இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல் பாகம் …


நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா, ரிசிகள் எழுதி வைத்துள்ளார்கள் சரி, எந்த எந்த கோள்கள் நம் மீது கதிரை பாய்ச்சும் சரி, தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை.

சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?

ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,
எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.
அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.

உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,
வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,
அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா.

ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.
ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா.

ஒரு ஆணின் பிரச்சனைக்கு அவனது தந்தையின் ஜாதகம்,சகோதரர்களின் ஜாதகமும் பார்க்கபடுகிறது, ஆனால் பெண்ணிற்கு என்ன செய்கிறார்கள். அவளது மாதவிடாய் தொடங்கும் நாளை ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா, இல்லை அவன் பிறக்கும் போதே பெருத்த ஆண்மையுடன் பிறக்கிறானா, ஒரு ஆணுக்கு இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.

ஒருவனுக்கே ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,
அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம்,

மேலும் ஆப்பு வைத்தல் தொடரலாம்!

இது எந்த தனி நபருக்கும் எழுதப்பட்ட பதிவல்ல
மொத்தமாக ஜோதிட நம்பிக்கையாளருக்கு எழுதப்பட்டது
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: