்களிடம் தோன்றியவை அல்ல. உயர் ஜாதி இந்துக்களிடமிருந்து தோன்றியவை. இவற்றை நடைமுறையில் கொண்டு வந்தவர்கள் ஜாதி இந்துக்கள். எனவே, இந்த ஜாதியத் தீண்டாமை என்னும் மரபுக்கும் பொறுப்பு அவர்களே, தீண்டத்தகாதவர்கள் அல்ல. எனவே தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர கற்றுக் கொண்டவர்கள் அல்ல – முன்னே கூறிய விமர்சனத்திற்கு இப்படி ஒரு பதில் உண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தப் பதில் சரியானதுதான் என்று தோன்றுகிறது. ஆனால் இந்தப் பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. ஜாதியும் தீண்டாமையும் நமக்குள் வேர் பிடித்ததற்கு நாம் காரணமில்லை என்றாலும்கூட இத்தகைய விஷ வேர்களை நாம் கண்டிக்காமல் இருப்பதும் தொடர்ந்து அனுசரித்து வருவதும் சரியில்லை.

ஜாதி, தீண்டாமை இரண்டையும் வேரறுப்பதில் நமக்கும் பங்குண்டு பொறுப்புண்டு. இந்தப் பொறுப்பை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. மகர்களிடையே ஜாதியத்துக்காக எந்தத் தலைவரும் வாதாடுவதில்லை. இந்த விஷயத்தில் மகர் சமூகத்துப் படித்த அறிவாளிகளின் விமர்சனத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மகர் சமூகத்துப் படித்த வர்க்கம் ஜாதி ஒழிப்பில் முனைப்புக் காட்டுவது அப்போதுதான் தெரியவரும். இந்தப் படித்த மகர்கள் மட்டும்தான் ஜாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்று சொல்ல முடியாது. படித்த மகர்கள் மட்டுமல்ல படிக்காத மகர்களும் ஜாதி ஒழிப்பில் முன்னணியில் நிற்கிறார்கள். இதையும், நாம் நிரூபிக்க முடியும். இன்றைய தினம் மகர் மாங்க் ஜாதிகள் ஒன்றாக அமர்ந்து உண்ணுவதை எந்த மகரும் எதிர்ப்பதில்லை. இதில் எனக்கு முழுத் திருப்தி. மகர்கள் ஜாதி ஒழிப்பில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள், ஜாதியையும் தீண்டாமையையும் எத்தகைய முயற்சிகள் மூலம் அழித்து ஒழிப்பதில் வெற்றிபெற முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்ப்பது உண்டா?

வெறும் சேர்ந்துண்ணல் அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாக கலப்புத் திருமணங்கள் மூலம் மட்டுமே ஜாதியத்தை ஒழித்து விட முடியாது. ஜாதியம் என்னும் நோயின் மூல வேர்கள் இந்து மதப் போதனைகள்தான். ஜாதி என்பது ஒரு மனநிலை, அது ஒரு மனநோய். நாம் வாழும் இந்து மதத்தில் நாம் ஜாதியத்தைக் கடைப்பிடிக்கிறோம்; தீண்டாமையை அனுசரிக்கிறோம். ஏன் இந்து மதம் நம்மை அப்படிச் செய்ய வைக்கிறது? ஒரு கசப்பான பொருளை இனிப்பாக மாற்ற முடியும். உப்பு கரிப்பதையும் மாற்ற முடியும். ஆனால் நஞ்சை அமிர்தமாக மாற்றமுடியாது. இந்து மதத்தில் இருந்து கொண்டே ஜாதிகளை ஒழிப்பேன் என்பது நஞ்சை அமிர்தமாக்குவது போலத்தான். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனை இன்னொருவன் இழிவாக நடத்த வேண்டும் என்று கற்பிக்கும் மதத்தில் நாம் இருக்கும் வரை ஜாதி அடிப்படையிலான பிரிவினை உணர்ச்சி, பாரபட்ச உணர்வு நம் இதயத்திலிருந்து அறவே அகற்றப்பட முடியாது. தீண்டத்தகாதவர்களிடையே ஜாதியமும் தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டுமானால் மத மாற்றம் ஒன்றுதான் மாற்று கருத்து.

பெயர் மாற்றமும் மத மாற்றமும்

மத மாற்றத்திற்கு ஆதரவான வாதங்களை நான் இதுவரையில் உங்கள் முன் வைத்தேன். இது உங்கள் சிந்தனையைத் தூண்டும் என்று நம்புகிறேன். இந்த விவாதம் ஆழமானது என்று கருதுவோருக்கும் இதே சிந்தனை நாட்டத்தை இன்னும் எளிய மொழியில் விவரிக்க விரும்புகிறேன். மத மாற்றத்தில் அப்படியென்ன புதுமை இருக்கிறது? ஜாதி இந்துக்களோடு நீங்கள் கொள்ளும் சமூக உறவுகள் எத்தகையவை? இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் எப்படிப் பிரிந்து வாழ்கிறார்களோ, அப்படித்தான் நீங்களும் பிரிந்து வாழ்கிறீர்கள். முஸ்லீம்களோடும் கிறிஸ்துவர்களோடும் சேர்ந்துண்ணல், கலப்புமணம் புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் வைத்துக்கொள்வதில்லை. உங்களோடும் அப்படித்தான். நீங்களும் இந்துக்களும் இரண்டு தனித் தனிப் பிரிவுகளாகவே வாழ்கிறீர்கள். எனவே மதமாற்றத்தால் ஒரு சமூகம் இரண்டாகப் பிரிந்துவிட்டது என்று எவரும் சொல்லப்போவதில்லை. இன்று எப்படி இருக்கிறீர்களோ, அதேபோல்தான் மதமாற்றத்திற்குப் பின்பும் இருக்கப்போகிறீர்கள்.

இந்த மத மாற்றத்தால் எந்தப் புதுமையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை, அப்படியிருக்கும்போது மதமாற்றம் என்றாலே சிலர் அஞ்சுவதை என்னால் புரிதுகொள்ள முடிவதில்லை. மதமாற்றத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். பெயர் மாற்றத்தின் முக்கியத்துவம் நிச்சயம் புரிந்திருக்கும். யாரேனும் ஒருவரை நீங்கள் யார் என்னவென்று கேட்டால் அரிஜன் என்கிறீர்கள். மகர் என்று யாருமே சொல்வதில்லை. சூழல்களின் அவசியத்தால்தான் நாம் பெயர் மாற்றம் செய்துகொள்கிறோம். பெயர் மாற்றத்திற்கான காரணம் மிக மிக எளிமையானது. ஒருவன் தீண்டத்தக்கவனா, இல்லையா, என்பது அவனுடைய ஜாதி மூலம் தெரியவருகிறது. ஜாதி தெரியாவிட்டால் அது தெரியப்போவதில்லை தீண்டத்தகாதவன் என்று தெரியாத பட்சத்தில் அவன் மீது வெறுப்புத் தோன்றப் போவதில்லை.

இன்னின்ன ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் பயணம் செய்கிறபோது ஜாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களோடு நட்போடுதான் பழகுவார்கள். ஜாதி தெரிந்துவிட்டால் அந்த நட்பு மாறிவிடும். முதலில் அவர்கள் வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். தாம் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் தீண்டத்தகாதவர்கள் என்று தெரிந்துவிட்டால் அந்தக் கணமே ஜாதி இந்துவின் மனத்தில் வெறுப்பு உற்பத்தியாகத் தொடங்குகிறது. முதலில் அவனுக்குக் கோபம் வரும். தொடக்கத்தில் தோன்றிய தற்காலிக நட்பு இறுதியில் வசைச் சொற்களிலும் கை கலப்பிலும் முடியும். நிச்சயம் உங்களுக்கும் இத்தகைய அனுபவங்கள் நேர்ந்திருக்கும். ஏன் நேர்ந்தது என்னும் உண்மையும் தெரிந்திருக்கும். உங்கள் ஜாதியைக் குறிக்கும் பெயர்கள் கூட அசுத்தமானவை என்று கருதப்படுகின்றன. அவற்றை உச்சரிக்கும் போதே ஜாதி இந்துக்களுக்கு வாந்தி வருவது போன்ற ஒரு வேதனை. இதனால் பிறரை ஏமாற்ற மகர் என்று சொல்வதற்குப் பதிலாக சொக்கமேளா என்று சொல்லுகிறீர்கள். ஆனால் மக்கள் ஏமாறுவது இல்லை. சொக்கமேளா என்றாலும் சரி, அரிஜன் என்றாலும் சரி நீங்கள் யாரென்று அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே பெயர் மாற்றம் அவசியமானது என்பதை உங்கள் பழக்கத்தின் மூலமாக நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். பெயர் மாற்றத்திற்கான தேவையை நீங்கள் உணரும்போது மத மாற்றத்திற்கான தேவைக்கு எப்படித் தடை சொல்ல முடியும்? மத மாற்றம் பெயர் மாற்றம் போன்றதுதான். மத மாற்றத்தின் போதே பெயர் மாற்றமும் நடந்து விடுகிறது. அது உங்களுக்கு நன்மையாகவும் இருக்கிறது. முஸ்லீம், கிறித்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் என்பது மத மாற்றம் மட்டுமல்ல பெயர் மாற்றமும் கூட இதுதான் உண்மையான பெயர் மாற்றம். நீங்கள் மேற்கொள்ளப் போகும் புதிய பெயரில் எந்தவித இழிவும் இருக்காது. இந்தப் பெயர் மாற்றம் ஒரு மகத்தான மாற்றம். புதிய பெயரின் மூலப் பெயர்களை யாரும் கண்டறியப் போவதில்லை. சொக்கமேளா – அரிஜன் என்ற பெயர் மாற்றங்களில் அர்த்தமே இல்லை. உங்கள் பழைய பெயருக்குள்ள அதே இழிவு இந்தப் பெயர்களுக்கும் உண்டு. அதே வெறுப்பு இவற்றின் மீது காட்டப்படும். இந்து மதத்தில் இருக்கும் வரை இப்படிப் பெயர் மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நான் இந்து என்று சொல்லிக்கொள்வதில் எந்தக் கோணத்திலும் முழுமை இல்லை. இந்து என்று ஒருவர் இருப்பதாக எவருமே ஏற்பதேயில்லை. எனவே மகர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. மகர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வதால் எவரும் உங்களை நெருங்கப் போவதில்லை. இன்று ஒரு பெயரும் நாளை ஒரு பெயருமாக, கடிகாரத்தின் ஊசல் போல் வாழ்வதில் என்ன லாபம்! ஆகவே மத மாற்றத்தின் மூலம் உங்கள் பெயரையும் நிரந்தரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

எதிரிகளின் பங்கு மதமாற்ற இயக்கம் தொடங்கியதிலிருந்தே பல எதிர்ப்புகள். அந்த எதிர்ப்புகளில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று பரிசோதிப்போம். மத அடிப்படையில் வாழ்வதாகப் பாசாங்கு செய்யும் சில இந்துககள் உங்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். மதம் என்பது பொழுது போக்கு அல்ல. உடை மாற்றுவதுபோல் மதத்தை மாற்ற முடியாது. நீங்கள் இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்திற்குப் போக இருக்கிறீர்கள். இந்து மதத்தில் நீடிக்காத உங்கள் முன்னோர்கள் எல்லோரும் முட்டாள்களா? என்றெல்லாம் அறிவாளிகள் என்று தம்மை நினைத்துக் கொள்ளும் சிலர் கேட்பார்கள். அவர்கள் கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை. முன்னோர்கள் மதம் என்பதற்காக அதிலேயே நீடிக்க வேண்டும் என்று நினைப்பது மடமை. அறிவாளிகள் அந்த செயல்பாட்டை ஏற்க மாட்டார்கள்.

முன்னோர் மதங்களிóருந்து மாறக் கூடாது என்று வாதிடுவோர்கள் சரித்திரம் படித்தவர்கள் அல்ல; பழைய ஆரிய மதத்திற்கு வேத மதம் என்று பெயர். அதற்கு மூன்று குணாம் சங்கள் உண்டு. 1. மாட்டு இறைச்சி உண்ணுதல், 2. மது அருந்துதல், 3. கேளிக்கைகளில் ஈடுபடுதல். இம்மூன்றும் அன்றைய மரபுகள். இந்திய மக்கள் பல்லாயிரம் பேர் இப்படித்தான் வாழ்ந்தார்கள். சில பிராமணர்கள் இன்றும்கூட அந்த வாழ்க்கைக்குத் திரும்பி போக முடியாதா என்று கனவு காண்கிறார்கள். பழைய மதக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றால் ஏன் இந்திய மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார்கள்? ஏன் ஜைன மதத்திற்கு மாறினார்கள்? நம் முன்னோர்கள் பழைய இந்து மதத்தில் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அப்படி இருக்கவே விரும்பினார்கள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

நால் வர்ண அமைப்பு நீண்டகாலம் இந்நாட்டில் நீடித்துள்ளது. இவ்வமைப்பில் பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். சத்திரியர்கள் மட்டுமே போரிட முடியும், வைசியர்கள் மட்டுமே பொருளீட்ட முடியும், சூத்திர்கள் மட்டுமே ஏவல் செய்ய முடியும் இதுதான் அன்றைய விதி. சூத்திரர்களுக்குக் கல்வியில்லை, சொத்தில்லை, போர்க் கருவிகளும் இல்லை. இப்படி உங்கள் முன்னோர்கள் வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் வளரும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை, இவற்றைத் தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள் என்று எந்த புத்தியுள்ள மனிதனும் சொல்ல மாட்டான். அதே சமயம் உங்கள் முன்னோர்களால் இந்த மதத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவும் முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவர்கள் மதத்தைத் தனிச்சையாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை நாம் நம்பமுடியும்; அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது. ஆக இந்து மதம் நம் முன்னோர்களின் மதம் அல்ல; மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை;

இந்த அடக்குமுறையை எதிர்த்துக் கிளர்ச்சிசெய்ய அவர்களிடம் எந்தச் சாதனங்களும் இல்லை. ஆகவே அவர்கள் கட்டாயத்தின் காரணமாக அடிமைகளாக வாழ்ந்தார்கள். அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை. அவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள். இன்றைய தலைமுறை மீது எந்த விதமான அடிமைத்தனத்தையும் புகுத்த முடியாது. இவர்களுக்கு எல்லா சுதந்திரங்களும் உள்ளன. இந்தச் சுதந்திரச் சூழலிலும் கூட தங்களை தாங்களே விடுவித்துக்கொள்ளாவிட்டால் இவர்களை என்னவென்று சொல்வது? கேவலமானவர்கள், அடிமைகள், சார்ந்து வாழவே பிறந்தவர்கள் என்றுதான் இவர்களை குறித்து வருந்த வேண்டும்.

மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு

முன்னோர் வழியாக வந்தது என்பதற்காக இந்து மதத்தில் விடாப்பிடியாக நீடிப்பது மடையர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும். எந்த அறிவாளியும் அப்படியொரு வாதத்தை முன் வைக்க மாட்டான். இந்த வாதம் விலங்குகளுக்குப் பொருந்தும். மனிதர்களுக்கு அல்ல. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் முன்னேறுவான், விலங்கால் முன்னேற முடியாது. மாற்றம் இல்லாமல் நமது முன்னேற்றம் சாத்தியமில்லை. மதமாற்றம் என்பது ஒருவகை மாற்றம்தான், மத மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லையென்றால் மத மாற்றமும் மிகமிக அவசியமாகிறது. முன்னேறும் மனிதனுக்கு முன்னோர் மதம் என்பது ஒரு தடைக்கல்லே அல்ல.

மதமாற்றத்திற்கு எதிராக இன்னொரு வாதமும் உண்டு. மத மாற்றம் என்பது ஒரு தப்பித்தல் மார்க்கம் என்பதுதான் அது. இன்று சில இந்துக்கள் இந்து மதத்தைச் சீர்திருத்துவது தகாத வாதம் என்று கிளம்பியிருக்கிறார்கள். இச்சீர்த்திருத்தத்தினால் தீண்டாமையும், ஜாதியும் ஒழிந்துவிடும் என்று அவர்கள் அறை கூவுகிறார்கள். எனவே இந்தக் கட்டத்தில் மத மாற்றம் சரியில்லை என்கிறார்கள். இந்து சமூக சீர்திருத்தவாதிகளிடம் எப்படிப்பட்ட கருத்துகள் நிலவினாலும் சரி, எனக்கு அவர்களை நினைத்தால் கசப்பு உணர்ச்சிதான் ஏற்படுகிறது. அவர்களோடு எனக்கு அனுபவங்கள் உண்டு. அவற்றின் அடிப்படையில் இந்த அரைகுறை அறிவாளிகள் மீது எனக்கு வெறுப்பு தான் மேலிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜாதியிலேயே வாழ்ந்து தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து, தங்கள் ஜாதியிலேயே செத்தும் போகிறவர்கள். பொய் முழக்கங்களைச் சொல்ó மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் எங்களை நம்ப மறுத்ததினால் தங்கள் எதிர் ஜாதிகளை மீறிக்காட்டுகிறோம் என்று இவர்கள் பொய் முழக்கம் செய்கிறார்கள். இவர்களது முழக்கங்களைக் கேட்கும்போது நீக்ரோக்கள் விடுதலைக்காக அமெரிக்க வெள்ளையர்கள் செய்த முயற்சிகள் நினைவுக்கு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நீக்ரோக்கள் இந்தியத் தீண்டத்தகாதோர் போலவேதான் வாழ்ந்தார்கள். வித்தியாசம் என்னவென்றால் நீக்ரோவின் அடிமைத்தனம் அங்கே சட்டத்தால் விதிக்கப்பட்டது. இங்கோ அது மதத்தால் உருவானது. சில அமெரிக்க சீர்திருத்தவாதிகள் நீக்ரோ அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்தார்கள். அவர்களோடு இந்துச சமூக சீர்திருத்தவாதிகளை ஒப்பிட முடியுமா? வெள்ளை அமெரிக்க சீர்திருத்தவாதிகள் தமது சொந்த பந்தங்களுடன் சேர்ந்து கொண்டு நீக்ரோ விடுதலைக்காகப் போர் புரிந்தார்கள். அடிமை முறையை ஆதரித்த காரணத்தால் தங்கள் இனத்தைச் சார்ந்த வெள்ளையர்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார்கள். ரத்தத்தைச் சிந்தித் தியாகம் புரிந்தார்கள்.

வரலாற்றுப் பக்கங்களில் இந்த நிகழ்வினைப் படிக்கும்போது அவர்களையும் இந்திய சீர்திருத்தவாதிகளையும் எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாது என்பது புரியும். அவர்கள் எங்கே? இவர்கள் எங்கே? இந்துச் சீர்திருத்தவாதிகளை அதாவது தீண்டத்தகாதவர்களின் மீட்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும். வெள்யைர்கள் அடிமைத்தனத்தை ஒழிக்க அமெரிக்காவில் தங்கள் சொந்தச் மூகோதரர்களை எதிர்த்தே போரிட்டார்களே, அதுபோல் இங்கே உங்கள் இந்துச் சகோதரர்களுடன் ஓர் உள்நாட்டுப் போர் நடத்த நீங்கள் தயாரா? தயார் இல்லை என்றால் சீர்திருத்தம் என்று வாய்கிழியப் பேசுவதில் என்ன பயன்?

தீண்டத்தகாதவர் பிரச்சினைக்காகப் போராடிய இந்துக்கள் மகாத்மா காந்தியைத்தான் மகத்தான தலைவராகக் கொண்டிருக்கிறார்கள். எந்த அளவு மகாத்மா போக முடியும்? பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து அகிம்சைப் போரைத் தலைமை தாங்கி நடத்தும் அவர் தீண்டத்தகாதோரை நசுக்கும் ஜாதி இந்துக்களின் உணர்வைக் காயப்படுத்துவதற்குக்கூடத் தயாரில்லையே. அவர்களுக்கு எதிராக ஓர் அறப்போர் நடத்தவும் தயாரில்லையே. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கூட அவர் முன்வரவில்லையே. எனவே இத்தகைய சீர்திருத்தவாதிகளால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை.

தீண்டத்தகுந்தோரே தவறுக்குப் பொறுப்பாளிகள்

தீண்டத்தகாதோர் நடத்தும் பொதுக் கூட்டங்களில் சில இந்துக்கள் பங்கேற்று ஜாதி இந்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சிலர் தீண்டத்தகாதோருக்கு அந்த மேடையில் இருந்தபடியே அறிவுரை சொல்கிறார்கள். சகோதரர்களே, தூய்மையாக வாழுங்கள். கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் உங்களையே சார்ந்திருங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். உண்மையில் ஜாதி இந்துக்களே இந்த அவல நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களே தவறு செய்தவர்கள். தவறு செய்த ஜாதி இந்துக்களை ஒன்றாகத் திரட்டி அவர்களைத் தண்டிக்க யாரும் தயாரில்லை. சிலர் இந்துக்களோடு சேர்ந்துகொண்டு இந்து மதத்தில் இருந்தபடியே உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள் என்று உபதேசம் செய்கிறார்கள். அவர்களுக்கு வரலாற்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் காண்பிக்க விரும்புகிறேன்.

சென்ற உலகப் போரின் போது ஓர் அமெரிக்கச் சிப்பாய்க்கும் ஆங்கிலச் சிப்பாய்க்கும் நடந்த உரையாடலை நான் படித்திருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த உரையாடல் மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. போர் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் அமெரிக்கன் கேட்ட கேள்விக்கு ஆங்கிலேயன் மிகவும் பெருமையாகப் பதில் சொன்னான் : “”கடைசி பிரஞ்சுக்காரன் கொல்லப்படும் வரை நாம் போரிடுவோம்.” அதேபோல்தான் தீண்டத்தகாதோர் விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று இந்து சமூகச் சீர்திருத்தவாதிகள் பேசுகிறார்கள். அதாவது, கடைசி தீண்டத்தகாதவன் இறக்கும் வரை போராடப்போகிறார்கள். அவர்களுடைய பிரகடனத்தை இப்படித்தான் நான் பொருள் கொள்கிறேன். பிறரை அழிப்பதற்காகவே ஒரு போர் என்றால் அந்தப் போரில் நாம் வெற்றி பெறவே முடியாது. போரில் நாமே சாகப் போகிறோம் என்றால் தவறான இடத்தில் இருந்துகொண்டு அப்படிப் போராடுவதில் பயன் என்ன?

இந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. அது நம்முடைய வேலையுமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. மற்றவை நமக்குத் தொடர்பில்லாதவை. மதமாற்றத்தின் மூலம் விடுதலை பெற முடியும் என்னும்போது இந்து சமூகத்தைத் திருத்தும் பொறுப்பு நமக்கு ஏன்? நமது சக்தி, நமது சொத்து முதலியவற்றை அந்த மேடையில் நாம் ஏன் தியாகம் செய்ய வேண்டும்? நமது மைய நோக்கம் இந்து சீர்திருத்தம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

நமது நோக்கம் தீண்டத்தகாதோரின் சமூக விடுதலை. மதமாற்றமல்லாமல் வேறு வழிகளில் இதனை வென்று எடுக்கமுடியாது. தீண்டத்தகாதோருக்கு சமத்துவம் தேவை. இதுவும் நமது இயக்கத்தின் நோக்கம்தான். இந்தச் சமத்துவத்தை இந்து மதத்தில் நீடிப்பதன் மூலம்தான் பெற முடியும் என்பதில்லை. எனக்குத் தெரிந்தவரை சமத்துவத்தை இரண்டு வழிகளில் அடைய முடியும். ஒரு வழி இந்துவாக இருந்து கொண்டே அதை வென்றெடுப்பது. இரண்டு – மதமாற்றம். இந்துவாக இருந்து கொண்டே சமத்துவம் பெற வேண்டுமானால் நாம் சுத்தமானவர்களாக ஆனால் மட்டும் போதாது. சேர்ந்துண்ணல், கலப்பு மணம், ஆகியவையும் நடைபெற வேண்டும். இதன் பொருள் நால்வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். பிராமண மதத்தை வேரோடு சாய்கக் வேண்டும். இது நடக்கக்கூடிய காரியமா? நடக்க முடியாது என்னும் போது இந்து மதத்தில் இருந்துகொண்டே சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றிபெற முடியுமா? இதைவிட மதமாற்றப் பாதை சுலபமானது.

இந்தச் சமூகம் முஸ்லீம்களைச் சமமாக நடத்துகிறது. கிறிஸ்துவர்களையும் அப்படியே நடத்துகிறது. சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாக பெறப்படும். இந்தச் சுலபமான வழியை ஏற்பதற்கு என்ன தயக்கம்? மத மாற்றத்தால் இருசாராருக்கும் மகிழ்ச்சியே ஏற்படும. நீங்கள் இந்துவாக இருக்கும் வரை அசுத்தம் செய்கிறீர்கள் என்னும் குற்றச்சாட்டிலிருந்து மீள்வதற்காகப் போராட வேண்டியிருக்கும். குடிநீர், உணவு, கலப்பு மணம், ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டியிருக்கும். இந்த மோதல் நீடிக்கும் வரை நீங்களும் இந்துக்களும் ஒருவருக்கொருவர் பரம்பரை பகைவர்களாகவே இருப்பீர்கள். மதம் மாறினால் இந்த மோதல்களுக்கான அடிப்படை வேர்கள் அடியோடு மறைந்து போகும். அவர்கள் கோயில்களுக்குள் நீங்கள் நுழைய வேண்டிய தேவையும் இல்லை. அதற்காகப் போராட வேண்டிய அவசியமும் இல்லை. நேர்ந்துண்ணல், கலப்புமணம் ஆகிய சமூக உரிமைகளுக்காகப் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த மோதல்கள் நின்று விடும்போது உங்களுக்கிடையில் அன்பும், நட்பும், உருவாகும்.

இன்று இந்துக்களோடு உங்களுக்கிருக்கும் உறவுகளையும், கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் ஆகியவர்களோடு இந்துக்களின் உறவுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களைப் போலவே கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் இந்துக்கள் தமது கோவில்களுக்குள் அனுமதிப்பதில்லை. அவர்களிடையே சேர்ந்துண்ணல், கலப்பு மணம், ஆகியவையும் இல்லை. இருந்த போதும் அந்த இரு மதத்தாருக்கும் இந்துக்களுக்கும் இடையே நேசமும் அன்பும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?

நீங்கள் இந்து மதத்தில் இருக்கும் வரை உங்கள் சமூக, மத உரிமைகளுக்காக இந்து சமூகத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இந்து மதத்திóருந்து வெளியேறிவிட்ட காரணத்தால் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் போராட்டத்தின் அவசியமும் போய்விட்டது. இந்துச் சமூகத்தில் எந்த சமூக உரிமையும் அவர்களுக்கும் இல்லைதான். அதாவது சேர்ந்துண்ணல், கலப்பு மணம் போன்றவை; அதற்காக இந்துக்கள் அவர்களைத் தாழ்வாகவும் நடத்துவதில்லை எனவே மதமாற்றத்தின் மூலம் சமத்துவம் வென்றெடுக்கப்படும் எனலாம். இந்துக்களுக்கும், தீண்டத்தகாதோருக்கும் இடையிலான நட்பும், நேசமும் பாதுகாக்கப்படும், அப்படி இருக்கும்போது இந்த எளிய மகிழ்ச்சிகரமான வழியின் மூலம் சமத்துவம் பெறுவதில் நீங்கள் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? பிரச்சினையை இந்தக் கோணத்தில் அணுகுங்கள். மதமாற்றமே விடுதலைப் பாதைக்கான சரியான வழி. அதுவே இறுதியில் சமத்துவத்தை நமக்கு ஈட்டித் தருவது.

சமத்துவம் என்பது தப்பி ஓடும் பாதை ஆகாது. கோழையின் பாதையும் ஆகாது. மாறாக அது அறிவாளிகளின் மார்க்கம்.

மத மாற்றத்திற்கெதிராக இன்னொரு வாதமும் வைக்கப் பட்டிருக்கிறது. ஜாதி அமைப்பில் விரக்தி அடைந்து போய், மத மாற்றம் செய்து கொள்வது வீண்முயற்சி என்று சில இந்துக்கள் சொல்கிறார்கள். நீங்கள் எங்கே சென்றாலும் அங்கேயும் ஜாதி பயம் இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். இஸ்லாமிலும், கிறிஸ்தவத்திலும் ஜாதியம் இருக்கிறது என்கிறார்கள். துர்பாக்கிய வசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவி விட்டது உண்மைதான். இந்த மாபெரும் பாவத்தை அணு அணுவாக வளர்த்தவர்கள் இந்துக்களே. ஜாதியம் முதன்முதலில் இந்து மதத்தில்தான் தோன்றியது. பிறகு பிற மதங்களûயும் தொற்றியது.

இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் ஜாதிகள் இருப்பது உண்மையானாலும் அவற்றை இந்து மத ஜாதியத்தோடு ஒப்பிடுவது சரியில்லை. இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. கிறிஸ்தவத்திலோ, இஸ்லாமிலோ அவர்களது சமூக அமைப்பின் தலையான அம்சமாக ஜாதியம் இருக்கிறது என்று எவரும் வாதிட முடியாது. நீங்கள் யார் என்று ஒரு முஸ்லீமை கேட்டால் நான் ஒரு முஸ்லீம் என்று பதில் வரும். அதே கேள்விக்கு நான் ஒரு கிறித்துவன் என்று கிறித்துவத்தில் பதில் வரும். அவர்களுக்கு அதுவே போதும். அதற்குள் எந்த ஜாதி என்று யாரும் கேட்பதில்லை.

அதே கேள்வி இந்துவைக் கேட்டால் இந்து என்னும் பதிலுடன் எவரும் திருப்தி அடைந்து விடுவதில்லை. எந்த ஜாதியென்று அடுத்த கேள்வி கிளம்பும். இதற்குப் பதில் சொல்லாமல் ஒருவனுடைய சமூகத் தகுதியைத் தெரிந்து கொள்ளவோ தெரிவிக்கவோ முடியாது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்து மதத்தில் ஜாதியத்திற்கு அதிக பட்ச முக்கியத்துவம் உண்டு. மற்ற இரு மதங்களிலும் அப்படியில்லை. இன்னொரு வேறுபாடும் உண்டு. இந்துக்கள் அனுசரிக்கும் ஜாதி அமைப்புமுறை இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது. பிற மதங்களில் அப்படி இல்லை. ஜாதி அமைப்பை நான் கைவிடப் போகிறேன் என்று ஓர் இந்து அறிவிக்க முடியாது. அவனுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் இஸ்லாமிலும், கிறித்துவத்திலும் ஜாதி ஒழிப்பு இயக்கங்களை ஏற்படுத்தினால் மதம் அதற்கு தடை சொல்லாது. இந்துக்கள் தமது மதத்தை ஒழித்தாலொழிய ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்க இஸ்லாமிலும், கிறித்துவத்திலும் மத ஒழிப்பு தேவையில்லை. மாறாக அந்த மதங்கள் அத்தகைய இயக்கங்களைப் பெருமளவுக்கு ஆதரிக்கும். ஆகவே வாதத்திற்காகக்கூட இப்படியெல்லாம் ஜாதிகள் எல்லா இடத்திலும், எல்லா மதத்திலும் இருக்கின்றன என்றும் இந்துவாக இருப்பதே சிறந்தது என்றும் சொல்ல முடியாது. ஜாதி அமைப்பு முறை பயனற்றது என்று சொல்லும் போது அந்த அமைப்புக்குப் பலம் இல்லாத இன்னொரு சமூகத்தை ஏற்பதுதான் சரியான பாதை. அந்த இன்னொரு அமைப்பில் மிக எளிய முறையில் ஜாதிகளை ஒழித்து விடலாம் என்னும் போது அதுவே சரியான பாதை.

மத மாற்றத்தால் என்ன நடந்துவிடப் போகிறது என்று சில இந்துக்கள் கேட்கிறார்கள். அதைவிட உங்கள் நிதிநிலையையும் கல்வி தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த அறிவுரையால் நம்மில் சிலர் குழப்பம் அடையலாம். திகைத்து நிற்கலாம்; ஆகவே அந்த வாதத்தை இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். ஒன்று உங்கள் நிதி நிலைமையும், கல்வி சூழலையும் யார் முன்னேற்றம் அடைய செய்யப்போகிறார்கள்? அவற்றை நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டுமா? அல்லது இந்த வாதத்தை வைப்பவர்கள் உங்களிடம் அந்தத் தகுதிகளை வளர்க்கப் போகிறார்களா?

உங்களுக்கு உபதேசிப்பவர்கள் உதட்டளவில் அல்லாமல் வேறு எந்த உருப்படியான காரியத்தையும் செய்யப் போவதில்லை. அவர்கள் பக்கம் இருந்து எந்த முயற்சியும் இந்தத் திசையை நோக்கி நடைபெறபோவதில்லை. மாறாக ஒவ்வொரு இந்துவும் தமது சொந்த ஜாதியின் பொருளாதார நிலைமையை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறான். அவனுடைய பார்வை சொந்த ஜாதிப் பார்வையாகக் குறுகிப் போயிருக்கிறது. பிராமணப் பெண்களுக்கு மகப்பேறு விடுதிகள், பிராமண மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள், பிராமண ஜாதியைச் சேர்ந்த வேலையில்லாதோருக்கு வேலைகள் இவற்றை நிறுவுவதிலேயே பிராமணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பிராமண ஜாதிகளில் ஒன்றான சரஸ்வதத் பிராமணர்கள் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள். காயஸ்தர்களும், மராட்டியர்களும் இதே வேலையில் இருக்கிறார்கள். ஆக அவனவன் தன்னுடைய ஜாதிகளுக்காக இருக்கிறான். புரவலரே இல்லாத ஜாதிகள் கடவுளின் கருணைக் காகக் காத்திருக்கின்றன.நீங்கள் நீங்களாகத்தான் எழுந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவ யாரும் முன்வரப் போவதில்லை. இன்றைய சமூகத்தின் நிலை இதுதான். இந்தச் சூழலில் அவர்களுடைய அறிவுரையைக் கேட்பதால் பயன் என்ன? உங்களைத் திசை திருப்பி உங்களுடைய நேரத்தை வீணடிப்பதே அவர்களின் நோக்கம். உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமானால் இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள். இந்த வதந்திக்காரர்கள் உங்களுக்கு உபதேசம் செய்ய எந்த உரிமையும் இல்லை. இதுபோதும் என்றாலும் நான் இத்துடன் நிறுத்துவதாக இல்லை. மேலும் சில பதில்கள் சொல்லவே விரும்புகிறேன்.

மத மாற்றத்தால் மட்டும் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்று அறிவில்லாமல் கேட்கும் கேள்வி எனக்கு வியப்பூட்டுகிறது. இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே. அதிலும் பெரும்பான்மை சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும்தான். இந்து மதத்தை விட்டு நீங்கி சீக்கியத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் போனவர்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றா இவர்கள் சொல்ல வருகிறார்கள். மதமாற்றம் அப்படி மாறியவர்களுடைய சூழலில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் போது தீண்டத்தகாதோருக்கு மட்டும் அப்படிப்பட்ட முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை என்பதா இவர்களுடைய கருத்து? அவர்களே சிந்திக்கட்டும். மதமாற்றத்தால் ஒன்றுமே நேரப்போவதில்லை என்பதில் இன்னொரு பொருள் மதம் என்பதே அர்த்தமற்றது என்பதாகும். மதமே அர்த்தமற்றதாக போகும்போது இந்து மதத்தில் தீண்டத்தகாதவர் நீடிக்க வேண்டும். என்று ஏன் வாதிட வேண்டும் எனக்கு புரியவில்லை அவர்கள் கருத்துப்படி மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால் விலகப் போகிற மதம் குறித்தும் – சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?

மதமாற்றத்தால் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்பவர்கள் இன்னொரு கேள்வியையும் சந்திக்க வேண்டும். சுய ஆட்சியால் என்ன நேர்ந்துவிடப்போகிறது? சுய ஆட்சி கிடைத்தால் நிதி மற்றும் கல்வி முன்னேற்றம் கிட்டும் என்று தீண்டத்தகாதோரைப் போலவே இந்திய மக்கள் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆக சுயாட்சியால் நாடு முழுமைக்கும் பலன் உண்டு. என்னும் போது மதமாற்றத்தால் நிச்சயம் தீண்டத்தகாதோர்க்குப் பலன் உண்டு. இந்தப் பிரச்சினை பற்றி ஆழ்ந்து சிந்திப்போர் இந்தியாவுக்கு சுய ஆட்சி அவசியம் என்பது போல் தீண்டத்தகாதோருக்கு மதமாற்றமும் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். மதமாற்றம், சுயாட்சி இரண்டின் இறுதி நோக்கமும் ஒன்றுதான். அவற்றில் எள்ளளவும் வேறுபாடு இல்லை, விடுதலை என்பதே இரண்டுக்கும் இலக்கு, மனித குலத்தின் மறுவாழ்வுக்கு விடுதலை அவசியம் என்றால் முழுச்சுதந்திரத்தை பெற்றுத் தரவல்ல மதமாற்றம் தீண்டத்தகாதோருக்கு அவசியமற்றதாக இருக்க முடியாது.

முன்னேற்றமா? மத மாற்றமா? எது முதலில்

பொருளாதார முன்னேற்றமா? மதமாற்றமா? எதை முதலில் தொடங்குவது என்று ஆராய்வது அவசியமாகிறது. பொருளாதார முன்னேற்றம்தான் முதலில் என்பதை நான் ஏற்றுக்கப் போவதில்லை. இப்படிப்பட்ட கேள்வியே வறட்டுத்தனமானது. அரசின் முன்னேற்றமா சமூக முன்னேற்றமா என்று கேட்பதைப் போன்றது தான் இது. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சிக்கே பல வழிகள் கையாளப்படுகின்றன. இந்த வழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. இவற்றின் முன்னுரிமை முக்கியத்துவத்தை கண்டுபிடிப்பதற்கான அளவுகோல் எதுவும் இல்லை. அப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோருக்கு என் பதில், மத மாற்றமே பொருளாதார முன்னேற்றத்தைவிட முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதுதான். தீண்டத்தகாதோர் என்னும் களங்கத்தை சுமந்துகொண்டு எப்படி நீங்கள் பொருளாதார முன் னேற்றத்தை அடைய முடியும்? நீங்கள் ஒரு கடை வைக்கிறீர்கள் கடையின் சொந்தக்காரர் ஒரு தீண்டத்தகாதவர் என்பது பிறருக்குத் தெரிகிறது. அப்படியிருக்கும்போது ஒரு தீண்டத்தகாதவன் கடையில் பொருள் வாங்க யாராவது முன் வருவார்களா? ஒருவன் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போடுகிறான். அந்த விண்ணப்பதாரர் தீண்டத்தகாதவன் என்று தெரிகிறது. அந்த விண்ணப்பதாரருக்கு வேலை கிடைக்காது. ஒரு நிலம் விற்பனைக்கு வருகிறது. உங்களில் ஒருவர் அதைவாங்க முன் வரவேண்டும். வாங்குபவர் தீண்டத்தகாதவர் என்று தெரிந்தால் விற்பவர் விற்க முன் வரமாட்டார். பொருளாதார முன்னேற்றத்திற்கு நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் சரி தீண்டாமை காரணமாக அந்த முயற்சி தோல்வியைத்தான் சந்திக்கும். தீண்டாமை முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்தரமான தடைக்கல். அதை அகற்றினால் ஒழிய உங்கள் பாதை எளிதாக இருக்காது. மத மாற்றமல்லாமல் வேறு எந்த வழியிலும் அந்த தடைக்கல்லை அகற்ற முடியாது. உங்களில் சில இளைஞர்கள் கல்வி கற்க முயல்கிறார்கள்; எல்லா இடத்திலும் அதற்காக நிதி கேட்க நிற்கிறார்கள் பணத் தேவை காரணமாக அவர்கள் தீண்டத்தகாதோராக நீடிக்கிறார்கள். அப்படி நீடிப்பதன் மூலம் சிறிது முன்னேற்றமும் காண்கிறார்கள். இந்த இளைஞர்களை நான் கேட்கிறேன். படிப்பு முடிந்து தகுதியான வேலை உங்களுக்கு கிடைக்காவிட்டால் அந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்? நம்மில் பெரும்பான்மை படித்த மக்கள் இன்று வேலை இல்லாமல் நிற்கிறார்கள்; என்னைப் பொறுத்தவரை இந்த வேலையின்மைக்குத் தீண்டாமை மட்டுமே காரணமாகும்.

தீண்டாமை காரணமாக உங்கள் தகுதிகளை யாரும் மதிப்பதில்லை. உங்கள் திறமைகளுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. தீண்டாமை காரணமாக ராணுவத்தில் இருந்துகூட நீங்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறீர்கள். காவல்துறையிலும் உங்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஏன்? ஒரு பியூன் வேலைகூட உங்களால் பெறமுடியவில்லை. தீண்டத்தகாதவர் என்பதாலேயே உங்களுக்குப் பதவி உயர்வும் கிடைப்பதில்லை. தீண்டாமை என்பது ஒரு சாபம். அதன் காரணமாக நீங்கள் பழிக்கப்படுகிறீர்கள். உங்கள் தகுதிகள் குப்பையில் வீசப்பட்டு விடுகின்றன. இந்தச் சூழóல் இதற்கு மேலும் எந்தத் தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள போகிறீர்கள்? அப்படியே வளர்த்துக் கொண்டாலும் அதனால் என்ன பயன்? கல்வித் தகுதிகளால் உங்கள் தகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால் உங்கள் கல்வி உங்களுக்குப் பயன்படவேண்டும். செல்வாதார முன்னேற்றத்திற்கான கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்பட வேண்டும். தீண்டாமை விலங்குகளை நீங்கள் தகர்த்தெறிய வேண்டும்.

மத மாற்றம் குறித்த ஐயப்பாடுகள்

மத மாற்றத்தின் விமர்சகர்கள் முன்வைத்த வாதங்களை நாம் இதுவரை அலசிக் கொண்டிருந்தோம். மத மாற்றத்தின் அனுதாபிகளும் சில ஐயங்களைக் கிளப்புகிறார்கள். அவற்றுக்கு விளக்கம் சொல்வது முக்கியம். ஒன்று கிராம ஊழியரின் பரம்பரை உரிமைகளின் கதி என்னவாகும் என்று சில மகர்கள் கவலைப்படுகிறார்கள். நீங்கள் மதம் மாறினால் கிராம ஊழியர் என்னும் தகுதியில் நீங்கள் செய்யும் ஊழியங்களை இழந்து விடுவீர்கள் என்று மகர்கள் ஜாதி இந்துக்களால் அச்சுறுத்தப் படுகிறார்கள். கிராம ஊழியர் முறை நீக்கப்படுவது பற்றி எனக்குக் கொஞ்சம்கூட கவலையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராம ஊழியத்தால் மகர்கள் எத்தனை சோகமான தலைவிதியைச் சுமக்க வேண்டியிருக்கிறது. என்று நான் வாதாடிருக்கிறேன். அந்த ஊழியம் ஒழிக்கப்பட்டால் விடுதலைப் பாதை உங்களுக்காகத் திறந்து விடப்படுகிறது என்று பொருள். கிராம ஊழிய உரிமை தேவை என்று உங்களில் சிலர் நினைக்கலாம். மத மாற்றத்தால் அதற்கொன்றும் கேடு வந்து விடாது என்று நான் உறுதி சொல்கிறேன்.

கிராம ஊழியம் பற்றிய 1850ஆம் ஆண்டுச் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அது என்ன சொல்கிறது? மதமாற்றத்தில் சொத்து வாரிசு உரிமை பாதிக்கப்படுவதில்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. இந்தச் சட்ட விளக்கம் போதாது என்று கருதுபவர்கள் நாகர் மாவட்டத்தின் சூழல்களை அலசிப் பார்க்கலாம். அந்த மாவட்டத்தில் மகர் வகுப்பைச் சேர்ந்த பலர் கிறிஸ்துவர் மதத்தில் சேர்ந்துவிட்டார்கள். ஒரே குடும்பத்தில் சிலர் கிறிஸ்துவர்கள், சிலர் மகர்கள் என்னும் நிலையுண்டு. இப்படி கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் கிராம ஊழிய உரிமை மறுக்கப்படவில்லை. நாகர் மாவட்ட மகர்கள் இந்த உண்மையை உறுதி செய்வார்கள். எனவே, மத மாற்றத்தால் ஊழிய உரிமை பறிபோகுமென்று எவரும் அஞ்சத் தேவையில்லை.

இரண்டாவது சந்தேகம் அரசியல் உரிமை பற்றி. நாம் மதம் மாறினால் நம்முடைய பாதுகாப்பு அரண்கள் என்னாகும் என்று சிலர் அஞ்சுகிறார்கள். தீண்டத்தகாதோருக்கு எத்தகைய அரசியல் அரண்கள் கிடைத்துள்ளன என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இந்த உரிமைகளைப் பெறுவதற்காக என்னைப் போல் இன்னல் அனுபவித்தவரும், முயற்சி எடுத்தவரும் எவரும் இல்லை. இருப்பினும் வெறும் அரசியல் உரிமைகள் மீதே சார்ந்திருப்பது சரியில்லை என்னும், நிரந்தரமானவை என்னும் முத்திரை குத்தப்பட்டும் இந்த அரசியல் அரண்கள் நம் கைக்கு வரவில்லை. அவை ஒரு காலத்தில் மறைந்துதான் போகும். பிரிட்டிஷ் அரசு அளித்து வகுப்புவாரி ஆணைப்படி நமக்கு வழங்கப்பட்ட அரசியல் அரண்களின் ஆயுள் 20 வருடம்தான். புனா ஒப்பந்தத்தில் அப்படி எந்தக் கால எல்லையும் வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் அவை நிரந்தரமானவை என்று எவரும் சொல்ல முடியாது. இந்த அரண்கள் நீக்கப்பட்டால் என்ன நேரும் என்பதை இவற்றையே சார்ந்திருப்போர் சிந்திக்க வேண்டும்.

நமது அரசியல் உரிமைகள் பறிபோகும் காலத்தில் நமது சமூக பலத்தையே நாம் சார்ந்திருக்கவேண்டும். முன்பே சொன்னது போல் இந்த சமூக பலம் நம்மிடம் மிகவும் குறைவு. மத மாற்றத்தின் மூலம் அல்லாமல் இந்த பலத்தை நாம் வென்றெடுக்க முடியாது. நிகழ் காலத்தைப் பற்றிக்கொண்டு, கால காலத்திற்கும் நமக்கு நன்மை விளைவிப்பவற்றைத் தற்காலிக நன்மைக்காக விட்டுக் கொடுக்கும் மார்க்கம் உங்களை இன்னல்களுக்கே இட்டுச் செல்லும் இந்தச் சூழலில் எது நிலையான நன்மை தரும் என்று சிந்திக்க வேண்டும். மதமாற்றம் நிலையான இன்பத்தை பெற்றுத்தரும். மதம் மாறினால் அரசியல் உரிமைகள் மாறிப் போகும் என்றாலும் நாம் தயங்கக் கூடாது.

மத மாற்றத்தால் அரசியல் அரண்களுக்கு பெரிதாக தீமை ஒன்றும் நேர்ந்துவிடாது. மதமாற்றத்தால் அரசியல் அரண்கள் குலைந்து விடும் என்னும் வாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் அரசியல் உரிமைகளும் அரண்களும் உங்களைத் தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் முஸ்லீம்களாக மாறினால் முஸலீம் களுக்கு உள்ள அரசியல் உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும். அப்படியே கிறிஸ்துவர்களாக மாறினால் கிறிஸ்தவர்களின் அரசியல் உரிமைகள் கிடைக்கும். சீக்கியர்களாக மாறினாலும் அப்படித்தான். அரசியல் உரிமைகள் மக்கள் தொகை அடிப்படையிலானது. எந்தச் சமுதாயத்தில் மக்கள் தொகை அதிகரிக்கிறதோ அதன் அரசியல் அரண்களும் அதற்கேற்ப அதிகரிக்கும். நாம் இந்துச் சமுதாயத்தை விட்டு நீங்கினால், நமக்கு ஒதுக்கப் பட்ட 15 இடங்கள் இந்துக்களுக்குத் திரும்பப் போய்விடும் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நாம் முஸ்லீம்களாக மாறினால் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவு மேலும் 15 அதிகரிக்கும்; கிறிஸ்தவர்களாக மாறினாலும் அதே அளவு அதிகரிக்கும். சுருங்கச் சொன்னால் நாம் எங்கே சென்றாலும் நமது அரசியல் உரிமைகள் நம்மைத் தொடரும். எனவே யாரும் அஞ்சத் தேவையில்லை.

மாறாக, நாம் இந்துக்களாகவே இருக்கிறோம். மதம் மாறவில்லை என்றால் நமது உரிமைகள் பாதுகாப்பாகவா இருக்கப்போகின்றன? தீண்டாமைத் தடைச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து தீண்டாமையைக் கடைபிடிப்போரைத் தண்டிப்பதையும் நடைமுறையாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாங்கள் அதைத் தடுத்துவிட்டோம். இந்தச் சட்டத்தின் முன் நீங்கள் எல்லாம் தீண்டத்தகாதோர் அல்லர் என்று உங்களிடம் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அதன் உள்ளர்த்தம் என்ன? மற்ற பின்தங்கிய ஜாதிகள் போலவே நீங்களும் ஏழைகள், நீங்களும் பின்தங்கியவர்கள். மற்ற பின்தங்கிய ஜாதிகளுக்கு எந்த அரசியல் அரசாணையும் நாங்கள் உருவாக்கித் தரவில்லை. உங்களுக்கு மட்டும் அவற்றின் தேவையென்ன என்று உங்களை இந்துக்கள் கேட்கக்கூடும். அதற்கு நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?

இந்தக் கேள்விகளுக்குக் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் எளிதாகப் பதில் சொல்லிவிடுவார்கள். எங்களுக்கு அரசாங்கம் அரசியல் அரண் தந்திருப்பதற்குக் காரணம் நாங்கள் ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், பின்தங்கியவர்கள் – என்பதால் எங்கள் மதம் வேறு, எங்கள் சமுதாயம் வேறு என்று அவர்கள் பதில் சொல்வார்கள். அதன் உள்ளர்த்தம் என்ன? எங்கள் மதம் வேறாக இருக்கும்வரை எங்களுக்குரிய அரசியல் உரிமைகளை நீங்கள் தந்தாக வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். ஆகவே இந்து மதத்தில் குறைந்தபட்சம். இந்துச் சமூகத்தில் வாழ்பவர்கள் உங்கள் சமூகம் வேறு, அரசியல் அரண்களுக்கான உரிமைகளுக்கு நீங்கள் பாத்தியதை உள்ளவர்கள் என்னும் நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க முடியாது. என்றைக்கு நீங்கள் விடுதலையாகிறீர்களோ மதமாற்றத்தின் வாயிலாக இந்து சமுதாயத்தின் அடிமைகள் என்னும் நிலையிóருந்து சுதந்திரம் அடைகிறீர்களோ அந்த நாளில் மேலே சொன்ன நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திர நிலைப்பாட்டை எடுத்து அரசியல் அரண்களை, அரசியல் கோரிக்கைகளைக் கோராமல் போனால் உங்கள் அரசியல் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே மத மாற்றம் என்பது அரசியல் அரண்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு பாதை. ஒரு போதும். அது அரசியல் அரண் தடை ஆகாது என்று புரியும். இந்து மதத்தில் நீடித்தால் உங்கள் அரசியல் அரண்களை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அந்த அரண்கள் தேவையென்றால் நீங்கள் மதம் மாறுங்கள் மதமாற்றத்தால் நிரந்தரமாக அரசியல் அரண்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

முடிவுரை

என்னைப் பொறுத்தவரை நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம், அதன் நோக்கம், உலகாயத லாபங்கள் என்ன? தீண்டத்தகாதவராக இருந்துகொண்டே எல்லாவற்றையும் நான் அடைகிறேன். என் மத மாற்றத்திற்கான நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மீகமானது. இந்து மதம் என்னுடைய வர்க்கத்திற்கு ஒத்து வரவில்லை. என்னுடைய சுயமரியாதைக்கு ஏற்றதாக இல்லை. உங்களைப் பொறுத்தவரை மத மாற்றத்தால் ஆன்மீகப் பயனும் உண்டு. லௌகீக பயனும் உண்டு. லௌகீக பயன்களுக்காக மதமாற்றம் என்றாலே சிலர் கேலி செய்யலாம். சிலர் சிரிக்கலாம் அப்படிக் கேலி செய்பவர்களும், சிரிப்பவரும் முட்டாள்கள். இறப்புக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது, ஆன்மாவுக்கு என்ன விளையப் போகிறது, என்ன விளையாமல் போகும் என்பன போன்ற போதனைகள் பணக் காரர்களுக்கு வேண்டுமானால் பயன் அளிக்கலாம். அத்தகைய மதத்தை பற்றி அவர்கள் ஓய்வாக உட்கார்ந்து சிந்திக்கலாம். அல்லது களிப்பில் மூழ்கலாம். வாழ்நாளிலேயே எல்லா இன்பங்களும் நுகர்பவர்கள் அப்படிப்பட்ட மதம்தான் உண்மையான மதம் என்று நினைப்பது இயல்பானது. மரணத்திற்கு பிறகும் மகிழ்ச்சிகள் உண்டு என்று போதிக்கும் மதம் அவர்களுக்கு உவப்பாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் அந்த மதத்தில் இருப்பதனால் மண்ணுக்கும் கேடாய் மதிக்கப்படுகிறீர்கள். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்படுகிறீர்கள். மனிதர்களாகவே நீங்கள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் இருக்கும் நீங்கள் மதத்தை உலகியல் பார்வையோடு அணுகாமல் உங்கள் கண்களை மூடிக்கொண்டு வானத்தையா பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? பணக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் உரிய வேதாந்தத்தால் ஏழைகளாகிய உங்களுக்கு என்ன பயன்?

மதம் என்பது மனிதனுக்காகவே

மனிதன் மதத்திற்காக அல்ல; மதம் மனிதனுக்காக மனிதனால் ஏற்கப்பட வேண்டுமானால் மதம் மாறுங்கள். சமத்துவம் கிடைக்க வேண்டுமானால் மதம் மாறுங்கள். விடுதலையடைய வேண்டுமானால் மதம் மாறுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

உங்களை மனிதர்களாகவே நடத்தாத அந்த மதத்தில் ஏன் இன்னும் இருக்க வேண்டும்? உங்களைக் கல்வி கற்க அனுமதிக்காத மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? உங்களுக்குத் தண்ணீரை மறுக்கும் மதத்தில் ஏன் இருக்கவேண்டும்? உங்களைக் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? உங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க மறுக்கும் ஒவ்வொரு சட்டத்திலும் உங்களை அவமதிக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? மனிதனுக்கு மனிதன் நேர் வழியிலான தொடர்புகள் கொள்வதைத் தடுக்கும் மதம் மதமேயல்ல. அது அடக்குமுறையின் வடிவம். மனித உயிருக்குக் கூட கவுரவம் தராத மதம் மதமே இல்ல. அது ஒரு மனநோய்; விலங்குகள் தொடுவதை அனுமதிக்கும் மதம் மனிதன் தொடுவதை அனுமதிக்க மறுத்தால் அது, மதம் அல்ல, அது கேலிக் கூத்து. ஒரு வகுப்புக்குக் கல்வியுரிமை மறுத்து, அதற்குச் சொத்துரிமை மறுத்து, ஆயுதம் வைத்திருக்கும் உரிமை மறுத்து நிற்கும் ஒரு மதம் மதமே அல்ல. அது மனித உயிர்களின் வாழ்வை ஏளனத்திற்கு இடமாக்கும் ஒரு கொடுமை. கல்வியறிவு இல்லாதவர்கள், செல்வாதாரம் இல்லாதவர்கள் அப்படியே நீடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் மதம் மதமேயல்ல, அது ஒரு தண்டனை.

என் அறிவுக்கு எட்டிய வரை மதமாற்றத்தால் நேரக்கூடிய எல்லாச் சிக்கல்களையும், அலசி விட்டேன். விளக்கி விட்டேன்; இந்த ஆராய்ச்சி மிகவும் நீண்டதாக இருக்கலாம். இத்தகைய விளக்கமான ஆராய்ச்சி தேவையென்று நான் முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். மதமாற்றத்தின் எதிரிகள் என்னென்ன வாதங்கள் வைப்பார்களோ அவற்றிற்குப் பதில் அளிக்க வேண்டியது என் கடமை. என் கருத்துப்படி மத மாற்றப் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை உணராமல் யாரும் மதம் மாறக்கூடாது. அதனால்தான், எல்லாவித ஐயங்களுக்கும் தீர்வாக அமையும் இந்தப் பிரச்சினையை இத்தனை விரிவாக அலசினேன். என் கருத்துகளை நீங்கள் எவ்வளவு தூரம் ஏற்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அவற்றை ஆழ்ந்து சிந்திப்பீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.

பொது மக்களைத் திருப்தி செய்வதன் மூலம் அவர்களது செல்வாக்கைப் பெறுவது ஒரு சாதாரண மனிதனுக்கு நன்மை தரலாம். ஒரு தலைவன் அந்த வழியைப் பின்பற்ற முடியாது. மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை அறிந்து அச்சப்படாமல் ஆதரவைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் சொல்பவனே தலைவன் என்பது என் கருத்து. நீங்கள் விரும்பாவிட்டாலும் சரி. உங்களுக்கு நல்லது எதுவோ அதைச் சொல்வதே என் கடமை. நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். இதோ இப்போது அதைச் செய்து விடுகிறேன். முடிவு உங்கள் கையில்!

உங்கள் பொறுப்பை நீங்கள் தான் சுமக்க வேண்டும். இந்த மதமாற்றத்தை நான் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டேன். இந்து மதத்தை விட்டு வெளியேறுவதா, இல்லை நீடிப்பதா என்பது அதன் முதல் பகுதி; இந்து மதத்தைக் கைவிட வேண்டுமானால் எந்த மதத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் அல்லது ஒரு புதிய மதத்தை உருவாக்குவீர்களா என்பது இரண்டாம் பகுதி; இன்று முதல் பகுதி பற்றி முடிவு செய்தாக வேண்டும். அதை முடிவு செய்யாமல் இரண்டாம் பகுதிக்குப் போக முடியாது. அப்படிப் போவது வீண் முயற்சி. எனவே நீங்கள் முதல் பகுதியை முடிவு செய்ய வேண்டும். இன்னொரு வாய்ப்பை இந்த விஷயத்தில் என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. உங்கள் முடிவைப் பொறுத்தது – எனது எதிர்காலத்திட்டத்தை நான் தீட்டுவதாக இருக்கிறேன்.

மத மாற்றத்திற்கு எதிராக நீங்கள் முடிவு செய்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக விடை கொடுத்து விடுவேன். அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து கொள்வேன். மத மாற்றத்திற்கு ஆதரவாக முடிவு செய்தால், அந்த மதமாற்றம் அமைப்பு ரீதியாக பெருந்திரளாக இருக்கும் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டும். மத மாற்றத்திற்கு ஆதரவாக முடிவு செய்திருந்தால் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சேரப்போகிற மதத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் முயற்சிகளுக்கு குறுக்கீடு செய்ய மாட்டேன். இந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னுடன் ஈடுபட வேண்டும். எந்த மதத்தை நான் ஏற்பதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் விசுவாசமாக ஈடுபடுவேன். அந்த மதத்தில் மக்களின் நன்மைக்காக உழைக்கவும் நான் தயாராக இருக்கிறேன். நான் சொல்கிறேன் என்பதற்காக உணர்ச்சி வயப்பட்டு என்னை நீங்கள் பின்பற்றி விடக்கூடாது. உங்கள் அறிவுக்கு அது ஏற்றது என்றால் மட்டுமே நீங்கள் சம்மதம் சொல்லலாம்; என்னோடு நீங்கள் ஒன்றுபடாவிட்டாலும் நான் அதற்காக வருந்தப்போவதில்லை. இத்துடன் பொறுப்பு தீர்ந்தது என்றுதான் நினைப்பேன். நீங்கள் இங்கு எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல பாதையைத் திறந்துவிடும். விடுதலை பெறுவது என்று நீங்கள் முடிவு எடுத்தால் உங்கள் வருங்கால சந்ததிகளும் விடுதலை பெறும். அடிமையாக இருக்க முடிவு எடுத்தால் உங்கள் எதிர்காலப் பரம்பரையும் அடிமை தனத்திலேயே மூழ்கிக் கிடக்கும். எனவே உங்கள் பொறுப்புத்தான் மிக மிகச் சிக்கலானது. மிக மிக கடினமானது.

உங்களுக்கு நீங்களே விளக்காக இருங்கள்

இந்த மாநாட்டில் உங்களுக்கு என்ன செய்தி தருவது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது தனது மகா பரிநிர்வாணத்திற்கு முன்னதாக, நமது பிக்குகள் சங்கத்தில் மகான் புத்தர் கொடுத்த செய்தி நினைவுக்கு வந்தது. மகா பரிநிர்வாண சுத்தத்தில் இந்தச் செய்தி மேற்கோள் காட்டப்படுகிறது. அப்போதுதான் நோய் வாய்ப்பட்டு மீண்டிருந்த பகவான் புத்தர், மரத்தின் அடியிலுள்ள தமது இருக்கையில் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவரது மதிப்பிற்குரிய சீடர் ஆனந்தர் புத்தரிடம் சென்றார். அவரை வணங்கிவிட்டு அவரிடம் சொன்னார் ”பிரபுவே நோய்வாய்ப் பட்டபோதும் ஆரோக்கியமாக இருந்தபோதும் தங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் அனுபவித்த நோய் என்னை மிகவும் பாதித்துவிட்டது. உலோகம் போல் என் உடல் கணக்கிறது. உள்ளத்தில் அமைதி இல்லை. தம்மத்தில் என் மனத்தை நிலை நிறுத்த முடியவில்லை. ஆனால் சங்கத்திற்கு சேதி செல்லாமல் தாங்கள் பரிநிப்பனம் அடையமாட்டீர்கள் என்பதால் ஒரு வித ஆறுதலோ மனநிறைவோ ஏற்படுகின்றது.”

அதற்குப் பகவான் இப்படிப் பதிலளித்தார்: ”ஆனந்தா சங்கம் என்னிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறது. ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனத்துடன் நான் தம்மத்தில் பிரச்சாரம் செய்துவிட்டேன்; சில ஆசியர்களை போல் ததாதகர் எதையும் ஒளிக்கவில்லை; மறைக்கவில்லை. இனி பிக்கு சங்கத்திற்குச் சொல்வதற்கு ததாதகரிடம் என்ன இருக்கிறது. எனவே, சூரியன் தனக்குத்தானே ஒளி தந்து கொள்வது போல் நீ உனக்குள்ளே சுடர் விடுவாயாக! பூமியைப் போல் பிறரிடம் இருந்து வரும் ஒளியை நீ சார்ந்திருக்கக்கூடாது. உண்மையாக இரு. உண்மையில் மட்டுமே நீ புகலிடம் தேட வேண்டும் எவரிடமும் சரணாகதி அடையாதே.”

புத்தரின் சொற்களில்தான் நானும் அடைக்கலம் அடைகிறேன். உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாக இருங்கள். உங்களது தர்க்கத்தில் தான் நீங்கள் புகலிடம் தேட வேண்டும். பிறரது சொற்களுக்குச் செவி சாய்க்காதீர்கள். பிறருக்கு உடன்பட்டு விடாதீர்கள். உண்மையாய் இருங்கள். உண்மையில் மட்டுமே புகலிடம் தேடுங்கள். எதற்கும் அடிமைப்பட்டுவிடாதீர்கள். பகவான் புத்தரின் இந்தச் செய்தியை நீங்கள் இந்தக் கணத்தில் நினைவில் நிறுத்தினால் போதும். உங்கள் முடிவு தவறாக இருக்காது என்பது நிச்சயம்!”

Advertisements

2 Responses to “மதம் என்பது மனிதனுக்காகவே …”

 1. reverse phone lookup Says:

  I’ve been wondering about the similar factor
  myself lately. Delighted to see an individual on that the same wavelength!
  Nice write-up.

 2. reverse phone lookup Says:

  I feel for instance I’m constantly looking for interesting things to read about various
  subjects, then again I have the ability to include your blog among my
  reads every day because you have compelling entries that I look forward to.

  Here’s hoping there’s a ton more amazing material coming!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: