பெரியார் மட்டும் இருந்திருந்தால் … ஒரு தொண்டணின் ஏக்கம் …


‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்!’ என்று மொழி அலங்காரத்துடன் சொல்லப்பட்ட கதைகள் உண்டு. பகத்சிங்,உத்தம்சிங்,சௌரி சௌரா என வரலாறு சொல்ல மறந்த கதைகளும் உண்டு. எல்லா வெளிச்சங்களின் பின்னும் இன்னொரு நிழல் இருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளும் வன்முறையுடனேயே தோன்றின்; வன்முறையாலையே நிலைபெற்றன;அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்!என்று சித்தந்தத்தின் மீது நன்பிக்கைகொண்டவர்கள் எல்லா எழுச்சிகளின்போது கூடவே பிறக்கிறார்கள். அப்படி ஒரு போராளியாகப் போராடிய பெரியாரின் இயக்கத்தில், வன்முறையை வழிமுறையாகப் கடைபிடித்த முரட்டுத் தொண்டர் இந்த ‘ஆசிட்’ தியாகராஜன்.

அநேகமாக தமிழகத்தில் முதன்முதலில் ஆசிட் பாட்டிலைத் தூக்கியவர் இவராகத்தான் இருக்கும். ஒரு ஆசிட் தாக்குதல், நாம் எதிர்பார்த்தேயிராத மனிதர் மீது கொலை முயற்சி என இவரது ‘சொல்ல மறந்த கதை’

திருச்சியில் எங்க தெருவைச் ‘ சுயமரியாதைத்தெரு’ன்னுதான் சொல்லுவாங் அந்தளவுக்குப் பெரும்பாலானவர்கள் பெரியாரின் சுயமரியாதை இயத்தில் தீவிரமாகச் செயல்பட்டாங்க. நாகம்மையார் இறந்த இரண்டாவது நாளிலேயே எங்க பெரியம்மா பையன் திருமணத்தை நடத்திவைக்க பெரியார் திருச்சி வரும் அளவுக்கு அவருக்கும் எங்க குடும்பத்துக்கும் நெருக்கம். எனக்கு அவர் மேல் வெறி பிடிச்ச அளவுக்கு பிரியம். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, இயக்கப் பணிகளில் தீவிரமாயிட்டேன். பெரியார் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்திப் பெயர்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டம் அறிவிச்சப்போ, முதல் நாலே திருச்சியில் இருக்கும் எல்லா ஸ்டேஷன் பெயர்களையும் தார் பூசி ஆழிச்சுட்டேன். ஐயா வந்து அழிக்க இருக்கட்டும்னு திருச்சி ஜங்ஷனை மட்டும் விட்டுவெச்சிருந்தேன்.

ஆசிட் வீச்சு

1957-ல் பெரியார் மீது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் ‘வெட்டுக் குத்து’ வழக்கு நடந்தது. குறிப்பிட்ட சமுகத்தின் மீது ஐயா வன்முறையைத் தூண்டிவிட்டார்ங்கிறது வழக்கின் சாராம்சம். தினமும் கேஸ் விசாரணை முடிந்து, ‘கோர்ட்ல என்ன நடந்துச்சு?’ன்னு ஐயா தொண்டர்கள்கிட்டே விளக்கமாகச் சொல்வார். ஒரு நாள், பெரியாரின் பொதுக்கூட்டப் பேச்சுக்களைக் குறிப்பெடுத்து அரசாங்கத்துக்கு அனுப்பும் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கண்ணப்பன் சாட்சி சொல்லணும். அவர் தன் சாட்சியத்தில், ‘பெரியார்….. பெரியார்’னு சொல்லவும் அரசு வக்கீல் சீனிவாசாச்சாரி, ‘ பெரியாருன்னா யாரு?’ன்னு வேணும்னே கேட்டிருக்கார். திராவிடர் கழகத் தலைவருன்’னு இன்ஸ்பெக்டர் சொல்ல, அதுக்கு ‘ராமசாமி நாயக்கர்னுதான் சொல்லனும், பெரியார்’னு கோர்ட்ல சொல்லக் கூடாது’ன்னு சொல்லியிருக்காரு. இந்தச் சம்பவத்தை ஐயா எங்கிட்ட சொல்லும்போது, எனக்குப் பயங்கர கோபம்.

அந்த வக்கீலைப் பழிவாங்கியே ஆகணும்னு வெறியேறிச்சு. என் முரட்டுக் குணம் தெரிஞ்ச இயக்கத்து நண்பர்கள், இந்த மாதிரி சமயங்களில் என்னை எங்கேயாவது அடைச்சுவெச்சிடுவாங்க. அந்த வெட்டு்க்குத்து வழக்கில் ஐயாவுக்கு ‘மூணு வருஷம் ஜெயில்’னு தீர்ப்பு வந்துச்சு. அப்ப என்னைப் பிடிச்சுக் கட்சி ஆபீஸ்ல பூட்டிவெவ்கசுட்டாங்க. வக்கீல் சீனிவாசாச்சாரி மேல உள்ள கோபம் அடங்கவே இல்லை. அவரை காரோடு சேர்த்து காவிரி ஆத்துல தள்ளிவிடுறதுன்னு போட்ட திட்டம் சரிப்பட்டு வரலை அதுக்குப் பிறகும் சில முயற்சிகள் தோல்வியில் முடிஞ்சிருச்சு. கடைசியா குடியரசு தினத்தன்னிக்கு தேதி குறிச்சேன். குடியரசுதினக் கூட்டம் முடிஞ்சு சீனிவாசச்சாரி வந்துட்டிருந்தார். அவர் வீட்டு வாசலை நெருங்கவும், நான் பாய்ஞ்சு அவர் கழத்தைப் பிடிச்சுட்டேன். இடுப்பில் இருந்த ஆசிட் பாட்டிலை அவர் முகத்துமேல ஊத்தினேன்.

அந்த நேரம் பார்த்து எட்டு மணிச் சங்கு ஊதினதுனால, அவர் கத்தினது யாருக்கும் கேக்கலை. நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன். கை,கால், நெஞ்சுன்னு பல இடங்களில் அவருக்கு ஆசிட் காயம். எனக்கும் தொடையிலும் கையிலும் ஆசிட் காயம்.ஆறு மாசம் பாண்டிச்சேரி தலை மறைவு வாழ்க்கை. மாறுவேஷத்தில் இருந்தப்போ போலீஸ் என்னைப் பிடிச்சாங்க. வழக்கில் ‘குற்றம் நிரூபிக்கப்படலை’ன்னு என்னை விடுதலை செஞ்சாங்க. பெரியாருக்காக எதுவும் செய்யத் தயாரா இருந்த எனக்கு சிறைத் தண்டணை கிடைச்சிருந்தா, இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன். அந்தக் கொலை முயற்சி தோல்வி அடைஞ்சிருச்சு. ஆனா, நேருவைக் கொலை பண்ணலாம்னு வெடிகுண்டெல்லாம் கட்டிக்கிட்டுப் பக்கத்துல போயிட்டேன். ஆனா,

“அட ஆமாங்க! இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்தப்ப , தமிழர்களை ‘ நான்சென்ஸ்’னு நேரு திட்டிட்டார். அவர் மேலே எனக்கு வழக்கம் போல பயங்கரக் கோபம். அந்த நேரம் பார்த்து நேரு திருச்சிக்கு வந்தார் .அவர் வர்றதக்கு முதல் நாளே ரயில்வே லைன் முழுக்க ஆட்கள் லைட் அடிச்சு பாதுகாப்புக்கு நிக்கிறாங்க.

நான் சத்தம் காட்டாம தண்டவாளத்துக்குப் பக்கத்தில் படுத்துக்கிட்டேன். வெடிகுண்டைக் கயித்துல கட்டிவெச்சிருக்கேன். ரயில் வந்நவுடனே குண்டடைத் தண்டவாளத்தில் போடடு வெடிக்க வைக்கிறதுதான் திட்டம். அசோகச் சக்கரம் போட்ட ரயில் மெதுவா ஊர்ந்து வருது…… வெடிகுண்டை வீசிடலாடமனு நிமிர்ந்து பார்த்தா,கம்பார்டமென்ட் வாசல்ல இடுப்புல கை வெச்சுக்கிட்டு கம்பீரமா நிக்கிறார் காமராஜர். ஒரு நிமிஷம் எனக்கு உடம்பு ஆடிப்போச்சு. அப்ப , ‘பச்சைத் தமிழன்’னு காமராஜரை பெரியார் தீவிரமா ஆதரிச்சுட்டு இருந்த நேரம். வெடிகுண்டைக் கீழே போட்டுட்டுக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டேன்’!”

ராஜாஜி குலக் கல்வித்திட்டம்

ராஜாஜி குலக் கல்வித்திட்த்தை அறிவிச்சப்பவும் ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. சுடுகாட்டுக்குப் போனேன் ஒரு எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து பேப்பர் துணி சுத்தி கண்ணாடி மாட்டிவிட்டு ராஜாஜியைக் கொலை செய்வேன்‘னு எழுதி போலீஸ் ஸ்டேஷன் முன்னாலே போட்டுட்டேன்.

ஏழும்புக்கூட்டுல சுத்துன லேபிளை வெச்சு, போலீஸ் என்னைக் கண்டுபிடிச்சிருச்சு. அப்புறமும் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட போராட்டங்கள். ஆனா, நான் எப்பவுமே திராவிடர் கழகத்தில் உறுப்பினரா இருந்ததில்லை.

ஐயா மட்டும் இருந்திருந்தால்

சூத்திரப் பட்டத்தை ஒழிக்க மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கிட்டு பொதுதொண்டை செய்தாரு ஜயா ,ஆனா இன்னிக்கு நம்ம இனமே இலங்கையில் அடிபட்டுச் சாகுறப்ப, சாதிக்க வேண்டியவங்க போர்த்திக்கிட்டு இருக்காங்க. அந்தக் காலத்தைப்போல தமிழ்ச் சமுதாயம் தான் சுயமரியாதையோடு ஆதரவா எழுந்து நிற்குது.

ஆனா ஜயா பேரைச் சொல்லிப் பொழைப்பு நடத்தினவங்க இன்னிக்கு அவருக்கே எதிரியாகவும் துரோகியாகவும் மாறிட்டாங்க. ஜயா மட்டும் இருந்திருந்தா, ஈழத் தமிழனின் துயரம் இந்நேரம் ‘போறேன் போறேன்’னுட்டு காணாப் போயிருக்குமே!”

என்ற ஏக்கத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கை

நன்றி ஆனந்த விகடன் (18.03.2009)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: