கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!


மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு காணத்தெரியாமல்தான் சிரமப்படுகிறார்கள் என்பது போலவும் வந்த நாள் முதலாய் ஒட்டுமொத்த நாட்டையும் கனவுக் காணச்சொல்லி சாமியாடிக்கொண்டிருந்தார் அரசவை கோமாளி ( நன்றி: புதிய கலாசாரம்) அப்துல் கலாம்.

கிராமங்களில் பத்து நாள் திருவிழாவின் நாடகங்களில் ஒரே பப்பூன் தினமும் வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமென தினமொரு நபர் பப்பூனாக வருவது போல, ஐந்து வருடங்களுக்கொரு முறை அரசவை கோமாளி மாற்றியமைக்கப்படும் வைபவத்தில் இப்போது அப்துல் கலாமுக்கு ‘நன்றி, வணக்கம்’ சொல்லிவிட்டனர். அடுத்த கோமாளி தயாராகிக்கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் கனவு காணச்சொன்ன அப்துல் கலாம், இன்னொரு முறை அதே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கனவு கண்டார். ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..?

1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.

2. ‘ஒட்டன்சத்திரம் மூலம் பௌத்திரம் டாக்டர் கே. என். ராய், ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தார்..’ என்பது மாதிரியான கேணத்தனமான பத்திரிகை செய்திகளிலிருந்து மக்களுக்கு விடுதலை

3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ‘ 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்’ என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.

4. ‘ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..’ என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.

ஜனாதிபதி வருகிறார் என்றால், அந்த விழாவுக்கு வர வேண்டிய பள்ளிக் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் வேலை, அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் குழந்தைகள் யார், அவரது பெற்றோர்கள் யார், விழா நாளன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஏராளமான முன் தயாரிப்புகள் உண்டு. ஜனாதிபதியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை முன் கூட்டியே எழுதி வாங்கி விடுகின்றனர். விழா நடக்கிற தினத்தில் ஜனாதிபதி வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அரங்கத்தில் அல்லது அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றனர். பல இடங்களில் ஜனாதிபதியை வரவேற்க பள்ளி மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். இதிலிருந்தெல்லாம் இனி அவர்களுக்கு விடுதலை. ( தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)

5. ‘இந்தியாவோட ஜனாதிபதியே ஒரு முஸ்லிம்தான்.. அப்புறமென்ன..?’ என்ற காவிகளின் போலி கூக்குரல் ஒழியும். முதலாளியே தொழிற்சங்கம் அமைப்பதுபோல, காவிக்கூட்டத்தால் முன்னிருந்தப்பட்ட ‘சிறுபான்மையினரின் பிரதிநிதி’யான அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்ததற்காக சங் பரிவாரங்கள் வேண்டுமானால் பெருமை கொள்ளலாமே ஒழிய, இஸ்லாமியர்கள் பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை.

6. புத்தர் சிரிப்பார்.

இனி அப்துல் கலாம் என்ன செய்யலாம்..?

1. ‘கனவு காண்பது எப்படி..?’ என்றோ, ‘கனவுகளும், அதன் பலன்களும்’ என்றோ இந்தியாவின் எல்லா மொழிகளிலும் புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எலிமண்ட்ரி ஸ்கூலிலும் போய் அதனை விற்பனை செய்யலாம்.

2. ஊர், ஊருக்கு கனவு காண்பது எப்படி என்று பயிற்சி பட்டறை நடத்தலாம். அவரே நேரடியாக கனவு கண்டு செய்முறை பயிற்சி அளிக்கலாம்.

3. காசியிலோ, கங்கையிலோ குடிசை அமைத்து ‘வல்லரசு நமக, வல்லரசு நமக’ என்று யாகம் செய்யலாம்.

4. தன்னை ஒரு முழுமையான சுயம் சேவக் என அறிவித்துவிட்டு, ராமேஷ்வரம் டூ ராஷ்ட்ரபதி பவன் ரத யாத்திரை போகலாம்.

5. வாஜ்பாயை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று மூட்டு வலிக்கு மருந்து போடலாம்.

6. ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில், ‘அப்துல் கலாம்னா, தொப்பி வச்சுக்கிட்டு தொழுகை பண்ணுவேன்னு நினைச்சியா..? என் பழைய ரெக்கார்ட்ஸையெல்லாம் எடுத்துப் பாரு..’ என்று சுஜாதா எழுதும் வசனத்தைப் பேசி ஒரு கெஸ்ட் ரோல் பண்ணலாம். செவ்வாய் கிரகத்தில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை 2020-க்குள் ஒழிப்பது குறித்து அடுத்த படம் எடுக்க ஷங்கரை வற்புறுத்துவதோடு, அதற்கான விஞ்ஞான பூர்வ திரைக்கதையை சுஜாதாவோடு இணைந்து தயாரித்து அரங்கனின் காலடியில் வைத்து சேவிக்கலாம்.

7. ‘குடிமகனாய் இருக்கும் நீங்கள் முதல் குடிமகனாக மாறுவது எப்படி..?’ என மணிமேகலை பிரசுரத்தில் புத்தகம் போடலாம்.

8. குமுதத்தில் எப்படியாவது இடம் பிடித்து, ‘கண்ணைத் திற.. கனவு வரட்டும்’ என ஆன்மிகம் கலந்த அறிவியல் தொடர் எழுதலாம்.

9. ‘ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் எனக்கும் பதினாலு தலைமுறை உறவு இருக்கு. அதனால என்னை அங்க அர்ச்சகரா நியமிக்க சிபாரிசு பண்ணனும்’ என காஞ்சி ‘காம’கோடி சங்கராச்சாரியிடம் அப்ளிகேஷன் கொடுக்கலாம்.

10. மலைச்சாமி தேர்தல் கமிஷனராக இருந்து பதவிக்காலம் முடிந்ததும் அ.தி.மு.க.வில் சேர்ந்து சேவை செய்ததைப் போல அப்துல் கலாமும், அ.தி.மு.க.வில் சேரலாம். கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்.

11. சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு ‘பாபா மரித்தார்’ என பெயர் வைக்கலாம்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாததால் யார் யாருக்கெல்லாம் நஷ்டம்..?

1. பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு கோமாளி கேரக்டர் போய்விட்டது.

2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.

3. ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.

Advertisements

One Response to “கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!”

  1. Siva Prasad P Says:

    Sorry to say that I don’t have an option to leave my comments in Tamil. I just wanted to know what Aazhiuran has done for the country/ (his family?). With some sarcastic intonation you have tried your best but I just mark you “Zero” still I don’t even know what Mr.Kalam had done during the period of 5years. Here it’s not a question of what everyone has done for the country but everyone has their best which should be appreciated by people who all are aware. I can say that Mr.Kalam even has something unique inside him which made him at least give an opportunity to a photographer to make his day at least for a day’s bread and butter. So Aazhiuran you better stop reading other’s lighter/weaker part. People like you always not wanted others to be clearer about good things and thinking everyone is nut. Not fair Aazhiuran! People like me wanted you guys have your clothes washed first instead finding dirt on me. Again Sorry to say you are not upto the mark.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: