பெரியாரிஸ்டுகளை வெறுக்கிறேன் !


அண்மையில் சாருவின் நித்யானந்தம் பற்றிய பேட்டியை ஜூவி வெளி இட்டிருந்தது, அதில் சாரு என்ன உளறினார் என்பது நமக்கு தேவையற்றது. இருந்தாலும் அந்த பேட்டியின் தொடக்கத்தில் சாருவை ‘பெரியாரிஸ்ட்’ என்பதாக முன்மொழிந்து பேட்டியை தொடங்கி இருந்தார்கள்.

செய்தி இதழ்கள் பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்துவது சாரு போன்றவர்களைத் தான். இந்த செய்தி இதழ்கள் பெரியார் பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது. இதே போல் ஒருமுறை ஜெயமோகன் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று குறிப்பிட்டு பலரிடம் கண்டனங்களைப் பெற்றார். குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் இல்லை, தமிழ்தேசியவாதி என்று கூறிக் கொள்பவர் என்றாலும் அண்ணா போன்றவர்களின் தமிழ்தேசிய எண்ணமும் குமரிமைந்தனின் தமிழ் தேசியமும் வேறு வேறானவை. ‘ஹீலிங்’ பயிற்சிக்கு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தனும், நான் இஸ்லாம் பாரம்பரியத்தில் வந்தவன், அதனால் என்னால் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் நான் நித்தியின் ஆசிரமத்தில் ஹீலிங் செய்யும் பயிற்சி எடுக்கவில்லை. நித்தி நோய்களை குணப்படுத்துகிறார் என்று நான் எழுதியது முற்றிலும் உண்மை நான் தவறாக எதையும் எழுதிவில்லை என்று குறிப்பிடாமல் ‘ஹீலிங், அசைவம்’ என சப்பைக் கட்டி இருந்தார் சாரு. எந்த ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களும் ஒரு மனிதனை தெய்வம் ஆக்கி, கடவுளுக்கு இணையானவராக வைத்துப் பார்த்ததில்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் கொண்டவரும் இல்லை, பெரியாரிஸ்டும் இல்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் என்று அவர் பிரியாணி சாப்பிடுவதைத்தான் சொல்கிறார் என்றால் அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம், பிரியாணி விரும்பி சாப்பிடும் நான் ஹீலிங் பயிற்சிக்காக சைவம் சாப்பிட விரும்பவில்லை என.

“நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.” – சாரு

பிரியாணி, மாமிசம் சாப்பிடுவது மட்டும் தான் இஸ்லாமிய பின்னனியா ? இஸ்லாமிய பின்னனியாளர்கள் சாமியார்களுக்கு சாமரம் வீசியது, காலில் விழுந்து கிடந்தது கிடையாதே.

“உங்களையெல்லாம் 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்தமுடியாது” என்று கூறிய விவேக், உயர்வர்க்க மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு படிக்காத பாமரர்களின் மூட நம்பிக்கைகளை முற்போக்கு என்ற பெயரில் நகைச்சுவையாக்கி கல்லா பார்த்தவர் தான் நடிகர் விவேக், இவருக்கும் பெரியாருக்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை, அப்படி இருந்திருந்தால் இவரால் திருப்பதி, பழனி மொட்டைகளையோ (அதையும் ஏழைகள் மட்டுமே போடுகிறார்கள்) , ஐயப்பனின் பெண்கள் மீதான தீட்டுகளையோ சாடி இருக்க முடியும். விவேக் புரட்சி செய்கிறார், புண்ணாக்கு செய்கிறார், சின்னக் கலைவாணர் என்றெல்லாம் புகழ அவரும் கலைமாமனி, பத்ம பூசன் போன்ற விருதுகளை ‘திரையில் மூட நம்பிக்கை விழிப்புணர்வு’ ஊட்டி பெற்றுக் கொண்டார்.

விவேக்கின் பெரியார் கருத்துகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, கீழ்கண்ட வீடியோவே சான்று.

எந்த ஒரு பெரியாரிஸ்டும் ஆசாமிகளை சாமி என்று புகழ்ந்தது கிடையாது, சாரு பெரியாரிஸ்டாம், விவேக் பெரியாரைப் பரப்புகிறாராம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: