‘உமாவும் கவிதையும்’ பகுப்புக்கான தொகுப்பு

புலால் உண்பவனுக்கு இல்லை வாய்ப்பெனில் புலியிம் சிங்கமும் பாவம் என்ன செய்யும்…

பெப்ரவரி 27, 2010

சடை முடி
தவத்திற்க்கே
தரிசனமெனில்
ஆலமரத்திற்க்கே
அமையும்

பழங்களும்
திணைகளுமே
உணவெனில்
பறவைகளுக்கே
பாக்கியம்

புலால் உண்பவனுக்கு
இல்லை வாய்ப்பெனில்
புலியிம் சிங்கமும்
பாவம்
என்ன செய்யும்

எங்கு நீ
இருந்தாலும்
எதனை நீ
உண்டாலும்
யாராக நீ
வாழ்ந்தாலும்

ஊணுக்குள் உயிராக
உயிருக்குள் ஒளியாக
ஒருவனை வைத்தால்
இறைவன் என்று

அர்ச்சனைத்தட்டுடன்
அவன் நாமம் சொல்லி
அன்பினை வேண்டி
அடியேனாய் நிற்ப்பான்
நீ வாழும்
கருவரை வாசலில்


Follow

Get every new post delivered to your Inbox.