தீ…தீ… பாப்பாத்தீ.


இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள ‘ராமனுக்கான போர்’ என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.

வாசந்தி கட்டுரையின் சாராம்சம்.

1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.

2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை ‘ராமன் இருக்கிறாரா இல்லையா’ என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.

3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.

4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து ‘சொதப்பிவிட்டது’.

5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்திகர்களும் கூட முகம் சுளித்தனர்.

6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.

வாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ‘ சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே’

அதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா? அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை?

தொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க? ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா?

எந்த நாத்திகர்கள் ‘முகம் சுளித்தனராம்? வாசந்தி மாதிரியான ‘முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா?’

அவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.

கடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.

வாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்தோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.

வெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.

அக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட ‘உளவுத்துறை அறிக்கை’யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் ‘கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது’ என்றும் ‘ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்’ என்கிற ரீதியிலும் ‘கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்’ என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் ‘தினவு’ என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்வேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.

இத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே ‘முற்போக்காளர்களாக’ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ…தீ… பாப்பாத்தீ… தீ…

நெருப்புக்குஞ்சு

1. ‘வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்’ – இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். ‘ராமனுக்கான போர்’ என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்… இந்த ச்ச்சும்மா..

2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?

Advertisements

One Response to “தீ…தீ… பாப்பாத்தீ.”

  1. reverse phone lookup Says:

    Out of my opinion, nothing at all consequently catching being keenness, that the idea carressed
    pure stone, it’s substance concerning hope.
    Sturdy faith would be successful with all of that the effective fellow, and then suggest these individuals more substantial.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: