சாரு நிவேதிதா ‘ப்ளஸ் மைனஸ்’ பேட்டி …


நித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி! நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் – இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்!

”நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?”

”அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு

கிடைச்சது. அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு. ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன். அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, ‘சுவாமியைப் பார்க்க வாங்களேன்…’னு கூப்பிட்டாங்க. பொண் ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல… அதனால ‘அவசியம் வரேன்’னு சொன்னேன்.

இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்… அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, ‘நான் நித்யானந் தரை ஜீப்ல பார்த்தேன்’னு சொன்னேன். உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, ‘அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!’னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்!”

”நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?”

”நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு. இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார். இது மட்டுமில்லை… ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர்.

பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார். 32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே… அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை ‘ர்’ போட்டவர் சற்றே கோபமாகி ‘ன்’னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே… நீயா சாமியாரு?”

”ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?”

”நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க… ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு. இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.”

”நித்யானந்தர் – ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?”

”அப்பட்டமான உண்மைதான். அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். ‘ஏன் நீ பெரிய யோக்கியனா’ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா ‘நானொரு உமனைசர்’னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ… பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?

இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா… இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா?

அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.”

”நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?”

”பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!”

பிகு: விளக்கம்
இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: