ஈரவெங்காயம் எங்கையா கெடைக்கும்?


பெரியார்தான் வெங்காயம் நு அடிக்கடி சொல்லுவார், அதப் பார்த்தா எதோ இருக்கற மாதிரி தெரியும், ஆனா உரிச்சா உள்ள ஒன்னுமே இருக்காது, வெறும்பயலுகளத்தான் அப்படிச் சொல்லுவாங்க அவரு. ஆனா இப்ப மேட்டர் அது இல்ல.

ஈரவெங்காயம் எங்கையா கெடைக்கும்?

ஒருநாளாச்சும் மார்கெட்டுக்கு போயிருந்தா இவன் இப்பிடி கேப்பானா? அப்படி நீங்க கேட்கறது தெரியுது. ஆனாலும் நீங்க சொல்லியே ஆகனும்.

உடனே ஒரு புத்திசாலி, அது கடைல கிடைக்கும் நு சொன்னாலும் அதுக்கு என் கிட்ட ஒரு பதில் ரெடியா இருக்கு “அது காய்ஞ்ச வெங்காயம்”. நான் கேட்கறது ஈரவெங்காயம்.

நீங்க சொல்லாட்டியும் பரவால நானே சொல்லரன் .. ஈர வெங்காயம் நிலத்துல இருந்துதான் கிடைக்கும், (* விருது விழா 2010: மொக்க நம்பர் 1).

இந்த நிலத்துல இருந்து கிடைக்குற ஈரவெங்காயத்துல இருந்துதான் பிரச்சனையே. ஏன்னா .. அப்ப அப்ப அதோட விலை ஆகாயத்துக்கும் மேல பறக்குது, ஆனால் விளைய வெச்ச விவசாயி அப்படியே தான் இருக்குறாரு.

சிலநாள் முன்னாள தமிழ்நாட்டு விவசாயி ஒருத்தர்ட்ட பேசிட்டிருந்தன் … அப்ப அவர் சொன்னார்.

போனவருசம் வெங்காய விதை சென்ற ஆண்டு ரூ. ஆயிரத்திற்கு கிடைத்தது. ஏன்னா, அத அரசாங்கம் கொள்முதல் செஞ்சு வித்துச்சு, ஆனால் இந்த ஆண்டு அரசு தனது வேளாண் துறைமூலம் வெங்காய விதைக் கொள்முதலுக்கு மிகத் தாமதமாதான் உத்தரவிட்டிருக்கு. இதனால கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விதைகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செஞ்சுட்டாங்க. அதனால இப்ப அவங்க அந்த விதைகளை அவர்கள் ரூ3,000 வரை உயர்த்தி வித்து லாபம் பாக்கராங்க. அப்படினு ….

அட …. அரசு கொள்முதல் நின்னா 200 சதவீதம் விலை ஏறுது பாருங்க.

இப்ப இதுல விவசாயிகளோட நிலைய பத்தி யோசிப்பத்த விட, நம்ம எல்லாருடைய நிலமையும் நினைச்சாதான் எனக்கு பெரும் கவலையா இருக்கு.

சாதரணா விதை விசயத்துலயே இப்படி நடக்குதே, பெட்ரோல் டீசல் விலை, பேருந்து கட்டணம், அத்தியாவிசயப் பொருட்கள் நு எல்லாத்துலயும் அரசு இப்ப செலுத்தர தலையீட்ட நிறுத்திட்டா என்ன நடக்கும்?

அதுதான தாராளாமயம், (neo-liberal) அத நம்ம இந்திய அரசாங்கம் அதி வேகமா செய்யப் பார்க்குது. நம்ம கழுத்துக்கு நாமலே சுறுக்கு மாட்டனுமா?

இந்த ஈர வெங்காயம் சிலது நாடாளுமன்றத்திலையும் கிடைக்குதுனு எங்க கிராமத்துலயே பேசிக்கிறாங்க … அது முழுக்க அழுகிக்கெடக்குதாமே …?

Advertisements

3 Responses to “ஈரவெங்காயம் எங்கையா கெடைக்கும்?”

 1. reverse phone lookup Says:

  Fine ideas throughout this post, you just gained a brand new reader.

  Do you have any other feedback on your most present post though?

 2. weight gain after stopping raspberry ketone Says:

  some energy bars have been just too sweet for my own
  taste. is there a sugar without charge energy
  bar?.,

 3. Morris Ray Says:

  ஒரு பெரிய தார் நன்றி சிகிச்சை. கஞ்சா எண்ணெய் என் மார்பக புற்றுநோய் ரே மாரிஸ். நான்
  நான் அவர்களின் தரம் உதவியால் என் வாழ்க்கையை இழந்து குறைப்பதில் உங்கள் உதவியை பாராட்டுகிறோம்
  கஞ்சா எண்ணெய், எனக்கு உள்ள சுட்டி, அனைத்து அன்பு மற்றும் எனக்கு பாசம் டாக்டர் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்
  என் கஞ்சா எண்ணெய் சாட்சி தொடர எப்படி 90 நாட்களுக்குள் புற்றுநோய் குணப்படுத்த
  சிகிச்சை. புற்றுநோய் மற்றும் முழுமையான மீட்பு எனக்கு என்ன நடந்தது என்று ஒரு அதிசயம் போல் அதன்
  புற்றுநோய் இலவச. சர்வவல்லமையுள்ள தேவன் அனுப்ப என் டாக்டர் வழி நன்றி, நான் நீங்கள் தொடரும் என்று நம்புகிறேன்
  ஒரு இந்த அற்புதமான மருந்து பொதுவாக உங்கள் உலக புன்னகை. மின்னஞ்சல்:
  (Havenmedicalcure@gmail.com) புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் -அனைத்து தீர்வு. தோஷத்தால் சுகாதார
  சிக்கல்கள் முழுமையான கஞ்சா எண்ணெய் சிகிச்சை புற்றுநோய் நோய் அனைத்து வகையான கவலை செல்ல வேண்டும். இருந்து
  நம்பிக்கை மற்றும் உதவி, டாக்டர் ரே மோரிஸ் குறிப்புகள் தொடர்பு கொள்ளவும்
  மருந்துகள் மற்றும் சேவைகள். டாக்டர் மின்னஞ்சல்: (havenmedicalcure@gmail.com) புற்றுநோய் -அனைத்து தீர்வு மற்றும்
  பிற நோய்கள்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: